Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளக்கம் வேண்டுகின்றேன்

Featured Replies

விளக்கம்

----------------

1.. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.

2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.

3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.

4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும்.

5. உங்கள் பெயர், மறைவுச்சொல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. இது மற்றவர்கட்கு நீங்கள் வழங்கினாலே அல்லது உங்களிடம் இருந்து மற்றவர்கள் இதை எடுத்து பாவித்தாலே அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்கவேண்டும்.

6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

7. தனிப்பட்ட செய்தியினை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு அது பற்றித் தெரிவிக்கலாம்.

8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.

மேலே உள்ளது நிபந்தனைகள் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. எங்கே இதில் ஒருமையில் விழிப்பது பிழை என்றோ அல்லது தவிர்க்க வேண்டுமென்றோ போடப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பகுதியில் இவை தான் எழுதப்பட வேண்டுமென்பதும் ஒரு விதியாக கூறப்படவில்லை. எழுதுவது என்பது இட்டுக்கட்டி எழுதுவதல்ல... தொடர்ந்த கருத்துகளை நீட்டி வருவது தான் எழுத்து ...இது விளங்கிக் க்ஒள்ளும் வரை ...இப்படியான முட்டாள்தனங்கள் இடம் பெறத் தான் செய்யும்.

ஜனநாயகம் என்றால் கருத்தை கருத்தால் எதிர்கொள்வது என்பது தான். களப் பொறுப்பாளர்கள் என்றால் வானத்திலிருந்து வந்து குதித்தவர்கள் அல்ல....

இங்கு வந்து எழுதுபவர்களெல்லாம் முட்டாளுகளும் அல்ல...உங்களை விட அறிவிற் குறைந்தவர்களும் அல்ல...எடுத்தேன் கவிழ்த்தேன் போக்கு ...யாருக்கும் ஆவப்போவதில்லை.....

ஆகவே களத்தில் அபிப்பிராயம் கேட்டு ஒரு திரியைப் பூட்டுவது கூட பெரும்பான்மைக் கருத்துகளுக்கு இந்த இடத்தில் விரோதமானது என்ற அளவில் புரிந்து கொண்டு ...விலகி விடலாம்....

அதை விடுத்து உங்கள் சிற்றறிவுக்கு எடுக்கப் படும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்குமா என்பதை ஆலோசித்துப் பார்க்கவும்.....

யாழ் களம் சிறப்பாக நடக்க வேண்டுமென்பதே எனதும் எல்லோரதும் விருப்பம் ..புரிந்து கொண்டால் சரி....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளக்கம்

----------------

1.. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.

2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.

8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.

யாழ் களம் சிறப்பாக நடக்க வேண்டுமென்பதே எனதும் எல்லோரதும் விருப்பம் ..புரிந்து கொண்டால் சரி....

மேலே காட்டிய விதிகளுக்கு ஏற்ப உங்களின் கருத்துக்கள் பல இருந்ததில்லை.

களத்தில் வேண்டப்படுவது நட்பான கருத்தடல்.

அது காரசாரமான விவாதமாக இருந்தாலும் சொற்களில் நாகரீகம் தேவை.

அதை அனைவரும் புரிந்துகொண்டால் நலம்.

குறிப்பு :மேலெ நீங்கள் எனக்கும் மோகன் அண்ணாவுக்கும் தனிமடல் இட்டதாகவும், கள உறுப்பினர்களுக்கு வேண்டு கோளாகவும் ஒரு பகுதி எழுதி இருந்தீர்கள்.

உங்களுக்கு பதிலளிப்பதற்கு மேற்கோள் காட்டுவதாக எண்ணி திருத்தம் எனும் பகுதியை தவறுதலாக தெரிவு செய்து விட்டேன். அதனால் உங்களின் ஒரு பகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுவிட்டன. அதற்கு வருந்துகிறேன்.

ஆனால் தாடகையாகிய தாங்கள் கூறும் கருத்துக்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியனவாக இல்லை.

தங்கள் ஆற்றாமை... களத்தில் உள்ளவரை தாக்குவதாகவே அமைகின்றது. ஏதும் ஆக்கபூர்வமான படைப்புக்கள் தந்தால் நல்லதாக இருக்கும்.

  • தொடங்கியவர்

ஆனால் தாடகையாகிய தாங்கள் கூறும் கருத்துக்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியனவாக இல்லை.

தங்கள் ஆற்றாமை... களத்தில் உள்ளவரை தாக்குவதாகவே அமைகின்றது. ஏதும் ஆக்கபூர்வமான படைப்புக்கள் தந்தால் நல்லதாக இருக்கும்.

கெளரி பாலன் ! பால்குடிப்பிள்ளை சிகரட் குடிக்கும் ஒரு படத்தைப் போடும் அதிரசனையுள்ள தாங்கள்.... மனிதம் பற்றியும் ஆற்றாமை பற்றியும் பேசுகின்றீர்கள்....

  • தொடங்கியவர்

நீங்கள் நீக்கிய பகுதியில் தான் எனது வேண்டு கோளும் கருத்துகள் பற்றிய நியாயமும் இருந்தது.

நாகரீகக் கருத்தாடலா..? எனக்கு விளங்கவில்லை...கருத்துகளில் முரண்களும் சார்புகளும் இருக்குமேயன்றி ...நாகரீகம்... சிலருக்கு நாகரீகமாக இருக்கும் கருத்து பலருக்கு அநாகரீகமாக இருக்கும்.

பயங்கரவாதமும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரும் அவரவர் பார்வையில் சரியானவையே......

அவர்களின் பார்வையில் அப்படியென்றால் இவர்களின் பார்வையில் இஸ்லாமும் அதற்கு எதிரானவர்களுக்குமான போர்....

இதில் எது நாகரீகம் எது அநாகரீகம்.... கருத்து சொல்லப்படும் வார்த்தைகள் அவ்வாறு இருக்கப் படக் கூடும்.. நான் எழுதும் பிரதேச வழ்க்கு உங்களுக்கு சில வேளைகளில் அன்னியமாகவும் அசெளகரியமாகவும் இருக்கக் கூடும்... ஆனால் கருத்துகளில் நான் தெளிபாகவே இருக்கின்றேன்.....

நாகரீகக் கருத்தாடல் என்று எதைக் குறிக்கின்றீர்கள். யாழ களத்திலேயே நீங்கள் சொல்வது போல ஆயிரம் கருத்துக்களை என்னால் காட்டமுடியும். தல, லக்கினோ, ஐ .வி சசி போன்றோர் எழுதும் முறையை மறு படி மறுபடி வாசித்துப் பாருங்கள். உங்களுக்கு சில விபரங்கள் புரியும்......

இவ்வகையிலும் அசெளகரியம் தரும் வார்த்தைப் பிரயோகங்களை திருத்த மட்டுமே உங்களுக்கு அதிகாரம் இருக்கின்றதே அன்றி( கள நிபந்தனைகளை மீண்டும் படிக்க) திரியை முற்றாக மூடுவதற்கு அல்ல...

அப்படித்தான் என்று நீங்கள் முரண்டு பிடிப்பீர்கள் என்றால் ...இங்கு நான் நியாயம் கேட்பதில் அர்த்தம் இல்லை என்பதையும் புரிந்து கொள்கின்றேன்.

நான் மட்டும் என்றில்லை வர்ணன் எழுதியிருக்கும் "பூட்டுங்கள் பூட்டுங்கள் " என்று .பல பகுதிகளையும் உதாரணங்களையும் காட்ட முடியும் . மதியின் "வணக்கம்" பகுதி அறிமுகத்துக்கில்லாமல் வேறு என்ன சிலம்படிக்கு இருந்தது. எதிர்க்கருத்துகள் வரும் போது கருத்துகள் வைப்பதில் என்ன தவறு...

அப்படியாயின் எழுதிப் போட்டு விடுங்கள் இவ்வளவுதான் கதைக்கலாம் இவ்வளவு தான் எழுதலாம் என்று......பின்னர் நீங்களே எழுதிக் கொண்டிருங்கள்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமேயன்றி கதவடைப்பால் அல்ல.... இனியாவது புரிந்து கொள்ளுங்கள்..

  • தொடங்கியவர்

மோகன் எழுதியவை நிபந்தனை பகுதியிலிருந்து

-----------------------------------------

கருத்துக்கள் நாகரீகமாக வைக்கப்படுவது விரும்பப்படுகின்றது. இன்று சில கருத்துக்கள் கள நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தமையால் நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவருக்கு எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. நல்லது. அதை சரியான முறையில் எழுதுவதன் மூலம் உங்கள் கருத்துக்களுக்கும் ஒரு பலம் இருக்கும். அதை விடுத்து அவசரப்பட்டு நாகரீகத்தன்மையற்ற, வெறுமனே குற்றஞ்சாட்டுகின்ற, குறைகளைக்காண முயற்சிக்கின்ற ஒவ்வொரு கருத்தும் தனது பலத்தை இழந்தே காணப்படும். எழுதப்படும் கருத்துக்களால் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோசனமாக இருக்குமா என்பதைக்கூட யோசிக்கலாம்.

இங்கு ஒவ்வொருவரும் இயந்திரத்தனமான ஒரு வாழ்க்கை வாழ்கின்றார்கள். கிடைக்கும் சிறிய நேரத்தில் ஏதாவது நல்ல விடயங்களை பார்க்கலாமா எனக் களம் வருபவர்களுக்கு வெறுமனே எண்ணிக்கைக்காக கருத்தாளம் இல்லாத கருத்துக்கள் காலப்போக்கில் இக்கருத்துக்களம் மீது ஓர் சலிப்பையும், வெறுமனே குற்றங்கள், குறைகள் கண்டுபிடிப்பதையும் அதை நாகரீகமற்ற முறையில் வெளிக்கொண்டுவருவதும் இக்களம் மீது வெறுப்பையும் தரலாம். ஆதலால் களநிபந்தனைகளைக் கருத்தில்கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள்.

ஒவ்வொரு கருத்தினையும் என்னால் மாற்றிக் கொண்டிருக்க முடியாது. ஆதலால் நிபந்தனைகளை மீறுகின்ற கருத்துக்களை நீக்குவது பொருத்தம் என நினைக்கின்றேன்.

நான் நினைப்பதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம். கருத்துக்களில் ஆட்சேபனைகள் இருந்தால் அதை எனக்கு சுட்டிக்காட்டுங்கள்.

நன்றி

மோகன்

ஆட்சேபணைகள் இருக்கின்றது . சுட்டிக் காட்டியிருக்கின்றேன். நிர்வாகம் கவனமெடுக்கும் என்று நம்புகின்றேன்.. கள உறுப்பினர்களும் திறந்த மனத்துடன் எண்ணங்களை எடுத்து வைக்க வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் என்பது திறந்த வெளி ஆறு போல ஓட வேண்டுமேயன்றி... வரைமுறைகளுக்கு உட்பட்ட கால்வாயாக ஒட முடியாது......

கெளரி பாலன் ! பால்குடிப்பிள்ளை சிகரட் குடிக்கும் ஒரு படத்தைப் போடும் அதிரசனையுள்ள தாங்கள்.... மனிதம் பற்றியும் ஆற்றாமை பற்றியும் பேசுகின்றீர்கள்

ஹா...ஹா...தங்கள் புரியும் தன்மையை மெச்சினோம்...

பாலன் என்பதனை(என்னை) பாலகன் புகைப் பிடிப்பதனை

உதாரணம் காட்டி அதாவது அம்மா சொன்ன புத்திமதியினை சந்தர்ப்பம் சூழ்நிலையால் நான் மீறிவிட்டேன் என்பதனை காட்டுவதற்காக போட்டேன்.

பார்க்கும் இடமெல்லாம் தங்கள் கருத்துக்கள் நிர்வாகத்தின் கத்தரிக்கோலிற்கு தீனியாவதனை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது....ம்....பாவம் நீங்கள் நல்ல ஒரு மனநலமருத்துவரை போய்பார்க்கவும் :x

நன்றி

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

ம் ம்.............................தாடகை என்று பெயர்வைப்பதற்கு அவதாரம் என்றே வைத்திருக்கலாம்

ஐயோடா..... கெட்டுப் போவதற்கு நல்லதொரு சாட்டு...சந்தர்ப்ப சூழ் நிலையினால் பாதிக்கப்பட்டோம்....

மனதில களவிருப்பவன் தான் சந்தர்ப்ப சூழ் நிலைக்காக ஏங்கிக் கொண்டிருப்பான்.

ஹிட்சாக் ரேஞ்சுக்கு படம் காட்டியிருக்கீங்க... பாலன் ..பாலகன் ....ஏன் இன்னும் பல கெட்ட பழக்கங்கள் எல்லாம் பழகியிருப்பீர்களே....

அவற்றுக்கும் ஒவ்வொரு கவிதை..???? எழுதி ஒவ்வொரு படம் காட்டுறது.....

கண்ணுக்குக் குளிர்ச்சியாயும் இருக்கும்... அப்புறம்.... சைக்காலஜி கதக்கலாம்.....

கலாச்சாரச் சீரழிவை செய்யிறவனை மன்னிக்கலாம்...அதற்கு சப்பைக்கட்டு கட்டுறாங்க... அவங்களை மன்னிக்கவே கூடாது.....

மேலே என்ன நடக்குது என்றே தெரியாமல் ஓணான் மோந்து பாத்த கதையா ....என்னத்தையோ பாத்து.... செக்கென்ன சிவலிங்கமென்ன......

கலைஞ்னுங்க சாமி... ஏதாவது சொல்ல வந்தா... நிர்வாகம் கத்தரிக் கோலு.....என்னங்கடா இது... ஒரு களத்திலேயே .... அடிப்படை கருத்துச் சுதந்திரம் பற்றி கதைக்க வக்கில்லை....

சமுதாயத்தை மாத்துற சொப்பனம் வேறா.... அடப் போப்பா....

ஆஹா...தப்பே செய்யாத ஒரு அவதாரமப்பா...தாடகை ம்...இனத்துக்கேற்பதான் குணமும் (அரக்க) முக மூடிவேறு..

முதலிலேயே களத்துக்கை இருந்த ஆரோதான் முகமூடியோட வந்திருக்கிறார்கள். உம்மைப்போல நாடகம் போடத்தெரியாதப்பா எனக்கு.

நிர்வாகம் பார்த்துக்கொள்ளட்டும்... மன நோயாளிகளுடன் எனக்கென்ன பேச்சு?

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிமடல்கள் களத்தில் பிரசுரிக்கமுடியாது. இப்பகுதியில் பிரசுரிக்கப்பட்ட தனிமடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.