Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா: இன்று தேசிய அறிவியல் தினம்

Featured Replies

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

 

அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும்.

 

முன்னோடி:@@ எந்த நாகரீகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி ஆயுதங்களாக்கினர்.

 

கம்ப்யூட்டர் முதல் 3ஜி மொபைல் போன், புதிய வாகனங்கள், விவசாயத்தில் நவீனம், மரபணு மாற்றம், டெஸ்ட் டியூப் குழந்தை, நவீன ராக்கெட்டுகள், செயற்கைகோள்கள் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு கண்டுபிடிப்பு உருவாகிறது. வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, கல்வி முறையிலும் புதுமையை புகுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளை, மீண்டும் இந்தியாவில் பணிபுரிய புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், வளமான இந்தியாவை உருவாக்கலாம்.

 

அப்போ... இப்போ...: @@இருளை விரட்டிய மின்விளக்கு; தொலைவில் இருந்தாலும் உரையாட தொலைபேசி; என்ன வேலைகளையும் செய்வதற்கும் கம்ப்யூட்டர்கள்; மரங்களில் நிழல்களில் தங்கிய மனிதனுக்கு வானளாவிய கட்டடங்கள்; எங்கு வேண்டுமானாலும் செல்ல கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; உடனுக்குடன் பறக்க விமானம்;

 

வெள்ளத்தில் இருந்த பாதுகாக்க அணைக்கட்டுகள்; மேலே இருந்து தகவல்களை தர ராக்கெட்டுகள்; அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு; இலை தழைகளை உடுத்திய மனிதன், தற்போது உடுத்தும் பல வண்ண ஆடை; பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன், தற்போது உண்ண பல வகை உணவு என எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்துள்ளான். இதற்கு காரணம் அறிவியல்.


யார் காரணம்: @@தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், ராமன் விளைவு கண்டுபிடித்த நாள், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1888 நவ., 7ல் திருச்சி அருகே திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் - பார்வதி அம்மாள். பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அதே நேரத்தில் இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். ஒருமுறை இவர், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக்கொண்டிருந்த போது, கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்., 28ல், ராமன் விளைவை கண்டுபிடித்தார். நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது என கண்டுபிடித்தார். இதற்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

 


தலை நிமிர வைத்தவர்கள்:@@ இந்தியா அறிவியல் அரங்கில் டாப்-20 இடத்துக்குள் இருப்பதற்கு, பல அறிவியலாளர்கள் உழைத்துள்ளனர். அவர்கள்:

 

Tamil_News_large_657027.jpg


பெயர் துறை
* ஆர்யபட்டர் வானவியல் மற்றும் கணிதம்
* விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் நிறுவியர்
* ராமானுஜம் கணிதம்
* எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை
* எஸ்.என்.போஸ் ஐன்ஸ்டீனுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.
* சிவ அய்யாதுரை இமெயில் கண்டுபிடிப்பு
* சதீஸ் தவான் விண்வெளி திட்டங்கள்
* அப்துல்கலாம் ஏவுகணை மற்றும் அணு விஞ்ஞானி

 

http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A-200500699.html

  • தொடங்கியவர்

தேசிய அறிவியல் தினம்:மறைந்திருக்கும் வரலாற்றுப் பெருமை என்ன?

 

நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த விழா கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன?அதற்கு காரணமானவர் யார்? அவர் படித்த கல்லூரி ஆய்வகத்தின் தற்போதைய நிலை என்ன....

 

 

பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு இந்த நிறமாலை மானியில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மாணவர்கள் அமர்ந்திருந்த இதே ஆய்வகத்தில்தான் தனது இளநிலை இயற்பியல் பட்டப்படிப்பின் போது ஆய்வு செய்தார் உலகம் போற்றும் ஒரு அறிவியல் அறிஞர். அவர் வேறு யாருமல்ல... சென்னை மாநிலக் கல்லூரியில் 1904 ஆம் ஆண்டு இயற்பியல் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற இயற்பியல் அறிஞர் சர் சிவி இராமன்.

 

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%

 

கடலின் நீல நிறத்திற்கு காரணம் ஒளிச்சிதறலே என்பதையும், முப்பட்டகத்தின் வழியாக வெண் கதிர் செல்லும் போது 7 நிறங்களாக பிரியும் என்பதையும் கண்டுபிடித்து 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசையும் வென்றார்.

 

இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28 ஆம் தேதியைதான் தேசிய அறிவியல் தினமாக நம் நாட்டில் கொண்டாடுகிறோம். அந்த கண்டுபிடிப்பிற்கு அடித்தளமாக விளங்கிய ஆய்வகங்களில் ஒன்றுதான் இந்த மாநிலக் கல்லூரியின் இயற்பியல் ஆய்வகம்.

 

எங்களுக்கெல்லாம் இது பெருமை: இராமன் ஆய்வு செய்த ஆய்வகத்தையும், அவரும் அவரது மனைவியும் படித்த அதே பழமையான வகுப்பறையிலும் படித்து வரும் மாணவர்கள் அவரின் சாதனை தங்களுக்கு உத்வேகத்தை அளித்து வருவதாக கூறுகின்றனர்.


அடிப்படை அறிவியல் மீதான ஆர்வம் குறைந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில், அதைப்பற்றிய விழிப்புணர்விற்காக இன்று நாடு முழுவதும் பல்வேறுவிதமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பொலிவிழுந்து இருக்கும், இந்த வரலாற்று பெருமை மிக்க ஆய்வகத்தை அரசு பராமரிக்க முன்வர வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு.

 

http://puthiyathalaimurai.tv/national-science-day-observed-today

  • தொடங்கியவர்

கல்வி கற்றலுக்கான வழிகாட்டல் தினம்

 

டென்மார்க் கொல்பெக் நகரில் திசைகள் இளையோர் அமைப்பினால் மாசி மாதம் 24ம் திகதி கல்வி கற்றலுக்கான வழிகாட்டல் தினம் நடாத்தப்பட்டது.

 

இவ் அறிவு பூர்வமான நிகழ்வில் பெருமளவான இளையோர் பெரியவர்கள் என பலரும் வருகை தந்து சிறப்பித்திருந்தார்கள்.

 

உயர் கல்விகளை பற்றிய தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
இன்நிகழ்வு திசைகள் இளையோர் அமைப்பு பற்றிய சிறு அறிமுகத்துடன் ஆரம்பமாகியது.

 

அதனைத் தொடர்ந்து உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் கல்விகளை பற்றிய தகவல்களை தமிழ் மொழியில் மிகவும் நேர்தியாக பார்வையாளர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்கள்.

 

டென்மார்க் வாழ் தமிழ் இளையோர்கள் பல துறைகளில் பட்டப் படிப்புகளை முடித்தது மாத்திரமன்றி பல சிறந்த நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளார்கள்.

 

விமான ஒட்டுனர் பொறியியலாளர்கள், சமூக ஆலோசகர், காவல்துறை உத்தியோகத்தர், மருத்துவத்துறைசார் மாணவர்கள் அத்தோடு இன்னும் பல மாணவர்கள் இன்நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்கள்.

 

பெற்றோருக்கும் உயர்கல்வி கற்க ஆயத்தமாகவிருக்கும் மாணவர்களும் பல புதிய பட்டப்படிப்புக்களை அறிந்து கொள்வதற்க்கான சந்தர்ப்பம் இந்நாளில் கிடைத்ததை இட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இந் நிகழ்வுக்கு கொல்பெக் மற்றும் அருகாமையில் அமைந்திருக்கும் நகரங்களில் வாழும் தமிழ் மக்கள் வருகை தந்திருந்து பல வகையான கல்விகளை பற்றி அறிந்து கொண்டனர்.

 

டென்மார்க் வாழ் தமிழ் இளம் சமுதாயத்தினர் கல்வித்துறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார்கள் என டெனிஸ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் முக்கிய செய்திகளாக பல சந்தர்பங்களில் வெளியாகியுள்ளமை ஆனது உலகத்தமிழர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.

 

அத்தோடு இன்நிகழ்வு தொடர்பாகவும் டெனிஸ் Nordvestnyt பத்திரிகை பாராட்டி செய்தி வெளியிட்டது மாத்திரம் அல்லாது இது போன்ற நிகழ்விற்க்கு தம்மையும் அழைக்குமாறு கேட்டுக்கொண்டது.

 

இதன் அடுத்த கட்டமாக வரும் மார்ச் மாதம் 9 திகதி Ikast நகரில் நடைபெறவுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

 

thi21.jpg

 

http://www.alaikal.com/news/?p=123384

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.