Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருவள்ளுவர் திருநாளும், தொல்காப்பியர் திருநாளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திருவள்ளுவர் திருநாளும், தொல்காப்பியர் திருநாளும்

தமிழ்ச் சங்க இலக்கியங்களையும், அவை மருவிய காலச் சூழலையும், கல்வெட்டுக்களையும் ஆராயும் தமிழறிஞர்கள் திருக்குறள்024-ganesh-thiruvallu.jpg சங்கம் மருவிய காலமாகிய கி.பி. நான்காம் நூற்றாண்டு வாக்கில் உருவாகிய நூலெனவும், வள்ளுவர் சமண சமயம் சார்ந்தவர் என்பது துறவு, புலால் உண்ணாமை போன்றவற்றை வலியுறுத்துவதாலும், கடவுள் வாழ்த்து அதிகாரத்தாலும் சான்று காட்டியுள்ளனர். சமணர்கள் என்றைக்குமே வள்ளுவதேவர் அருளிய தமிழ்மறையை “எம் ஓத்து” என்று கொண்டாடுகின்றனர். களப்பிரர் காலத்தில் தமிழில் சிரமண சமயங்களின் கொடை மிகுதியானது. அப்போதைய சமணக் காப்பியம் சிலப்பதிகாரமும், பெளத்தர்களின் காப்பியம் மணிமேகலையும் சிறந்த ஆதாரங்கள்.

பதினெண் கீழ்க்கணக்கில் சிறந்த குறளும், நாலடியாரும் சமணர்கள் பொதுமக்களுக்கு எழுதிய நீதி நூல்கள். ஒரு குறளை முழுதும் மேற்கோள் காட்டுகிறது மணிமேகலை.

ஊரை விட்டுச் சற்றே தள்ளியிருக்கும் குகைகளிலும், பாழிகளிலும் வாழ்ந்த சமணர்கள் திண்ணைப்பள்ளி நடத்தினர். பள்ளிகளில் சிறுவர்களுக்கு எழுத்தை விளம்பக் கற்றுத்தரும்போது “அரி நமோத்து சிந்தம்” என்ற நமோகார மந்திரத்துடன் தொடங்கினர். எனவே இன்றளவும் தமிழ் நெடுங்கணக்குப் பட்டியலைச் சமணமரபில் அரிச்சுவடி அல்லது அரிவரி என்கிறோம். கோவையில் அரிமேடு, புதுவையில் அரிக்கமேடு போன்ற இடங்களில் சமணத்தின் தொன்மைச் சின்னங்கள் கிடைக்கின்றன. இந்தியக் கலாசரிதத்தின் சிற்பங்களில் ஒரே ஒரு மூர்த்திக்குத் தான் ஆத்திப் பூச்சூடுதலைக் காணமுடியும். “ஆத்திசூடி அமர்ந்த தேவன்” என்பவர் மகாவீரருக்கு முன்னர் வாழ்ந்த வரலாற்று நாயகர் 23 ஆம் தீர்த்தங்கரர் பாரீசநாதர் ஆவார். சமண சமயத்தின் ஒளவை பாடிய ஆத்திசூடி, கல்வியொழுக்கம் இன்றும் பள்ளிப்பாடத்தில் முதல்நூல்கள்.

மத்திய இந்தியப் பிரதேசத்திலிருந்து ஆந்திராவில் தோன்றிய பல்லவ மன்னர்கள், தமிழகத்தில் தாங்கள் கட்டிய பெருங்கோயில்களை நடத்த சிவாச்சார்யர்களை அழைத்து வந்தனர். அதன் வெளிப்பாடாக சைவ ஆகமங்கள் தோன்றி விரிவாயின. அவை தமிழ்ச் சமணத்தின் பல்வேறு கூறுகளை உள்வாங்கி வளர்ந்துள்ளன. அப்போது காஷ்மீர சைவ சித்தாந்தம் உருவாகவில்லை. அப்பரடிகள் சமணராக இருந்து பாசுபத சைவ சமயியாய் மதம்மாறியவர். சமண  சைவத் தாக்கங்களை அப்பர் தேவாரத்தில் காணலாம். யாழ்தல்/ஆழ்தல் என்னும் வினையடியாய் பாரத மொழிகளில் பல சொற்கள் பிறந்துள்ளன. ரிக்வேதத்தில் ரதத்தின் அச்சைப் பூட்டும் ஆணி (யாணி) என்ற சொல்லிலும், கலியாணம் (திருமணம்), யாணர் என்னும் பழந்தமிழ்ச் சொற்களிலும், தியானத்தில் ஆழ்ந்த ஆண்டி, ஆண்டாள், ஆழ்வார் போன்றவற்றிலும் ஆழ் என்னும் தமிழ் வேர்ச்சொல் உள்ளது.

சமணர்கள்தான் தமிழில் கல்வெட்டுக்களில் ஆழ்வார் என்ற சொல்லை யோகம் பயிலும் தியானமூர்த்திகளாகிய தீர்த்தங்கரர்களுக்கு முதன் முதலில் பயன்படுத்தினர். அவர்களைத் தொடர்ந்து, தேவாரத்தில் தென்னவன் தக்ஷிணாமூர்த்திக்கும், கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் பின்னர் ஸ்ரீவைஷ்ணவத்தில் பரவலாகவும் ஆழ்தல் எனும் வினைச்சொல்லை வேராகக் கொண்டு சிரமணர்கள் படைத்த ஆழ்வார் என்னும் கலைச்சொல் பயன்பாடு தமிழ்ச் சமயங்களில் பெருகுகிறது. தென்னிந்தியாவில் டில்லி சுல்தான்களின் படையெடுப்பாலும், அதற்கு இரு நூற்றாண்டுகள் முன்னரே பாண்டியர் அரசாங்கத்தில் பெரும்பங்கு வகிக்க ஆரம்பித்ததாலும் இஸ்லாம் சமயத்தின் தாக்கம் அதிகமாகிறது. இதன் எதிர்வினையாகத் தக்காணத்தில் விஜயநகரம் என்ற சாம்ராஜ்யம் ஹிந்துக்களால் ஸ்தாபிக்கப்படுகிறது. மதுரை, சிதம்பரம், ஸ்ரீரங்கம் போன்ற பெருங்கோவில்களில் நின்று போயிருந்த ஹிந்து சமயப் பூஜைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. அப்பொழுது, தமிழ்ச் சைவ மற்றும் சமண இலக்கியங்களின் கதைகளும், கருத்துக்களும் பெருவாரியாக வடமொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புறச்சமயத்தை எதிர்கொள்ளும் வியூகமாக அமைக்க ஆரம்பித்தனர். இந்த ஹிந்து இயக்க எழுச்சியை ஒக்கூர் வேந்தர் குலத்தோன்றல் பரிமேலழகரின் திருமுருகு, திருக்குறள் உரைகளிலும், பாரத்துவாஜ கோத்திரத்தில் பிறந்த மதுரை நச்சினார்க்கினியர் உரைகளிலும் பார்க்க இயல்கிறது. அகத்திய ரிஷியின் சிஷ்யர் திருணதூமாக்கினி அல்லது திருணபிந்து என்பவரே தொல்காப்பியர் என்பது போன்ற புராணக்கதைகள் கட்டமைக்கப்படுகின்றன.

சமணக் குரவடிகள் தமிழ் பிராமி எழுத்தைக் கல்லிலும், பள்ளிகளிலும் மறந்துவிட்ட காலமாகிய விஜயநகர ஆட்சித் தொடக்கக் கட்டங்களில் சங்கப் புலவர்கள் பெயர்கள் பரவலாக மறைந்து ஒழிந்துவிடுகின்றன. ஸம்ஸ்க்ருத எழுத்துக்களின் எண்ணிக்கையில் கற்பனையான பெயர்களைச் சங்கப் புலவர்கள் என்று படைத்துத் தமிழ்ச் சைவர்கள் எழுதிய திருவள்ளுவமாலை பிறக்கிறது. அதைத் தொடர்ந்து சைவக் கோயில்களில் வடமொழி எழுத்துக்கள் எண்ணிக்கையில் சங்கப் புலவர்கள் சிலைகள் ஏற்படுகின்றன.

உதாரணமாக, குளந்தை என்று பழைய இலக்கியங்கள் பாடும் பெருங்குளத்தில் உள்ள பாண்டிய வழுதீசுவரம், மதுரையில் இரு கோவில்களில் சங்கப் புலவர்கள் வடவெழுத்து எண்ணிக்கையில் சித்தர்கள் போல வடிவமைக்கப்படுகிறார்கள். இந்தச் சைவமரபின் 20 ஆம் நூற்றாண்டு வளர்ச்சிதான் வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் நிற்கும் வள்ளுவர் சிலைகள். அவற்றில் சைவச் சித்தர் வடிவத்தில் திருநீறு, உருதிராக்ஷம் களையப்பட்டுள்ளது மட்டுமே வித்தியாசம். ஆயினும், தமிழ், கன்னட மொழிகளின் மெய்யான வரலாற்றாய்வுகள் ஆதியில் சமணர்கள் பதித்த முத்திரை குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிவீசுகிறது. வள்ளுவர் என்று புலவர்கள் கொண்டாடிய வடிவம் சமண முனிபுங்கவராய்ச் சென்னை அரசாங்கம் 200 ஆண்டுகள் முன்னர் வெளியிட்ட தங்க நாணயங்களில் உள்ளன. 2 நூற்றாண்டு முன்னர் மயிலை வள்ளுவர் கோவிலில் ஸ்ரீபாதங்கள் மட்டுமே வழிபாட்டில் இருந்திருக்கின்றன, திருவடிகளை ஓரங்கட்டி, சைவர்கள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில்தான் மயிலை வள்ளுவர் கோயிலுக்குச் சித்தர் சிலை கொண்டுவந்து நிறுவியுள்ளனர் (ஜீவபந்து ஸ்ரீபால் கட்டுரை). சமண முனியாண்டி வள்ளுவர் வடிவை தங்கக்காசாய் வெளியிடச் செய்தவர் தமிழறிஞராக விளங்கிய பிரான்சிஸ் எல்லிஸ் என்பவர் (ஐராவதம் மகாதேவன், தினமணி, 1995). எல்லிஸின் கண்டுபிடிப்பே திராவிட மொழிக்குடும்பங்கள் என்னும் மொழியியற் கோட்பாடு. இந்தக் கண்டுபிடிப்பால் ஐரோப்பிய நாடுகளில் மொழியியல் (Linguistics) விஞ்ஞானம் பெருவளர்ச்சி அடைய ஆரம்பித்தது.

025-ganesh.jpgஇலக்கியத்துக்காகத் திருவள்ளுவர் திருநாள், இலக்கணத்துக்காகத் தொல்காப்பியர் திருநாள் (சித்திரை 1): தமிழ்ப் புத்தாண்டு என்றால் செந்தமிழ் இலக்கியங்களில் சித்திரை முதல் நாளாக நன்கு தெரிகிறது. “திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலன் மண்டிலத்து” என்கிற நெடுநல்வாடையில் யாடு (Aries) ஹோரையை முதலெனக்கொண்டு தொடங்கும் ஆண்டு (யாண்டு/யாட்டை) உலகம் முழுதும் அப்போதிருந்த இராசிவட்டம் தான் (1). ஆனால், சிந்து சமவெளியிலும், வேத இலக்கியங்களிலும் உள்ளவை 27 நட்சத்திரங்களால் ஆன வானியல், சோதிடங்கள் தான். அப்போது 27 நாள்மீன்களுக்கும், 9 கோள்மீன்களுக்கும் பழந்தமிழ்ப் பேர்களைப் புழங்கியுளர். அந்தப் பழைய செம்பூழிக் காலத்தில் இராசிச் சக்கரம் முழுவளர்ச்சி அடையவில்லை. பிறகு கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வாக்கிலே மௌரியர்களின் ஆட்சியில் பாபிலோனியக் கண்டுபிடிப்பான 12 ஓரைகள் கொண்ட இராசிச் சக்கரம் இந்திய சோதிடக் கணிப்புக்கு ஏற்கப்படுகிறது. ஓரை என்பது கிரேக்கச் சொல்லான ஹோரா என்பதன் தமிழாக்கம். ஹோராஸ்கோப் என்னும் ஆங்கிலச் சொல்லிலும் கிரேக்க ஹோரை உள்ளது, யவனேஸ்வரன் என்னும் கிரேக்கக் கணியரின் நூல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வடமொழிக்கு மொழி பெயர்க்கப்படுகிறது. அதுவே பாரதத்தில் இராசிச் சக்கரம் பற்றிக் கிடைக்கும் விரிவான முதல்நூலாகும்.

தை என்னும் தமிழ்ப் பெயர் கொண்ட மகர மாதம் சூரியன் வடக்கே பயணித்தலைக் குறிப்பது. மகரம் என்றால் விடங்கர்/இடங்கர் எனப்படும் இந்தியப் பெருநதி முதலை (Gharial). இது வருணனுக்கும், பின்னர் சிவனுக்கும் ஆன பெயர். 12 மாதப் பெயர்களில் தை ஒன்றுதான் தமிழ்ப்பெயர், ஏனைய 11 மாதப் பெயர்களும் பிராகிருதப் பெயர்கள். தை என்பது பிதாவுக்கான தமிழ்ப்பெயர். தந்தை, எந்தை, நுந்தை, முந்தையர் எல்லாவற்றிலும் தை (father) என்ற வேர்

முன்னொட்டுடன் சேர்ந்துள்ளது (தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகையுரை, ச.பாலசுந்தரம்). தை வருதல் என்றால் வருடுதல். பிங்கல நிகண்டு தை மாதத்தில் பௌர்ணமியின் நாள்மீனை புணர் தை (பூசம்) என்கிறது. ஆக, தை என்றால் விடங்கர் என்னும் வருணன் (பின்னர், சிவபிரான்) ஆகிய அண்ட சராசரங்களுக்கும் பிதா பிறப்புநாளைப் பொங்கல் (தை 1) குறிக்கிறது. ஒன்பது மாதம் கழிந்தால் தையலாம்பிகை கொற்றவையின் திருநாள் (விஜயதசமிப் பெருவிழா, ஐப்பசி 1). தை ஆகிய வருணன்/சிவன் விடங்கர் முதலையாய் கொற்றவையுடன் புணரும் சிற்பங்கள் பல ஊர்களில் சிந்து சமவெளி வேளாண்மை நாகரீகத்தின் சின்னங்களாய்க் கிட்டுகின்றன. அக் கலியாணத் திருவிழா ஐப்பசி சென்றபின் கார்த்திகை விளக்கீடு. கார்த்திகை தீபம் சில பஞ்சாங்க கணக்குகளால் வட இந்தியாவில் சில நாள் வேறுபாட்டுடன் தீபாவளி எனக் கொண்டாடப்படும் திருவிழா. பூமிப் பந்தின் பருவச் சுழற்சியால் இந்தப் பாரதத் திருவிழாக்கள் ஆண்டுதோறும் மீண்டும் மீண்டும் 5000 ஆண்டுகளாய்க் கொண்டாடப்படுகின்றன. 12 இராசிப் பெயர்களின் சின்னங்களில் 11 ம் பாபிலோனிலும் உள்ளன. ஆனால், தைத் திங்களுக்கான விடங்கர் (மகரம்) மாத்திரம் சிந்துப் பண்பாட்டுக்கே உரிய சின்னம் என்பது வியக்கத்தக்க உண்மை. தனித்தமிழ் இயக்கத்தால் நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் 20 ஆம் நூற்றாண்டில் திருவள்ளுவர் திருநாள் என அதிகாரபூர்வமாகத் தைப் பொங்கலைத் தேர்வு செய்தனர். தை 1 மகர விடங்கர் தென்கடலில் பிறக்கும் நாளுமாம் ள2ன. தமிழ் இலக்கியம் வளரத் திருவள்ளுவர், இளங்கோவடிகள், சாத்தனார், கம்பர், குமரகுருபரர், பாரதி போன்றோருக்குத் தொல்காப்பியரின் செந்தமிழ் இலக்கணமே அடிப்படை. பாணிநியின் இலக்கணத்தைத் தமிழுக்கு ஏற்றவகையில் செய்துதந்தவர் காப்பியரே. அவரை ஆரிய குலத்தவர் என்பது தேவநேயப் பாவாணர் போன்ற புலவர் முடிபு. துவாரகையில் இருந்து கண்ணன் தலைமையில் வேளிர் இரும்புத் தொழில்நுட்பம், குதிரை ஏறும் அய்யனார் வழிபாடு, காடு வெட்டி வேளாண்மை தரும் மெகாலித்திக் காலத்தின் குறியீடு தொல்காப்பியர். எனவே, 21 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் தொல்காப்பியர் திருநாளாக 60 வருஷ சுழற்சிச் சம்வத்சரம் தொடங்கும் சித்திரைப் புத்தாண்டு நாளைக் கொண்டாடவும், அதிகார பூர்வமாக அரசாங்கம் அறிவிக்கவும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

மேலும் அறிய:

(1) உலகத்தில் 12 ஓரைகளின் இராசிச் சக்கர வரலாறு: http://historyhuntersinternational.org/2010/05/15/the-ptolemaic-zodiac-from-where-the-sun-shines/

(2) Dr. N. Ganesan, A Dravidian Etymology for Makara - Crocodile, Prof. V. I. Subramonium commemoration volume, ISDL, Tiruvananthapuram, Kerala, 2011

 

http://www.vadakkuvaasal.com/component/content/article/519.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.