Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகம் - தமிழீழ விடுதலைப் போர்

Featured Replies

புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்படும் தடை நடவடிக்கைகளிற்குப் புலம்பெயர்தமிழ் மக்களின் பரப்புரைசெயற்பாடுகளின் பலவீனமே காரணம் என அண்மையில் ஒய்வுநிலை பேராசிரியர் ஒருவர் மிக கூர்மையான கருத்தொன்றை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டிருந்தார்.

தமிழீழ ஆதரவு கருத்தேட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவதில் குறைபாடுள்ளதாக விவாதித்தார். சிங்கள கருத்தேட்ட நடவடிக்கைகள் கனடாவில் வலுவாக இருந்தமையே கனடா புலிகள் மீது விதித்த தடைக்கான முக்கிய காரணம் எனக் காரணம் கூறினார்.

புலத்தமிழ் சமூகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முக்கியமானதொரு விவாதமாக இதுவுள்ளது. விடுதலைப் போரின் வலுவாகத் திகழும் புலத்தமிழ் சமூகம் இந்தப் பரப்புரை முனையில் தன்பணியினை சரியாக செய்யாதுள்ளது என்கின்ற பேராசிரியரின் கருத்துத் தொடர்பில் கோபமும், நியாயமும் இருப்பினும், புலிகளுக்கு எதிரான தடை நடவடிக்கைகள் எதுவித வியூக நோக்குகளுமற்று - வெறும் கருத்தேட்ட வெற்றிதோல்விகளுடன் மட்டும் தொடர்புடையதா? என்கின்ற முக்கிய கேள்வி இங்கு எழுகின்றது.

சர்வதேச உறவுகள் தொடர்பான கற்கைநெறிகளில் மூன்றுவதை உறவு மாதிரிகள் அடிப்படையாக கற்கப்படுகின்றது.

1. அனைத்துலக ஒழுங்கற்ற நிலை (International Anarchy) என விபரிக்கப்படும் வல்லவர்கள் தீர்மானிப்பதின் அடிப்படையில் உலக உறவுகள் இயங்குவது. இதனை கோபிசியன் கோட்பாடுகள் என்று கற்கப்படுகின்றது. இந்த உறவுமுறைகளில் ஒரு வலுவான சர்வதேசச் சட்டம் நிலவாது. அரசே பிரதானமானது. முரண்பாடுகள் வந்து கொண்டேயிருக்கும். வலுவைப் பாவித்து இதனைத் தீர்க்கலாம். தேசிய பாதுகாப்பு, தேசிய நலன்கள் என்பதே கோலோட்சும்.

2. அனைத்துலக சமுதாயம் (International Society) என்பது அரசுகள் இணைந்து சர்வதேச சட்டங்களை தயாரித்து அதன்பாற்பட்டு செயற்படுவது. இதனை ஹியுகோ குரொரிஸ் கோட்பாடுகளாக விபரிக்கப்படுகின்றது. சர்வதேச சட்டங்களின் தந்தையாகவும் ஹயுகொ திகழ்கின்றார். இந்த அமைவில் அரசு முக்கியமானதாகவிருந்தாலும் பிற சக்திகளும் முக்கிய விடயங்களில் தாக்கம் செலுத்தும். முரண்பாடுகளை வலு மூலமோ அல்லது பேச்சுக்கள் மூலமோ தீர்க்கலாம். தேசியபாதுகாப்பு, சர்வதேச வணிகம், சர்வதேச சுற்றுப்புறச்சூழல் போன்ற காரணிகள் முக்கிய விடயங்களாக இருக்கும். பிரச்சனைகளைத்தீர்பதற்கு ஐநா போன்ற சர்வதேச நிறுவனங்கள் செயற்படும்.

3. அனைத்துலக சமூகம் (International Community) என்பது பொருளாதார மேம்பாட்டுடன் கூடிய தனிநபர்களின் செழுமையைப் போணும் குடியரசுகளை தளமாகக் கொண்ட தார்மீக உறவமைப்பு. இதனை இமானுவேல கான்ட் என்பவரின் கோட்பாடாகக் கற்கப்படுகின்றது. இங்கு ஒத்தகருத்துள்ள சனநாயக அரசுகள் ஒன்றுசேர்ந்து சர்வதேச உறவுகளில் ஒரு நீடித்த சமாதானத்தை உருவாக்கும் என விபரிக்கப்படுகின்றது. இங்கு தனிநபர்கள் கூட்டாகச் செயற்படுவதற்கான காரணங்களை தமக்குள் கண்டுபிடிப்பார்கள். இந்தக் காரணங்களின் அடிப்படையில் இந்த கூட்டான மக்கள் சமூகத்தின் குடியரசுகள் தமக்குள் இணைந்து செயற்படும். இந்த அமைவில் அரசின் பாத்திரம் குறைந்து காணப்படும். போட்டியிடலும் கூட்டாகச் செயற்படலும் நிலவும். முரண்பாடான விடயங்களைப் பேச்சுக்கள் ஊடாக தீர்;க்கலாம். உலகம் சனநாயகமானதாகவும், முதலாளித்துவ அமைவாகவும், பன்னாட்டு நிறுவனங்களினால் பிரச்சனை தீர்க்கப்படும் பொறிமுறை கொண்டதாகவும் இருக்கும். நீதி, மனித செழுமை, வளங்கள் மீள விநியோகிக்கப்படும் ஒழுங்கு இங்கு நிலவும்.

இந்த விபரிப்புக்களினை கற்போர், இன்றைய உலக உறவு ஒழுங்கை எந்த வடிவில் அடக்குவார்கள்?.

இன்றைய ஒழுங்கு மேற்கூறிய மூன்றின் கலவை என்றே விபரிப்பார்கள். ஈராக் மீதான அமெரிக்க யுத்தம் முதல்வகை உலக உறவுக்கு உதாரணம். ஐரோப்பிய யூனியனாக 25 நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவது 3வது வகை உறவுக்கு உதாரணமாகும். எனினும், மேலே விபரித்த மூன்று வடிவுகளும் இணைந்து செல்லும் உலக உறவு ஒழுங்கே நிலவுகின்றது.

இதனை இன்னெரு விதமாகவும், இலகுவாகவும் பார்ப்பதற்கு Wikipedia எனும் Encyclopedia வை ஆராயும் போது சர்வதேச சமூகம் என்பது வலியநாடுகள் தாக்கம் செலுத்தும் நிலையை அல்லது நிறுவனங்களினை விபரிப்பதற்கு பயன்படுத்தலாம் என்கின்றது.

எனவே, சர்வதேச சமூகம் என்கின்ற வார்த்தை பாவிக்கப்படுகின்ற இடங்களில் எல்லாம், இலட்சியத்தன்மையுடன் இமானுவேல் கான்ட் விபரித்த மனித செழுமை மிக்க வடிவத்தை கற்பனை பண்ணாமல் மேற்குலகின் நலன்களை பிரதிபலிக்கும் நாடுகள், நிறுவனங்கள், கூட்டமைப்புக்களினை மனக்கண் முன் கொண்டுவாருங்கள்.

இலங்கை இனச்சிக்கல் தொடர்பில் இணைத்தலைமை நாடுகள் விடுக்கின்ற அறிக்கைகள், செய்திகள் என்பன சர்வதேச சமூகத்தின் செய்திகள் எனச் சொல்லப்படுகின்ற போது மேலே விளக்கத்தை நினைத்துக்கொள்வோம்.

தமிழீழ விடுதலைப் போரிற்கும் சர்வதேச சமூகத்திற்குமான உறவு எவ்வாறுள்ளது?

தமிழீழ விடுதலைப் போர் நியாயமான தளத்தில் ஒரு அடக்குமுறை எதிர்ப்பு போராக கருக் கொண்ட போது இந்தியா இதனை தனது நலன்களை இலங்கைத்தீவில் நிலைநாட்டுவதற்கான குறுங்கால ஆயதமாகப் பாவித்தது.

இந்த நடவடிக்கை பனிப்போரின் இறுதிக்காலத்தில் நிகழ்ந்தது. பனிப்போர் ஏற்படுத்திய இரு துருவமயப்பட்ட (bi-polar world) உலக உறவு ஒழுங்கு மாற்றம் கண்டு, பலதுருவ அமைவு கொண்ட (multi-polar world) உறவுகள் நிலவும் என இந்தியா போன்ற பிராந்திய சக்திகள் நினைத்துக் கொண்ட காலகட்டம் அவை. அமெரிக்காவும், ஐரோப்பிய சமூகமும் கூட இந்த பலதுருவதன்மை பற்றிய சாதகமான வாதங்களை வெளிப்படுத்திய காலகட்டம். கிளின்டன் நிர்வாகத்தினை இயக்கிய நவதராளவாதிகள் வணிகத்தினையும், பல்தேசிய கம்பனிகளையும் முக்கிய சர்வதேச உறவுகளின் ஆயதமாகப் தீவிர பாவனைக்குட்படுத்திய காலகட்டம்.

எனினும், இருதுருவ போரின் எச்சசொச்சங்களாக நிலவிய பொருளாதார, அரசியல், பண்பாட்டு, இராஐதந்திர அணுகுமுறைகள் ஒருதுருவவயப்பட்ட உலகு (uni-polar world) பற்றிய வாதத்தினை உருவாக்கியது. அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்குபற்றிய பார்வை இது. அதிபர் ஜோர்ஜ் புஸ் நிறுவாகத்தின் முக்கிய நோக்ககாக இந்த ஒருதுருவ உலக ஒழுங்குமுறை உருவாக்கம் திகழ்ந்தது. இது பலதுருவ உலக ஒழுங்கினை நம்பிச் செயற்பட்ட பிராந்திய சக்திகளினை இது அச்சுறுத்தியது. ஈராக் போர் ஒரு துருவ வெளிப்பாடாகவே அமைந்தது. பேய்களின் கூட்டணி (axix of Evil) எனும் “ஈரான், ஈராக், வடகொரிய” தொடர்பான அமெரிக்க விபரிப்பு இந்த இறுமாப்பின் வெளிப்பாடு என விமர்சிக்கப்பட்டது. எனினும், இந்த தனித்த ஆளுமை கொண்ட கோட்பாடு தனது ஐரோப்பிய, ஆசிய கூட்டாளிகளிடையே அதிருப்தியினை ஏற்படுத்துகின்றது என்பதாலும், சீனா போன்ற உறுதியான பொருளாதார வல்லரசுகள் அமெரிக்காவிற்கு எதிரான வலுவான சக்தியாக வளர்ந்து வருவதாலும் தனது ஒருதுருவ நிலைப்பாட்டிலிருந்தவாறே பல துருவ அணுகுமுறையை செய்வதற்கான கோட்பாட்டு தளர்ச்சியினை புதிய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலிசா ரைஸ் வெளிப்படுத்தி வருகின்றார்.

மேற்கூறப்பட்ட அனைத்து மாற்றங்களும் எம்மைப் பாதித்தது. இந்தியாவின் பிடியிலிருந்த இலங்கை இனச்சிக்கலை 2002ல் சர்வதேச சமூகம் எனப்படும் மேற்குலகக் கூட்டணியின் கைகளுக்கு எடுத்து வந்தது அமெரிக்கா. நோர்வேயினை முனைப்படுத்தி, இந்தியாவினை அச்சுறுத்தாது இலங்கை இனச்சிக்கலை தனது அணுகுமுறைக்குள் கொண்டுவந்தது அமெரிக்கா என்றும் இதனை விபரிக்கலாம்.

இலங்கைத்தீவு தொடர்பான அமெரிக்க கொள்கை என்ன? சர்வதேச சமூகம் என்கின்ற வார்த்தை பாவிக்கப்படுகின்ற இடங்களில் எல்லாம், இலட்சியத்தன்மையுடன் இமானுவேல் கான்ட் விபரித்த மனித செழுமை மிக்க வடிவத்தை கற்பனை பண்ணாமல் மேற்குலகின் நலன்களை பிரதிபலிக்கும் நாடுகள், நிறுவனங்கள், கூட்டமைப்புக்களினை மனக்கண் முன் கொண்டுவாருங்கள்.

இது தொடர்பாக அண்மைக்காலங்களில் எழுதப்பட்ட மிக விபரிக்கான என்பவரது ஆய்வில் யூசுப் மும்தாஸ் எனும் நதன் வெளிவிவகாரக் கொள்கை கற்கை நிறுவன ஆய்வாளர் வெளியிட்ட ஆய்வில் “ இந்தியாவை அச்சுறுத்தாது தனது 5வது கடற்படை நடவடிக்கை தொகுதிக்கு இலங்கையின் துறைமுகங்களைப் பாவிப்பது“ என மையப்படுத்துகின்றார். இந்தியாவை அச்சுறுத்தாமை என்பதை பன்துருவ அணுகுமுறையினைப் பாதிக்காது என்கின்ற கோட்பாட்டின் கீழ் வாசிக்கலாம். இறுதியில் ஒருதுருவ மயப்பட்ட உலகை நிறுவுவதற்கான முக்கிய அமெரிக்க ஆயுதங்களில் ஒன்று அதன் வலிமையான கடற்படையின் நலன்களைப் பாதுகாப்பதே என்பதை யூசுப் ஒப்புக் கொள்கின்றார். இதே ஆய்வில் சிறீலங்கா ஒரு தோல்வியடையாத, படை மற்றும் அரசு கட்டுமானங்களைக் கொண்டுள்ள அரசாக இருக்கின்றமையான அதன் இறைமையை மதித்து அதனுடன் பேசவே அமெரிக்கா விரும்பும் எனவும் அவர் கூறுகின்றார். இவரின் இந்தக் கூற்றின் எதிரொலிகளை பலதடவைகள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரின் குரலாகவும், வாசிங்டனின் அதிகாரிகளின் குரலாகவும் கேட்க முடிகின்றது.

புலிகளும், தமிழீழ விடுதலைப் போரும் இந்த வகையிலான அணுகுமுறை பரப்பில் நிற்கின்றது. வலிமையான ஒருதுருவ உலகினை அமைக்க முற்படும் அமெரிக்காவும், பன்துருவ உலக அமைவினை விரும்பும் இந்தியாவும் இலங்கைத்தீவில் பலவித புலப்படாத வகைகளில் முட்டி மோதி வருகின்றனர் என நம்பும் ஆய்வாளர்கள் நிறைய உண்டு. அண்மைக்காலங்களில் இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள சீன மற்றும் பாக்கிஸ்தான் அதீத தலையீடு என்பனவும் இங்கு தாக்கம் செலுத்துகின்றது.

சர்வதேச சமூகம் எனப்படும் அமெரிக்க தலைமையிலான அணி இனச்சிக்கலினை இன்று தீவிரமாகக் கையாள்கின்றது. போரினை தணித்து, போரற்ற இலங்கைத்தீவினை ஒரு சிறந்த சிங்கப்பூராக வியூகநோக்கில் மாற்றுவது என்கின்ற தேர்ந்த உத்தி அந்தச் சக்திகளுக்குண்டு. இலங்கைத்தீவின் துறைமுக அமைவு இதற்கு உந்துசக்தியான ஆர்வத்தைத் தருகின்றது எனக் கருதப்படுகின்றது.

இந்த கொள்கை அணுகுமுறையின் அமுல்படுத்த இனச்சிக்கல் தணிப்புக்கான அனைத்து உத்திகளும் கையாளப்படுகின்றது. இனச்சிக்கலின் முக்கிய விடயமான சிங்கள பேரினவாதத்தின் கிளர்ச்சியும், அதற்கு எதிரான தமிழர்களின் விடுதலைப் போரும் திகழ்கின்றது. இதனை பொருளாதார கருவிகள் ஊடாக மாற்றத்திற்குட்படுத்தலாம் (transform the conflict) எனும் சிந்தனையின் வெளிப்பாடாக டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் எனும் வடிவம் உருவாகியது.

இந்த உத்தியினை இந்தியா கணித்தே இனச்சிக்கல் தணிப்புக்கு எதிரான பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டது என்கின்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. சிங்கள பேரினவாத தரப்புக்கு இந்தியா தற்காலிக ஊக்கம் வழங்கியது என்கின்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.

இந்த இனச்சிக்கல் தணிப்பு எனும் சர்வதேச சமூகத்தின் முயற்சியானது தமிழீழ தேசிய நலன்களைக் கருத்தில் கொள்ளாது செயற்படுகின்றது என்பதும், மிகப்பெரும் விட்டுக் கொடுப்பைச் செய்தே தமிழர்கள் சிங்கள பேரினவாதத்துடனான சமரசத்தினை எட்ட வேண்டும் என்பதையும் புலிகள் தெளிவாகவே கணித்து, விடுதலைப் போரினை முன்னகர்த்துகின்றனர்.

இந்த முன்னகர்த்தும் முயற்சியினை குறுங்காலத்தில் - மகிழ்வுடன் சர்வதேச சமூகம் வரவேற்காது. அதனை தடுப்பதற்கான பலவித வழிகளில் அது ஈடுபடும். தடை விதித்தல் எனும் நடவடிக்கையும் அதன் ஒரு வடிவமாகவே பார்க்கப்படுகின்றது.

தடை நடவடிக்கை ஊடாக புலிகளின் வளர்ச்சிக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுத்து இலங்கைத்தீவு எனும் நிலவும் வடிவிற்குள் தனது நோக்கை அடைய சர்வதேச சமூகம் முயல்கின்றது. எனினும், தொடர்ச்சியான விடுதலைப் போரின் வலுவேற்றம் இந்த இலகுவான திசையிலிருந்து மறுதிசைக்கு சர்வதேச சமூகத்தினை இழுத்துவரும். இது களத்தில் உருவாகும் உண்மைவயப்பட்டதாகவே அமையும்.

புலத்தமிழ் சமூகம் இத்தனை சிக்கல் வாய்ந்த சர்வதேச சமூகம் - தமிழீழ உறவு சிக்கல் மத்தியில் தனது நியாயத்தன்மையை, பல்வேறு தளங்களில் தொடர்ச்சியாக கருத்தேட்டம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றது - ஈடுபடல் வேண்டும்.

புலத்தமிழ் சமூகத்தின் சர்வதேச பரப்புரை என்பது அடிப்படையில் தமிழீழ நியாயங்களை தொடர்ந்து எடுத்தியம்பி - பொதுசன இராஐதந்திரம் ஊடாக ‘நாங்கள் அனைவரும் எங்கள் தேசத்தின் தூதுவர்களாக எங்களை நினைத்து செயற்படல் என்கின்ற கோட்டில் இயங்குவது வாய்ப்பானது. கனேடிய உள்நாட்டு சிக்கல், தனித்த கருத்தேட்ட நடவடிக்கைகளின் ஊடாக கனேடிய தடையை ஆராய்வது கடினமானது.

300 000 தமிழ் கனேடியர்கள், பலதளங்களில் பல உச்ச சாதனைகளை புரியும் வாய்ப்புடன் கனேடிய நலன்கள், செல்வம் திரட்டல் முயற்சிகளுக்கு உதவியாக இருந்து வருகின்றனர். தேசிய வாக்கு அரசியலில் நீண்டகாலமாக லிபரல் கட்சியுடன் நின்ற தமிழ் சமூகம் இம்முறை தேர்தலில் வலதுசாரி கன்சேர்வேடிவ்வுடனும் நின்றது. தமிழ் வேட்பாளர் போட்டியிட்டார்.

மறுபுறம், சிங்கள அரசும் - கனடாவாழ் சிங்கள பேரினவாத கருத்தேட்ட சக்திகளும் செயற்பட்டன.

இந்த கனேடிய அகச்சூழலில் கனடா அரசு ஏன் புலிகளைத் தடை செய்யும் முக்கிய முடிவினை எடுத்தது.

இதற்கு இரு காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன.

- ஆட்சிக்கு வந்த கன்சர்வேட்டிவ் அரசு சர்வதேச சமூகம் தொடர்பாக கொண்டுள்ள வெளிவிவகாரப் பார்வை அல்லது அதன் அமெரிக்க அனுசரணைப் போக்கு.

- பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியின் திசையில் செல்கையில் தமிழ் புலம் வலுவாகத் திகழும் இடங்களில் புலிகளை அடிப்பது புலிகளை பேச்சுவார்த்தை மேடைக்கு இழுத்து வரும். அல்லது, புலிகளின் எதிர்கால நடவடிக்கைகளைப் பாதிக்கும்.

- சிங்கள அரசினதும், கடும்போக்கு சிங்கள தரப்பினதும் பரப்புரை – கருத்தேட்ட வெற்றி.

- தமிழர்கள் கருத்தேட்டத்தில் ஈடுபடவில்லை. இதனால் கன்சர்வேடிவ் அரசுக்கு இலங்கை இனச்சிக்கலின் உண்மைத் தன்மை அல்லது தமிழர்களின் உண்மை நிலை தெரியாது.

மேற்கூறப்பட்ட காரணங்களில் முதலிரண்டும் அனைத்துலக உறவுசார் புரிதலின் வெளிப்பாடாக அமைகின்றன. பின்னைய இரண்டும் சர்வதேச சமூகத்தினை வெறும் நீதியின்பாற்பட்டு ஒழுங்குமுறையின் கீழ் செயற்படும் அமைவாக எண்ணுவதன் வெளிப்பாடு. அல்லது, இன்றுள்ள உலக அமைவு ஆரம்பத்தில் கூறியவாறு மூன்றுவகை உறவுமுறைகளும்கலந்தவொரு செயற்பாடாகக் கொண்டால் பின்னைய இரண்டும் நிலவும் சூழலில் கருத்தேட்டம் நடவடிக்கைகள் மூலம் எமக்கான இடைவெளியினை உருவாக்கலாம் என்கின்ற சிந்தனையின் வெளிப்பாடு.

புலத்தமிழ் சமூகத்தின் சர்வதேச பரப்புரை என்பது அடிப்படையில் தமிழீழ நியாயங்களை தொடர்ந்து எடுத்தியம்பி - பொதுசன இராஐதந்திரம் ஊடாக ‘நாங்கள் அனைவரும் எங்கள் தேசத்தின் தூதுவர்களாக எங்களை நினைத்து செயற்படல் என்கின்ற கோட்டில் இயங்குவது வாய்ப்பானது. தாம் வாழும் நாடுகளில் தம் நாளாந்த செயற்பாடுகளில் ஒரு தொடர்பாடல் ராஐதந்திரத்தை வெளிப்படுத்துவதன் தமிழீழ விடுதலைப் போரின் நியாயத்தன்மை தொடர்ந்து வெளிப்படும். இந்த நடவடிக்கைகள் வாழும் நாடு தழுவியதாய் விரியும் போது அது தாக்கம் செலுத்தும் வீர்pயத்தினைப் பெறும். இதுவே எம்முன்னுள்ள தேர்வு.

- நாதன்

http://www.erimalai.info/index.php?id=110

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.