Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சை தீவு ...... தமிழன் நிலம் எவன் எம்மை தடுப்பது

Featured Replies

539795_508876359148672_1178771446_n.jpg

 

கச்சை தீவு ...... தமிழன் நிலம் எவன் எம்மை தடுப்பது 

இத் தீவின் பெயரில் வினோதம் உள்ளது என்று எல்லோரும் சிந்திக்கலாம் , ஆனால் இத்தீவின் பெயர் சங்க இலக்கிய காலம் முதல் உள்ள ஒரு பெயரின் திரிபு என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன் இத்தீவு தொழில் பெயரினால் அழைக்கபடுகின்றது. கை சால் , கைச்சால் என்பதே இத் தீவின் உண்மை பெயர் . இத் தீவுதான் மருவி கச்சால் தீவு என்றும் இன்று இறுதியில் கச்சா, கச்சை தீவு என்று அழைக்கபடுகின்றது . நாளை கோமன தீவு என்று மருவினாலும் வியப்பில்லை. அந்தளவுக்கு தமிழனின் கோமனங்கள் உருவப்பட்டு நிர்வானமாக்கப்பட்டு அவமான படுத்தப்படும் இடமாக மாறி உள்ளது.... 

கச்சால் என்றால் மீன்பிடிக்கும் ஒருவகை கை வலை கூண்டு , சால் என்பது வலை கை + சால் என்பதே கைச்சால். அதுவே கச்சால் என்று சொல்லப்படும் . இன்றும் திருகோணாமலை பகுதி மீனவர்கள் கோலா என்னும் பறக்கும் மீன்களை அள்ளும் வலையை கைச்சால் என்று அழைப்பார்கள். அக இத்தீவை தமிழர் நாம் சரியா கைசால் தீவு என்றுதான் சொல்லவேண்டும் . வலைகளை உலரவைத்து மீன்பிடிக்கும் தளமாக, முத்துக்குளிக்கும் கடலாக அழகிய நிலமாக இத்தீவு இருந்துள்ளது. 

ஆரம்பத்தில் இங்கு "டார்குயின்" என்னும் பச்சை ஆமைகள் இருந்த காரணத்தினால் பச்சை தீவு என அழைக்கப்பட்டது.இது பின்னர் மருவி கச்சை தீவு என அழைக்கப்படலாயிற்று.சித்த மருத்துவத்துக்கு தேவையான அனேக மூலிகைச் செடிகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.இதில் "உமிரி"என்னும் மூலிகை நோய்களுக்கு சிறந்த நிவாரணி.உமிரி கீரை நீர் பிடிப்பான தாவரம் . கடல் நீரில் இருக்கும் உப்பை நீக்கி தன்னுள் நன்னீரை பிடித்து வைத்திருக்கும் அற்புத தாவரம் . சஞ்சீவி மலையின் ஒரு பக்கம் என்றும் இதை சொல்வாருண்டு 

கச்சை தீவை சுற்றியுள்ள கடலில் சங்கு குளிப்பர்.இதனால் இத் தீவுக்கு சங்கு புட்டித் தீவு,சங்கு புட்டித் தீடை என்ற புனைப் பெயர்களும் உண்டு.இதற்கு கண்ணகி அம்மன் பள்ளுப் பாட்டுகள் சான்றாக உள்ளது.மேலும் கச்சைத் தீவுக் கடலில் விலையுயர்ந்த இறால் வகைகள் கிடைக்கும்.சுருங்கக் கூறின் கச்சை தீவு சூழ் கடல் ஒரு மீன் அரங்கம். மீன் உற்பத்தி ஆகும் தமிழரின் மிக பெரிய கண்டல் மேட்டில் இத்தீவு அமைந்துள்ளது. 

தமிழரின் மிகப்பெரிய குமரி கண்டத்தில் பல ஆயிரம் தீவுகளுடன் எழு மண்டல நாடுகளாக ஐம் பத்து ஆறு நாடுகள் இருந்தன. அவற்றில் இன்று எம்மிடம் இருக்கும் தமிழகம் ஈழம் ஆகிய இரண்டு நாடுகளும் தீவுகளும் கடல் வளங்களும் ஆக்கிரமிப்பாளரின் கைகளில் சிக்கி கிடக்கின்றன. மிக வளமான சரித்திர புகழ் மிக்க தீவாகிய எங்கள் கைச்சால் தீவும் ஈழமும் சிங்களவன் ஆக்கிரமிப்புள் சிக்கி கிடக்கின்றன.

ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே இன்று கச்சை தீவு என்று சொல்லப்படும் கைச்சால் தீவு. இத்தீவை அண்மித்து நெடுந்தீவு , வேலணை , காரைதீவு , பருத்திதீவு , ஊறி தீவு , கண்ட்மேடு என்று பல நூறு தீவுகளும் மணல் திட்டுகளும் உள்ளன ....

இத் தீவானது நெடுந் தீவிலிருந்தும் இராமேஸ்வரத்திலிருந்து 10 மைல் தொலைவில் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் சரி பங்கு சொந்தமான எல்லை நடுவில் உள்ளது , இத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர் நில பரப்பை கொண்டுள்ளது . தமிழக மக்களின் ஈழ மக்களின் தாய் பூமி , தமிழகம் ஈழம் பன்நெடும் காலமாக தமிழரின் தொடுகை உறவு முறை தாய் வீடாக இருந்துவந்த நிலம். நடுகள் என பிரிந்த சோகத்தில் இன்று தமிழனின் நலம் காணாது அவன் முகம் காணமுடியாதபடி , அக்கிரமிப்பாளனின் காலடியில் கிடக்கின்றது எங்கள் வள்ளுவன் வாசுகி வாழ்ந்த நிலம் . 

இத் தீவானது, 79° 31’ நெடுங்கோட்டிலும், 9° 23’ வடக்கு அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.

1974 காலத்துக்கு முன் தமிழக மீனவரின் சொர்க்கமாக் இருந்த இந்த தீவை காங்கிரசு அரசு தமிழன் அனுமதி இன்றி சிங்களவனிடம் கொடுத்தது. தமழக மீனவரின் பாவனைக்கும் வலை காயவிடுதல் வாடி அமைத்தல் என்பவற்றிற்கும் உரிமை உடையவர்கள் தமிழக மீனவர்கள் இருந்தார்கள் தமிழர்கள் வந்து செல்லும் ஒரு தளம் என்றும் கூறப்பட்டது. அனால் சிங்களவன் தமிழரை கொல்லும் காளமாக இன்று சிங்களவன் அதை மாற்றி விட்டன். 

இத் தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும்.உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும்,ஆங்காங்கே குழிகளும் காணப்படும்.பசும் புல் தரைகளும் உண்டு.நடுப்பகுதி கல்லுமலை என அழைக்கப்படும்.இது கடல்மட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உள்ளது.அதன் நீர் குடிப்பதற்க்கு நன்று.

சோழர் ஆட்சியில் கச்சை தீவு

சோழர் ஆட்சிக் காலத்தில் கீழ் கடலும்,குமரிக் கடலும் சோழர்களுக்கே சொந்தம்.அக் கடற்பரப்பிலிருந்த அனைத்து தீவுகளும் சோழரின் ஆட்சியின் கீழே இருந்தது.சோழ மன்னர்களே முதன் முதல் உலகில் கடற்படை அமைத்தவர்கள்.சோழ குல வேந்தனான இராசராச சோழன் உலகம் வியக்கும் அளவுக்கு கடற்பேரரசை நிறுவி கடற்போரை நிகழ்த்தினான்.பத்தாம் நூற்றாண்டில் உலகக் கடலின் காற்பகுதியில் சோழர்களின் மரக்கலங்கலே மிதந்தது.இவற்றில் பொருத்தப்பட்ட ஒளிப்பெருக்காடி மூலம் கடலின் நெடுந்தொலைவை கண்டறிந்தனர்.இவ்வாறாக சோழ அரசு தென் கடல் தீவுகளை எல்லாம் கைப்பற்றி ஆட்சி செய்தது.
1480 ஆம் ஆண்டு சோழ மன்னர்கள் யாழ்ப்பாணம் சென்றனர்.இடையில் கச்சை தீவை அடைந்தனர்.அங்கு பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டு விளைபொருட்களான மிளகு,திப்பிலி,இலவங்கம்,சந்தனம்,யானையின் தந்தம்,விலையுயர்ந்த முத்துக்கள்,முதலிய பொருட்களை கச்சை தீவுக்கு ஏற்றுமதி செய்தனர்.

இருநாட்டு மன்னர்களும் கச்ச தீவு கடலில் முத்துக்குளித்தல்,சங்கு குளித்தல்,மீன் பிடித்தல் ஆகிய தொழில்களை நடத்தினர்.இது குறித்து அகநானூறு ,புறநானூறு,கலித்தொகை,சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

மேலும் எகிப்திய சுற்றுலாப்பயணியான தாஸ்மோஸ் இண்டிக்கோ யூலுயெஸ்டஸ்,ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதிய வரலாற்றுக் குறிப்பில் கூறியுள்ளார்.

11 ஆம் நூற்றாண்டில் இராசராச சோழன் பாண்டிய இராச்சியத்தை வென்றதோடு,இலங்கைத் தீவினையும் வென்றான்.அன்று இராமேஸ்வரம் கடற்பாதையை கண்காணிப்பதற்கு சோழ மறவர்களை அமர்த்தினான்.16 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி நலிவுற்றது.பாண்டியரது ஆட்சி மறைந்தது.இராசராச சோழனால் அமர்த்தப்பட்ட தளபதிகள் தனி ஆட்சி நிறுவினர்.

15 ம் நூற்றாண்டில் வந்த ஐரோப்பியர்கள் இத்தீவை தமதி உல்லாச நிலம்மாக அமைத்து மகிழ்ந்தனர் .தேவாலயம் ஒன்றை நிறுவினர் . இன்றும் அங்கு ஒன்றுகூடும் மகள் மகிழ்ந்து வருவார்கள் . அண்மைய காலமாகவே சிங்கள் அக்கிரமிப்பாளன் மிக மோசமான கெடுபிடிகளை செய்கின்றான். 

உலகில் இவ்வாரான ஒரு தீவு ஒரு நாட்டுக்கு கிடைப்பது அபூர்வம் என்றே சொல்லவேண்டும் .ஒரு சொர்க்க தீவாக இதை மாற்றி தமிழர் விடுமுறை மையமாக மாற்றி நாம் இக்கொடையை அனுபவிக்க வேண்டும் . இதை தமிழனிடம் இருந்து பறித்து சிங்களவன் கையில் கொடுத்தது இந்திய காங்கிரசு அரசு , இந்திரா அம்மையார் தமிழருக்கு செய்த மிக பெரிய துரோகம் . இத்தீவை நாம் மீட்டு எடுக்க வேண்டும் தமிழர்களின் உரிமை தீவி இது . இங்கு சிங்களவன் அதிகாரம் செலுத்தும் தகுதி அற்றவன் . நாம் வஞ்சிக்கப்ட்டுளோம் என்பதை எல்லா தமிழரும் உணரவேண்டும் . எம் வளமான மீன் பிடி அன்னை மடி அதை சிங்களவன் ஆக்கிரமித்து எம்மை சுட்டு கொல்கின்றான், அவமான படுத்துகின்றான் , அதை வேடிக்கை பார்க்கின்றது ஆளும் இந்திய கிந்தி ஆதிக்க அரசுகள். தமிழன் நிலத்தை தமிழன் அல்லாதவன் ஆள்கின்றான் .தமிழனை அடிகின்றான், கொல்கின்றான். வேறு மாநில மீனவன் ஒருவன் இறந்தால் நாடே வழக்காடுகிறது. 600 தமிழ் மீனவனுக்கு மேல் பாதிக்கப்ட்டும் கொல்லப்பட்டும் இருகின்றான் அவனுக்கு எம் உணர்வுகள் புரியவில்லை . 

தமிழனின் உடல்கள் இந்த கடலில் உப்பி கரை ஏறும் அவல நிலை இன்னும் எத்தனை காலம் நீடிக்க போகின்றது . கச்சை தீவை மீட்ட்கும் படைகள தயாராகட்டும் . தமிழன் தாயகம் மீட்க படும் வரை நாம் ஓய கூடாது. தமிழன் கடல் ஈழம் வரை பறந்து கிடக்கின்றது. அங்கு சிங்களவன் ஆக்கிரமித்து நிற்கின்றான் . எமது வாழ்வாதரங்களை சுரண்டுகின்றான். எம்மண்ணை பறிக்கின்றான். எம்மை கொன்று புதைகின்றான். 

தமிழா நாம் எமது ஆட்சியை நிறுவ வேண்டும் இல்லது விடில் நாளை எம் சந்ததி நாடுஅற்று வீடு இல்லது அலைந்து போகும் . எம் நிலத்தை எவனுக்கும் ஈழ தமிழனும் கொடுக்கவில்லை தாயாக தமிழனும் கொடுக்கவில்லை . எங்கள் நிலத்தை எவள் எவளுக்கு கொடுப்பது. அதை எவன் தடுக்காது இருந்தான் என்பதும் எமக்கு தெரிகின்றது. எங்கள் நிலம் எமக்கே உரியது தமிழர் நிலங்களை மீட்போம் விரைந்து வாருங்கள் ..... 

வரைபடத்தில் மஞ்சள் கோடே உண்மையான எல்லை . சதுரம் A தமிழக மீனவரின் பிறப்புரிமை எல்லை, அதற்குதான் கச்சதீவு உள்ளது. அதை சிங்களவன் கைகளுக்கு கொடுத்து தமிழனை சிங்களவன் கொல் வதை அனுமதித்து வேடிக்கை பார்ப்பது பச்ச துரோகம் . தமிழன் செத்தால் என்ன சாகட்டும் என்று சொல்லும் மிக கேவலமான ஆட்சி செய்பவனிடம் இனி கேட்டு பயனில்லை நாமே மீட்போம் நம் மண்ணை .. நம் கடலை ....நம் தாயகத்தை

 

https://www.facebook.com/TamilValrppom

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.