Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலுக்கும் மனித உரிமையாளர்கள் ஆதரவு! சிக்கலுக்குள்ளாகும் பிரான்சின் வழக்கு! - சோழ.கரிகாலன்

Featured Replies

வலுக்கும் மனித உரிமையாளர்கள் ஆதரவு! சிக்கலுக்குள்ளாகும் பிரான்சின் வழக்கு! - சோழ.கரிகாலன்

 

ஸ்நோவ்டென் வேட்டை - 3

வெனிசுவேலா அமெரிக்க அச்சறுத்தலையும் மீறி ஸ்நோவ்டென்னிற்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்திருந்தது. ஆனாலும் வெனிசுவேலா நோக்கிச் செல்வது என்பது மிகவும் ஆபத்தான பயணமாகவே அமையும். அதனாலேயே ரஷ்யாவிலேயே தஞ்சம் கோரிவிட ஸ்நோவ்டென் முடிவு செய்திருப்பதாகத் தெரிகின்றது.

inter2_1670245.jpg

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவின் Cheremetievo விமான நிலையத்தின் விமான மாற்றுப் பகுதியில் ஸ்நோவ்டென் மூன்று வாரங்களிற்கும் மேலாக இருப்பதை அவர் அங்கு மேற்கொண்ட சந்திப்புக்களிள் ஒளிப்படங்கள் நிரூபித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றின் உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் பிரபல வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர். முக்கிய பதின்மூன்று பேர் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். இதனை ஒழுங்கு செய்ததில் மத்திய பாதுகாப்புச் சேவை என்று அழைகப்படும் ரஷ்ய உளவு நிறுவனமான FSO வின் பங்கு அதிகமாக இருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவிலிருந்து இலத்தீன் அமெரிக்காவிற்குச் செல்வது ஸ்நோவ்டென்னின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என்பதாலேயே அவர் ரஷ்யாவில் அரசியல் தஞ்சம் கோர உள்ளார் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சார்பில் சந்திப்பில் பங்கு கொண்ட தத்தியானா லொக்சினா தெரிவித்துள்ளார். இதே நேரம் கிரெம்ளினின் பேச்சாளர் ஸ்நோவ்டென் ரஷ்யாவில் அரசியல் தஞ்சம் கோருவதற்கான நிபந்தனையாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வைத்த நிபந்தனைகள் அப்படியே இன்னமும் உள்ளன என்று தெரிவித்துள்ளார். அதாவது ஸ்நோவ்டென் ரஷ்யாவில் தஞ்சம்கோருவதாயின் முதலாவதாக அவர் எமது பங்காளிகளான அமெரிக்காவிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடவேண்டும் என்றே விளாடிமிர் புட்டின் கூறியிருந்தார்.

ஸ்நோவ்டென் அமெரிக்காவை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்க மாட்டேன் என்று உறுதி கூறியுள்ளதாக ரஷ்யாவின் பிரபல வழக்கறிஞர் Guenri Reznik கூறியுள்ளார். ஸ்நோவ்டென் மனித உரிமையாளர்கள் மற்றும் வக்கீல்களின் துணையோடு தனக்கான ஒரு பலமான கவசத்தை உருவாக்கி வருவது வெளிப்படையாக உள்ளது. ஸ்நோவ்டென் தனது அமெரிக்காவிற்கான செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்தவேண்டும் என்று கூறும் ரஷ்யா பெரும் தகவற்களஞ்சியமான ஸ்நோவ்டென்னை தனக்காக மட்டுமே வைத்திருக்கும் FSOவின் திட்டமாகவே இவ் அரசியல் தஞ்சம் அமையக்கூடும்.

மனித உரிமைகள் ஆர்வலர்களையும் ரஷ்யாவின் பிரமுகர்களையும் சந்திப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மின்னஞ்சல் அழைப்பை அனுப்பியிருந்தார். அந்த அழைப்பினைக் கண்காணித்த அமெரிக்கா பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. ஸ்நோவ்டென் அரசியற் தஞ்சம் கோருவதைத் தடுப்பதற்குத் தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டது. ஸ்நோவ்டென்னைப் பிடிப்பதற்காக நான் எனது போர் விமானங்களைப் பயன்படுத்த மாட்டேன் என்று ஒபாமா கூறியதே ஒரு எச்சரிக்கையின் வடிவம்தான் அது.

ஸ்நோவ்டென் விமானத்தில் வேறு நாடுகளுக்கச் செல்ல முயன்றால் தனது போர்விமானங்கள் அவரை வழிமறிக்கும் என்பதன் எச்சரிக்கை வடிவமே. ‘சர்வதேச மனித உரிமைகள் சட்டம் 14இன் படி எனக்கு இருக்கும் தஞ்சம் கோரும் உரிமைமையத் தடை செய்ய அமெரிக்கா பலத்த சட்டவிரோதச் செயல்களையும் பிரச்சாரங்களையும் கடந்த வாரம் செய்திருந்தது.’ என ஸ்நோவ்டென் இச்சந்திப்பில் கூறி உள்ளார்.

‘அமெரிக்கா இது வரை வரலாற்றில் இல்லாதவாறு மிகவும் கீழ்த்தரமான வேலைகளைச் செய்துள்ளது. ஒரு ஜனாதிபதியின் விமானத்தைத் தரையிறக்கி உள்ளது. அத்தோடு ஒரு நாட்டின் ஜனாதிபதியின் விமானத்தை சர்வதேசச் சட்டங்களை மீறிச் சோதனையிட்டுள்ளது. அதற்குள் அரசியற் தஞ்சம் கோரிய நாள் உள்ளோனா என்று பார்க்குமளவிற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அவரின் விமானப் பறப்பைப் பிரான்சும் ஐரோப்பிய நாடுகளும் கூடத் தடை செய்திருந்தன’ என்றும் ஸ்நோவ்டென் கூறியுள்ளார்.

கிரெம்ளின் வட்டாரத்திற்கு மிக நெருங்கிய நபரும் சிவில் நிர்வாக அங்கத்தவரும் பிரபல வக்கீலுமான Anatoli Koutcherena ஸ்நோவ்டென் சட்டபூர்வமான முறையில் இலத்தீன் அமெரிக்க நாடுகளிற்குச் செல்வதற்கு அனைத்துச் சட்டபூர்வமான நடவடிக்கையையும் நான் செய்து கொடுக்கத் தயாராக உள்ளேன். ரஷ்யாவின் சட்ட நுணுக்கங்களுக்குள்ளும் இருந்து அவரை நான் மீட்பேன். ரஷ்யக் குடிவரவுத் திணைக்ளத்திடம் ஒரு கோரிக்கை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்விண்ணப்பம் ஜனாதிபதியின் ஆணையின் கீழ் குடிமக்களை ஆராயும் பிரிவினர் ஆராய்வார்கள். அவ்விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால் ஜனாதிபதி அவருக்கான குடியுரிமைச் சான்றிதழில் கையப்பம் இடுவார்’ என்று கூறியுள்ளார்.

ரஷ்ய நாடாளுமன்ற அவையின் தலைவர் Sergueï Narychenkine ‘உலகம் முழுவதுமுள்ள மில்லியன் கணக்கான மக்களின் தனி உரிமைகளைகளைப் பேணுவதற்காகப் போராடும் இந்த மனித உரிமைகளின் காப்பாளனுக்கு நாம் தஞ்சம் வழங்க வேண்டும் எனக் கூறி உள்ளார். ஸ்நோவ்டென் நிழலிருந்து வெளிவந்து மனித உரிமையாளர்களையும் கிரெம்ளின் ஆதரவையும் தன்னகத்தே திரட்ட முயல்வதும் சிறந்த இராஜதந்திரமே.

இப்படி இருக்கையில் ஸ்நோவ்டென் கொழுத்திப் போட்ட தீ பிரான்சில் புகையத் தொடங்கி உள்ளது. சர்வதேச மனித உரிமைகளின் சம்மேளனம் (FIDH) மற்றும் மனித உரிமைகளின் அணி போன்றவை ஸ்நோவ்டென் வெளியிட்ட தனிப்பட்ட நபர்களின் மீதான அமெரிக்காவின் புலனாய்வின் அடிப்படையில் பெயர் குறிப்பிடப்படாத நபரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தனிப்பட்ட நபர்களின் சுதந்திரத்தின் மீதான அத்து மீறலையும் அதன் அபாயத்தையும் எச்சரிக்கும் அபாயச் சங்காக அமைந்துள்ளது என இச் சம்மேளத்தின் கௌரவத் தலைவர் Patrick Baudouin கூறியுள்ளார்.

‘பிரிஸ்ம் புலனாய்வுத் தகவல் மூலம் அமெரிக்கத் தேசிய மையம் தனி நபர்ககளின் சுதந்திரத்தில் தலையிடுகின்றது. 2001ம் ஆண்டின் பின்னரான patriotic act பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அமெரிக்கர்களை வேவு பார்ப்பது அமெரிக்காவிற்குச் சட்டமூலம் சாத்தியமானது. ஆனால் இதன் மூலம் உலக மக்கள் முழுவதையும் அமெரிக்கா கண்காணிக்க ஆரம்பித்துள்ளது. தனி நபர்களின் தரவுகள், இலத்திரனியல் தொடர்புகள், அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்குள் ஊடுருவல் என்பன இன்று பிரெஞ்சு மக்களின் மீது பாரிய குற்றமாகச் சூழ்ந்துள்ளது. இது பிரான்சின் குற்றவியல் சட்டங்களின் கீழ் மிகவும் பாரதூரமான குற்றமாகும்.

தனிப்பட்ட மக்களின் வாழ்வெல்லைக்குள் ஊடுருவுவது பிரான்சின் சட்டவரம்பை மீறுவதாகும். இந்த கண்காணிப்பு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின கீழ் சாத்தியமானாலும் அனைத்து மக்களையும் பயங்கரவாதிகளாக எண்ணிக் கண்காணிப்பது தவறானது. உலகத்தின் பெரியண்ணன் என்ற பலத்தில் எம்மை வேவு பார்ப்பதை நாம் அனுமதிக்க முடியாது. எட்வேட் ஸ்நோவ்டென் ஒரு மனிதாபிமானவாதி. ஒவ்வொருவர் மீதும் ஏற்படுத்தப்படும் கண்காணிப்பையும் தனிப்பட்ட வாழ்வின் ஊடுருவல்களையும் அனைவர்க்கும் வெளிப்டுத்தி ஜனநாயகத்தை நிலை நாட்டியவர்.

இத்தகவல் கண்காணிப்பானது ஜனநாயக மரபை மீறுவதோடு சித்திரவதைகளுக்கும், தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாகச் சர்வதேச அளவில் பயன்படுத்துவதும் ஒரு காட்டுமிராண்டிச் செயலாகும். அமரிக்கா தன் சட்டத்தின் அடிப்படையில் ஸ்நோவ்டென்னைக் கைது செய்யமுயல்வது சாதாரணம். ஆனால் மறுபக்கத்தில் உலக ஜனநாயகத்திற்கும் அடிப்படை மனித உரிமைகளிற்கும் ஸ்நோவ்டென் பெரும் பணியாற்றி உள்ளார். இவருக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதொன்றும் அமெரிக்கவிற்கு எதிரான செயல் அல்ல. அமெரிக்காவின் முறையற்ற சட்டங்களில் சிக்கி அழிய இருப்பவர்க்குத் தஞ்சம் கொடுக்க வேண்டியது அனைவரினதும் கடமை’ என FIDH தலைவர் கூறியுள்ளார்.

இவரிடம் ஸ்நோவ்டென்னிற்கு எதிரான பிரான்சின் நிலைப்பாடு பற்றி வினவியபோது ‘பிரான்சின் முடிவானது உணர்ச்சியற்ற சீற்றமான முடிவாகும். தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே பிரான்சும் எடுத்துள்ளது. ஸ்நோவ்டென்னின் கோரிக்கையை மேலோட்டமாவே நிராகரிக்காது கோரிக்கையை ஏற்று விசாரித்து முடிவை வழங்கி இருக்கலாம். பொலிவிய ஜனாதிபதியின் விமானப் பறப்பை அமெரிக்காவிற்குக் கீழ்ப்படிந்து தடுக்காது விட்டிருக்கலாம். அமெரிக்கப் பெரியண்ணையின் முன்னர் மண்டியிட்டு விட்டது பிரான்ஸ்’ என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து ‘எமது இந்த வழக்கானது எப்படியான முடிவை அடையும் என்று சொல்ல முடியாது. இதற்கான ஒரு நீதிபதி நியமிக்கப்படுவாரா என்பதே சந்தேகம்தான். இதற்கான தொடர்ச்சிகளிற்கு அதிகப்படியான சாத்தியக் கூறுகள் உள்ளன. எமக்குப் பெரிய தடைகள் உருவாக்கப்படும். தேசியப் பாதுகாப்பச் சபை (NSA) மற்றும் FBI பிரெஞ்சு அதிகாரிகளாலும் வழக்கறிஞர்களாலும் விசரிக்கப்படுவதை அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே.

ஆனாலும் இங்குள்ள பல்தேச நிறுவனங்களும் பல்தேச அமைப்புக்களும் கூட கண்காணிப்பக்கு உள்ளாகி இருக்கும். அவர்கள் தமது ஆதரவை இந்த வழக்கிற்குத் தருவார்கள். இது பிரெஞ்சு விசாரணையை இலகுவாக்கும். எமது வழக்கானது நிச்சயம் மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்றவற்றை எம்பக்கம் திருப்பும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்நோவ்டென் ஒரு பக்கம் மனித உரிமை ஆர்வலர்கள் மூலம் தனக்கு வலுச்சேர்த்து அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர பிரான்சில் போடப்பட்டுள்ள வழக்கு அமெரிக்க உளவு நிறுவனங்களைக் கூண்டிலேற்ற முயல, ஆப்பிற்குள் சிக்கிய நிலையில் அமெரிக்கா உள்ளது. ஆப்பு இன்னமும் இறுகுமா?

வேட்டை தொடரும்...

சோழ.கரிகாலன்

நன்றி: ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.