Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேழ்வரகு ரொட்டி (குரக்கன் ரொட்டி)வெல்ல தோசை,இட்லி

Featured Replies

கேழ்வரகு ரொட்டி (குரக்கன் ரொட்டி)

 

2249.jpg

 

  • கேழ்வரகு மாவு - 500 கிராம்
  • சீனி - 250 கிராம்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • எண்ணெய் - 1/2 லிட்டர்

 

  • முதலில் கேழ்வரகு மாவு, சீனி, உப்பு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • பின்பு நீரை விட்டு சப்பாத்திக்கு மா பிசைந்து கொள்ளவது போல் பிசைந்து நன்கு அடித்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
  • பின்பு கையில் சிறிதளவு எண்ணெய் பூசிக் கொண்டு அவற்றை அப்பள வடிவில் தேய்த்துக் கொள்ளவும்.
  • மிகவும் தடிப்பாகவும் மெல்லியதாகவும் இல்லாமல் சற்று நடுத்தரமாக தேய்க்கவும்.
  • வாணலியில் எண்ணெயை கொதிக்க விட்டு ஓவ்வொன்றையும் இரு புறமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
  • மாலை நேரங்களில் சாப்பிட நன்றாக இருக்கவும்.
Note:

மிகவும் சத்து கூடிய உணவு இந்த ரொட்டியை சிறுவர் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். கேழ்வரகு உடம்பிற்கு உறுதியை அளிக்கும் ஒரு சத்துக்கூடிய தானிய உணவு. இதை எமது நாட்டில் குரக்கன் ரொட்டி என்று சொல்லுவோம். நீங்கள் விரும்பினால் இதற்குள் இரண்டு வாழைப்பழங்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.

 

http://www.arusuvai.com/tamil/node/2249

 

Edited by யாழ்அன்பு

  • தொடங்கியவர்

க்கள்0
share_save_171_16.png
 
 
de2e8602-e6ce-41b6-b2c2-941b23f99d53_S_s
 
 
கேழ்வரகு(குரக்கன்) இட்லி
தேவையான பொருட்கள்....

கேழ்வரகு மாவு - 100 கிராம்

இட்லி மாவு – ஒரு குழிக்கரண்டி

உளுந்து – 25 கிராம்

வெந்தயம் – கால் தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• ராகி மாவை லேசாக வறுத்து கொள்ளவும்.

• உளுந்தையும், வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து மைய அரைத்து கொள்ளவும்.

• அரைத்த மாவுடன் இட்லி மாவு, ராகிமாவையும் சேர்த்து தேவைக்கு ஏற்ற தண்ணீர் ஊற்றிக் கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும்.

• புளித்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லிகளாக வார்க்கவும்.

• டயட்டுக்கு ஏற்ற சுவையான டிபன்.

தக்காளி, பூண்டு சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

 

கேழ்வரகு வெல்ல தோசை

sl1697.jpg

என்னென்ன தேவை?

கேழ்வரகு - 200 மில்லி

அரிசிமாவு-50மில்லி

வெல்லம்-200மில்லி தூள் செய்தது

ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி

தேங்காய்த்துருவல்- 1 கிண்ணம்

எப்படி செய்வது?

வெல்லத்தை 1 கிண்ணம் தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து மண் இல்லாமல் வடிக்கவும். வெல்லக் கரைசலில் கேழ்வரகு மாவு , தேங்காய் துருவல், ஏலப்பொடி இவற்றைப் போட்டு நன்றாகக் கட்டியில்லாமல் கரைக்கவும். தேவையானால் மீண்டும். தண்ணீர் விட்டு கரைக்கலாம். மாவு பதம் ரொம்ப கெட்டியாக இருக்கக்கூடாது. அதே சமயத்தில் நீர்க்கவும் இருக்ககூடாது. தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் தடவி துடைத்து மாவை குழிக்கரண்டியால் மேலிருந்து விட வேண்டும், அப்போது தான் ஒரே அளவாக பரவலாக மாவு கல்லில் விழும். 

இதற்கு நெய்யும், எண்ணெய்யும் கலந்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும். இதை மிக எளிதான முறையில் செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தற்கும் நல்லது. வெல்லம் கேழ்வரகு சேர்ப்பதனால் இரும்புச்சத்து கிடைக்கிறது.  இதே மாவை வெல்லம் போட்டு கெட்டியாக கிளறி அடையாக தட்டலாம். இந்த கேழ்வரகு அடை ரொம்ப ருசியாக இருக்கும். இதற்கு நெய் தொட்டு குழந்தைகளுக்கு தரலாம். இனிப்பு(வெல்லம்) அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு போட்டுக்கொள்ளலாம்.  

www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=1698&Cat=502

கேழ்வரகு இனிப்பு அடை              

கே‌ழ்வரகு உடலு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது. அதனை கூ‌ழ், அடை, பு‌ட்டு செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். அடை ‌சிலரு‌க்கு‌ப் ‌பிடி‌க்காது. அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌ம் வகை‌யி‌ல் அதனை இ‌னி‌ப்பாக செ‌ய்து கொடு‌க்கலா‌ம். 

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1 க‌ப் (ராகி மாவு)

வெல்லம் - 1/2 கப்

துறுவிய தேங்காய் - 1/4 க‌ப்

ஏலக்காய் பொடி 

நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

வெல்லத்தை உ‌தி‌ர்‌த்து ஒரு பா‌த்‌தி‌ர‌த்‌தி‌ல் போ‌ட்டு அ‌தி‌ல் ஒரு கரண்டி அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

வெல்லம் முழுவதும் கரைந்ததும் வடிகட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

வடிகட்டிய வெல்லக் கரைசலோடு துறுவிய தேங்காய், ஏலக்காய் பொடி, கேழ்வரகு மாவு சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிவிடவும்.

உ‌தி‌ரியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வாழையிலையில் எண்ணெய் தடவி மெல்லிய வடைகளாகத் தட்டி சூடான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

‌கே‌ழ்வரகு மாவு ந‌‌ன்கு வேக வே‌ண்டு‌ம். எனவே ‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் ந‌ன்கு வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.

சூடான, சுவையான, உடலு‌க்கு ஏ‌ற்ற இ‌னி‌ப்பு அடை தயா‌ர். குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி உ‌ண்பா‌ர்க‌ள்.

 
 

 

கேழ்வரகு( குரக்கன்)பக்கோடா

Posted on June 14, 2013 by vidhai2virutcham

sl1472.jpg

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 100 கிராம்,

சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி,

பச்சை மிளகாய் – 2,

முருங்கைக் கீரை – 50 கிராம்,

சூரியகாந்தி எண்ணெய் – தேவைக்கேற்ப,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

கேழ்வரகு மாவில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, உப்புசேர்த்து கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண் ணெய் காயவைத்து, மாவை சின்ன துண்டுகளாக உதிர்த்து, பொரித்தெடுக்கவும். கேழ்வரகில் இரும்பு ச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத் து எல்லாம் இருக்கின்றன. மலச் சிக்கல் வராமலும் காக்கும். மாலை நேரத்தில் வாரம் 2 முறை சாப்பிடலாம்.

http://vidhai2virutcham.com/2013/06/14/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95/

 

கேழ்வரகு(குரக்கன்) இடியாப்ப உப்புமா

aPlus.gif a_.gif
mlike.gif0கருத்துக்கள்0
share_save_171_16.png
 
e18ba520-cb99-4099-aea6-788a8875485e_S_s
 
 

தேவையானவை:

 
கேழ்வரகு மாவு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2  
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு, பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
 
செய்முறை:
 
• வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
 
• வெறும் கடாயில் கேழ்வரகு மாவை வறுக்கவும்.
 
• மாவு ஆறிய பின்  எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசிறவும்.
 
• இதனுடன் கை பொறுக்கும் அளவு சூடான வெந்நீர் விட்டு பிசைந்து இடியாப்ப அச்சில் பிழிந்து, ஆவியில் வேகவிடவும்.
 
• கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
* ஆவியில் வேக வைத்த கேழ்வரகு சேவை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
 
குறிப்பு: விரும்பினால் காய்கறிகள் சேர்த்து வதக்கலாம்
 

 

கேழ்வரகு(குரக்கன்) & கம்பு கூழ் அல்லது கஞ்சி

பிப்ரவரி 1, 2012 — chitrasundar5

img_6684.jpg?w=300&h=259

கம்பை ஊறவைத்து இடித்துத்தான் இதனை செய்வார்கள்.கம்புமாவு கிடைப்பதால்  அதையே பயன்படுத்திக்கொண்டேன். கேழ்வரகு மாவு & கம்பு மாவு இரண்டையும் கலந்து செய்யும்போது நன்றாக இருக்கும்.அல்லது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும்கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

கேழ்வரகு மாவை புளிக்க வைத்துச் செய்யும்போது சுவை கூடுதலாக இருக்கும்.அல்லது இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து உடனடியாகவும் தயாரித்துக்கொள்ளலாம்.

தேவையானவை:

கேழ்வரகு மாவு_1/2 கப்

கம்பு மாவு_1/2 கப்

உப்பு_தேவைக்கு

செய்முறை:

முதல் நாளிரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்து,புளிக்க வைக்கவும். காலையில் பார்த்தால் மாவு புளித்து,பொங்கினாற்போல் இருக்க வேண்டும். இட்லி மாவை புளிக்க வைப்பதுபோல் செய்ய வேண்டும்.உப்பு போட வேண்டாம்.

காலையில் ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு சூடேற்றவும்.

அது கொதி வருவதற்குள் கம்பு மாவில் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.

தண்ணீர் கொதி வந்ததும் கம்பு மாவை ஊற்றிக் கட்டிகளில்லாமல் கிண்டிவிடவும்.Whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளாவது ஒன்றாவது. அடியில் பிடிக்காமலும்,கட்டி விழாமலும் தடுக்க அடிக்கடி கிண்டிவிட வேண்டும்.

சிறிது நேரத்தில்  கம்புமாவு பொங்கி வரும்.அப்போது கேழ்வரகு மாவைக் கரைத்து ஊற்றவும்.தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும்.மீண்டும் கட்டிகள் வராதவாறு விடாமல் கிண்டவேண்டும்.

ஒரு 5 நிமி கழித்து தீயை மிதமாக்கி மூடி மேலும் ஒரு 5 நிமி வைக்கவும். இப்போது  இரண்டு மாவும் கலந்து கொதித்தபிறகு நல்ல வாசனை வரும். கெட்டியாகவும் இருக்கும்.

விருப்பப்படி சூடாகவோ அல்லது ஆறியபிறகோ  சாப்பிடலாம்.ஒன்று செய்யலாம்.குளிர் காலத்தில் சூடாகவும் கோடையில் ஆற வைத்தும் சாப்பிடலாம்.

இதனை சாதம்போல் வைத்து எந்தக் குழம்புடனும் சாப்பிடலாம்.அல்லது சிறிது தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல் வகைகள், ஊறுகாய் வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நல்ல சத்தானதும்கூட.

 

http://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D/

 

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.