Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாமா?

Featured Replies

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாமா?

August 1, 2013வகைகள்: அரசியல் | ஆசிரியர்: அரவிந்தன் நீலகண்டன் | மறுமொழிகள்: 0

dalit-300x194.jpg

அண்மையில் சென்னை வந்திருந்த போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் பணி புரியும் திரு.மகிழ்நன் ’அனைத்து சாதியினரும் அர்ச்சகராகுதல்’ குறித்து என் கருத்துகளைக் கூறுமாறு கேட்டிருந்தார். அவர் ஏறக்குறைய ஒரு மணி நேரம் உரையாடலின் போது அப்பிரச்சனையின் பல பரிமாணங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டார். அப்போது கூறப்பட்ட சில கருத்துகள் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘ரௌத்ரம் பழகு’ நிகழ்ச்சியில் ஜூலை 20 அன்று காட்டப்பட்டன. ஆகமங்களை முழுமையாக மறுக்க வேண்டும் என நான் கூறியதாக சில நண்பர்கள் கருதி என்னிடம் அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் கேட்டிருந்தனர். எனவே இந்த உரையாடலில் பேசப்பட்ட முழு வடிவத்தையும் என் நினைவிலிருந்து பின்வருமாறு அளிக்கிறேன்.

• அனைத்து ஹிந்துக்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்றே நான் இந்த பிரச்சனையை பார்க்கிறேன். இந்துக்கள் வகுப்புவாரி பெரும்பான்மையாக இருக்கிறார்களே அன்றி அரசியல் சமூக பெரும்பான்மையாக மாறவில்லை. இதனை பாபா சாகேப் அம்பேத்கர் சுட்டிக் காட்டியுள்ளார். அவ்வாறு அவர்கள் மாற்றப்பட வேண்டும். தேச நன்மைக்கு அது மிகவும் அவசியமானது ஆகும். ஹிந்துக்கள் ஒன்றாக இணைய ஹிந்து தர்மத்தை தன்னுடையதாக உணர அது அவசியமானது ஆகும். எனவே ஒரு நீண்ட கால கண்ணோட்டத்தில் ஹிந்து சமூக ஒருங்கிணைப்பை மனதில் கொண்டு இதை நான் வரவேற்கிறேன்.

• கோவில்களில் அனைத்து ஹிந்துக்களும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஹிந்துக்கள் பூசகர்களாக அமரும் போது அதன் விளைவு ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தில் சாதிய பிரச்சனைகளில் மனமாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புகிறேன். இரட்டை டம்ளர் முதல் தெருக்களில் நடப்பது வரை பல்வேறுவிதமான தீண்டாமைகளை அழிக்க தலித் சமுதாயத்தினர் முக்கிய திருக்கோவில்களில் பூசகர்களாக அமர்வது உத்வேகத்தை அளிக்கும் வினை ஊக்கியாக அமையும்.

savarkar-3.jpg

• அனைத்து ஹிந்துக்களையும் பூசகர்கள் ஆகும் செயல்திட்ட்த்தை முதன்முதலில் முன்வைத்தவர்கள் திராவிட அமைப்புகளோ அல்லது ஈ.வெ.ராமசாமியோ அல்ல. சுதந்திரவீர விநாயக தமோதர சாவர்க்கரே அதற்கான செயல்திட்டத்துக்கு 1929 இல் அடிக்கல் இட்டார். தனது கோவில்களை பாதுகாக்க முடியாத ஒரு சமுதாயத்துக்கு புதிய கோவில்களைக் கட்ட உரிமை இல்லை; ஆனால் அனைத்து இந்துக்களுக்கும் அர்ச்சகராகும் உரிமை உண்டு கோவில் நுழைவு உரிமை உண்டு என்பதை உணர்த்தவே இந்த கோவில் கட்டப்படுகிறது என்றார் வீர சாவர்க்கர். இன்று திராவிட இயக்கத்தவர் தாம் செய்த்தாக உரிமை கோரும் பல முற்போக்கு செயல்களை வெறுப்பு இல்லாமல் செய்த முன்னோடி சமூக சீர்திருத்தவாதிகள் இந்துத்துவர்களே ஆவார்கள். பிறப்படிப்படையிலான புரோகிதர்கள் தேவைப்படாத இந்து திருமண சட்டத்தை ஹிந்துத்துவரான நாராயண் பாஸ்கர் காரேயே முதலில் கொண்டு வந்தார். ஹிந்துத்துவரான ஹர்பிலாஸ் சாரதாவே குழந்தைகள் திருமணத்தை தடை செய்யும் சாரதா சட்டத்தைக் கொண்டு வந்தார். மேலும் காரே அவர்களே தலித்தான அக்னி போஜ் என்பவரை தமது அரசில் அமைச்சராக்கி அதனால் காங்கிரஸின் மேல்சாதியினரின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். அனைத்து ஹிந்துக்களும் இணைந்து உணவருந்தும் ஒரு விராட ஹிந்து உணவகத்தை வீர சாவர்க்கர் உருவாக்கி அதில் கட்டாயமாக ஒரு தலித் சமைக்கும் உணவை/தேநீரை தன்னை சந்திக்க வருவோர் அருந்த வேண்டும் என கூறினார். எனவே ஹிந்துத்துவத்துக்கு இவ்விஷயத்தில் திராவிட இயக்கதவர்களைக் காட்டிலும் நீண்ட சிறந்த பாரம்பரியம் உண்டு.

Sudarshan-ji.jpg• சுவாமி விவேகானந்தரே மனம் வெதும்பி ‘சாதிய பைத்தியக்கார விடுதி’ என வர்ணித்த கேரளத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்க பிரச்சாரகரால் உருவாக்கப்பட்ட தாந்திரிக வித்யா பீடம் அனைத்து சாதியினருக்கும் பூசகர், அர்ச்சகராக்கும் பயிற்சியை அளித்து பல தேவஸ்தான கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்கியுள்ளது. பீகாரில் மிக முக்கியமான கோவில் ஒன்றில் முதன்மை பூசகராக தலித் ஆக்கப்பட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அப்போது சங்கத்தின் சர் சங்க சாலக் (அகில இந்திய தலைவர்) பரம் பூஜனீய ஸ்ரீ சுதர்ஷன்ஜி அவர்கள் கலந்து கொண்டார்கள். எனில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த எதிர்ப்பு ஏற்படுவதற்கு காரணமென்ன?

• இங்கு அனைத்து இந்துக்களும் அர்ச்சகர்களாகும் திட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு எதிரான திட்டமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினரை வெற்றி கொண்ட்தாக அல்லது தோல்வி அடைய செய்வதாக அந்த பிரச்சாரம் அமைந்துள்ளது. மேலும் இதை உரக்க பேசும் திராவிட அமைப்புகள் ஹிந்து மதத்துக்கு எதிராக அது ஆபாச குப்பை என்பது போல பிரச்சாரம் செய்து வருவதால் இயல்பாகவே இது ஹிந்து எதிர்ப்பாளர்களின் சதி என்பதாக சாதாரண ஹிந்து உணர்கிறார். ஆகவே இந்த திட்டத்தை முன்னெடுப்பவர்கள் ஆக்கபூர்வமாக ஹிந்து மதத்தையும் இந்த பிரச்சனையையும் அணுக வேண்டும். இருதரப்பிலும் உள்ள நம்பிக்கையின்மையும், ஒரு சமுதாய குழுவினரி பாரம்பரிய வாழ்வாதார உரிமை பறிக்கப்படுகிறதோ என்கிற அச்சமுமே பிரச்சனை. இதனை ஒரு மோதல் உணர்வுடன் அணுகப்படாமல் இருதரப்பிலும் அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவதே சரியானதாக இருக்கும்.

• ஆகமவிதிகளுக்கு இது புறம்பல்லவா என கூறப்படுகிறது. இது மிகவும் பலவீனமான ஒரு வாதம். ஒரு காலகட்டத்தில் ஆகம விதிகள் ஒடுக்கப்பட்ட மக்களையும் சூத்திரர் என கருதப்பட்டவரையும் கோவில்களுக்குள் அனுமதிக்கவில்லை. அந்த விதிகளை நாம் மாற்றவில்லையா? மதத்திற்காக மனிதன் இல்லை மனிதனுக்காகவே மதம் இருக்கிறது என்பார் பாபா சாகேப் அம்பேத்கர். ஹிந்து ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் சமூகநீதியையும் அளிப்பதற்காக நாம் நிச்சயமாக ஆகமவிதிகளை மாற்றி அமைக்கலாம். ஸ்மிருதிகள் போலவே ஆகமங்களையும் நாம் அணுக வேண்டும். எனவே ஆகமவிதிகளை அவற்றின் அடிப்படை உணர்வினை புரிந்து கொண்டு நல்ல அம்சங்களை தக்கவைத்து கொண்டு இதர விஷயங்களை நாம் நிச்சயமாக மாற்ற முடியும்.

• சங்கர ராமானுஜ மத்வாச்சாரியார்கள் ஆகம விதிகளை மீறினார்களா? காசியில் தலித்தின் காலில் விழுந்து வணங்கிய ஆதி சங்கர பகவத் பாதர், நீராடிய பின் பிறப்பால் அபிராம்மணரான உறங்காவில்லி தாசர் தோளில் கை போட்டு வந்த ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் ஆகியோரது செயல்கள் நமக்கு கூறுவது என்ன? நவீன சமுதாயத்துக்கு முந்தைய சமுதாயத்தில் பல தொழில்கள் பிறப்படிப்படையில் இருந்தன. அந்த சூழலில் நம் ஆச்சாரியர்கள் மிக புரட்சிகரமாக தொழில் அடிப்படையில் செய்யப்பட்ட ஏற்றத்தாழ்வுகளைக் கண்டித்தனர். உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் அக்காலகட்டத்தில் இவ்வண்ணமே இருந்தன. ஆனால் அங்கெல்லாம் எந்த மகானும் இந்த ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிக்கவில்லை. ஆனால் பாரதத்தில் மட்டுமே அது நிகழ்ந்தது. நாம் இந்த ஆச்சாரியர்களின் வழி வந்தவர்கள் எனில் அவர்கள் விதைத்த இந்த வேதாந்த சமத்துவ விதைகளை நம் சூழலில் முன்னெடுக்க வேண்டும். அதாவது பிறப்படிப்படையில் அமைந்த நம் பாரம்பரிய அமைப்புகளை ஜனநாயகப்படுத்த வேண்டும். விவேகானந்த சுவாமிகள் பிறப்படிப்படையிலான உரிமைகளை கொண்டுள்ள சிறுகுழுக்கள் எத்தனைக்கு சீக்கிரம் அவற்றை குழித் தோண்டி புதைத்துவிடுகின்றனவோ அத்தனைக்கு நல்லது என கூறியுள்ளதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பது சலுகையல்ல அது அநீதியை சமன் செய்யும் ஒரு வரலாற்று நீதி என்பதையும் இங்கு தெளிவுபடுத்த வேண்டும். பரம பூஜனீய தேவரஸ்ஜி இதை ‘பாரத அன்னையின் உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள கடன் பத்திரம்’ என சொல்வார். பிறப்படிப்படையிலான பாரம்பரிய அமைப்புகளை ஜனநாயகப்படுத்துவத்ன் மூலமே அந்த ஆன்மிக ஒருங்கிணைப்பினால் மட்டுமே சமூக ரீதியாக பிளவுபட்டுள்ள ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்க முடியும். ஏனெனில் ஆன்மிகமே ஹிந்துஸ்தானத்தின் உயிர்நாடி. இங்கு சமூக சீர்திருத்தத்தையும் ஆன்மிகத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளது சமூக சமத்துவ சமரச ஒருங்கிணைப்புக்கு மிக ஏற்றதாகும்.

• [இந்த உரையாடலில் நான் மத்வாச்சாரியார் குறித்து எதுவும் சொல்லவில்லை. பின்னர் எழுத்தாளர் ஜெயமோகனுடனான உரையாடலின் போது அவர் கூறினார் ஸ்ரீ மத்வாச்சாரியாரும் மீனவசமுதாயத்தைச் சார்ந்தவர்களை அந்தணர்களாக மாற்றியருளியிருக்கிறார் என்று. எனவே இது ஒன்றும் நம் புண்ணிய பாரம்பரியத்துக்கு புறம்பானதோ புதிதானதோ அல்ல.]

• நமக்கு ஒரு நீண்ட ஆக்கபூர்வமான சமூக-ஆன்மிக மறுமலர்ச்சி பாரம்பரியம் ஒன்று உள்ளது. ஐயா வைகுண்டர், ஸ்ரீராமகிருஷ்ண-விவேகானந்தர், ஸ்ரீ நாராயண குரு, ஐயன் காளி, சுவாமி சகஜானந்தர், சுவாமி சிரத்தானந்தர், போதிசத்வ அம்பேத்கர் என ஆக்கப்பூர்வமான சமுதாய மாற்றங்களை புரட்சிகரமாக செய்யும் பாரம்பரியம். நம் தலைமுறையில் நாம் அதை ஆன்ம வலிமையுடன் செய்ய வேண்டும். ஹிந்துத்துவ இயக்கங்கள் முன்வந்து இந்த அனைத்து ஹிந்துக்களும் அர்ச்சகராகும் திட்டத்துக்கான முன்வரைவையும், இயக்க பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். அது நிச்சயமாக தமிழ்நாட்டில் சமுதாய நல்லிணக்கத்தையும் ஹிந்து ஒற்றுமையையும் ஹிந்துத்துவ ஒருங்கிணைப்பையும் உருவாக்கும்.

narendra_modi2.jpg

அதன் பின்னர் திரு, மகிழ்நனுக்கு முகநூல் மூலமாக ஒரு தரவினை அனுப்பினேன். குஜராத் முதலமைச்சர் திரு. நரேந்திர மோடி தலித்துகளை கோவில் பூசகர்களாக்க குஜராத் மாநில பட்ஜெட்டிலேயே செயல்திட்டம் தீட்டி அதற்காக நிதி ஒதுக்கியுள்ளார் என்பதற்கான காணொளிக்கான சுட்டி.

http://hindutvamtoday.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/

 

பெரியாரின் வழியில் நரேந்திர மோடி என்கிறீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.