Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தெரியாவிட்டால் நீங்கள் ஏமாறுவது நிச்சயம் .. ஏமாற்றப்படுவதும்தான்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் நீங்கள் கோடி  கோடியாகச் சம்பாதிக்க முடியும் என்பார்கள். ஒரே நாளில் குபேரனாக ஆகவிடலாம் என்று வலை வீசுவார்கள். எம்எல்எம்-ல் சேருங்கள் என்று பலரும் உங்களுக்கு ஆசை காட்டி இருப்பார்கள். அசந்தால் ஆளை விழுங்கிவிடுவார்கள். உங்களுக்கும் சபலம் தட்டத்தான் செய்யும். என்ன குடிமுழுகிவிடப் போகிறது என்று முயன்றுதான் பார்ப்போமே என்று நினைப்பீர்கள்.
 
mlm.jpg
 
 
நீங்கள் கொஞ்சம் நல்ல மனிதராக இருக்கிறீர்கள். உங்களுக்குக் கொஞ்சம் கணக்கும் தெரியுமானால் இந்தக்கற்பனைக் கோட்டைக் கனவில் இருந்து தப்பித்து விடலாம். ஏமாற்றுவதையே தொழிலாக ஏற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுபவர்கள் இந்த வழியில் எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்துவிட்டுப் போகட்டும். நீங்கள் ஒதுங்கி இருப்பது எப்படி என்பதைக் கவனியுங்கள்.
 
நீங்கள் மட்டும் சேருங்கள். அதே போல் நீங்கள் இன்னொருவரைச் சேர்த்துவிட்டால் போதும். அவர் வேறொருவரைச் சேர்த்தால் போதும். இந்த சங்கிலி இப்படித் தொடர்ந்து கொண்டே போனால் பத்து நாளில் ஃபாரின் பயணம். அப்புறம் சொந்தமாய் ஆடி கார். அதன்பின் ஹவாய் தீவில் ஒரு மனை என்று அளந்துவிடுவார்கள்.
 
கணக்கை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவர்? இன்னொருவரைச் சேர்த்துவிட்டால் போதும். அவ்வளவுதானே? இது முடியாதா? ஏளிதாய் ஏராளம் சம்பாதிக்க முடியமே என்றுதான் பலரும் நினைப்பார்கள்.
 
moneytree.jpg
 
இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 1073741824 என்பதாக இருக்கட்டும். நேற்று இதில் சரிபாதி எண்ணிக்கைப் பேர் இந்தத்திட்டத்தில் இருந்ததாக வைத்துக் கொள்வோம். அவர்கள் 536870912 
பேர்களும் ஆளுக்கு ஒருவரைச் சேர்த்துவிட்டதன் மூலம் 1073741824  இந்தியர்களும் திட்டத்தில் சேர்ந்துவிட்டிருப்பார்கள். இனி இதில் சேர எந்தவொரு இந்தியரும்  விட்டு வைக்கப்படவில்லை.
 
அதற்கு முந்தின தினம் 268435456 பேர் உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள். இப்படிப்பாதி, பாதியாய் எத்தனை நாட்களுக்குப் பின்னோக்கிச் செல்ல முடியும்? கணக்குப் போடுங்கள்.
பாதி, பாதியாய்க் குறைந்து எவ்வளவு வேகத்தில் இந்த எண்ணிக்கை தேய்ந்து வரும் என்பதைக் கணக்கிடுங்கள்.
 
268435456
134217728
67108864
33554432
16777216
8388608
4194304
2097152
1048576
524288
262144
131072
65536
32768
16384
8192
4096
2048
1024
512
256
128
64
32
16
8
4
2
1
 
ஆக 31 நாட்களுக்குள் மொத்தக் கதையும் முடிந்துவிடும்.
மேலிருந்து இறங்கிவந்தால் இப்படி. இதைக் கீழிருந்து மேலே கொண்டு போனால்?
1
2
4
8
16
32
64
128
256
512
1024
2048
4096
8192
16384
32768
65536
131072
262144
524288
1048576
2097152
4194304
8388608
16777216
33554432
67108864
134217728
268435456
536870912
1073741824
 
அந்தக் கதையும் இதே 31 நாட்களுக்குள் முடிந்துவிடும். எம்எல்எம்காரர்கள் என்ன சொல்வார்கள்? உலகத்தில் இந்தியா மட்டும்தான் இருக்கிறதா என்பார்கள்.உலக மக்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்ளலாம் இல்லையா என்று கேட்பார்கள்.
அதையும் ஒரு கை பார்க்க நினைக்கிறீர்களா? 
 
உலக மக்கள் மொத்தமும் மேலும் முன்று நாட்களுக்குள் இணைந்து விடுவார்கள். அதன்பின்? 
வியாழன் கோளில் மக்கள் வாழச் சாத்தியம் இருக்கிறதா என்று தேடிப் போக வேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.