Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2073 நவம்பர் 27:

Featured Replies

1001607_349035085200151_374843649_n.jpg

 

2073 நவம்பர் 27:
" அமெரிக்கா ஒதுங்கிக்கொள்ளாவிட்டால் தமது கப்பல்களை மறந்துவிடவேண்டியதுதான்" தமிழ்க் குடியரசின் முப்படைத்தலைவர் திரு.செழியன் அகமது அலி பதிலடி.

தமிழ் மக்களால் 'நாட்டுத் தந்தை' நாளாக கடைபிடிக்கப்படும் அந்நாட்டின் விடுதலை இயக்கத் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நேற்று 'தமிழ்க்குடியரசு வானிலை ஆய்வு மையம்' புதிய தலைமைச்செயலகக் கட்டிடத்தைத் திறந்துவைத்துப் பேசிய முப்படைத்தலைவர் திரு.செழியன் அகமது அலி,
அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பேசினார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று அனைத்துலகக் கடல் எல்லையில் தமிழ்க்குடியரசுக்குச் சொந்தமான ஒரு கப்பல் அமெரிக்கக் கப்பற்படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த தமிழ்க்குடியரசின் அதிபர் திரு.தமிழ் மைந்தன், அமெரிக்கப் படகுகள் தமிழ்க்குடியரசு மற்றும் தமிழ்க்குடியரசுக்குச் சொந்தமான அந்தமான்-நிகோபர் தீவுகளுக்கு இடையேயான கடல்பகுதியில் நுழையத் தடைவிதிப்பதாகவும், ஏற்கனவே வந்தக் கப்பல்கள் திருப்பி அனுப்பப்படும் என்றும் தடையை மீறி நுழைந்தால் அந்தமான் தீவுகளைச் சுற்றி நிற்கும் தமிழ்க்குடியரசின் போர்க்கப்பல்களால் மூழ்கடிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிக்கையில், அங்கீகரிக்கப்படாத நாடான தமிழ்க்குடியரசு கடந்த 35 ஆண்டுகளாக இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளின் நிலப்பரப்பை தமது படைவலிமையால் ஆக்கிரமித்திருப்பதாகவும், அது நாடாகவே அங்கீகரிக்கப்பட்டாலும் அந்தமான்தீவுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயானக் கடலில் நுழையத் தடைவிதிக்க இயலாது எனவும் கூறியிருந்தார். மேலும், தமிழ்க்குடியரசு ஒரு இனவெறித் தீவிரவாத நாடென்றும் அதன் கப்பல் ஆயுதத் தளவாடங்களோடு அமெரிக்கா அருகில் வந்ததால் தற்காப்புக்காகத் தாக்கியதாகவும் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முப்படைத்தலைவர் பேசியதாவது, "அமெரிக்கா இவ்வாறு செய்தது வியப்பிற்குரியது இல்லை; 2059ல் நாம் எமது மண்ணின் 60% பகுதியை மீட்டு வடக்கு நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தபோது அமெரிக்கப் படைகள் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் ஆதரவாக எம்முடன் நேரடியாக நீண்டப் போர்புரிந்து பாரிய இழப்புகளைச் சந்தித்து விரட்டியடிக்கப்பட்டது. அமெரிக்கா, சீனா, இரசியா போன்ற வல்லாதிக்க நாடுகளில் பிடியில் சிக்கியுள்ள நாடுகளை விடுவிக்கத் தமிழ்க் குடியரசு படையுதவி செய்துவருவதும் தற்போது அமெரிக்கப் பிடியிலிருந்த ஆப்கானித்தான் விடுதலைபெற தமிழ்க்குடியரசு முக்கிய காரணம் என்பதும் அமெரிக்காவுக்கு எரிச்சல் மூட்டியிருக்கவேண்டும்.எமது அதிபர் அறிவிக்கப் பணித்ததை இங்கே கூறுகிறேன்.
அமெரிக்கா இதன்பிறகு ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டாலும் இப்போது இந்தியக்கடல் என்றழைக்கப்படும் எமது தமிழ்க்கடலில் நுழைய முடியாதவகையில் தமிழ்க்குடியரசின் தென்பகுதிப் படை நிறுத்தப்படும் என்றும், அமெரிக்கா ஒரு தோட்டாவை எமக்கு எதிராகக் கக்கினால் சோமாலிய விடுதலைக்கு களமாடிவரும் எமது படைமூலம் ஐரோப்பிய கடல்வழியிலும் புகென்வில் தீவின் விடுதலைக்காக பப்புவாநியுகெனியாவையும் அதன் பின்னிற்கும் ஆசுத்திரேலியாவையும் எதிர்த்துச் சமராடிவரும் தமிழ்ப்படை வடக்குப் பசுபிக்கிலும் அமெரிக்கக் கப்பல்களை கண்டதும் தாக்கியழிக்கும் என்பதையும் அதையும் மீறி அமெரிக்கா எம்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைந்தால் கடலில் எங்கே அமெரிக்கக்கப்பல் மிதந்தாலும் அதை மறந்துவிடவேண்டிவரும் என்பதை இதன்மூலம் தெரிவிக்கிறேன்.
கப்பற்படையில் முதலிடத்தில் இருக்கும் எமக்கு தற்போதைய வல்லரசான சீனாவும் முன்னால் வல்லரசான அமெரிக்காவும் தொடர்ந்து தொல்லை கொடுத்துவருகின்றன. 
தெற்குமுனையில் சீனாவுடன் கடும்போர் நடந்துகொண்டிருக்கிறது.
2009ல் தமிழ்மக்களைப் படுகொலை செய்த சிறிலங்கா மூன்றாண்டுகளுக்கு முன்பு பாரிய இழப்புகளைச் சந்தித்து சொந்த நாட்டுமக்களே போரைக் கைவிடும்படி போராடியபிறகு போரிலிருந்து விலகியது. அதன்பிறகும் சிறிலங்காவுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு சீனா தொடர்ந்து மூன்றாண்டுகளாகப் போரை...
போரை நடத்திவருகிறது.

கணக்கிலடங்கா இழப்புகளைச் சந்தித்தும் ஓரடிகூட முன்னேற முடியாத சீனா, தான் உலக வல்லரசு என்றப் பெயரைத் தக்கவைக்கப் போரைத் தொடந்துவருகிறது.
சீனாவால் ஒடுக்கப்பட்டுவரும் திபெத் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் சீனாவால் இனப்படுகொலை நடந்தப
ோது அந்நாடுகள் விடுதலைப்போரை ஆரம்பித்தால் தமிழ்க்குடியரசு வேண்டிய உதவிகளைச் செய்யும் என்று எமது அதிபர் அறிக்கைவிட்டதிலிருந்தே சீனாவுக்கு அச்சம் தொற்றிக்கொண்டுவிட்டது. இதுவரை சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் ஆதரவாகக் களமிறங்கிய அமெரிக்கா, யப்பான், கியூபா, இசுரேல், இரசியா, ஆசுத்திரேலியா மற்றும் பல நாடுகள் கூட்டாக மோதி பலத்த இழப்புக்குப் பின் விலகிக்கொண்டனர். இப்போது முன்பைவிட எமது படைவலிமை பன்மடங்கு பெருகிய நிலையில் சீனா, இந்தியா என்ற இரண்டே நாடுகள் தமது அடிபொடி நாடுகளுடன் எம்மோடு மோதி எப்படி வெல்லமுடியும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டாமா?
வடமுனையில் இந்தியாவுடன் முப்பது வருடங்களாக நீடித்த போர் இப்போதுதான் தற்காலிகப் போர்நிறுத்தம்வரை வந்துள்ளது. ஆனால், இந்தியா தனது படையை சீனாவுக்கு ஆதரவாக அனுப்பித் தெற்கில் தொடர்ந்து போரில் ஈடுபட்டுவருகிறது.
சென்ற ஆண்டு காங்கோவில் விடுதலைப்படைக்கு ஆதரவாக நாங்கள் அனுப்பிய போர்க்கப்பல் பிரான்சால் மூழ்கடிக்கப்பட்டது. அதையாவது பொறுத்துக்கொள்ளலாம். அல்ஜீரிய விடுதலைக்கு உதவிவரும் எம்மை எதிரியாக நினைத்து போர்க்கப்பலை மூழ்கடித்ததாக எடுத்துக் கொள்ளலாம்; ஆனால், ட்ரினாட் டொபகோவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட தமிழே தெரியாத தமிழ்ப் பரம்பரையினரை தாய்நிலத்துக்கு அழைத்துவர உணவு மற்றும் மருந்துகளோடு சரக்குக் கப்பலுக்கானப் பாதுகாப்புப் படையோடு சென்ற கப்பலை அமெரிக்கா மூழ்கடித்திருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?
முன்பு பிறநாடுகளைச் சுரண்டி வல்லரசாக இருந்த அமெரிக்கா இன்று ஏழைநாடாக மாறிக்கொண்டிருக்கிறது.
இருந்தும் தமது மக்களை ஏமாற்ற இத்தகைய சண்டித்தனத்தைச் செய்துவருகிறது.
பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிவரும் பிரேசிலையும் எமது குடியரசையும் எதிரிகளாகக் காட்டி அமெரிக்கா போன்ற நாடுகள் தம்மை அறத்தின் காவலனாகக் காட்டிவருகின்றன.
இவர்களை விட முன்னேறிய சீனாவும் ஆசுத்திரேலியாவும் கூட நேரடியாக மோதி வெல்லமுடியாதத் தமிழ்க்குடியரசை அமெரிக்கா குறுக்குவழியில் மோதி முறியடிக்கத் திட்டம் போடுகிறது.
தவிர எமது நாட்டை இனவெறிநாடு என்று கூறியுள்ளது. 
எங்கள் நாட்டு படையில் 25% வேற்றினத்தவர் என்பதையும் எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் 30% தமிழரல்லாதோர் எங்களோடு தோள்கொடுத்து வாழ்வதையும் இவர்கள் அறியாதவர்களா?
தென்கொரிய அதிபர் எமது அரசு தமிழரல்லாத பெண்களையும் குழந்தைகளையும் தூக்கில்போடுவதாகப் பேட்டியளித்துள்ளார். 
நாங்கள் எங்களுக்குள் இருக்கும் துரோகிகளைத்தான் தண்டிக்கிறோம். அதுவும் முறையாக விசாரித்து நிறுவப்பட்டால்தான் தண்டனை வழங்குகிறோம். அவர்களில் ஓரிரு தமிழரே உண்டு. 
அவர்களில் குழந்தைகளே கிடையாது.
நாங்கள் எப்படி இனவாதியாவோம்?
ஒடுக்கப்பட்ட நாடுகளை ஒருங்கிணைத்து செயற்கைக்கோள் ஏவியதிலிருந்தே எமக்கெதிரான அரசியல் வலுத்துவிட்டது.
அப்படி ஒரு செயற்கைக்கோள் இருந்ததால்தான் எமது கப்பல் அனைத்துலக எல்லையில் மூழ்கடிக்கப்பட்டதை நிறுவமுடிந்தது.
எமக்கெதிரான ஆற்றல்கள் மீண்டும் கிளர்ந்தெழுவதாகத் தெரிகிறது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டாக எதிர்த்தபோதும் எம்மை விடுதலைப்போரில் தோற்கடிக்கமுடியவில்லை
பத்தொன்பது வருடங்களுக்கு முன்பே எந்த நாட்டின் ஆதரவுமில்லாமல் ஐம்பது நாடுகளைத் தோற்கடித்த எம்மை, ஒரு கோடி உயிரைக் கொடுத்தேனும் இன்று எங்கள் பூர்வீக மண்ணை மீட்டு ஆறுகோடி மக்களோடு முப்படையோடும் எந்த நாட்டுக்கும் குறைவில்லாதப் பொருளாதாரத்தோடும் இருக்கும் நிலையில் இந்த உலகமே வந்தாலும் தோற்கடிக்கமுடியாது.
இருமுனைகளில் எப்போதும் போர், பொருளாதாரத்தடை, போரில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை எதிர்கொள்வது, கண்டன அறிக்கைகள், கப்பல் மூழ்கடிப்புகள், வீண்பழி, உலகம் முழுவதும் தமிழருக்கு எதிரான பரப்புரை, கண்டன அறிக்கைகள், உலகைவிட்டுத் தனிமைப்படுத்தல் என இன்னும் எத்தனையோ, அத்தனையையும் தாங்கியபடி தமிழ்க்குடியரசு வல்லரசாக மாறிவருகிறது.
இன்று உலகின் அத்தனை ஊடகங்களிலும் தமிழ்க்குடியரசு தலைப்புச் செய்தியாக நாள்தோறும் வெளிவரும் அளவு எம்மீது கவனம் செலுத்தும் உலகநாடுகள் 2009ல் இருநூறாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டபோதும் 2033ல் அறுநூறாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டபோதும் எங்கே போயிருந்தன?
ஐ.நா.சபை எம்மை நாடாக அங்கீகரிக்க வாக்கெடுப்பு நடத்தவிருப்பதாகத் தானாக
தானாக.அறிக்கை விடுகிறது.

ஏன்? எமது விடுதலைப்போராட்டம் நாடு அமைந்தவுடன் நின்றுவிடும் என்றொரு நப்பாசைதான்.
ஆனால், அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை.
தமிழ்க்குடியரசின் கடைசிக்குடிமகன் இருக்கும்வரை, உலகின் ஒரு மூலையில் ஒரு தமிழன் இருக்கும்வரை பலம் வாய்ந்த மக்கள் எளிய மக்களை நாடாகவோ மதமாகவோ சாதியாகவோ இனமாக ஒடுக்கவிடமாட்டோம்.
உலகமே எதிர்த்து நின்றாலும் தமிழ்க்குடியரசு எவருக்கும் அடிபணியப்போவதில்லை."
என்று பேசியுள்ளார்

https://www.facebook.com/photo.php?fbid=349035085200151&set=a.108935022543493.9865.100002809860739&type=3&theater

நன்றி முகனூல் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.