Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு - விஸ்வமடு பொது நூலகத்திலிருந்து சிறிலங்கா படையினரை வெளியேற்ற கோரிக்கை

Featured Replies

mullaithivu-government-agent-office.jpgமுல்லைத்தீவு - விஸ்வமடு பொது நூலக வளாகத்தில் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் தங்கியிருப்பதால் இந்த நூலகத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இங்குள்ள மாணவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நூலகத்துடன் இணைந்ததாக சிறுவர் பூங்கா மற்றும் முன்பள்ளி என்பனவும் அமைந்திருக்கின்றன. இவற்றையும் சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் விஸ்வமடுவில் அமைந்துள்ள மேற்படி பொது நூலகத்தில் பல்துறைகளையும் சார்ந்த சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. இதனால், க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாண தரத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமது ஆய்வுத் தேடலை இங்கு மேற்கொள்ள இது பெரிதும் உதவியாக இருந்தது. மேலும் மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்த நூலகம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது.

கடந்த யுத்த காலத்தில் விசுவமடுவை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து இ;ங்கு படை முகாம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு இதன் ஒரு பகுதியை படையினர் விடுவித்ததைத் தொடர்ந்து நூலகம் ஆரம்பிக்கப்பட்டு நூல்களும் பத்திரிகைகளும் போடப்பட்டன. ஆனால், இந்த வளாகத்தில் படையினர் தொடர்ந்தும் தங்கியிருப்பதால் பெண்கள் மற்றும் மாணவர்கள் இங்கு சென்று நூலகத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் வேறெந்த சனசமூக நிலையங்களோ நூலகங்களோ இல்லாத நிலையில் பொதுமக்களும் மாணவர்களும் இந்த நூலகத்தையே நம்பியிருக்கின்றனர். எனவே, இங்கிருந்து படையினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென்றும் மேற்படி நூலக நிர்வாகமும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

http://www.sankathi24.com/news/32981/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.