Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரி மக்களை முட்டாள்களாக்க நினைத்த பசில் ராஜபக்ச

Featured Replies

basil%20rajapaksha.JPGசாவகச்சேரி மக்களை முட்டாள்களாக்க நினைத்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தானே முட்டாளாகிக்கொண்ட சம்பவமொன்று நேற்று  திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது. சாவகச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே பசில் இந்த முட்டாள்தனத்தை அரங்கேற்றினார்.

அதாவது குறித்த கூட்டம் நடைபெற்ற ஏ-9 வீதியூடாக ஒரு மணித்தியாலத்தில் 280 வாகனங்கள் மட்டுமே சென்றதாகவும் அதில் ஒரு வாகனமும் படையினருடையது அல்ல என்றும் அவர் தெரிவித்து தனது முட்டாள்தனத்தை வெளிப்படுத்தினாhர்.

ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று திங்கட்கிழமை சாவகச்சேரியில் நடைபெற்றது. அந்தக் கூட்டம் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகுவதாக இருந்தது. இதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, வடக்கு ஆளுநர் சந்திரசிறி, ஆகியோருடன் பசில் ராஜபக்சவும் கலந்துகொண்டார். ஆனால், பொதுமக்கள் எவரும் வருகை தராததால் மணிக்கணக்கான நேர தாமதத்திற்கு பின்னர் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவால் அங்கு அழைத்து வரப்பட்ட குறிப்பிடத்தக்களவான மக்களுடன் கூட்டம் ஆரம்பமாகியது.  

இந்தக் கூட்டம் ஆரம்பமாகிய பின்னர் அங்கு உரையாற்றிய பசில் ராஜபக்ச, இந்த கூட்டத்திற்கு நான் இரவு 6.15 க்கு சமூகம் தந்தேன். 7.15 வரையிலான ஒரு மணி நேரத்திற்குள் இந்த ஏ-9 வீதியில் எத்தனை வாகனங்கள் பயணித்தன என்று மேடையிலிருந்தவாறு கணக்கெடுத்தேன். குறித்த ஒரு மணி நேரத்திற்குள் ஏ-9 வீதியில் 280 வாகனங்கள் பயணித்துள்ளன. இதில், பஸ், லொறி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சகல வாகனங்களும் அடங்குகின்றன. ஆனால், இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்த ஒரு மணி நேரத்திற்குள் இராணுவத்தின் ஒரு வாகனம் கூட பயணிக்கவில்லை என்பதை நான் அவதானித்தேன்" என்றார்.

பசில் ராஜபக்சவின் கருத்து அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியது. சாவகச்சேரி நகரம் ஏ-9 நெடுஞ்சாலையின் மத்தியிலிருக்கின்றது. இந்த வீதியூடாக ஒரு மணித்தியாலத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. அடிக்கடி இராணுவத்தினரின் வாகனங்கள் பயணிக்கின்றன.

ஆனால், பசில் ராஜபக்ச எங்களை என்ன முட்டாளாக்கின்றாரா என்று தங்களுக்குள் முனுமுனுத்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அந்தக் கூட்டத்திலிருந்த முதியவர் ஒருவர் எங்கட சாவகச்சேரியைப் பற்றி இவர் எங்களுக்கு படிப்பிக்கிறார் முட்டாள் பயல் என்று கூறியவாறு அங்கிருந்து எழுந்து சென்றார். இந்த முதியவரின் செயலை அவருக்கு அருகிலிருந்த அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

http://www.sankathi24.com/news/33022/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.