Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈகப்பேரொளி செந்தில்குமரனுக்கு யாழில் பிரத்தியேகமாகன இடத்தில் வீர வணக்க அஞ்சலி

Featured Replies

Senthilkumaran%20318203515.jpgதமிழ் மக்களுக்கு நீதி வேண்டி ஜெனிவாவில் கடந்த 5 ஆம் திகதி தீக்குளித்து தியாக மரணத்தைத் தழுவிக்கொண்ட இரட்ணசிங்கம் செந்தில்குமரனுக்கு யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை தமது வீர வணக்கத்தைத் தெரிவித்துள்ளது. தமிழீழத்துக்காக போராடிய தியாகச் செம்மல்களின் வரிசையில் செந்தில்குமரனும் தனது பெயரைப் பதித்துக்கொண்டுள்ளார். இவரது சாவு சாதாரணமானதல்ல. அசாத்தியமான துணிச்சல் நிறைந்தவர்களே இந்த தியாகத்தை மேற்கொள்ள முடியும் என்றும் யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

செந்தில்குமரனுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கின்ற அதேவேளை அவரை இந்து துயரத்தில் வாடுகின்ற அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களின் துயரத்தில் தாங்களும் பங்கெடுத்துக்கொள்வதாகவும் மேற்படி பேரவை தெரிவித்துள்ளது.

ஆனாலும், விடுதலைக்காக போராடத் துணிபவர்கள் எந்தளவிற்கு இயலுமோ அந்தளவுக்கு உடலாலும் உள்ளத்தாலும் போராடுங்கள். ஆனால், தமிழ் மக்களின் விடுதலைக்காக இனியும் எவரும் தீயில் எரிந்து தியாகச் சாவை அணைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் குடாநாட்டுத் தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கிய செந்தில்குமரனுக்கு தாங்கள் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடமொன்றில் வீர வணக்க அஞ்சலி செலுத்தியுள்ளதாகவும் மேற்படி பேரவை தெரிவித்துள்ளது.

யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை இரட்ணசிங்கம் செந்தில்குமரனுக்கு வீர வணக்கம் செலுத்தி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் லமேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்துள்ள சிங்களப் படைகள் இங்கு தனது அராஜக இராணுவ ஆட்சியை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றது. இந்த இராணுவ ஆதிக்கத்திற்கு எதிராக தமிழ் மக்கள் வாய் திறக்க முடியாத அவல நிலை ஏற்பட்டிருக்கின்றது. கடந்த முப்பது வருடங்களாக போராட்டத்தின் வலிகளைச் சுமந்த தமிழ் மக்கள் இன்று அதைவிடப் பெரிய வலிகளைச் சுமந்துகொண்டிருக்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பு, தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், ஒட்டுக்குழுக்களின் அராஜகங்கள், கொலை, கொள்ளை போன்ற பல்வேறு அராஜகங்களுக்கு மத்தியிலேயே தற்போது தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உண்மையிலேயே இது யுத்த காலத்தை விட மோசமானது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் தட்டிக்கேட்க ஆளில்லை என்ற மமதையில் சிங்களப் படைகள் தமது அராஜகத்தை நிலைநிறுத்தி வருகின்றன. இந்த அராஜகங்களைத் தட்டிக்கேட்க வேண்டிய பாரிய பொறுப்பு தற்போது புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் தமிழீழ தேசியத் தலைவர் தற்போது போராட்டத்தை புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே ஒப்படைத்திருக்கின்றார். இந்த நிலையில் புலம்பெயர் தமிழ் மக்கள் எமது மக்களுக்காக மேற்கொண்டு வருகின்ற போராட்டங்களுக்கு நாங்கள் தலை சாய்க்கின்றோம்.

இந்த போராட்டத்தின் ஒரு வடிவமாகவே செந்தில்குமரனும் தன்னை ஆகுதியாக்கியிருக்கின்றார். தாயகத்திலுள்ள களமுனைகளில் எதிரியைச் சிதறடித்த பல்லாயிரக்கணக்கான போராளிகளைப் போன்று செந்தில்குமரனும் வளமான குடும்பத்தில் பிறந்தவர். அவர் வாழ்;நாள் பூராக சுகபோகத்துடன் வாழ்வதற்குரிய வசதிகள், திறமை, மற்றும் சிறந்த தொழில்வாய்ப்புகள் அவரிடம் இருந்தன. ஆனாலும் அவர் தமிழீழ தேசியத் தலைவரையும் போராளிகளையும் தமிழ் மக்களையும் பெரிதாக நேசித்ததன் காரணமாக தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களை தாங்காத நிலையில் அவர்களுக்கு நீதி வேண்டி உலக சமாதானத்திற்காக தோற்றுவிக்கப்பட்ட ஐ.நா அமைப்புக்கு முன்னாலேயே தன்னை ஆகுதியாக்கிக்கொண்டார். தமிழ் மக்களை அவர் எவ்வளவு பெரிதாக நேசித்திருக்கின்றார் என்பது அவர் செய்த ஈகத்தின் மூலமாக வெளிப்பட்டிருக்கின்றது.

மக்களுக்காக போராடி மடிபவர்களை சாவு அழித்துவிடுவதில்லை. அவர்கள் என்றும் அந்த மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். எனவே, செந்தில்குமரனும் எமது தேசத்தில் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார். அவர் எந்த இலட்சியத்திற்காக மரணித்தாரோ அந்த இலட்சியத்தை முன்னெடுக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

தமிழ் மக்கள் பேரவை

யாழ்.மாவட்டம்

09-09-2013

http://www.sankathi24.com/news/33020/64//d,fullart.aspx

மக்களுக்காக போராடி மடிபவர்களை சாவு அழித்துவிடுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.