Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தக் குற்றங்களில் இருந்து மீள முடியாதவாறு மகிந்தவை குற்றவாளியாக்கினார்கள் வடக்கு மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழர்களை தோற்கடித்த மகிந்த தேர்தல் யுத்தத்தில் மக்களிடம் தோற்றுப்போனார்"குளோபல் தமிழ் செய்திகளுக்காக பிரியதர்தசன்

mahinda%20br_CI.jpg

 

வடக்குத் தேர்தலும் தமிழ் மக்களின் தீர்ப்பும்

 

இதை ஒரு போராட்டம் என்றே குறிப்பிடவேண்டும். ஆழ்கடலில் தவிப்பவனுக்கு சிறு துரும்பும் ஓடம் என்பதுபோல இன்று ஈழத் தமிழர்கள் இந்த உலகத்தால் தள்ளப்பட்ட சூன்ய அரசியல் வெளிக்குள் வடக்கு மாகாண சபைத் தேர்தலை ஒரு போராட்டமாவே செய்து முடித்திருக்கின்றனர். அதுவும் இரக்கமற்ற கொடிய இலங்கை அரச படைகளின் துப்பாக்கிகளின் நிழலில்தான் வடக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தலின் பொழுது வாக்களிப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட பொழுது மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் மிக விரிவாகத் திட்டமிட்டு மேற்கொண்டது. வாக்களிக்கும் மக்களின் மனநிலையை மாற்றி அரசாங்கத்திற்கு வாக்குகளை திரட்டுவதே அரச படையினரின் நோக்கமாகும். வடக்குத் தேர்தலையும் பாரியதொரு யுத்தமாகவே இலங்கை அரசு நடத்தியது. 

 

வடக்கு முள்ளிவாய்க்கால் யுத்தம் எனப்படும் நான்காம் ஈழப்போர் நடந்த நிலப்பகுதி. இலங்கை அரசை இன்று சர்வதேச அளவில் சிக்கலுக்கு உள்ளாக்கியது. நெருக்கடிப் பொறிக்குள் தள்ளிய நிலப்பகுதி என்று குறிப்பிடலாம். ஏனெனில் இந்த நிலப் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால் எனும் பிரதேசம் வரை இலங்கை அரச படைகள் சுமார் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களை கொன்றுள்ளனர். 2009ஆம் ஆண்டின் முற்பகுதி முழுவதும் இந்த நிலப்பகுதி ஒரு பிணதேசமாகவே காட்சி அளித்தது. மீட்கவும் தாழ்க்கவும் முடியாத பிணங்களும் இரத்தம் ஊறிய நிலமுமாக இப்பகுதி காணப்பட்டது. இலங்கை அரசு ஈழத் தமிழனத்திற்கு எதிராக இழைத்த மாபெரும் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையின் சாட்சியாக இந்த வெறும் மண்ணே இன்று காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. 

 

இலங்கை அரசுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று உலகத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். போர் நடந்தபொழுது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த உலகம் இலங்கை அரசிடம் முள்ளிவாய்க்காலில் நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை குறித்து விசாரணை வேண்டும் என்கிற நிலைiயை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகளை கடந்த போதும் இன்னமும் இலங்கை அரசுமீது எந்த வித நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய நிலையில் தனது குற்றங்களை மறைப்பதற்காக ஈழத்தில் குருதியுறைந்த வட பகுதியில் ஒரு தேர்தல் களத்தில் வென்று தமிழ் மக்களின் மனங்களை வென்றாகவும் தான் போர்க்குற்றங்கள் எதையும் செய்யவில்லை என்றும் நிரூபிக்க இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்ச பெரும் முயற்சி எடுத்தார். 

 

ஒன்றரை  லட்சம் மக்கள் கொல்லப்பட்ட பின்னர் யாழ் தேவி ரயிலை விடுவது, ஏ-9 வீதியை புனரமைப்பது, மின்சார நிலையத்தை திறப்பது, பாலங்களை திறப்பது, பள்ளிக்கூட கட்டிடங்களைத் திறப்பது என்று பல சலுகைகளை தமிழ் மக்களுக்கு தந்தார். இவ்வாறான திறப்பு விழாக்களை நடத்தும்பொழுதெல்லாம் பலவந்தமாகவும் வேறு காரணங்கள் கூறப்பட்டும் மக்கள் மகிந்த ராஜபக்சேவுக்கு முன்னால் திரட்டப்படுகின்றனர். வடக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு யாழ் சுன்னாகம் மின்சார சபையைத் திறக்க வந்த மகிந்த ராஜபக்ச யாழ் துரையப்பா விளையாட்டு அரங்க மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தபோது கீழே பார்வையாளராக இருந்த தாயாருத்தி 'எனது பிள்ளையை நான் காணாமல் போகக் கொடுத்துத் தேடுகிறேன். நீ அபிவிருத்தி செய்து வாக்கு கேக்கிறியா? ' என்று ஏசத் தொடங்கினார். 

 

அந்த ஈழத் தாய் கொந்தளித்த பொழுது அவரை இராணுவத்தினர் காவல்துறையினர் சுற்றிவளைத்து அரங்கை விட்டு அகற்றிவிட்டனர். ராஜபக்சவோ  தொடர்ந்தும் தமிழிலில் பேசிக் கொண்டிருந்தார். இன்றைய ஈழத்து மக்களின் மனதை அந்தத் தாயார் நுட்பமாக அங்கு வெளிப்படுத்தியிருக்கிறார். ஈழத் தமிழினம் பாதைக்காகவும் ரயிலுக்காகவும் மின்சாரத்திற்காகவும் போராடியதாகவே மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் சிங்கள இனவாதிகளும்அர்தப்படுத்துகின்றனர். என்னுடன் பணியாற்றும் ஒரு சிங்கள நண்பர் 'இனி என்ன உங்களுக்கு? ரயில் போகிறது. பிரச்சினை ஒன்றும் இல்லைதானே?' என்றார். நாங்கள் உங்களிடம் உரிமை கேட்டுப் போராடத் தொடங்கிய பொழுதும் இவை எல்லாம் ஓடிக் கொண்டிருந்தன என்று அவருக்கு நான் பதில் அளித்தேன். 

 

தேர்தல் களத்தில் உரிமைக்கும் சலுகைக்குமான போட்டியே நடந்தது. தேர்தல் பிரசாரத்தில்கூட இலங்கை அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைப்பேன் என்று சொல்லவில்லை. ஆனால் யுத்தம் தொடங்க முன்னர் உலக சமூகத்திடம் புலிகளை அழித்துவிட்டு தமிழ் தலைவர்களிடம் தீர்வை முன்வைப்பேன் என்றார். எங்கே அந்தத் தீர்வு? புலிகள் இயக்கத்தின் போராட்டம் மௌனினக்கப்பட்டதன் பின்னர் இலங்கை அரசிடம் எந்தத் தீர்வும் இல்லை என்ற உண்மையும் அம்பலமாகியிருக்கிறது. புலிகளின் தலைவர் பிரபாரகன் தனது 2008ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் இதைச் சொல்லியிருக்கிறார். புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டு எந்தத் தீர்வையும் மகிந்த அரசாங்கம் முன்வைக்காது என்று சொல்லியிருக்கிறார். 

 

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் போர் என்பது ஈழத் தமிழ் மக்களை அழிக்கவும் அவர்களது போராட்டத்தை ஒடுக்கவுமே நடந்தது. இப்பொழுது தமிழ் மக்களின் தாயகத்தை அபகரிக்கும் நடவடிக்கையிலும் தமிழ் மக்களின் சனநாயக பலத்தை ஒடுக்கும் நடவடிக்கைளிலும் மகிந்த அரசு இறங்கியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லிக் கொண்டே இதனைச் செய்து கொண்டிருக்கிறது. தெற்கில் இரண்டு மாகாணங்களிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்;கு மக்கள் ஆதரவளித்துள்ளார்கள். வடக்கில் அரசாங்கத்திற்கு மக்கள் அடி கொடுத்துள்ளார்கள். உண்மையில் இது ஒரு நாடு ஒரு தேசம் ஒரு மக்கள் என்பது பொய்யானது என்ற உளவியலை இந்தத் தேர்தல் முடிவு காட்டுகிறது. 

 

ஒரே நாடு ஒரே மக்கள் என்பது மிகவும் பொய்யான மோசமான வார்த்தை என்று ராஜபக்ச அரசாங்கத்திற்குத் தெரியும். ஆனால் இது போன்ற வாசங்களுடன்தான் தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கை அழிக்க முடியும் என்று கருதுகிறார்கள். காலம் காலமாக தனித்துவமான ஆட்சியின் கீழ் ஈழ மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆங்கிலேயர் தாம் கைப்பற்றிய நாடுகளில் இருந்த தனித் தனித் தேசங்களை ஒன்றாக்கினார்கள். அவ்வாறுதான் இலங்கையும் ஈழமும் ஒன்றாக்கப்பட்டது. சம உரிமை, சனநாயகம் என்று இருக்கும் பட்சத்தில் ஒன்றிணைந்து வாழ முடியும். ஆனால் இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற அன்று முதல் ஈழ மக்களுக்கு எதிரான உரிமை மறுப்புக்களும் ஒடுக்குமுறைகளும் இன அழிப்புக்களும் சனநாயக மறுப்புக்களும் தாராளமாகத் தொடங்கிவிட்டன. 

 

ஒரே நாடு ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற வாசகங்கள்,ஈழமக்களின் வரலாற்றை, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பூர்வீக நிலப்பரப்பை, அங்கு அவர்களின் ஆட்சியை, அவர்களின் சுதந்திரத்தை, அவர்களின் நலனை, அவர்களின் மனித உரிமையை என்று எல்லாவற்றையும் மறுக்கின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இந்த வாசகங்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு இருக்கும் அதே நோக்கத்தை உடையதே. இந்த வாகங்களின் பின்னர் இனப்படுகொலையை மறைத்தல், போர்க்குற்றங்களை மறைத்தல், தமிழர் உரிமையை மறைத்தல், சிங்களப் பேரினவாத ஆட்சியை விரிவுபடுத்தல், சனநாயகத்தை மறுத்தல் என்ற பல நோக்கங்கள் காணப்படுகின்றன. 

 

இந்த வாசகங்களுக்கு முதலில் இலங்கை அரச படையினர் பாதுகாப்புக் கொடுத்தனர். யாழ்ப்பாணத்தின் மிருசுவில் பகுதியில் உள்ள சோதனைச்சவாடி நிலையத்திலேயே முதலில் இந்த வாசகம் எழுதப்பட்ட பெயர்பலகை நடப்பட்டது. இதனைப் பார்த்து முகம் சுழிக்காத மக்கள் இல்லை. அப்பொழுது அங்கு துப்பாக்கி ஏந்திய இராணுவம் தரித்திருந்தது. உண்மையான ஒரு வாசகத்தை வடக்கில் நடும்பொழுதுமக்கள் அதை பாதுகாப்பார்கள். ஆனால் தமிழர்களின் தாயகத்தை, உரிமையை அபகரிக்கும் ஒரு வாசகத்தை இராணுவமே பாதுகாக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. 

 

மாபெரும் இனப்படுகொலையை செய்ய பின்னர் இப்படி ஒரு தேரதலை நடத்தி வெல்ல நினைப்பது எவ்வளவு கொடுமையானது? இந்தத் தேர்தலில் வெற்றி கொள்ள அரசாங்கம் பல மோசடிகளைச் செய்ததது. பல பேரை இறக்கி வேலை செய்தது. அங்கஜன் இராமநாதன் ஒருபுறம் வேலை வாய்ப்புக்களைக் கொடுத்தார். கீதாஞ்சலி நகுலேஸ்;வன் ஒருபுறம் வேலை வாய்ப்புக்களை கொடுத்து தனது அலுவலகத்திற்கு வரச் செய்தார். சந்திரகுமார் மற்றம் தவநாதன் வேலைவாய்ப்புக்களுடன் கிளிநொச்சியில் இறங்கினர். வடக்கில் உள்ள பெரும்பாலானவர்கள் இவர்களின் அலுவலகங்களுக்குச் செல்வது தவிர்க்க முடியாமல் போனது. ஏன் இவ்வாறு வேலையை கொடுக்கிறார்கள்? இதன் நோக்கம் என்ன என்பதை இந்த நடவடிக்கைகள்தான் மக்களுக்குப் புரிய வைத்திருக்கின்றன. 

 

தேர்தல் தினத்திற்கு முதல்நாள் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரது வீட்டை சுற்றி வளைத்து தாக்கினார்கள். தேர்தல் அன்று யாழ் தமிழ் பத்திரிகை ஒன்றின் போலிப் பதிப்பை பிரசுரித்து மக்களை குழப்பினார்கள். தேர்தல் நடந்த பொழுது வாக்களிப்பு நிலையங்களுக்கு சிவில் உடையில் சென்ற இராணுவத்தினர் வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டினார்கள். இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதற்காக நடக்கின்றன? நாங்கள் உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவை மக்களுக்;கு ஏற்படுத்தியிருந்தன. 

 

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒன்று பட்ட இலங்கைக்குள் தன்னாட்சி அரசாங்கமாகச் செயற்பட சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை கோருவது தமது கொள்கை என்று கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழீழத்தை உருவாக்கும் பொறிமுறை என்று சிங்கள இனவாதிகள் கூச்சலிட்டனர். புலிகள் கோருவதையே கூட்டமைப்பும் கோருகிறது  என்று மகிந்த ராஜபக்சவும் ஏனைய அரசாங்கத் தரப்பினரும் விமர்சித்தனர். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் தெற்கில் எழுந்தன. தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தெற்றிலும் சிங்கள இனவாதிகளிடத்திலும் இலங்கை அரசாங்கத்திடமும் இருந்த இடத்தை அவை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. 

 

மாகாண சபை தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வில்லை என்ற பொழுதும் வடக்கின் மக்கள் அனைவரும் உணர்ந்து ஒற்றுமையாக இந்தத் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள். பயங்கரவாதிகள் என எமது மக்களை இலங்கை அரசு அழித்த போதும் சிங்கள மக்களைவிடவும் எங்களுக்கு ஜனநாயகத்தில் ஈடுபாடு இருக்கிறது என்பதை வடக்கு மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். புலிகளின் கோட்டைகளாக இருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்ட வாக்களிப்பு வீதங்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளமை இதற்குச் சான்றாகும். 

 

ஈழத்தின் கிழக்கை அன்று முதல் சிங்கள அரசுகள் அமைத்த சூழ்ச்சியாலும் தேர்தலைத் தொடர்ந்து ராஜபக்ச அமைத்த சூழ்ச்சியாலும் கைப்பற்றினார். ஆனால் வடக்கை அவ்வாறு கைப்பற்ற முடியவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் மக்கள் எழுச்சியடைந்த நிலiயை அடுத்தகட்டத்திற்கு தாயாராகிய உளவியல் வளர்ச்சியை இது காட்டுகிறது. வடக்கில் ஏற்பட்ட இந்த வெளிப்பாடு என்பது எதிர்காலத்தில் கிழக்கிலும் மாற்றங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. 

 

தேர்தல் களத்தில் உழைத்த பல இளைஞர்களைப் பார்த்தேன். அவர்களில் பலருக்கு கூட்டமைப்பில் நிறைய விமர்சனங்கள்கூட இருக்கின்றன. ஆனால் நாங்கள் வெல்ல வேணும். என்று களத்தில் நின்றார்கள். இது கூட்டமைப்பில் உள்ள தனிப்பட்டவர்களின், அல்லது பிரபலங்களிற்கு கிடைத்த வெற்றியல்ல. கூட்டமைப்பு என்ற ஒற்றுமைக்கும் அவர்கள் அவர்கள் முன்வைத்த விடயங்களுக்கும் முன் வைத்த கொள்ளைக்கும் கிடைத்த வெற்றி. முள்ளியவாய்க்கால் யுத்தத்தின் பின்னரும் ஈழத்து மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, எமது ஒரு அரசியல் தீர்வு வேண்டும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும் என் மக்களின் ஒற்றுமை வெளிப்பாடு. 

 

வடக்குப் பகுதியை முள்ளிவாய்க்கால் யுத்தம் மூலம் கைப்பற்றியதாக ராஜபக்ச குறிப்பிட்டார். முள்ளிவாய்க்காலுக்கு அடுத்த கட்ட யுத்தத்தில் அவரால் வடக்கையும் வடக்கு மக்களின் மனதையும் கைப்பற்ற முடியவில்லை. இந்த தேர்தல் யுத்தத்தை மகிந்த தான் குற்றங்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கான யுத்தமாக பாவிக்க முனைந்தார். ஆனால் மக்கள மகிந்தராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்து அவரை நிராகரித்தன் மூலம் அவர் இழைத்த குற்றங்களுக்கு தண்டணை கொடுக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட எமக்கு நீதி வேண்டும் என்றும் தீர்பளித்துள்ளனர். 

 

குளோபல் தமிழ் செய்திகளுக்காக பிரியதர்தசன்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.