Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார அபிவிருத்தி மட்டும் சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்தாது - ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார அபிவிருத்தி மட்டும் சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்தாது - ஆய்வாளர்

[ வெள்ளிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2013, 11:30 GMT ] [ நித்தியபாரதி ]

பாணைச் சாப்பிடுவதால் மட்டும் மனிதன் ஒருவன் உயிர் வாழந்துவிட முடியாது என்பதை அண்மையில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்து அரசாங்கத்தை தோல்வியுறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தென்னாசியவியல் போராசிரியர் வி.சூரியநாராயணன்* The New Indian Express ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

செப்ரெம்பர் 21 அன்று, பெரும்பான்மையினமான சிங்களவர்கள் வாழும் வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களில் மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்பட்டன.

சிறிலங்காவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியானது கிட்டத்தட்ட 60 சதவீத வாக்குகளுடன் வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அதேவேளையில், இக்கூட்டணியானது வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 78 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றதுடன், 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைப் பெற்று வடக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் 180,000 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தற்போது சிறிலங்காவில் இன ரீதியான அரசியல் என்பது அதிகரித்து வருகின்றது என்பது நடைமுறை உண்மையாகும். இவ்வாறான ஒரு நிலைப்பாடு பாகிஸ்தான் அரசியலிலும் இடம்பெற்றது.

1970 டிசம்பரில் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தலின் விளைவாக மிகவும் மோசமான அரசியல் மோதல் ஏற்பட்டது. முஜிபூர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் [Awami League] என்கின்ற கட்சியானது டிசம்பர் 1970ல் இடம்பெற்ற தேர்தலில், கிழக்குப் பாகிஸ்தானில் மட்டுமல்லாது நாடாளுமன்றிலும் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெற்றது.

மேற்குப் பாகிஸ்தானில் சுல்பிகர் அலி பூட்டோ தலைமையிலான People’s Progressive Party - PPP கட்சியானது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. 1970ல் பாகிஸ்தானின் அதிபராக இருந்த Yahya Khan, அரசாங்கத்தை அமைப்பதற்கு முஜிபூருக்கு அழைப்பு விடுக்க மறுத்தார். கிழக்குப் பாகிஸ்தான் மீது அப்போதைய பாகிஸ்தானிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் அராஜகங்களே இதற்கான அடிப்படையாக அமைந்தது.

இறுதியாக, கிழக்குப் பாகிஸ்தானில் செயற்பட்ட முக்தி பாஹினி [Mukti Bahini] என்கின்ற விடுதலை அமைப்பானது இந்தியாவின் ஆதரவுடன் கிழக்குப் பாகிஸ்தானுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தது.

இன ரீதியான பிரச்சினைகள் சிறிலங்கா மற்றும் பாகிஸ்தானின் அரசியலில் செல்வாக்குச் செலுத்திய போதிலும், இவ்விரு நாடுகளுக்கும் இடையில் அடிப்படையில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.

நாட்டில் உடனடியாக மீளிணக்கப்பாட்டைக் கொண்டுவருவதற்கான அடிப்படை நகர்வுகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்வதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யதார்த்தமான விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் அடையாளங் கண்டுகொள்ள வேண்டும். இந்த விடயத்தில் சிறிலங்கா அரசாங்கமானது உளரீதியான சில அடிப்படை மாற்றங்களுக்கு உட்படவேண்டும்.

புலிகள் அமைப்பு போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பயங்கரவாதம் தொடர்பிலான அச்சம் நீங்கிவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. சிறிலங்காவில் இனப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது எனவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.

இதன்மூலம் சிறிலங்காவின் பெரும்பான்மை இனமான சிங்களவர்கள் மத்தியில் தனக்கிருந்த ஆதரவைப் பெருக்குவதற்கான முயற்சியில் அதிபர் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டார். இவர் போர் வெற்றியை முதன்மைப்படுத்தி தான் சிங்கள இனத்தின் 'மீட்பர்' என தன்னைத் தானே அடையாளப்படுத்தியதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டார்.

பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களின் நலன்கள் முதன்மைப்படுத்தப்பட்ட அதேவேளையில், சிறிலங்காவில் வாழும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களின் நம்பிக்கைகளும் அவாக்களும் புறக்கணிக்கப்பட்டன.

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுவதுடன், அடக்குமுறைக்கு உள்ளாகுகின்றனர் என்பதை சிறிலங்கா அரசாங்கம் உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழ் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே நாட்டில் தீர்வொன்றை எட்டமுடியும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிவுறுத்தலின் கீழ் தமிழ் மக்களுக்கான தீர்வு ஒருபோதும் முன்வைக்கப்பட முடியாது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிறிலங்காவை ஆண்ட சிங்கள ஆட்சியாளர்கள் பெரும்பான்மையினருக்கு நலன் பயக்கும் கோட்பாடுகளை மட்டும் உருவாக்கி செயற்படுத்தியதன் விளைவாக தமிழ் சமூகத்திலிருந்து ஆயுதக் குழு தோற்றம் பெற்றது. ஆயுத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தை ஆரம்பித்தனர். நீதிக்கானதும் சமவுரிமைக்கானதுமான புலிகள் அமைப்பின் போராட்டமானது 30 ஆண்டுகள் வரை நீடித்தது.

இக்காலப்பகுதியில், இந்திய சிறிலங்கா உடன்படிக்கை, 13வது திருத்தச் சட்டம், திசவிதாரன ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் எனப் பல்வேறு தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதும், இவை எல்லாவற்றிலும் பெரும்பான்மை சிங்கள சமூகம் முதன்மைப்படுத்தப்பட்டதால் இவை வெற்றியளிக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னான காலப்பகுதியில், தமிழர்கள் தொடர்பான சிறிலங்கா அரசாங்காத்தின் கோட்பாடானது துரித பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறான பொருளாதார அபிவிருத்தி மூலம் தமிழர்களின் மனதை வெல்லலாம் என சிறிலங்கா அரசாங்கம் கருதியது.

அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தற் காலப் பரப்புரையின் போது துரித பொருளாதாரத் திட்டங்களை ஆளும் கூட்டணி முதன்மைப்படுத்தியது. இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டமை மற்றும் தமிழர் பகுதிகளில் வாழும் மக்கள் இயல்பு வாழ்வு வாழ்வதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தனது பரப்புரையின் போது கோடிட்டுக் காட்டியது.

பாணைச் சாப்பிடுவதால் மட்டும் மனிதன் ஒருவன் உயிர் வாழந்துவிட முடியாது என்பதை அண்மையில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்து அரசாங்கத்தை தோல்வியுறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதன் மூலம் மட்டும் நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்திவிட முடியாது. ஆனால் பல்லின பன்மைவாத சமூகங்களை மதிப்பதன் மூலம் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்திவிடலாம்.

தமிழ்த் தலைவர்கள் தமது நிலைப்பாடு தொடர்பில் தன்னிலை ஆய்வை மேற்கொள்வதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னான காலப்பகுதியில் காணப்படும் நடைமுறை உண்மைகளுக்கேற்ப தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டிய தேவையுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அச்சத்தின் காரணமாகவோ அல்லது விருப்பின் காரணமாகவோ தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊதுகுழலாகச் செயற்பட்டது. நீலன் திருச்செல்வம், அமிர்தலிங்கம், லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற தமிழ்க் கல்விமான்கள் உட்படப் பலரைப் புலிகள் அமைப்பினர் படுகொலை செய்தனர்.

இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை மேற்கொண்ட புலிகளுக்கு ஆதரவாக இருந்த தமிழ்த் தலைவர்கள் பலர் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் பணிபுரிகின்றனர். ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனித்தாய்நாடு ஒன்றைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்கின்ற கருத்திற்கு ஆதரவாகச் செயற்படும் புலம்பெயர் தமிழ் சமூகத்திடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தூரவிலகி நடந்து கொள்ளவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு மாகாண சபையைப் பொறுப்பெடுக்கின்ற போது சில சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்காவில் இந்திய - இலங்கை ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டம் போன்றன தொடர்பாக பேசப்படுகிறது. இதிலுள்ள வரைபுகளை நீக்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமை, காவற்துறை அதிகாரங்கள் மாகாணங்களிடம் கையளிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்கள் தற்போது விவாதிக்கப்படுகின்றன. காவற்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் கையளிக்கப்படக் கூடாது என சிறிலங்கா அதிபரும், பாதுகாப்புச் செயலரும் மிகத் தெளிவாக அறிவித்துள்ளனர். மத்திய அரசாங்கத்திடமே காணி அதிகாரங்கள் இருக்கவேண்டும் என அண்மையில் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் இல்லாது, மட்டுப்படுத்தப்பட்ட நிதி வளத்துடன் வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நிர்வகிக்க முடியும்? இதைவிட வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிரசன்னமும் தலையீடும் அதிகரித்துள்ளது. அதாவது தமிழ் மக்கள் தமது இடங்களில் விளையாட்டுப் போட்டியை அல்லது பிறந்த நாளை அல்லது எந்தவொரு விழாவைக் கொண்டாட விரும்பினாலும் அதற்கு இராணுவத்திடம் அனுமதி பெறப்பட வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவி பிள்ளை அண்மையில் சிறிலங்காவிற்கு ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். சிறிலங்காவில் சர்வதிகார ஆட்சி நிலவுவதாக நவி பிள்ளை தனது சுற்றுப்பயணத்தின் இறுதியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் உட்பட அனைத்து மீறல்களுக்கும் பொறுப்பானவர்களை அடையாளங்கண்டு சிறிலங்கா அரசாங்கம் அவர்களுக்குத் தண்டனை வழங்கத் தவறியுள்ளதாகவும் இதன்மூலம் நாட்டில் தேசிய ரீதியில் நம்பகமான மீளிணக்கப்பாட்டை உருவாக்கத் தவறியுள்ளதாகவும் நவி பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார்.

சிறிலங்கா தொடர்ந்தும் தவறிழைக்கும் பட்சத்தில் அனைத்துலக சமூகமானது இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான பொறிமுறைகளை உருவாக்கும் எனவும் நவி பிள்ளை எச்சரித்திருந்தார்.

அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் சிறிலங்காவுக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான போராட்டமானது மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இது சிறிலங்காவின் அரசியல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது திட்டவட்டமானது. இதயசுத்தியுடனான ஜனநாயக சார் அரசாங்கத்தால் மட்டுமே நாட்டில் இன மீளிணக்கப்பாட்டைக் கொண்டுவர முடியும்.

*The writer is former senior professor, Centre for South and Southeast Asian Studies, University of Madras.

http://www.puthinappalakai.com/view.php?20131004109188

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.