Jump to content

இமெயிலை கண்டுபிடித்த (இ-மெயில் தமிழன்) சிவா அய்யாதுரையின் செவ்வி:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Shiva-Ayyadurai_email-tamilan-200.jpg

மனித குலத்தின் ஒரே தொடர்பு ஊடகமாக பரிணமித்துள்ள இ-மெயிலை கண்டுபிடித்தவர் யார்? அவர் ஒரு தமிழன். பெயர் சிவா அய்யாதுரை. ராஜபாளையத்துக்காரர். வசிப்பது அமெரிக்காவில். டைம் பத்திரிகை இவரை ‘டாக்டர் இ-மெயில்’ என்று அழைக்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் என அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் ‘இ-மெயிலை கண்டுபித்தவர்’ என இவரை கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும், பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, ‘டாக்டர் சிவாதான் இமெயிலை கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடம் எல்லாம் பேசுகிறார். உலகின் மிக முக்கியமானதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (smithsonian museum), “மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இ-மெயிலையும் மதிப்பிட வேண்டும்” என்று வர்ணிக்கிறது.

  

அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி. (Massachusetts Institute of Technology) பல்கலைக்கழகத்தில் Systems Visualization மற்றும் Comparative Media Studies ஆகிய இரு துறைகளில் பேராசியராக இருக்கும் சிவா அய்யாதுரை, அதே பல்கலைக்கழகத்தில் நான்கு பட்டங்களும் ஒரு பி.ஹெச்.டி. பட்டமும் பெற்றவர். நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வு செய்தவர். நஷ்டத்தில் இயங்கி மூட வேண்டிய நிலையில் இருந்த அமெரிக்க தபால் துறையை லாபகரமாக மாற்றிக்காட்டியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருபவர். (அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ‘வெள்ளை மாளிகை’யும் உண்டு).

ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய நீண்ட ‘ஸ்கைப்’ உரையாடலில் இருந்து..

சொல்லுங்கள், நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கிருந்தீர்கள்?

"இங்குதான் இருந்தேன். எப்போதும் போல என் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்! என் அப்பா அய்யாதுரைக்கு சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் என்ற கிராமம். அம்மா மீனாட்சிக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. அப்பா, அம்மா இருவரும் அந்தக் காலத்திலேயே நன்றாக படித்தவர்கள். அம்மா, அப்போதே எம்.எஸ்.சி. கணிதம் படித்து மாநில அளவில் பதக்கம் வென்றவர். எனக்கு விவரம் தெரிவதற்கு முன்பே குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்து விட்டது. அங்கு செம்பூர் என்ற இடத்தில் குடியிருந்தோம். அப்பா, யூனிலீவர் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தார். அம்மா, டான்பாஸ்கோ பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றினார். 5, 6 வயதிலேயே எனக்கு படிப்பின் மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. என்னை மேற்கொண்டும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எங்கள் குடும்பம் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தது. சரியாக நீங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் இதே டிசம்பர் 2-ம் தேதி, எனது ஏழாவது பிறந்தநாள் அன்று நாங்கள் மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு பறந்தோம்.

நியூஜெர்ஸியில் வீடு. நூவர்க் (Newark) என்ற சிறிய பகுதியில் இருந்த லிவிங்ஸ்டன் பள்ளியில் படித்தேன். 1978-ம் ஆண்டு, எனக்கு 14 வயது இருக்கும்போது நியூயார்க் பல்கலைக்கழகம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 40 மாணவர்களை தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளை கற்றுக்கொடுத்தது. இந்தியாவில் கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை போல… அது ஒரு சம்மர் கிளாஸ். அதில் ­FORTRAN IV என்ற புரோகிராமிங் மொழியை கற்றுக்கொண்டேன். அந்த பயிற்சியில் பங்கெடுத்த ஒரே இந்திய மாணவன் நான்தான். ஆனாலும் எனக்கு பள்ளிப்படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வந்தது.

நான் பள்ளியை விட்டு நிற்கப் போவதாக அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா, 'யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டென்டிஸ்ரி'யில் (University of Medicine and Dentistry of New Jersey) டேட்டா சிஸ்டம் அனலிஸ்ட்-ஆக பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் தன்னுடன் பணிபுரிந்த, லெஸ் மைக்கேல்சன் (Les Michelson) என்ற பேராசிரியரிடம் என்னை அழைத்துச் சென்றார். மைக்கேல்சன், அப்போது அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளை, கம்ப்யூட்டர் வழியாக ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் என்னை தன் ஆராய்ச்சி உதவியாளர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டார். நான் பள்ளிக்கூடம் சென்றதுபோக மீதமிருந்த நேரத்தை எல்லாம் மைக்கேல்சனின் ஆராய்ச்சிக் கூடத்திலேயே செலவழித்தேன். இரவு, பகலாக அங்கேயே கிடந்தேன். சவால் நிறைந்த அந்த பணி என் மனதுக்குப் பிடித்திருந்தது.

அப்போது அந்த மருத்துவமனையில் மூன்று கட்டடத் தொகுதிகள் இருந்தன. ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக ‘மெமோரண்டம்' எழுதுவார்கள். நோயாளி பற்றிய விவரம், மருத்துவர் பற்றிய விவரம், to, from, subject எல்லாம் எழுதப்பட்ட அந்த மெமோரண்டத்தை அங்கிருக்கும் தபால்பெட்டி மூலம் பரிமாறிக்கொள்வார்கள். இதை அப்படியே எலெக்ட்ரானிக் மயப்படுத்த வேண்டும். அந்த மெமோரண்டத்தை மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு கம்ப்யூட்டரில் இருந்தும், மற்றொரு கம்ப்யூட்டருக்கு எலெக்ட்ரானிக் வடிவத்தில் அனுப்ப முடிய வேண்டும். இதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் இ-மெயில் சிஸ்டம். ­

FORTRAN IV மொழியில் 50 ஆயிரம் வரிகள் கொண்ட அந்த புரோகிராமை எழுதியபோது எனக்கு வயது 14. அது 1978-ம் ஆண்டு. அதற்கு email என்று பெயரிட்டேன். electro mail என்பதன் சுருக்கம் அது. FORTRAN மொழியில் ஒரு புரோகிராமில் அதிகப்பட்சம் 5 எழுத்துருக்கள்தான் பயன்படுத்த முடியும் என்பதாலும், email என்ற சொல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததாலும் அந்த பெயரை வைத்தேன். அகராதியில் அதற்கு முன்பு email என்ற வார்த்தையே கிடையாது.

1981-ம் ஆண்டு எனது கண்டுபிடிப்புக்காக, 'வெஸ்டிங்ஹவுஸ் சயின்ஸ் டேலன்ட்' (Westinghouse Science Talent) விருதுக்காக விண்ணப்பித்தபோது, ‘தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடித்த சமயத்தில் அது உலகத்தை ஆளப்போகிறது என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் இந்தக் கண்டுபிடிப்பும் அப்படி ஆகலாம்’ என்று குறிப்பு எழுதினேன். இன்று அதுதான் நடந்திருக்கிறது!"

அதன்பிறகு நீங்கள்தான் இ-மெயிலை கண்டுபிடித்தீர்கள் என்று ஏன் உரிமை கோரவில்லை?

"அப்படி யார் சொன்னது? இ-மெயிலுக்கான 'காப்பி ரைட்ஸ்' இன்றும் என்னிடம்தான் இருக்கிறது. நான் 1981, செப்டம்பர் மாதம் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கு வந்தேன். 1982 ஆகஸ்ட் 30-ம் தேதி இ-மெயிலுக்கான முதல் காப்புரிமையை அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றேன். அப்போது இண்டர்நெட் என்பது வரவில்லை. ஆகவே இ-மெயில் என்பது நிறுவனங்கள் நிர்வாக ரீதியாக பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாக இருந்தது. 1989-ல்தான் இண்டர்நெட் வழியே இ-மெயில் அனுப்பும் சோதனை முயற்சிகள் தொடங்கின. 96-ம் ஆண்டு ஹாட்மெயில் மிகப் பிரபலமாக காரணம், அப்போது உலகம் முழுவதும் இண்டர்நெட் அதிவேகமாக பரவிக்கொண்டிருந்தது. அதன்பிறகு 97-ல் யாஹூ வந்தது. 99-ல் செல்போன் வழியே இ-மெயில் அனுப்பும் வசதியை பிளாக்பெர்ரி துவங்கியது. நான்கு வருட 'பீட்டா' பரிசோதனைக்குப் பிறகு 2007-ல் ஜி-மெயில் வந்தது!"

ஆனால், டேவிட் கிராக்கர் (David Crocker), ராய் டாமில்சன் (Ray Tomlinson) ஆகியோரின் பெயர்களும் இ-மெயில் கண்டுபிடித்தவர்கள் பற்றிய ஆய்வுகளில் பேசப்படுகின்றன..

"அது பழையகாலம். நான்தான் இ-மெயிலை கண்டுபித்தேன் என்பதை ஸ்மித்சோனியம் ஆவணக் காப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 1978-ம் ஆண்டு உலகின் முதல் இ-மெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட் மெயில். அதன் ஒரிஜினல் புரோகிராமிங் கோடு, இப்போது ஸ்மித்சோனியம் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் நோம் சாம்ஸ்கி என் ஆய்வுகளின் நேரடி சாட்சியாக இருக்கிறார். அவர் எனது கண்டுபிடிப்பை பற்றி பல இடங்களில், பேசியும் எழுதியும் வருகிறார். புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகை, தனது தொழில்நுட்பப் பிரிவின் பதிப்பில் எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்து என்னுடைய நீண்ட பேட்டி ஒன்றையும் வெளியிட்டது.

டேவிட் கிராக்கர் கண்டுபிடித்தது ‘டெக்ஸ்ட் மெசேஜ்’ (text message) அனுப்பும் தொழில்நுட்பத்தைதான். புரியும்படி சொல்வதானால், இப்போது ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா… அதைபோல அவர் வெறுமனே டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக்கொள்வதை கண்டறிந்தார். அதை இ-மெயில் என்று சொல்ல முடியாது. அப்படியானால் நாம் தந்தி அனுப்புவதைதான் இ-மெயில் என்று அழைக்க வேண்டியிருக்கும். கார் ஓடுவதற்கான நான்கு சக்கரங்களை கண்டுபிடித்துவிட்டு 'நான் கார் கண்டுபிடித்துவிட்டேன்' என்று சொல்வதை போலதான் இதுவும். மாறாக, இ-மெயில் என்பது ஒரு முழுமையான சிஸ்டம். இன்று நாம் பயன்படுத்தும் Inbox, Outbox, Drafts, To, From, Date, Subject:, Body, Cc, Bcc, Attachments, Folders, Compose, Forward, Reply, Address Book, Groups, Return Receipt, Sorting உள்ளிட்ட 86 வகையான இ-மெயில் புரோகிராமிங்கை எழுதி, வடிவமைத்தது நான்தான். இதுதான் முழுமையான இ-மெயில் சிஸ்டம். ராய் டாமில்சனை பொருத்தவரை அவர் இ-மெயிலில் இன்று பயன்படுத்தும் @ குறியீட்டை கண்டுபிடித்தார். அதற்கு மேல் அவரது பங்களிப்பு இதில் எதுவும் இல்லை!"

இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?

"1993-ம் ஆண்டு நான் பி.ஹெச்.டி. ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தார். அப்போது வெள்ளை மாளிகைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 இ-மெயில்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றை நிர்வகிக்க நூற்றுக்கணக்கானவர்கள் வேலைக்கு இருந்தாலும், அது நாளுக்கு நாள் சிக்கலானதாக மாறிக்கொண்டிருந்தது. ஆகவே, அந்த மெயில்களை வகை வாரியாக பகுத்து பிரிக்கும் தானியங்கி தொழில்நுட்பத்தை கண்டறிவதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது வெள்ளை மாளிகை. பல்வேறு நிறுவனங்களும், தனிநபர்களுமாக 147 பேர் அதில் கலந்துகொண்டனர். இறுதியில் நான் கண்டறிந்த தொழில்நுட்பம் வெற்றிபெற்றது. அதற்கு நான் ‘எக்கோமெயில்’ (EchoMail) என்று பெயரிட்டேன். இப்போதும் வெள்ளை மாளிகையில் இந்த தொழில்நுட்பம்தான் நடைமுறையில் இருக்கிறது.

பிறகு இந்த 'எக்கோமெயிலை' ஒரு நிறுவனமாக தொடங்கினேன். இன்று உலகின் மிக முக்கியமான நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்கள். இந்த நிறுவனத்தின் மதிப்பு 200 மில்லியன் டாலர். இதுபோக, வேறு மூன்று நிறுவனங்களையும் நடத்துகிறேன். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய அமெரிக்க தபால் துறையை எனது புதிய இ-மெயிலிங் சிஸ்டம் மூலம் லாபகரமாக மாற்றியபோது, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பில் இருந்து தப்பினார்கள். அமெரிக்க ஊடகங்கள் என்னைப்பற்றி பெரிதாக எழுதினார்கள். ஆனால் எனக்கு இந்தியாவில் பணிபுரியவே விருப்பம். ஆனால் அங்கு எனக்கு ஒரு கசப்பான அனுபவம் இருக்கிறது."

என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாக இணையப் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது..

"ஆம், உண்மைதான். 2007-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான CSIR-Council of Scientific and Industrial Research துறையில் என்னை கூடுதல் செயலாளராக நியமித்தார் மன்மோகன்சிங். மூன்று ஆண்டுகள் அங்கு இருந்தேன். அந்த சி.எஸ்.ஐ.ஆர். நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. கடந்த 60 ஆண்டுகளில் அதில் உள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்கும் லஞ்சம், ஊழல். அறிவியல் கண்டுபிடிப்புக்கான சூழல் கொஞ்சமும் இல்லை. இதைப்பற்றி ‘கண்டுபிடிப்புகளுக்கு சுதந்திரம் வேண்டும்' (Innovation demands freedom) என்ற தலைப்பில் 47 பக்கத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதை உலகின் முக்கியமான 4 ஆயிரம் விஞ்ஞானிகளுக்கு மெயில் அனுப்பினேன். உலக அளவில் அது விவாதம் ஆனது.

உடனே இந்தியாவின் சட்டத்தை நான் மீறிவிட்டதாகச் சொல்லி திடீரென ஒருநாள் என் வீடு முடக்கப்பட்டது. என்னை வெளியேற்றினார்கள். நான் நேபாளம், கத்தார் வழியே அமெரிக்கா வந்தேன். 'சிவா அய்யாதுரையை வெளியேற்றியது இந்தியா செய்த பெரிய தவறு' என்று பல விஞ்ஞானிகள் எழுதினார்கள். அதைப்பற்றி இந்தியா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போதும் அங்கு சூழல் மாறிவிடவில்லை. அங்கிருக்கும் நேர்மையற்ற அரசியல் சூழலில் அறிவியல் ஒருபோதும் வளராது”

இ-மெயிலை கண்டுபிடித்தது நீங்கள்தான் என்பதை அவ்வளவு சுலபத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?

“ஏனெனில் நான் கறுப்பு நிறத் தோல் உடையவன். புலம்பெயர்ந்து வந்த இந்தியன். சிறுபான்மை தமிழன். 'நூவர்க்' என்னும் சிறிய ஊரில் வசித்தவன். முக்கியமாக 14 வயது சிறுவன். இவற்றை தவிர வேறு என்ன காரணத்தை சொல்ல முடியும்? 50 ஆயிரம் வரிகளை கொண்ட ஒரிஜினல் புரோகிராமிங் கோட், ஒரு வெள்ளைத்தோல் உடையவரிடம் இருந்தால் இந்த சர்ச்சைகளுக்கு வாய்ப்பே இல்லை.

அறிவியல் கண்டுபிடிப்புகளை ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், எம்.ஐ.டி. போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களிலும்தான் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் நான் எம்.ஐ.டி-யில் இருந்தபோது கண்டுபித்த 'எக்கோமெயிலை' கொண்டாடும் இவர்கள், நியூஜெர்ஸி மருத்துவமனையில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தபோது கண்டுபிடித்த இ-மெயிலை புறக்கணிக்கிறார்கள். இந்தியாவில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் பாகுபாடு இருப்பதை போல, அமெரிக்காவில் தோலின் நிறத்திலும், சிறுபான்மை-பெரும்பான்மை என்ற அளவிலும் பாகுபாடு இருக்கிறது. தெளிவாக எழுதிக்கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்த கறுப்பு நிறத் தோல் உடைய 14 வயது தமிழ் சிறுவன் இ-மெயிலை கண்டுபிடித்தான்.

இன்னொரு முக்கியமான கோணத்திலும் இதை நீங்கள் பார்க்க வேண்டும். நான் அடிக்கடி பயன்படுத்தும் 'மோட்டோ' வாக்கியம், 'கண்டுபிடிப்பு என்பதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் செய்ய முடியும்' (Innovation Any Time, Any Place by Anybody). அறிவும், அறிவியலும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அறிவியல் கண்டுபிடிப்புகளை வெறுமனே பணம் ஈட்டும் சந்தையாக பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்னை தனிமைப்படுத்த விரும்புகின்றன. ஆனால் நான் இப்போதும் சொல்கிறேன், என்னிடம் பேட்டி எடுக்கும் நீங்களும், இதை படிக்கப்போகும் தமிழ் வாசகர்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். அதற்கான சூழலை உருவாக்கித் தர வேண்டும். வரப்போகும் காலம் மிக அபாயகரமானது. வேலை இல்லாத் திண்டாட்டம் மிக மோசமாக இருக்கும். மில்லியன் கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது அறிவியலால் மட்டும்தான் சாத்தியமாகும்!"

உங்கள் பேச்சை வைத்து கேட்கிறேன்.. நீங்கள் சயிண்டிஸ்டா, கம்யூனிஸ்டா?

"நான் சயின்டிஸ்ட் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்டும் கூட. எம்.ஐ.டி.யில் படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். தென் ஆப்பிரிக்காவில் நடந்த‌ நிறவெறி நடவடிக்கைகளைக் கண்டித்து அந்த நாட்டு கொடியை எரித்தேன். பல்கலைக்கழகத்தின் உணவு உபசரிப்புப் பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதை கண்டித்து போராடி வெற்றி பெற்றோம். இலங்கையில் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அப்போது அதிபராக இருந்த பிரேமதாசா அமெரிக்கா வந்தார். அவரை வெளியேறச் சொல்லி போராடினோம். 'த ஸ்டூடண்ட்' என்ற பெயரில் நான்கு ஆண்டுகள் பத்திரிகை நடத்தினேன். கல்லூரி வளாகத்தில் நானும், என் சகாக்களும் வலிமை வாய்ந்த சிறுபான்மை சக்திகளாக இருந்தோம். பி.ஹெச்.டி. செய்துகொண்டிருந்தபோது, ஈராக் நாட்டுக்குள் படைகளை அனுப்பிய அமெரிக்க அரசுக்கு எதிராக தன்னந்தனியாக போராடினேன். அதனால் நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட்.

இன்று தொழில்நுட்பத்தையும், அறிவியல் வளர்ச்சியையும் பெரும் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணைய நிறுவனங்களும், செல்போன் கம்பெனிகளும் மக்களை அன்றாடம் கண்காணிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்கு எதிராக கை கோத்துக்கொள்கின்றனர். சமீபத்தில் எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியை, எஸ்.எம்.எஸ் அனுப்புவதை தடைசெய்து ஒடுக்கியதே இதற்கு உதாரணம்"

இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்ற வகையில் உங்களுக்கு வருவாய் வருகிறதா?

"நான் இ-மெயிலுக்கு 'காப்பி ரைட்ஸ்'தான் வாங்கினேன். ‘பேடன்ட் ரைட்ஸ்’ அல்ல. காப்பிரைட்ஸ் படி, ராயல்டி தொகை வராது. 1995-ம் ஆண்டுதான் சாஃப்ட்வேருக்கு பேடன்ட் ரைட்ஸ் வாங்கும் சட்டம் வந்தது. அதன்பிறகு நான் முயற்சிக்கவில்லை. ஏனெனில் நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை. என் நிறுவனங்கள் வழியே ஏராளமான பணம் எனக்குக் கிடைக்கிறது"

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

"எனது முழு வாழ்க்கையும் அறிவியலில்தான் செலவாகும், அதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவிலும், இந்தியாவிலுமாக மாறி, மாறி இயங்கவே விரும்புகிறேன். இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மைகளை ஆராய்ச்சி செய்து, அதை கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவ துறையில் புதிய புரட்சியை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு.

இன்றைய கார்பொரேட் உலகம், தொழில்நுட்பங்களையும், அறிவியலையும், அறிவையும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. அது எல்லோருக்கும் கைவராத கலை என்பதை போல சித்தரிக்கிறது. ஆனால் உலகத்தில் ஒரே ஒரு சிவா மட்டுமில்லை.. ஒரே ஒரு சாம்ஸ்கி மட்டுமில்லை… உலகம் முழுக்க ஆயிரமாயிரம் சிவாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டு வர வேண்டும்!"

நன்றி: ஆனந்த விகடன்

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=101579&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

உலகத்தில் ஒரு நாடு இஸ்ரேல் மக்களுக்கு இருப்பது போன்று இருந்தால் இவர் போன்று உலகம் போன்று கண்டு பிடிப்புகளுடன் உலகில் தலை சிறந்த நாடக இருந்திருப்பர். என்ன செய்வது? யாழில் ஒரு திதி ஒன்று உலகில் தமிழ்மக்களின் சாதனைகள் என பெயர் கொண்டு திறந்து அதன் மூலம் எல்லா சாதனையார்களயும் அறியவும்.. ஊக்கிவிக்கவும் உதவும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2015 ல வாக்கு போட்ட தமிழருக்கு ஒழுங்காகக் தீர்வை கொடுத்து இருந்தால் இந்த முறை பதவிக்கு வந்திருக்கலாம் ....நரி வேலை பார்த்தால் இப்படி தான் பின் வந்தவர்களை பார்த்து  சும்மா பொய் சொல்லிக்கொண்டு இருக்கணும் ......
    • கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில்  திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்கள் அனுபவிக்கவேண்டி வந்த இடர்பாடுகளும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அகற்றவேண்டும் என்றும் உறுதிப்பாட்டை இறுக்கமாக்கியது. அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கொண்டிராத கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியே (முன்னணி கட்சிகள் மத்தியில்) ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டதாக இருந்தது. ஊழலினாலும் முறைகேடுகளினால் சீரழிந்துகிடக்கும் நாட்டை துப்புரவு செய்ய வேண்டும் என்ற வேட்கை  ஆட்சிமுறை தொடர்பில் மக்களுக்கு இருந்த அக்கறையின் மைய  விவகாரமாக இருந்தது. வேறு எந்த பிரச்சினையினாலும் அதை மறைப்புச் செய்ய முடியவில்லை. இனத்துவ தேசியவாதத்தை கிளறிவிடுவதற்கு சில எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரயத்தனம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேசிய மக்கள் சக்தியை தவிர, தங்கள் மத்தியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக்  கொண்ட எந்தவொரு பிரதான அரசியல் கட்சியினாலும் ஊழல் பிரச்சினையை கையாள்வதற்கான அரசியல் துணிவாற்றல் தங்களுக்கு இருப்பதாக வாக்காளர்களை நம்பச்செய்ய முடியவில்லை. அதனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாக எதாச்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களோ அல்லது அவற்றின் வாதங்களோ வாக்காள்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  ஊழலை ஒழிக்க  வேண்டும் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை அகற்ற வேண்டும் என்பதுமே வாக்களர்களின் பிரதான அபிலாசையாக இருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை அடுத்து ஊழலையும் அதனுடன் இணைந்த தண்டனையின்மையையும் கையாளுவதில் அரசாங்கம் அக்கறையுடன் இருக்கிறது என்ற திருப்தி தற்போதைக்கு வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  பதிவு செய்யப்படாத ஆடம்பர வாகனம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வன்முறை நடத்தை வரலாற்றைக் கொண்டவர்.  ஆனால், அவர் முன்னர் ஒருபோதும்  கைது செய்யப்பட்டதில்லை. அவரின் குடும்பம் காலத்துவத்துக்கு  முன்னரான  உயர்குடி தொடர்புகளை கொண்டவர் என்பதும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டதாலும்  அவர் கைதுசெய்யப்படால் இருந்திருக்கலாம். ஆனால்,  தற்போதைய அரசாங்கம் அவரையும் பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட  முன்னைய அரசாங்கத்தின் இன்னொரு உறுப்பினரையும் பதிவு செய்யப்படாத வாகனங்களை வைத்திருந்த ஒப்பீட்டளவில் சிறிய குற்றச்சாட்டு தொடர்பில்  இப்போது கைது செய்திருக்கிறது. இதை இவர்களின் பல சகாகக்கள் மோசடி செய்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான பணத்துடன்  ஒப்பிடமுடியாது. ஆனால், இது ஒரு தொடக்கம். பிரதான பிரச்சினை அதனால், பிரதான பிரச்சினையான ஊழலை தாமதமின்றி கையாளத் தொடங்கி முன்னைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளில் சிலருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருப்பதால் அது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையில் அக்கறையுடன் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். முன்னைய அரசாங்கத்தின் இரு உறுப்பினர்களுக்குைஎதிரான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பது கஷ்டம். ஏனைன்றால் சான்றுகள் ( பதிவுசெய்யப்படாத இரு  மோட்டார் வாகனங்கள் ) கைவசம் இருக்கின்றன. கோடிக்கணக்கான பணமோசடி சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளில் சான்றுகளைப் பெறுவது கஷ்டம். முன்னைய அரசாங்கங்களினால் கடந்த காலத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்பட்ட ஊழல் வழக்குகளில் பல தடவைகள் இடம்பெற்றதைப் போன்று அந்த சிக்கலான வழக்குகள் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு உள்ளாகி இறுதியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விடுதலையாகி விடவும் கூடும். ஆனால், தற்போதைய வழக்குகள் நேரடியானவை சிக்கலற்றவை என்பதால் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதன் விளைவாக, இன்றைய தருணத்தில் அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. குறிப்பாக, முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை  இன்னறய அரசாங்கம் கையாளுகின்ற முறை தொடடர்பான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் நிலைமை இதுவே. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாகவும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு விமர்சனம். ஆனால் , தங்களது பொருளாதார இடர்பாடுகள்  சாத்தியமானளவு விரைவாக தணிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்கிற அதேவேளை,  புதிய அரசாங்கம் ஒரு மாத காலத்துக்கு முன்னர்தான் பதவிக்கு வந்தது என்பதையும் குறைந்த முன்னுரிமை கொண்ட துறைகளில் இருந்து உயர்ந்த முன்னுரிமை கொண்ட துறைகளுக்கு வளங்களை  மாற்றிப்பகிர்வதற்கு புதிய வரவு  --  செலவு திட்டம் ஒன்றை  நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வரிக் கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சட்டங்களில் மாற்றம் செய்யவேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை. அத்துடன்,  ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அதன் போட்டிக் கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளின் பினபுலத்தில் நோக்கவேண்டியதும் அவசியமாகும்.  நம்பமுடியாத நிவாரணப் பொதிகள் அவற்றில் அடங்கும். சமூகத்தின் மிகவும் நலிவுற்ற குழுக்களுக்கு மாதாந்தம் நலன்புரி கொடுப்பனவு வழங்குவதாகவும் கடன்நிவாரணத் திட்டங்கள் அறிமுகம், மாற்றுத் திறனாளிகளுக்கும் மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வரிக்குறைப்பு,  இலட்சக்ணக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சகல தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு, பெருமளவு வெளிநாட்டு முலீடுகளைப் பெறுதல் அல்லது குறுகிய கால வரையறைக்குள் கடன் நிவாரணங்களைப் பெறுதல் என்று பெருவாரியான வாக்குறுதிகளை அந்த கட்சிகள் வழங்கின. கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் ஆற்றல் குறித்த தற்போதைய மதிப்பீடு மற்றும் சர்வதேச உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அதனால் அரசாங்கம் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது பாசாங்கத்தனமானதாகும். சாத்தியமான பங்காளிகள் அறகலய போராட்ட இயக்கத்தினால் " முறைமை மாற்றம் " என்று சுருங்கச் சொல்லப்பட்ட ஊழல் நிறைந்த ஆட்சி முறையை முற்று முழுவதுமாக மாற்றவேண்டும் என்ற மக்களின் வேட்கை பாராளுமன்ற தேர்தலிலும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கக்கூடிய பிரசாரத் தொனிப்பொருளாக தொடர்ந்து விளங்கப்போகிறது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளிக்காதவர்களும் கூட ஊழலற்ற ஆட்சிமுறையை விரும்புவதால் இந்த தடவை அந்த கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. மறுபுறத்தில், கடந்த மாதம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கண்டதைப் போன்று மக்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்கு அல்லது தங்களுக்கு உதவியவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக வாக்களிக்கவும் நாட்டம் காட்டலாம்.  அது உள்ளூர் மட்டத்தில் சலுகைகளைச் செய்திருக்கக்கூடிய முன்னைய அரசாங்க உறுப்பினர்களுக்கு அனுகூலமாக அமையும். எல்பிட்டிய பிரதேச சபையில்  47 சதவீதமான வாக்குகளைக்  கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரைவாசி ஆசனங்களைப் பெற்றது. ஆனால், கூடுதல் சதவீதமான வாக்குகளை ஏனைய கட்சிகளே பெற்றன. நாட்டில் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் காணப்படும் நிலைவரங்களும்  தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை சிக்கலாக்கும். தேசிய மக்கள் சக்தி முன்னர் பெரும்பான்மையினச் சமூகத்தின் மீதே பிரதானமாகக் கவனத்தைக் குவித்தது.  அதன் உயர்மட்டத் தலைவர்களும் அந்த இன, மதப் பின்னணியில் இருந்து வந்தவர்களே. அதனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்ளைப் பொறுத்தரை, தங்கள் மத்தியில் வேலை செய்யாத ஒரு தேசியக் கட்சியை விடவும் தங்களது பிரிவுசார்ந்த நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்கே வாக்களிப்பதில் இயல்பாகவே நாட்டம் காட்டுவார்கள். ஆனால், சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சொந்த அரசியல் தலைவர்கள் மீதும் விரக்தியடைந்திருக்கின்ன. குறிப்பாக அந்த சமூகங்களின் இளம்  தலைமுறையினர் பிரிந்து வாழ்வதை விடவும் பிரதான சமூகத்துடனும் தேசிய பொருளாதாரத்துடனும் இணைந்து வாழ்வதில் முன்னரை விடவும் இப்போது கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள். அரசாங்கம் தானாகவே அரசியலமைப்புக்கு திருத்தங்களைச் செய்யும் செயன்முறைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதே  இந்த ஆய்வில் இருந்து பெறக்கூடிய முடிவாகும். அதற்கு சாதாரண பெரும்பான்மை ஒன்று கிடைக்கலாம். ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல. அதனால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய கூட்டாகச் செயற்பட்டு சட்டங்களையும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படுமானால் அதுவே நாட்டுக்கு  நல்ல வாய்ப்பாக அமையும். அதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிக்க பிரேமதாச கூறியதைப் போன்று எதிர்க்கட்சிகளுடன்  கலந்தாலோசனை, விட்டுக்கொடுப்பு, கருத்தொருமிப்பு அவசியமாகும். ஊழலும் தண்டனையின்மையும் கோலோச்சிய கடந்த காலத்தைப் போலன்றி ஊழலை முடிவு கட்டுவதற்கு தேவையான சடடங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு அமிலப் பரீட்சையாகும். தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளிகளாக வரக்கூடியவர்களை  இன, மத சிறுபான்மை கட்சிகளில் தேடிக் கொள்ளக்கூடியது சாத்தியம்.   https://www.virakesari.lk/article/198148
    • தேசப்பற்று, தீவிரவாதி: ‘அமரன்’ பேசும் அரசியல்! SelvamNov 08, 2024 09:27AM அ. குமரேசன் சமூகம், வரலாறு, அரசியல் சார்ந்த நாவல்கள், ஆய்வுத் தொகுப்புகள் உள்ளிட்ட எழுத்தாக்கங்களில், விவரிக்கப்பட்டிருக்கும் நிலைமைகள் பற்றி விமர்சிக்கப்படுவது போலவே, அவற்றில் சொல்லாமல் விடப்பட்டிருக்கும் நிலவரங்கள் குறித்த விமர்சனங்களும் எழுகின்றன.  படைப்புரிமைக்குச் சமமானதுதான் விமர்சன உரிமை. ஆகவே அத்தகைய விமர்சனங்கள் வருவதைத் தடுத்துவிட முடியாது. சொல்லப்படுவது என்ன  என்பதில் வெளிப்படையாக உள்ள அரசியல் போலவே, சொல்லாமல் விடப்படுவது எது என்பதிலும் நுட்பமான அரசியல் இருக்கிறது. ஆயினும், என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அது சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா, உண்மையைத் திரித்துச் சொல்லப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் விமர்சிப்பதே  எனது அணுகுமுறை. அமர அரசியல் தற்போது திரையரங்குகளுக்கு வந்து பெரிய அளவுக்குக் கவனம் பெற்றுள்ள ‘அமரன்’ திரைப்படம் பற்றிய விமர்சனங்களைப் பார்க்கிறபோது, தமிழ் சினிமா சித்தரித்து வந்திருக்கிற, தேச பக்தர்கள், தீவிரவாதிகள் பற்றிய அரசியல் பற்றிய சிந்தனை விரிகிறது. உண்மையாக வாழ்ந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘அமரன்’ படத்தைப் பற்றி வந்த எதிர் விமர்சனங்களில், அவரது சாதி அடையாளத்தை மறைத்தது ஏன் என்ற கேள்வியைச் சிலர் எழுப்பினார்கள். தமிழ் சினிமா எப்போதுமே அந்தச் சாதியினரைக் கதாநாயகர்களாகச் சித்தரிப்பதைப் புறக்கணித்து வந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஒரு நாளேட்டில் அது ஒரு கட்டுரையாகவே வந்தது. கட்டுரையாளரின் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்தான். இப்படி எல்லாப் பிரச்சினைகளிலும் எல்லாத் தரப்பினரின் கருத்துச் சுதந்திரமும் மதிக்கப்படுமானால் ஆரோக்கியமாக இருக்கும். படத்தின்  வெற்றிக் கூட்டத்தில் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள ராஜ்குமார் பெரியசாமி இந்தக் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பெற்றோரே அதை விரும்பவில்லை, தமிழர் என்றும் இந்தியர் என்றும் அடையாளப்படுத்துவதைத்தான் முகுந்த்தே விரும்பினார் என்று பெற்றோர் தெரிவித்தார்கள் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். இதற்கு முன் ‘சூரரைப் போற்று’ படம் வந்த நேரத்திலும், எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானப் பயண அனுபவம் கிடைக்கச் செய்தவரது வாழ்க்கையின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் அவரது சாதி அடையாளம் மறைக்கப்பட்டது என்று விமர்சிக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களிலுமே, நாயகர்கள் வேறு ஏதாவது ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகவும் காட்டப்படவில்லை என்பதை இந்த விமர்சகர்கள் மறைத்துவிட்டார்கள். நாட்டிற்குப் பங்களிக்கிற நாயகர்களை எந்தவொரு சாதி வில்லையையும் மாட்டாமல் சித்தரிப்பதையே தமிழ் மக்கள் ஆதரித்து வந்திருக்கிறார்கள். அந்த நல்லிணக்க மாண்பிற்கு ‘அமரன்’ படம் உண்மையாக இருக்கிறது என்றால் அது பாராட்டத்தக்கதுதான். அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை நாயகப் பாத்திரங்களாக வைத்த படங்கள் வந்திருக்கின்றன. எனது நினைவு சரியாக இருக்குமானால், ‘வியட்நாம் வீடு’, ‘கௌரவம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ரோஜா’, ‘அந்நியன்’ உள்ளிட்ட அத்தகைய பல படங்கள் வந்து வெற்றியும் பெற்றுள்ளன. குறிப்பிட்ட சாதியினர் அல்லாத பிற சாதிகளைச் சேர்ந்த மக்களும் ஆதரித்ததால்தான் அந்தப் படங்கள் வெற்றி பெற்றன என்று சொல்லத் தேவையில்லை.  வீரமும் தியாகமும் மேஜர் முகுந்த்தின் குடும்பத்தினருடைய விருப்பத்திற்கும், தமிழக மக்களுடைய நல்லிணக்க வரலாற்றுக்கும் உண்மையாக இருந்தது போல், காஷ்மீர் மக்களுக்கும் ‘அமரன்’ உண்மையாக இருக்க வேண்டாமா? இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் வழக்குரைஞரும் எழுத்தாளருமான மு. ஆனந்தன். “அமரன் திரைப்படம் பார்த்துவிட்டு தியேட்டரிலேயே அப்படி அழுதேன் இப்படி அழுதேன் என்று பலர் சொல்கிறார்கள். அது சரிதான். அழ வைப்பதற்கென்றே தயாரித்த படமாக இருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணம் துயரமானது. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவரது மரணம் மட்டுமல்ல ஒவ்வொரு ராணுவ வீரரின் தியாகமும் போற்றுதலுக்குரியது” என்று அந்த விமர்சனம் முகுந்த் வரதாராஜன்களின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவதிலிருந்தே தொடங்குகிறது. “ஆனால், ராணுவ வீரர்களின் மரணத்தை வைத்து தேச வெறியைக் கிளப்பி  இழிவான அரசியல் செய்யப்படுவது போன்றுதான் இந்தப் படமும் செய்திருக்கிறது. பார்வையாளர்களின் உணர்வுகளை உச்சத்திற்குக் கொண்டு செல்வது போலவும் அழச் செய்வது போலவும் முகுந்த்தின் மரணத்திற்குப் பிறகான காட்சிகளைத் திட்டமிட்டு அமைத்துள்ளார்கள். அந்த மரணத்தை வைத்து சினிமாவை மார்க்கெட்டிங் செய்வதுதான் நோக்கமாக இருக்கிறது,” என்கிறார் ஆனந்தன். இத்தகைய விமர்சனங்கள் சரிதானா என்று உரசிப் பார்ப்பதற்காகவேனும் படத்தைப் பார்த்தாக வேண்டும். திரைக்கதையைப் பாதுகாப்புத் துறை, முகுந்த்தின் பெற்றோர், அவரது ராணுவ நண்பர்கள் ஆகிய மூன்று தரப்பிலும் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகுதான் படம் தயாரிக்கப்பட்டது என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மூத்த நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனால், ராணுவத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அல்டாஃப்வாணி தரப்பிலோ, காஷ்மீர் மக்கள் தரப்பிலோ கருத்துக் கேட்கப்படவில்லை. குற்றவாளியைப் பிடிக்கச் சென்றபோது மக்கள் ராணுவத்தினர் மீது கல்லெறிந்து எதிர்ப்பதாகக் காட்டப்படுகிறது. அப்படிக் கல் வீசப்பட்டது உண்மைதான் என்றாலும், குற்றவாளிக்காகக் கல் வீசியவர்கள் குறைவு. பொதுவாகக் கடந்த காலத்தில் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அந்த மக்கள் கல் வீசுவதை 2008ல் ஒரு போராட்ட வடிவமாகக் கையில் எடுத்தார்கள் என்று விமர்சகர் குறிப்பிடுகிறார். ஒரு முகுந்த் மக்களுக்கு உதவிய நல்லவராக இருந்திருக்கலாம், ஆனால், நடவடிக்கைக்காக அங்கே சென்றவர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் கிடையாது. விசாரணைக்காகச் சிறுவர்களையும் தூக்கிச் சென்றது, பாலியல் வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகள் போன்ற வன்முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து அரசியலாகத் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதன் வலியைத் தாங்க இயலாதவர்களாகவும்  தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே அந்த மக்கள் கற்களைக் கையில் எடுத்தார்கள் என்றும் விமர்சகர் சில நிகழ்வுகளை நினைவுகூர்ந்திருக்கிறார்.  புதிய தணிக்கை இப்படிப்பட்ட ராணுவ வன்கொடுமைகள் தொடர்பாக உலக பொதுமன்னிப்பு நிறுவனத்தின் அறிக்கை உட்பட பல ஆவணங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆயினும் அம்மாதிரியான தகவல்களை வைத்துக்கொண்டு எளிதாகப் படம் எடுத்துவிட முடியாது. இதைப் பற்றிக் கூறுகிற ஆனந்தன், ஒன்றிய ஆட்சிக்கு மோடி தலைமையில் பாஜக வந்த பிறகு, ராணுவம் தொடர்பான படங்களுக்குத் தணிக்கை வாரியத்தின் அனுமதி மட்டும் போதாது, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியும் வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2022 பிப்ரவரி 11 அன்று, பெரொஸ் வருண் காந்தி கேட்டிருந்த ஒரு கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் அளித்த பதிலில், “பாதுகாப்பு தொடர்பான உள்ளடக்கங்களுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) வழங்குவதில் உள்ள அடிப்படைக் கோட்பாடு என்னவெனில், ஆயுதப் படையினருக்கோ அரசாங்கத்திற்கோ நாட்டிற்கோ மரியாதைக் குறைவு ஏற்படுத்தப்படாமல் இருப்பதையும், தகவல்கள் உண்மையாக இருப்பதையும், நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய  வகையில் ரகசியத் தகவல்கள் பொதுவெளிக்குக் கொண்டுவரப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதுதான்,” என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகத்தின் வலைத்தளத்தில் இந்தப் பதில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கட்டுப்பாடுகள் சரி  என்றுதான் தோன்றுகிறது. ஆனால், விமர்சனப்பூர்வமாகவும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் மக்களின் துயரங்கள் பற்றியும் படமெடுக்க முனைவோருக்கு இந்த ஆணை தகர்க்க முடியாத முட்டுச் சுவராக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறை தொடர்பான திரைப்படங்களுக்கும் என்ஓசி கெடுபிடி கொண்டுவரப்பட்டால் என்ன ஆகும்? காவல்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களைக் காட்டிய ‘விசாரணை’, ‘ஜெய்பீம்’, ‘வேட்டையன்’ போன்ற படங்கள் திரைக்கு வந்திருக்க முடியுமா? மக்களுக்கும் படைப்புக்கும் உண்மையாக இருக்க விரும்பும் படைப்பாளிகள் இப்படிப்பட்ட ஆணைகளுக்கு உடன்பட்டுப் போவதை விட, திரையரங்கில் பாப்கார்ன் விற்றாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று போய்விடுவார்கள். தேசப்பற்று ராணுவ வீரர், காவல் அதிகாரி போன்ற தனி மனிதர்களின் வீரம், தியாகம் ஆகியவற்றின் மீது மரியாதையை ஏற்படுத்துகிற கலையாக்கங்கள் வரவேற்கத்தக்கவை.  ஆனால், அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் சந்தை விற்பனைச் சரக்காக்குவது தடையின்றி நடந்து வந்திருக்கிறது. அத்துடன், முன்னுக்கு வருகிற சமூகப் பிரச்சினைகளையும் கூட விற்பனைப் பொருளாக்குகிற வேலையையும் சினிமாவினர் எப்போதுமே செய்துவந்திருக்கிறார்கள். மாற்றத்திற்கான உண்மை அக்கறையுடன் அந்தப் பிரச்சினைகளைக் கையாளும் படமாக்கங்கள் அரிதாகவே வருகின்றன. அதிலும், (உண்மைக் கதையோ கற்பனைக் கதையோ  எதுவானாலும்) படத்தின் நாயகப் பாத்திரம் ராணுவ வீரன் அல்லது காவல்துறை அதிகாரி, எதிர்நிலைப் பாத்திரம் தீவிரவாதி என்றால் முழுக்க முழுக்க அவனை ஈவிரக்கமற்ற ஒரு சதிகாரன் போலவே காட்டுவதை முந்தைய முன்னணி  நட்சத்திரங்கள் நடித்த படங்களும் செய்து வந்திருக்கின்றன. அவன் தரப்பு நியாயம் எதுவும் பெயரளவும் பேசப்படுவதில்லை. எந்தப் பின்னணியில் அவன் தீவிரவாதிகளின் பக்கம் இணைந்தான் என்பதும் விளக்கப்படுவதில்லை. ஒருவேளை நாயகப் பாத்திரமே தீவிரவாதி என்றால் இவை சொல்லப்படலாம். ஆனால், அப்படியொரு நாயகப் பாத்திரத்துடன் படம் பண்ணுவதற்கு யார் துணிவார்? எந்தவொரு குற்றச் செயல் தொடர்பாகவும் கைது செய்யப்படுகிறவர்களை, அவர்கள் குற்றவாளிகள்  என்று அரசாங்கம்  சொல்லிவிட்டது என்பதற்காக நீதிமன்றம் ஏற்பதில்லை. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பையும் கேட்டுவிட்டுத்தான் தீர்ப்புக்குப் போகிறது, போக வேண்டும். (நீதிக் கோட்பாட்டின்படி சொல்கிறேன். பணபலமோ அதிகாரத் தொடர்போ ஆள்வலிமையோ இல்லாத அப்பாவிகள் பலர் தங்கள் தரப்பை வலுவாக முன்வைக்க முடியாமல் குற்றவாளிகளாகச் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அது தனிக்கதை.) ஆனால், நம்மூர் சினிமாக்கள், எதிர்க் கதாபாத்திரங்களுக்குத்  தீவிரவாதி அங்கியை மாட்டிவிட்டால் அவர்கள் தரப்பிலோ, போராடும் மக்கள் தரப்பிலோ நியாயம் இருப்பதாக ஒப்புக்குக்கூட காட்டுவதில்லை. அவர்கள் தேசத்தின் எதிரிகளாகவே, அடக்குமுறைக்கு உரியவர்களாகவே சித்தரிக்கப்படுவார்கள். நியாயங்கள் இருந்தாலும், தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்றாவது சொல்ல வேண்டும், அந்தக் குறைந்தபட்ச நடுநிலை கூட கடைப்பிடிக்கப்படுவதில்லை. குழந்தைகளின் ஓவியத்தில் இந்தப் பாரம்பரியம் விசுவாசமாகப் பின்பற்றப்படுவதன் விளைவு என்ன? உண்மை நிகழ்வு ஒன்றை சாட்சிக்கு அழைக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன், சென்னை லயோலா கல்லூரியின் ஊடகக் கலைத்துறை மாணவர்களுக்கு இதழியல் தொடர்பாகப் பயிற்சியளிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. ஒருநாள் மாணவர்கள்  ஒரு பெரிய பையில் வைத்திருந்த ஓவியத் தாள்களை எடுத்து மேசையில் வைத்தார்கள். சென்னையின் சில அரசுப் பள்ளிகளையும் தனியார் பள்ளிகளையும் சேர்ந்த 100 குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அவை. அந்த ஓவியங்கள் அனைத்திலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, தாடி வைத்திருந்த, மீசை இல்லாத, குல்லா அணிந்த, நீண்ட கறுப்பு அங்கியுடன் கையில் துப்பாக்கி பிடித்திருந்த உருவம் வரையப்பட்டிருந்தது. “தீவிரவாதியின் படம் வரைக” என்று கேட்கப்பட்டபோது அத்தனை பேரும் இவ்வாறு வரைந்திருக்கிறார்கள் என்று மாணவர்கள் தெரிவித்தார்கள். அந்த உருவம் யாரைப் பிரதிபலிக்கிறது என்று எவரும் புரிந்துகொள்ளலாம். அந்த 100 குழந்தைகளில் ஒரு சிறுபான்மை சமயம் சார்ந்த குடும்பங்களின் பிள்ளைகளும் இருந்தார்கள். இப்படியொரு பிம்பத்தை அவர்களின் மனங்களில் பதிய வைத்ததில் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்கிருப்பதை மறுக்க முடியுமா? தேசப்பற்று என்றால் அது ராணுவ வீரர் அல்லது காவல்துறை அதிகாரியின் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதியை யார் செய்தது? பருவநிலை சவால்களை எதிர்கொண்டு வயலில் இறங்கும் வேளாண் பணியில், போராடுகிற வேறு தொழிலாளர்களுக்காகத் தமது ஒரு நாள் ஊதியத்தை இழந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் தோழமைப் பணியில், மயக்கும் மதவெறிப் பிரச்சாரங்களைப் புறக்கணித்து ஒற்றுமையைப் பேணும் நல்லிணக்கப் பணியில், சாதி ஆணவத்துக்கு எதிராகத் தோள் சேரும் சமூகநீதிப் பணியில், மாணவர்களுக்காகப் பொழுதை அர்ப்பணிக்கும் ஆசிரியப் பணியில், தொற்று வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் நோயாளிகளைத் தொட்டுத் துடைத்துத் தூய்மைப்படுத்தும் செவிலியப் பணியில், தாக்குதல்களுக்கு அஞ்சாமல் உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகப் பணியில், கடும் மழையிலும் மின்சாரம் கிடைக்கச் செய்யும் மின் பணியில், வெள்ளச் சாலையிலும் பேருந்தை இயக்கும் போக்குவரத்துப் பணியில், பேச்சும் இணையமும் துண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் தொலைத்தொடர்புப் பணியில், பில் போட வேண்டாமென்றால் வரி தள்ளுபடி என்று சொல்வதைத் தள்ளிவிட்டு பில் போட்டே பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர் பணியில்…. இன்னும் நாட்டின் ரத்த ஓட்டமாக இருக்கும் அத்தனை பணிகளிலும் துடிப்பது தேசப்பற்றுதான். ராணுவ வீரர்களோடும் காவல்துறையினரோடும் நில்லாமல் இப்படிப்பட்ட பணிகளையும் பாருங்கள் சினிமாவினரே, வெற்றிப் படங்களுக்கான அருமையான கதைகள் கிடைக்கும். இல்லையேல், மனித உரிமை முழக்கங்கள் படப்பிடிப்புக் கூடங்களிலும் உரக்க ஒலிப்பதை நாடு கேட்கிற நாள் வரத்தான் செய்யும்.     https://minnambalam.com/featured-article/amaran-movie-politics-patriotism-speacial-article-on-kumaresan/
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.