Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசீலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் போட்டி தொடர்

Featured Replies

வில்லியம்சன், மெக்கலம் சதம் :வலுவான நிலையில் நியூசி.,
பிப்ரவரி 05, 2014.

 

ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வில்லியம்சன், கேப்டன் மெக்கலம் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் இன்று துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

அஷ்வின் நீக்கம்:

இந்திய அணியில் ‘நம்பர்–1’ ஆல் ரவுண்டர் அஷ்வின் நீக்கப்பட்டார். எதிர்பார்த்தது போல் ரவிந்திர ஜடேஜா வாய்ப்பு பெற்றார். வேகப்பந்து வீச்சில் ஜாகிர் கான் தலைமையில், அனுபவ இஷாந்த் சர்மா, முகமது ஷமி அணியில் இடம் பிடித்தனர். போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி துவங்குவதில் 15 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.

இஷாந்த் அசத்தல்:

நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் புல்டன் (13) ஏமாற்றினார்.  தொடர்ந்து ரூதர்போர்டை(6) வெளியேற்றிய இஷாந்த் சர்மா, டெஸ்ட் அரங்கில் தனது 150வது விக்கெட்டை பதிவு செய்தார். அடுத்து வந்த ராஸ் டெய்லரையும் (3) இவர் அவுட்டாக்க, 30 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்த நியூசிலாந்து அணி தடுமாறியது.

பின் வந்த கேப்டன் பிரண்டன் மெக்கலம் கைகொடுக்க, எதிர் முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் அணியை கொஞ்சம் கொஞ்சமாக சரிவில் இருந்து மீட்டார். அவ்வப்போது பவுண்டரி அடித்த வில்லியம்சன், முகமது ஷமி வேகத்தில் சிக்கர் அடித்தார். தொடர்ந்து ஜாகிர் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய வில்லியம்சன் டெஸ்ட் அரங்கில், தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இவர் 113 ரன்கள் எடுத்தபோது ஜாகிர்கான் வேகத்தில் அவுட்டானார்.

எதிர்முனையில் தன்பங்கிற்கு இஷாந்த, ஜாகிர் கான் பந்தில் தலா 2 பவுண்டரி விளாசிய கேப்டன் மெக்கலம், தனது 8வது சதத்தை எட்டினார். இவருக்கு தொடர்ந்து வந்த ஆண்டர்சன் நல்ல ‘கம்பெனி’ கொடுக்க முதல்நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது.  மெக்கலம் (143), ஆண்டர்சன் (42) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா, ஜாகிர் கான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

http://sports.dinamalar.com/2014/02/1391619570/pujaracricketindia.html

–––

  • தொடங்கியவர்

ரோகித் சர்மா அரைசதம்: இந்தியா திணறல்
பிப்ரவரி 06, 2014.

 

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் மீண்டும் சொதப்பினார். ரோகித் சர்மா அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. மெக்கலம் (143), ஆண்டர்சன் (42) அவுட்டாகாமல் இருந்தனர்.

இஷாந்த் அபாரம்:

இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்கு, மெக்கலம், ஆண்டர்சன் ஜோடி தொடர்ந்து ரன்குவிப்பபில் ஈடுபட்டது. இஷாந்த் சர்மா வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்த ஆண்டர்சன் (77), டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்து அவுட்டானார்.

பின் ரன்வேகத்தை அதிகரித்த மெக்கலம், டெஸ்ட் அரங்கில் தனது 2வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். வாட்லிங் (1) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த சவுத்தி (28), சோதி (23) ஓரளவு கைகொடுத்தனர். வாக்னர் ‘டக்’ அவுட்டாக, எதிர்முனையில் இஷாந்த் வேகத்தில் சிக்சர் பறக்கவிட்ட மெக்கலம் (224), ரவிந்திர ஜடேஜாவின் அசத்தல் ‘கேட்ச்சில்’ வெளியேறினார். நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 503 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது’. பவுல்ட் (1) அவுட்டாகாமல் இருந்தார்.

சொதப்பல் துவக்கம்:

பின் முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு ‘டக்’ அவுட்டான ஷிகர் தவான் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார். பின் வந்த புஜாரா (1) வந்த வேகத்தில் நடையை கட்டினார். விராத் கோஹ்லி (4) சவுத்தி பந்தில் அவுட்டாக, இந்திய அணி 10 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்து தத்தளித்தது.

தொடர்ந்து வந்த ரோகித் சர்மா நிதானாமான ஆட்டத்தை .வெளிப்படுத்த முரளி விஜய் (26) ஓரளவு கைகொடுத்தார். ரகானேவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து 373 ரன்கள் பின்தங்கியிருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரோகித் சர்மா (67), ரகானே (23) அவுட்டாகாமல் இருந்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் பவுல்ட் 2, சவுத்தி, வாக்னர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/02/1391703880/ZaheerKhancricketindia.html

––––

  • தொடங்கியவர்

முரளி விஜய் ஏமாற்றம்: இந்தியா நிதான ஆட்டம்
பிப்ரவரி 07, 2014.

 

ஆக்லாந்து: ஆக்லாந்து டெஸ்டில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சி்ல் 105 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணிக்கு முரளி விஜய் ஏமாற்றம் அளித்தார்.

 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து 373 ரன்கள் பின்தங்கியிருந்தது. ரோகித் சர்மா (67), ரகானே (23) அவுட்டாகாமல் இருந்தனர். மூன்றாவது நாள் ஆட்டம் அரைமணி நேரம் முன்பு துவங்கப்பட்டது.

வாக்னர் மிரட்டல்:

முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, ரகானே (26) தாக்குபிடிக்கவில்லை. அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மா (72) அவுட்டானார். பின் வந்த கேப்டன் தோனியை (10) வாக்னர் வெளியேற்றினார். தொடர்ந்து வேகத்தில் மிரட்டிய வாக்னர், பின்வரிசை

வீரர்களான ஜாகிர் கான் (14), முகமது ஷமி (2) விட்டுவைக்கவில்லை. எதிர்முனையில் இஷாந்த் சர்மாவை ‘டக்’ அவுட்டாக்க, இந்திய அணி வெறும் 72 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில், முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது’.

ஷமி பதிலடி:

இதையடுத்து 301 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய நியூசிலாந்து அணி ஷமி வேகத்தில் ஆட்டம் கண்டது. இவர் வீசிய போட்டயின் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரூதர்போர்டு ‘டக்’ அவுட்டானார்.

தொடர்ந்து இவரது அடுத்த ஓவரில் மற்றொரு துவக்க வீரர் புல்டனை (5) வெளியேற்றினார். வில்லியசன் (3) ஜாகிர் கான் பந்தில் ஜடேஜாவின் மிரட்டல் ‘கேட்ச்சில்’ அவுட்டானார். பின் வந்த கேப்டன் பிரண்டன் மெக்கலம் (3) ரன் அவுட்டாக, உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.


டெய்லர் ஆறுதல்:

தொடர்ந்து வந்த நியூசிலாந்து அணிக்கு கோரி ஆண்டர்சன் (2) ஏமாற்றினார். பின் வாட்லிங் கம்பெனி கொடுக்க, எதிர்முனையில் அவ்வப்போது பவுண்டரி அடித்த ராஸ் டெய்லர் (41) ஓரளவு கைகொடுத்தார். தொடர்ந்து வந்த சவுத்தி (14) ரவிந்திர ஜடேஜாவின் ‘சுழல்’ வலையில் சிக்கினார். வாட்லிங் (11), சோதி (0) ஆகியோர் இஷாந்த் சர்மா வேகத்தில்அவுட்டாக,  நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் 105 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டனாது’. இதையடுத்து இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

விஜய் சொதப்பல்:

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் முரளி விஜய் (13) ஏமாற்றம் அளித்தார். பின் தவானுடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி  இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. தவான் (49), புஜாரா (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் சவுத்தி ஒரு விக்கெட் சாய்த்தார்.

 

http://sports.dinamalar.com/2014/02/1391794149/kohliindiacricket.html

  • தொடங்கியவர்

போராடி வீழ்ந்தது இந்திய அணி : தவான் சதம் வீண்
பிப்ரவரி 08, 2014.
 

 

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில்,  40 ரன்களில் தோல்வியடைந்த் இந்திய அணி போராடி வீழ்ந்தது. ஷிகர் தவான் சதம் வீணானது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503, இந்தியா 202 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 105 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இந்திய அணிக்கு 407 ரன்கள் என்ற கடின இலக்காக நிர்ணயித்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, 1 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. தவான் (49), புஜாரா (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

கோஹ்லி அரைசதம்:

நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு புஜாரா (23) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த விராத் கோஹ்லி கைகொடுக்க, தவான் அரைசதம் கடந்தார்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

முதலில் வாக்னர் பந்தில் 2 பவுண்டரி அடித்த கோஹ்லி, தொடர்ந்து சோதி பந்தில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்து டெஸ்ட் அரங்கில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார்.  இவர் 67 ரன்கள் எடுத்த போது வாக்னர் பந்தில் அவுட்டானர்.

ரகானே பரிதாபம்:

எதிர்முனனயில் தன்பங்கிற்கு சோதி பந்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசிய ஷிகர் தவான் (115), தனது 2வது சதத்தை பூர்த்தி செய்து அவுட்டானார். தொடர்ந்து வந்த ரகானே (18) அம்பயரின் தவறான தீர்ப்பால் வெளியேற, தேநீர் இடைவேளையின் போது 5 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது.

ரோகித் ஏமாற்றம்:

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு, சவுத்தி வீசிய முதல் பந்திலேயே ரோகித் சர்மா (19) அவுட்டானார். பின் வந்த ரவிந்திர ஜடேஜாவின் துணையுடன்  கேப்டன் தோனி துணிச்சலாக போராடினார்.  டெஸ்ட் போட்டியில் தேவையில்லாமல் விரைவாக ரன்கள் சேர்க்க முயற்சித்த ஜடேஜா 26 ரன்களில் வெளியேறினார். ஜாகிர் கான் (17) நிலைக்கவில்லை. தொடர்ந்து போராடிய தோனி (39) சர்ச்சைக்குரிய முறையில் வாக்னர் பந்தில் போல்டானார். இஷாந்த் சர்மாவும் (4) அவுட்டாக,  இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 366 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டாகி’  40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஷமி (0) அவுட்டாகாமல் இருந்தார்.

நியூசிலாந்து அணிக்கு வாக்னர் 4 விக்கெட் சாய்த்தார்.  இந்த வெற்றியின்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் 14ல் வெலிங்டனில் துவங்குகிறது.  ஆட்டநாயகன் விருதை முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம் தட்டிச்சென்றார்.

http://sports.dinamalar.com/2014/02/1391873785/shamiindianewzealandtest.html

  

  • தொடங்கியவர்

தொடரை சமன் செய்யுமா இந்தியா: இன்று நியூசி.,யுடன் இரண்டாவது டெஸ்ட்
பிப்ரவரி 13, 2014.
 

 

வெலிங்டன்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் இன்று துவங்குகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆக்லாந்தில் நடந்த முதல் டெஸ்டில் 40 ரன்னில் வீழ்ந்த இந்திய அணி, 0–1 என பின்தங்கியுள்ளது. இதனிடையே, இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், வெலிங்டனில் இன்று துவங்குகிறது.

ஏற்கனவே, இங்கிலாந்து (0–4), ஆஸ்திரேலியா (0–4), தென் ஆப்ரிக்க மண்ணில் (0–1) ஒரு வெற்றி கூட பெறாத இந்திய அணி, இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒருநாள் தொடரையும், நியூசிலாந்து மண்ணில் 0–4 என, இழந்துள்ளது. வரும் 2015ல் இங்கு உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க வேண்டிய நிலையில், இன்று துவங்கும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று திரும்பினால், இந்திய ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

தவான் நம்பிக்கை:

இதற்கேற்ப, அன்னிய மண்ணில் சொதப்பி வந்த துவக்க வீரர் ஷிகர் தவான், கடந்த போட்டியில் சதம் அடித்தது இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. கடந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் சோபிக்க தவறிய முரளி விஜய் சுதாரித்து விளையாடினால் ஆறுதல் கிடைக்கும்.

இதேபோல, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, ஏமாற்றத்தை போக்கும் வகையில் செயல்பட வேண்டும். விராத் கோஹ்லி ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளை கவனமாக எதிர் கொண்டால் நல்லது. பின் வரிசையில் ரகானே, கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா கைகொடுக்க வேண்டும்.

ஷமி ஆறுதல்;

வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, அனுபவ ஜாகிர் கான் செயல்பாடு பரவாயில்லை. இஷாந்த் சர்மா மீண்டும் அசத்தலாம். சுழற்பந்து வீச்சுக்கு ரவிந்திர ஜடேஜாவுடன் கடந்த போட்டியில் அஷ்வினை சேர்க்காததன் பலனை இந்திய அணி அனுபவித்தது எனலாம். பேட்டிங்கில் சற்று ரன்கள் சேர்க்கும் இவருக்கு இன்றைய டெஸ்டில் இடம் கொடுத்துப் பார்க்கலாம்.

மெக்கலம் பலம்:

நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்கள் புல்டன், ரூதர்போர்டுக்குப் பின் வரும் வில்லியம்சனை களத்தில் நீண்ட நேரம் நிலைக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அனுபவ வீரர் ராஸ் டெய்லர் இல்லாத நிலையில், கேப்டன் பிரண்டன் மெக்கலம், ‘ஆல் ரவுண்டர்’ கோரி ஆண்டர்சன், வாட்லிங் கைகொடுக்க காத்திருக்கின்றனர். பவுலிங்கில் பவுல்ட், சவுத்தி, வாக்னர் மீண்டும் மிரட்டலாம்.

மழை வருமா

போட்டி நடக்கும் வெலிங்டன் மைதானத்தில் 10 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆடுகளம் எப்படி

வெலிங்டன் மைதானம் வழக்கத்தைவிட அதிகமான புற்களுடன் காணப்படுகிறது. இது வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும். பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகும் என்பதால் இந்திய அணி வீரர்களுக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது.

 

http://sports.dinamalar.com/2014/02/1392309538/dhoniindiacricket.html

  • தொடங்கியவர்

இஷாந்த் அபார பந்துவீச்சு : இந்தியா நிதான ஆட்டம்
பிப்ரவரி 13, 2014.

 

வெலிங்டன்: வெலிங்டனில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் இஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு கைகொடுக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 192 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது’. இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் 0–1 என ஏற்கனவே பின்தங்கியிருந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் இன்று துவங்கியது.

7வது முறை:

நியூசிலாந்து மண்ணில் 7வது முறையாக (5 ஒருநாள்+2 டெஸ்ட்) ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர், சோதி ஆகியோருக்கு பதில் டாம் லதாம், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர்.

சொதப்பல் துவக்கம்:

நியூசிலாந்து அணி துவக்கம் முதல் இஷாந்த் சர்மா வேகத்தை சமாளிக்க முடியாமல் ஆட்டம் கண்டது. இவர் வேகத்தில் முதலில் ரூதர்போர்டு (12) அவுட்டானார். தனது அடுத்த ஓவரில் புல்டனை (13) ‘பெவிலியனுக்கு’ அனுப்பிய இஷாந்த், பின் வந்த அறிமுக வீரர் டாம் லதாமையும் ‘டக்’ அவுட்டாக்கினார்.

இவருடன் கைகோர்த்து அசத்திய முகமது ஷமி, தன்பங்கிற்கு கேப்டன் பிரண்டன் மெக்கலத்தை (8) வெளியேற்ற, உணவு  இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

ஆண்டர்சன் ஏமாற்றம்:

பின் வில்லியம்சனுடன், ஜோடி சேர்ந்த கோரி ஆண்டர்சன், முதலில் முகமது ஷமி, ஜாகிர் வேகத்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து இஷாந்த் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஆண்டர்சன்(24) நீண்ட நேரம் தாக்குபிடிக்க முடியவில்லை. அடுத்து வந்த வாட்லிங் (0) வந்த வேகத்தில் நடையை கட்ட, 86 ரன்களுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்த நியூசிலாந்து அணி தத்தளித்தது.

நீஷம் ஆறுதல்:

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறத்தில் வில்லியம்சன் தொடர்ந்து போராடினார். சீரான இடைவேளையில் பவுண்டரிகள் அடித்த இவர், 47 ரன்கள் எடுத்த போது ஷமி வேகத்தில் வெளியேறினார். பின் வரிசை வீரர்களான நீஷம் (33), சவுத்தி (32) மட்டும் ஓரளவு கைகொடுக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 192 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது’. வாக்னர் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

தவான் அரைசதம்:

இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 6 விக்கெட் சாய்த்தார். முகமது ஷமி 4 விக்கெட் கைப்பற்றினார்.

பின் முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு முரளி விஜய் (2) ஏமாற்றினார். தவானுடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்முனையில் அவ்வப்போது பவுண்டரி அடித்த ஷிகர் தவான் டெஸ்ட் அரங்கில் முதல் அரைசதம் கடந்தார். புஜாரா (19) பவுல்ட் பந்தில் அவுட்டானார். பின் வந்த ‘நைட் வாட்ச்மேன்’ இஷாந்த் சர்மா தாக்குபிடித்து ஆட முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து 92 ரன்கள் பின்தங்கியுள்ளது. தவான் (71), இஷாந்த் (3) அவுட்டாகாமல் இருந்தனர். 

நியூசிலாந்து சார்பில் பவுல்ட், சவுத்தி தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/02/1392309538/dhoniindiacricket.html

––––

  • தொடங்கியவர்

ரகானே முதல் சதம்: இந்திய அணி முன்னிலை
பிப்ரவரி 14, 2014.

 

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரகானே சதம் கடந்து அசத்த, இந்திய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் 0–1 என பின்தங்கியுள்ளது.இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடக்கிறது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. முதல் நாள் ஆட்டமுடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. தவான் (71), இஷாந்த் சர்மா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரகானே அசத்தல்:

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. இஷாந்த் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். சவுத்தி பந்தில் அவுட்டான தவான் (98) சத வாய்ப்பை இழந்தார். ரோகித் டக்–அவுட் ஆனார். கோஹ்லியும் 38 ரன்களில் திரும்பினார். பின் இணைந்த ரகானே, தோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நீஷம் பந்துவீச்சில் ரகானே இரண்டு பவுண்டரி அடித்தார். தோனி அரை சதம் எட்டினார். இவர் 68 ரன்களில் அவுட்டானார். ஜடேஜா (26) நிலைக்கவில்லை. தொடர்ந்து அசத்திய ரகானே டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை பதிவு செய்தார். இவர் 118 ரன்களில் வெளியேறினார். ஜாகிர் (22) நீடிக்கவில்லை.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 246 ரன்கள் முன்னிலை பெற்றது. ஷமி (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு புல்டன் (1) ஏமாற்றினார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி 1 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து, 222 ரன்கள் பின்தங்கி உள்ளது. ரூதர்போர்டு (18), வில்லியம்சன் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/02/1392396923/ishantindia.html

  • தொடங்கியவர்

மெக்கலம் சதம் : நியூசி., போராட்டம்
பிப்ரவரி 15, 2014.
 

 

வெலிங்டன்: வெலிங்டன் டெஸ்டில் கேப்டன் மெக்கலம் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் 0–1 என பின்தங்கியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடக்கிறது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 192 ரன்கள், இந்தியா 438 ரன்கள் எடுத்தன. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து, 222 ரன்கள் பின்தங்கியிருந்தது. ரூதர்போர்டு (18), வில்லியம்சன் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

வில்லியம்சன் ஏமாற்றம்:

மூன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்கு வில்லியம்சன் (7) ஏமாற்றினார். ஓரளவு தாக்குப் பிடித்த ரூதர்போர்டு, 35 ரன்னில் அவுட்டானார். லதாம் (29) நிலைக்கவில்லை. பின் வந்த கோரி ஆண்டர்சன் (2) வந்த வேகத்தில் நடையை கட்ட, உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்து தடுமாறியது.

மெக்கலம் அசத்தல்:

சீரான இடைவேளையில் பவுண்டரி அடித்த கேப்டன் பிரண்டன் மெக்கலம், டெஸ்ட் அரங்கில் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார். இவருக்கு  நல்ல ‘கம்பெனி’ கொடுத்த, வாட்லிங் டெஸ்ட் அரங்கில் 7வது அரைசதம் கடந்தார். பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 158  ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் உள்ளது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து 6 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணிக்கு ஜாகிர் கான் 3 விக்கெட் கைப்பற்றினார். முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/02/1392481848/RahaneWellingtontestSouthAfricaIndia.html

 

––––

  • தொடங்கியவர்

இந்திய வாய்ப்பு அம்போ: மெக்கலம் இரட்டை சதம்
பிப்ரவரி 16, 2014.

 

வெலிங்டன்: வெலிங்டன் டெஸ்டில் கேப்டன் பிரண்டன் மெக்கலம் இரட்டை சதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட், வெலிங்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 192 ரன்கள், இந்தியா 438 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து, 6 ரன்கள் முன்னிலை பெற்றது. மெக்கலம் (114), வாட்லிங் (52) அவுட்டாகாமல் இருந்தனர்.

வாட்லிங் சதம்:

நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த மெக்கலம், வாட்லிங் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜாகிர், இஷாந்த் பந்தில் மெக்கலம் பவுண்டரி அடிக்க, அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். எதிர்முனையில் தன்பங்கிற்கு ஜடேஜா, ஜாகிர் கான் பந்தில் பவுண்டரி அடித்த வாட்லிங், டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்தார்.

புதிய சாதனை:

ஜாகிர் வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்த மெக்கலம், டெஸ்ட் அரங்கில் தனது 3வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அதிக இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் (3 இரட்டைசதம்) முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். தவிர, அடுத்ததடுத்த போட்டிகளில் இரட்டைசதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். சர்வதேச அரங்கில் 6வது வீரர் ஆனார் மெக்கலம்.


ஷமி வேகத்தில் வாட்லிங் (124) ஒருவழியாக அவுட்டானார். ஆறாவது விக்கெட்டுக்கு 352 ரன்கள் சேர்த்தன் மூலம்  மெக்கலம், வாட்லிங் ஜோடி புதிய உலக சாதனை படைத்தது.  இதற்குமுன் இந்தியாவுக்கு எதிராக கடந்த 2009ல் இலங்கையின் மகிளா ஜெயவர்தனா, பிரசன்னா ஜெயவர்தனா ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 351 ரன்கள் சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது. தொடர்ந்து வந்த வேகத்தில் அதிரடியாக ரன்கள் சேர்த்த நீஷம், டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 571 ரன்கள் எடுத்து, 325 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது. மெக்கலம் (281), நீஷம் (67) அவுட்டாகாமல் இருந்தனர்.

நாளை ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு கடின இலக்கு உறுதி. அதனால் இப்போட்டியில் வெற்றி பெறும் இந்திய அணியின் கனவு தகர்ந்தது.  தவிர, தொடரை சமன் செய்ய இருந்த கடைசி வாய்ப்பும் பறிபோனது. அதனால் போட்டி‘டிரா’வில் முடிய அதிக வாய்ப்பு உள்ளது.

 

 

http://sports.dinamalar.com/2014/02/1392569091/BrendonMcCullumcricket.html

  • தொடங்கியவர்

தொடரை இழந்தது இந்தியா: இரண்டாவது டெஸ்ட் டிரா
பிப்ரவரி 17, 2014.
 

 

வெலிங்டன்:  இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதில் நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம் ‘டிரிபிள் செஞ்சுரி’ அடித்து அசத்தினார். இந்தியா சார்பில் விராத் கோஹ்லி சதம் கடந்தார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட், வெலிங்டனில் நடக்கிறது.

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 192 ரன்கள், இந்தியா 438 ரன்கள் எடுத்தன. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 571 ரன்கள் எடுத்து 325 ரன்கள் முன்னிலை பெற்றது. மெக்கலம் (281), நீஷம் (67) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்கு நீஷம் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். ஆனால் எதிர்முனையில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்கலம், ஜாகிர் வேகத்தில் பவுண்டரி அடித்து டெஸ்ட் அரங்கில் தனது முதல் ‘டிரிபிள் செஞ்சுரியை’ பூர்த்தி செய்தார். இதன் மூலம் ‘டிரிபிள் செஞ்சுரி’ அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.

* முன்னதாக கடந்த 1991ல் முன்னாள் வீரர் மார்டின் குரோ, இதே மைதானத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 299 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அடுத்த இரண்டு பந்தில் மெக்கலம் 302 ரன்கள் எடுத்தபோது, ஜாகிர் வேகத்தில் அவுட்டானார். தொடர்ந்து வந்த சவுத்தி (11) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.

 

நீஷம் அபாரம்:

பின் வந்த வாக்னர் துணையுடன் தொடர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்த நீஷம், தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 680 ரன்கள் எடுத்த போது ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து புதிய சாதனை படைத்தது.

* இதற்கு முன் கடந்த 1991ல், இதே மைதானத்தில் நடந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 671 ரன்கள் எடுத்தே சாதனையாக இருந்தது. இதையடுத்து இந்திய அணிக்கு 435 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

அம்பயர் தவறு:

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (2) அம்பயரின் தவறான தீர்ப்பால் பரிதாபமாக வெளியேறினார். வழக்கம்போல் சொதப்பிய முரளி விஜய் 7 ரன்னில் அவுட்டானார். புஜாரா (17) தாக்குபிடிக்கவில்லை.

பின் வந்த ரோகித் சர்மா கைகொடுக்க, அவ்வப்போது பவுண்டரி அடித்த விராத் கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் தனது ஆறாவது சதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்த போது, இரு அணி கேப்டன்களும் போட்டியை முன்னதாக முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போட்டி ‘டிரா’ ஆனது.  கோஹ்லி (105), ரோகித் சர்மா (31) அவுட்டாகாமல் இருந்தனர்.

நியூசிலாந்து அணிக்கு சவுத்தி 2 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–0 என கைப்பற்றியது. தவிர, கடந்த 2002க்கு பி்ன் முதல் முறையாக இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி வென்றது.

 

http://sports.dinamalar.com/2014/02/1392654551/McCullumdoubletonIndianewzealandtest.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.