Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செஞ்சோலை ஆண்கள் சிறுவர் இல்லம் திறப்பு! இயக்குணர் குமரன் பத்மநாதன் தலைமை வகித்தார்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
செஞ்சோலை ஆண்கள் சிறுவர் இல்லம் திறப்பு! இயக்குணர் குமரன் பத்மநாதன் தலைமை வகித்தார்:-
16 ஏப்ரல் 2014
KP_CI.jpg
 
செஞ்சோலை ஆண்கள் சிறுவர் இல்லம் திறப்பு! இயக்குணர் குமரன் பத்மநாதன் தலைமை வகித்தார்:-
 
கிளிநொச்சி திருவையாறு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட செஞ்சோலை ஆண்கள் சிறுவர் இல்லம் இன்று புதன்கிழமை (16.04.2014) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
இல்ல கட்டடத்தினை கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜென்ரல் சுதந்த ரணசிங்க, யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் உதய பெரேரா மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக பீட பீடாதிபதி கலாநிதி கே.தேவராஜ் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.
 
இந்த இல்லத்தில் உணவு விடுதி, தங்குமிட விடுதி, பொழுதுபோக்கு விடுதி மற்றும் அலுவலகம் என நான்கு பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் இயக்குநர் குமரன் பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக பீட பீடாதிபதி கலாநிதி கே.தேவராஜ், சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜென்ரல் சுதந்த ரணசிங்க, யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் விஸ்வரூபன், கிளிநொச்சி மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் கே.முருகவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.  
 
நிகழ்வின் இறுதியில் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
 
இதேவேளை, புதிதாக புனர்நிர்மானம் செய்யப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லம் கடந்த வருடம் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.