Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கு விமான நிலையம் துறைமுகம் பார்க்கச் சென்ற ஐதேகவினர்மீது காவற்துறையினர் பார்த்திருக்க தாக்குதல்

Featured Replies

SLFP%20with%20pistol1_CI.jpg

 

கையில் துப்பாக்கி கற்களுடன் ஆளும் தரப்பு குண்டர்கள் - 2ஆம் இணைப்பு:-

 

2ஆம் இணைப்பு:- கையில் துப்பாக்கி கற்களுடன் ஆளம் தரப்பு குண்டர்கள் -

ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. 

தாக்குதல் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். 

ஹம்பாந்தோட்ட துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை பார்வையிடச் சென்ற ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மீது நேற்று (17) தாக்குதல் நடத்தப்பட்டது. 

 

தெற்கு விமான நிலையம் துறைமுகம் பார்க்கச் சென்ற ஐதேகவினர்மீது காவற்துறையினர் பார்த்திருக்க  தாக்குதல்

17-04-2014 - 11:02am

மத்தல விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகத்தை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா, எரான் விக்ரமரட்ன மற்றும் ஆர். யோகராஜன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று மத்தல விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகத்தை பார்வையிடச் சென்றனர்.

அதன்போது தமது வாகனங்களை நோக்கி கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் பிரதேச அரசியல்வாதி ஒருவர் துப்பாக்கியுடன் வந்து அச்சுறுத்தியதாகவும் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

'மத்தல விமான நிலையத்திற்கு சென்று வெளியில் வந்தபோது அங்கு கூடியிருந்த 150 பேர்வரை எங்களை அச்சுறுத்தினர். ´எங்கள் பிரதேச அபிவிருத்தியை தடுக்க நீங்கள் முயற்சிக்க வேண்டாம். இதற்கு எதிராக கருத்து வெளியிட வேண்டாம்´ என கூறினர். நாம் நிலைமையை பார்வையிடவே வந்தோம் என கூறியபோது அவர்கள் ஊ சத்தமிட்டு எங்களை திட்டினர். நாங்கள் சென்ற பஸ்ஸை நோக்கி கல் வீசினர்.

இதனையடுத்து ஹம்பாந்தோட்டை டிஐஜியை (பிரதி பொலிஸ் மா அதிபர்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் குறித்து தெரிவித்தோம். துறைமுகத்திற்கு செல்லவுள்ளோம். அங்கும் என்ன நடக்கும் என்று தெரியவில்லை என அவரிடம் தெரிவித்தோம்.

பின் துறைமுகத்திற்குச் சென்றபோது அங்கு கூடியிருந்த 50 பேர் வரை எமக்கு அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடத்த வந்தனர். இந்த குழுவிற்கு ஹம்பாந்தோட்டை நகர சபைத் தலைவர் எராஜ் காவிந்த பெனாண்டோ த

லைமை வகித்தார். அவரின் கையில் துப்பாக்கி இருந்தது. 

இவர்கள் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டனர். ஹம்பாந்தோட்டை ஏ.எஸ்.பி மற்றும் எச்யுஐ (பொலிஸ் அதிகாரிகள்) ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கையில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தனர். தாக்குதலில் எம்மோடு வந்திருந்த ஊடகவியலாளர்களின் கமராக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது' என பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105741/language/ta-IN/article.aspx

DSC_0155%25282%2529qq.jpg

 

22%28214%29.jpg

 

27%28165%29.jpg

 

Hambanthota-1.jpg

 

http://oneislandtwonationsblogspotcom.typepad.com/blog/2014/04/opposition-mps-attacked-in-hambabtota-ruling-party-politician-brandishing-his-pistol-chased-mps.html

 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

ஐ.தே.க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு செல்லுமாறு உத்தரவிடவில்லை – நாமல்

ஐக்கிய தேசியக் கட்சயிpன் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு செல்லுமான தாம் ஹம்பாந்தோட்டை மேயர் இராஜ் பெர்னாண்டோவிற்கு உத்தரவிடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்தளை விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றினை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற இடத்திற்கு செல்லுமாறு தாம் பணிக்கவில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலையில் நடைபெற்ற ரகர் பயிற்சிகளில் தாம் பங்கேற்றிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, துறைமுகத்தில் பதற்ற நிலைமை ஏற்படுவதனை தடுக்குமாறு தம்மை நாமல் ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதாக, ஹம்பாந்தோட்டை நகர மேயர் இராஜ் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

துப்பாக்கி ஒன்றை எடுத்துச் சென்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, தாம் எடுத்துச் சென்றது ஓர் விளையாட்டுத் துப்பாக்கி என இராஜ் தெரிவித்துள்ளார்.

இராஜ் துப்பாக்கியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை துரத்திச் செல்லும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலீன் ஜயமாஹா தொலைபேசி மூலம் விடுத்த அழைப்பினைத் தொடர்ந்து தாம் அந்த இடத்திற்குச் சென்றதாக இராஜ் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105787/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.