Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் கூராய் கிராம மக்களின் அவலமும் சிங்களவரின் அத்துமீறலும்

Featured Replies

mannar-kuray.jpg

 

மன்னார் கூராய்கிராமத்தில் தென்பகுதியை சேர்ந்த சிங்களவர் ஒருவர் அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்தி போலி அனுமதிப்பத்திரத்தை தயார் செய்து மண் அகழ்வில் ஈடுபட்டு வருகிறார் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

குருணாகலை சேர்ந்த யூட் மாக்கஸ் பேனாண்டே என்ற சிங்களவரே என்பவரே சட்டவிரோதமாகவும் பலவந்தமாகவும் மண்அகழ்வில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. கூராய் கிராமத்தில் ம.சண்முகராசா, சி.புவனேஸ்வரன் ஆகியோருக்கு வயல் காணிகள் முறையே எல்.டி.ஓ 60, எல்.டி.ஓ 56 இலக்க வயல்காளுக்கான அனுமதிபத்தரம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தென்பகுதியை சேர்ந்த இந்த சிங்கள நபர் தன்னிச்சையாக அரசியல்வாதிகளின் செல்வாக்கினை பயன்படுத்தி கூராய் மக்களுக்கு சொந்தமான காணியில் வேறுஇடங்களில் அகழ்வு செய்யப்படும் மண்களை கொண்டு வந்து நிரப்பி வைத்து தென்னிலங்கைக்கு எடுத்து செல்கிறார்.

இது தொடர்பாக கடந்த 09.10.2013ம் ஆண்டு பாதிக்கப்பட்ட நபர்களினால் வழங்கப்பட்ட கடிதத்தினை அப்போதைய கிராம சேவகர் உறுதிபடுத்தி இக் கிராமத்தை சேர்ந்த இருவருக்கு வயல் காணிக்கான அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுள்ளது என உறுதிபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் மன்னார் பிரஜைகள் குழு அம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய அக் கிராமத்திற்கு கடந்த புதன்கிழமை 16.04.2014 சென்றிருந்தது. இதனை அடுத்து அக்கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் மாவவட்ட செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைப்பதற்கு அக் கிராம மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகள் பின்வரமாறு.

1 கோடைற் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் முற்று பெறாமை

2 கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு மண் அகழ்விற்கான அனுமதிபத்திரம் உள்ள போதும் அதனை பயன்படுத்தமுடியாமை

3 அரசியல் செல்வாக்கை பயன்னடுத்தி குருநாகலில்லிருந்து இங்குவந்தள்ள சிங்களவர் ஒருவர் கிராமத்திற்குட்பட்ட ஆற்றுப்பகுதியில் இக் கிராம மக்களை அண் அகழவிடாமல் தான் அவற்றினை அகழ்ந்து லாபம் அடைதல்

4 இவ் மண் அகழ்வினால் இக் கிராமத்தின் பாரம்பரிய தொழிலாகிய மேட்டுநில பயிர்செய்கை நிலம் உவர் நீராக மாறிவருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமைநிலைக்கு தள்ளப்பட்டு வருகிறமை

5 தென்பகுதியை சேர்ந்த சிங்கள நபர் இக் கிராமத்தில் வசிக்கும் நபருடைய சொந்தகாணியில் மண்களை பலவந்தமாக சேகரித்து வைப்பதினால் சொந்த காணிகாரர் அவரது காணியினை பாவிக்கமுடியாமலுள்ளமை. அது தொடர்பாக கடந்த இரண்டு வருடங்களாக கவல்துறையினரின் கவனத்திற்கு இதை கொண்டுவந்த போதிலும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படாமை.

6 30 குடும்பங்களை கொண்ட கிராமத்தில் 11 குடும்பங்களுக்கே சமூர்த்தி நிவாரணம் கிடைக்கின்றமை எனினும் எனைய குடும்பங்ளுக்கும் சமூர்த்தி நிவரணத்தினை பெற்றுத்தர வழியமைத்து கொடுக்க வேண்டும் என குறித்த 6 கோரிக்கைகளை முன்வைத்தள்ளனர்.

இதேவேளை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூராய் கிராமத்தில் மீள்குடியோற்றப்பட்டுள்ள மக்கள் பல்வேறு நடமுறை சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். யுத்த நிறைவின் பின் 2010ம் ஆண்டு பின்னரான காலப்பகுதியில் 30 குடும்பங்களை கொண்ட 115 நபர்கள் மீள்குடியோற்றப்பட்டு பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இது வரையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாரத்தினை உயர்த்துவதற்கோ அல்லது அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இம் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி, பாதைகள், போக்குவரத்து, சுகாதாரம், வீட்டத்திட்டங்கள் என்பன கோள்விகுறியாகவே அமைந்தள்ளது

குறிப்பாக வீட்டத்திட்டத்தை எடுத்துக்கொண்டால் 26 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் கடந்த 2011ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இவ் வீட்டுத்திட்டத்தினை கோடைற் நிறுவனம் வழங்கியுள்ளப்போதிலும் வீடுகள் சரியான முறையில் நிர்மாணித்து கொடுக்கவில்லை. வீடுகள் அரைகுறையாக காணப்படுகிறது.  இம் 30 குடும்பங்களில் சுமார் 11 குடும்;பங்களோ சமூர்த்தி திட்டத்தின் கீழ் உதவி பெறுகின்றனர்.

குறித்த கிராமத்தில் 26 மாணவர்கள் உள்ளனர் இவர்களில் 7 மாணவர்கள் பல மைல்கள் தூரம் சுவிச்சக்கரவண்டியில் தமது கல்வியினை தொடர்ந்து வருகின்றனர். இம் மாணவர்களில் பலர் இக் கிராமத்திலிருந்து பலமைல்கள் சென்று கல்வி பயில்வதில் உள்ள பிரச்சினையினை அடுத்து வெளியிடங்களுக்கு இடம் பெயர்ந்து கல்வியினை பல அசவுகரியங்களுக்க மத்தியில் கற்றுவருகின்றனர்.

இவ்வாறாக பல சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் வாழ்ந்துவந்தாலும் இவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகள் தொடர்பில் போராடக்கூடிய அற்றல்கள் இல்லாதவர்களாக காணப்படுகிறது   இம்மக்கள் குறிப்பாக தமது உரிமைகள் தொடர்பாக வெளிப்படத்துவதற்கு முடியாதவர்களாக பயஉணர்வுடன் காணப்படுகின்றனர்.

இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக வெளியில் தெரிவித்தால் கிடைக்கும் உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற பய உணர்வில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  குறிப்பாக கடந்த வடமாகாண தேர்தலின் போது இக் கிராமத்திற்கு சென்ற பல கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை இவர்களுக்கு கொடுத்திருந்தாலும் தேர்தலுக்கு பின் அப்பகுதிக்கு இன்றுவரை சென்று பார்க்கவில்லை என இம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

http://www.thinakkathir.com/?p=57912

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.