Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமன்னார் வைத்தியசாலையின் புதிய மகப்பேற்று விடுதியை வசிப்பிடமாக பயன்படுத்தி வரும் வைத்திய அதிகாரி:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தலைமன்னார் வைத்தியசாலையின் புதிய மகப்பேற்று விடுதியை வசிப்பிடமாக பயன்படுத்தி வரும் வைத்திய அதிகாரி:
19 ஏப்ரல் 2014
 
mannar%20hos_CI.jpg
தலைமன்னார் வைத்தியசாலையின் புதிய மகப்பேற்று விடுதியை, அதன் தலைமன்னார் வைத்திய அதிகாரி தனது வசிப்பிடமாக 2009ம் ஆண்டு முதல் பாவித்து வருகின்றதாக தலைமன்னார் பியர் ஸ்ரேசன், கிராமம் ஆகிய கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பாக அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,,
 
தலைமன்னார் வைத்தியசாலையில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வைத்திய அதிகாரி கடமையாற்றி வருகின்றார். இவருடைய அட்டசாகசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
 
தலைமன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதி உடைந்து விழுந்து கொண்டிருக்கும் நிலையிலும், மழைக்கு ஒழுகிக்கொண்டிருக்கும் பழைய கட்டத்தில்தான் 2009ம் ஆண்டு முதல் கர்ப்பிணிப்பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர். குழந்தைகளும் அங்கேயே பிறக்கின்றன.
 
வடக்கு கிழக்கை தவிர்த்து இலங்கையின் எந்த ஒரு மாவட்டத்திலாவது ஒரு சம்பவம் இப்படி நடந்தால் மேலதிகாரிகள், அரசியல்வாதிகள் இப்படித்தான் மௌனம் காத்து, இவ்வாறான செயற்பாட்டினை அனுமதிப்பார்களா? என அந்த மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 
உடனடியாக உரிய அதிகாரிகள், அரசியல்வாதிகள், செயற்பட்டு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும், அதன் தாயையும், அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களையும் சுகாதாரமான, பாதுகாப்பான, தரமான அதற்குரிய விடுதியில் சிகிச்சைகளைப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும்,
 
முடியாத பட்சத்தில் அவர்கள் தங்களது அல்லது தங்களது பிள்ளைகள், உறவினர்களின் பிரவசத்தை, சிகிச்சைகளை அந்த பழைய கட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
 
உயர் அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை, சாதாரண எங்களைப்போன்ற மக்களுக்கு அடிப்படை வசதிகளற்ற பாதுகாப்பற்ற துர்நாற்றம் வீசும், கூரைகள் உடைந்து தொங்கிக் கொண்டிருக்கும், மழைக்கு ஒழுகிக்கொண்ருக்கும் பழைய கட்டடமா?
 
பளிங்கு கற்களால் ஆன கல்லறை போன்று வெளியே பிரகாசமாகவும், உள்ளே அருவருக்கத்தக்க நிலை காணப்படும் தலைமன்னார் வைத்தியசாலையில், நோயாளிகள் செருப்பு அணித்து உள்ளே போகக் கூடாது, ஒருவர் ஒருவருடன் கதைக்க கூடாது, தும்மல், இருமல் வந்தால் உடனடியாக வெளியேறிவிடவேணடும், பிள்ளைகள் அழுதால் உடனடியாக வெளியே கொண்டு சென்றுவிட வேண்டும், சிறு பிள்ளைகள், குழந்தைகள் சிறு நீர், மலம் கழித்தால் கடுமையான பேச்சுக்கள் விழும், ஜன்னல்களை திறக்க மாட்டார்கள், மலசல கூடம் இல்லை. கதவில் கைவைக்ககூடாது,  பகல் 12.00 மணியின் பின்னர் நோயாளர்களை வாகனங்களில் உள்ளே கொண்டு செல்வதற்கு காவலாளியிடம் நோயை கூறவேண்டும் அவர் ஊழியரிடம் கூறி, ஊழியர் வைத்தியரிம் கூறி அனுமதி பெறவேண்டும்.
 
முன்னர் பல தடவை இவை தொடர்பாக நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் உயர் அதிகாரிகளுக்கும், மாகாண மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  தெரிவித்தும் எந்தப்பயனும் ஏற்படவில்லை.
 
இவர்கள் உண்மைத் தன்மையினை அறிந்தும் மௌனமாக உள்ளார்கள்.
 
எமது பகுதியில் வசிக்கும் ஒரு சில பொது மக்களையும், ஊழியர்களையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனக்கு சார்பாக கடிதங்களை எழுதி வருகின்றார் இந்த வைத்திய அதிகாரி.
 
அத்துடன் ஒரு பெண் ஊழியரின் உதவியுடன் பொது மக்களுடனும், ஊழியர்களுடனும் நயவஞ்சமாகப் பேசியும், மிரட்டியும் வெற்றுக் காகதிதங்களில் கையெழுத்தும், கடிதங்களில் கையெழுத்தும் பெற்று வருகின்றார்.
 
அங்கு செல்லும் உயர் அதிகாரிகளை, வைத்தியசாலையினை சுற்றி சுற்றிக் காட்டியும், இனிக்க இனிக்க பேசியும் அனுப்பி விடுவார். வைத்தியசாலையில் வைத்தியம் ஒழுங்காக நடை பெறுகிறதா என எவரும் பார்பதில்லை.
 
வைத்திய சலையில் மாங்காய் விற்பனை, பனம் கொட்டை விற்பனை, பனங்கிழங்கு விற்பனை, பனம் மட்டை விற்பனை, பழைய இரும்பு விற்பனை, வல்லாரைக் கீரை விற்பனை, கத்தரிக்காய் விற்பனை என்பன பருவகாலத்திற்கு ஏற்ப வெளிநோயாளர் பிரிவிலும், வைத்தியசாலை வளவிலும் விற்பனைகள் இடம் பெற்று வருகின்றது.
 
அம்புலன்ஸ் வண்டியை தனது சொந்த தேவைகளுக்கு இரவு பகல் என்று பாராது பயன்படுத்திவருகின்றார். தனது உறவினர்களை அழைத்துச்சென்று ஊர் சுற்றி காண்பிக்கின்றார், கடற்கரைக்கு அழைத்துச் செல்லுகின்றார். கொண்டாட்டங்கள், களியாட்டங்களுக்கு அம்புலான்ஸ் வண்டியில் ஏற்றிச் செல்லுகின்றார்.
 
இத் தருணங்களில் அம்புலன்ஸ் வண்டி தலைமன்னார் வைத்தியசாலையில் இல்லாத நிலையில் அங்கு அழைத்து வரப்படும் அவசர நோயாளிகளை ஆட்டோக்களில் அல்லது  மீன் வண்டிகளில் சிகிச்சைக்காக மன்னார், பேசாலை போன்ற வைத்தியசாலைக்கு அழைத்துச்  செல்லுமாறு அங்குள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
 
எமது ஊரில் அமைக்கப்பட்டிருப்பது வைத்தியசாலையா அல்லது விவசாய நிலையமா அல்லது திறந்த வெளி கடூழிய வதை முகாமா?என அந்த மக்கள் கேல்வி எழுப்பியுள்ளனர்.
 
 
குறித்த வைத்திய அதிகாரி   மிகவும் தந்திரகுணமுள்ள, அரசியல், இராணுவ, கடற்படை, புலனாய்வு பிரிவினருடன் நெருங்கிய தொடர்பை உடையவர்.இவர்களை வைத்து நீதி கோரும் மக்களை அச்சுறுத்தி வருகின்றார்.
 
 
எனவே உயரதிகாரிகள், அரசியல் வாதிகள் வடக்கு மாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.