Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா – சிறிலங்கா : இராணுவ ஒத்துழைப்பை மீளக்கட்டியெழுப்ப முயற்சிக்கப்படுகின்றதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

USA-S.L.jpg

சிறிலங்கா மீது அமெரிக்கா மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததன் பின்னர், தற்போது சிறிலங்காவில் மீளிணக்கப்பாடு சவால்மிக்கது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளமை சிந்திக்க வேண்டிய விடயமாகும். 

இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் N Sathiya Moorthy* எழுதியுள்ள ஆரசியல் ஆய்வில் தெரிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மொழியாக்கத்தின் முதல்பகுதி இது. 

"சிறிலங்காவின் மீளிணக்கப்பாடு என்பது சவால் மிக்கதாக உள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ள போதும், இது தனது உள்நாட்டுப் போரை நிறைவுக்குக் கொண்டுவந்தமை அதன் நல்வாய்ப்பாகும். இவ்வாண்டு மார்ச் மாதத்தில் சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் பொறுப்பளித்தல் மற்றும் நீத எட்டப்படுதலை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நம்பகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகிறோம்" என பொஸ்ரனிலுள்ள ஹவார்ட் பல்கலைக்கழத்தில் உரையாற்றும் போது அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

'அமெரிக்காவுடனான சிறிலங்காவின் உறவுநிலை மற்றும் பொறுப்பளித்தல், இனமீளிணக்கப்பாடு' போன்றன தொடர்பாக உரையாற்றும் போதே நிஷா பிஸ்வால் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். 

« சிறிலங்காவில் மீளிணக்கப்பாடு சவால்களைச் சந்தித்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது » என்கின்ற அமெரிக்காவின் அறிவிப்பானது புதிய விடயமாகக் காணப்படுகிறது. 'சவால்மிக்கது' என்கின்ற பதத்தை அமெரிக்காவின் கடந்த கால அனுபவங்களையும் கண்ணோட்டத்தையும் கொண்டு பிஸ்வால் பயன்படுத்தியுள்ளார். அதாவது ஏனைய மேற்குலக நாடுகளைப் போன்று அமெரிக்காவும் சிறிலங்கா அரசாங்கம் மீது அனுதாபத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இவ்வாறான ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்கலாம். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தனது தலைமையில் சிறிலங்கா மீது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஒரு மாதத்தின் பின்னர் இவ்வாறான சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளமையானது இது சிறிலங்கா மீது தனது அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிப்பது தெளிவாகிறது. 

மீளிணக்கப்பாடு 'சவால்மிக்கது' என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தென்னாசியப் பின்னணியைக் கொண்ட அமெரிக்க உயர் மட்டப் பிரதிநிதி தெரிவித்துள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கமா அல்லது போரால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகமா அல்லது அனைத்துலக சமூகமா 'சவால்களைச்' சந்தித்துள்ளனர் என்பதை இவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை. 

சிறிலங்கா மீது அமெரிக்கா மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததன் பின்னர், தற்போது சிறிலங்காவில் மீளிணக்கப்பாடு சவால்மிக்கது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளமை சிந்திக்க வேண்டிய விடயமாகும். 

எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவுடன் இராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக நிஷா பிஸ்வாலின் அறிவிப்பானது புதிய விடயமாக உள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மீளிணக்கப்பாடு மற்றும் பொறுப்பளித்தலை முற்றாக மேற்கொள்ளும் போது அமெரிக்காவானது இதனுடன் இராணுவ உறவுகளை மீளவும் ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக நிஷா பிஸ்வால் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சிறிலங்காவில் பொறுப்பளித்தல் மற்றும் நீதி எட்டப்படுதலை உறுதிப்படுத்துவதற்கான நம்பகமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாக 'தென்னாசியா மீதான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை: செழுமை மற்றும் பாதுகாப்புத் தொடர்பான ஒரு நோக்கு' என்கின்ற தலைப்பில் உரையாற்றும் போது பிஸ்வால் தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மனித உரிமைகள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை போன்றன தொடர்பாக கொள்கைகளை வகுக்கும் சிறிலங்காவின் கொள்கை வகுப்பாளர்களும் நாட்டின் அரசியற் தலைமையும் பிஸ்வாலின் உரையின் மூலம் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளமுடியும். 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவால் சிறிலங்காவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 'பொறுப்புக்கூறல் விவகாரம்' தொடர்பில் சிறிலங்காத் தலைமையும் சிறிலங்காவின் கொள்கை வகுப்பாளர்களும் பல்வேறு ஆபத்துக்களைச் சந்தித்துள்ளனர். இந்நிலையில் பிஸ்வாலின் உரை சிறிலங்காவுக்கு ஆறுதலாக இருக்கும். 

யப்பானின் ஹிரோசிமா மற்றும் நாகசாக்கி தொடக்கம் தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் வரை பல்வேறு மனித உரிமை மீறல்களைப் புரிந்த போதிலும் அவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்ட ஒரேயொரு நாடான அமெரிக்காவானது தன்னுடைய சொந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் தீர்மானங்களை முன்வைத்திருந்தது. 

'பொறுப்பளித்தல் விவகாரம்' தொடர்பான சிறிலங்கா விடயத்திலோ அல்லது வேறெந்த நாடுகள் மீதான அமெரிக்காவின் நலன் தன்னலமற்றது என்பதை அமெரிக்கர்கள் நிரூபிக்கவேண்டிய நிலை காணப்படுகிறது. 

புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் தொடர்புபட்ட தேர்தல்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் போன்றன மேற்குலக ஐரோப்பாவிலும், கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் நிறுத்தப்பட்டாலும் கூட நிச்சயமாக அமெரிக்காவில் நிறுத்தப்பட மாட்டாது. ஏனெனில் புலம்பெயர் சமூகத்திற்கு அமெரிக்காவின் சுயநல அரசியல் தொடர்பாகத் தெளிவாகத் தெரியும். 

தமிழ் மக்களின் அரசியல் அவாக்கள் தொடர்பான மனித உரிமை விவகாரம் மீதான அமெரிக்காவின் 'தன்னலமற்ற' நிலை என்பது ஒரு பேரம் பேசல் என்பதும் தனிப்பட்ட நலன் சார்ந்ததும் என்பதும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு நன்கு தெரியும். 

தம்மீதான மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான 'பொறுப்பளித்தல்' தொடர்பான அமெரிக்காவின் அழுத்தத்தை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என ஒருபுறமும், மறுபுறத்தே அமெரிக்காவுடன் மீண்டும் எவ்வாறு ஒரு முழுமையான இராணுவ உறவுகளைக் கட்டியெழுப்புவது என்பது தொடர்பாகவும் தற்போது சிறிலங்காவின் கொள்கை வகுப்பாளர்களும் அரசியற் தலைமையும் ஆராயத் தொடங்கியிருக்கலாம். இது பரஸ்பரம் இரண்டு தரப்பினருக்கும் நலன் பயப்பதாகவே காணப்படுகிறது. 

அமெரிக்காவுடனான இராணுவ உறவை மீளப் புதுப்பித்துக் கொள்வதற்கான தேவைகள் மற்றும் வழிகள் தொடர்பாக சிறிலங்கா கவனம்செலுத்த விரும்பலாம். இதற்குமுன்னர், இவ்வாறான ஒரு நிகழ்ச்சித் திட்டமானது தனது நாட்டுக்கு 'தேறிய இலாபத்தை' வழங்குமா அல்லது ஏனைய நட்பு நாடுகளுடன் அதாவது அயல்நாடான இந்தியா மற்றும் பொருளாதார நலன் பயக்கும் சீனா போன்ற நாடுகளுடன் தொடர்பைப் பேணுவது நல்லதா என்பது தொடர்பாக சிறிலங்கா ஆராய முனையும். 

இவற்றை ஆராய்ந்த பின்னர், சிறிலங்கா அரசாங்கமும் அதிபர் மகிந்த ராஜபக்சவும் இன்னுமொரு முக்கிய விடயத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது அமெரிக்காவுடன் இராணுவ உறவைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களால் சிறிலங்காவுக்கு எவ்விதத்திலும் கெடுதல்கள் ஏற்படக்கூடாது என்பதை சிறிலங்காவின் தலைமை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும். 

சிறிலங்கா இந்த விடயத்தில் தனது அயல்நாடுகளான தனக்கு ஆதரவாக உள்ள நாடுகளையும் நம்பவைக்க வேண்டியேற்படும். இதேபோன்று ஜெனீவாவில் சிறிலங்காவுக்கு ஆதரவாக உள்ள நாடுகள் குறிப்பாக அமெரிக்காவை எதிர்க்கின்ற, மேற்குலகை எதிர்க்கின்ற நாடுகளையும் நம்பவைக்க வேண்டியேற்படும். அதாவது அமெரிக்காவுடன் மீண்டும் இராணுவ ரீதியான உறவைக் கட்டியெழுப்புவதன் மூலம் இந்த நாடுகளால் எதிர்க்கப்பட்ட அமெரிக்கத் தீர்மானங்களால் சிறிலங்காவுக்கு எவ்வித பாதகமும் ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கும். 

இவற்றுக்கப்பால் சிறிலங்காவானது, ஜெனீவாவில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது. எந்தவொரு கேள்வியும் கேட்காது தன்னை ஆதரித்த நட்பு நாடுகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சீனா மற்றும் ரஸ்யா போன்றன சிறிலங்காவுக்கு தமது பலமான ஆதரவுகளை வழங்கியிருந்தன. இவற்றுள் ரஸ்யா தற்போது அமெரிக்காவின் தலைமையிலான உக்ரேன்-கிறிமியா மீதான மேற்குலகின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்காது தனது எதிர்ப்பைப் பலப்படுத்தியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா மீளவும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய கடந்த கால வரலாறு ஒன்று உள்ளது. 

1980களில் இந்திய மாக்கடலை 'அமைதி வலயமாக' அங்கீகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் இந்திய மாக்கடலில் செல்வாக்குச் செலுத்திய சோவியத் யூனியன் இதற்கு தனது எதிர்ப்பைக் காண்பித்தது. பின்னர் இது எதிர்ப்பை விட்டுக் கொடுத்து இந்திய மாக்கடலை அமைதி வலயமாகப் பிரகடனத்துவதற்கான ஆதரவை வழங்கியது. 

இதேபோன்று சிறிலங்கா தனது கடந்த காலங்களை நினைவிற் கொண்டு செயற்பட வேண்டிய காலம் இதுவாகும். சிறிலங்கா அளவில் சிறியதாக இருந்தாலும் தனது நாட்டின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக புதிய அரசியல் நட்பு நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

பனிப்போருக்குப் பின்னரான காலப்பகுதில், பூகோள நலன்களைக் கருத்திற் கொண்டு, சோவியத் யூனியன் இந்திய மாக்கடலில் கொண்டிருந்த செல்வாக்கை சீனா கைப்பற்றிக் கொண்டது. சீனா இந்திய மாக்கடலின் பொருளாதார இராஜதந்திரம் மற்றும் கடற்படைப் பலத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தியது. 

அண்மைய வாரங்களில், மாதங்களில் துறைமுகங்களுடன் தொடர்புபட்ட பொருளாதார இராஜதந்திரம் தொடர்பாகவும் இந்திய மாக்கடலில் சாத்தியமான அரசியல் தொடர்பைப் பேணுவது தொடர்பாகவும் சீனா வெளிப்படையாகப் பேசுகிறது. 

சீனா தனது 'Blue Water' கடற்படை வலுவை இந்திய மாக்கடலில் பலப்படுத்தி வருகிறது. இந்தவகையில், சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்தியில் சீனா தனது முதலீட்டை மேற்கொண்டுள்ளது. அதாவது சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுகங்களின் அபிவிருத்திக்கு சீனா முதலீடு செய்துள்ளது. இதேபோன்று சிறிலங்காவின் போக்குவரத்து, புதிய நெடுஞ்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுமாணங்களுக்கும், மாத்தள அனைத்துலக விமான நிலையத்தை அமைப்பதற்கும் சீனா தனது முதலீட்டை வழங்கியுள்ளது. 

தொடரும்.. 

*The writer is Director, Chennai Chapter of the Observer Research Foundation, the multi-disciplinary Indian public-policy think-tank, headquartered in New Delhi.

 

http://www.puthinappalakai.com/view.php?20140429110421

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.