Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை போர்க்குற்றங்களுடன் தொடர்புபடாது; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

கூட்டாக ஒரு இனம் அழிக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் வரையான மக்கள் வன்னியில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இதனை தனிநபர் குற்றமாக எடுக்க முடியாது. மனித உரிமை மீறல் என்பதே தனி நபர் பிரச்சினை இங்கு போர் குற்றம், மனிதகுலத்தின்  குற்றம், தமிழினப் படுகொலை ஆகிய மூன்றினையும் விசாரணை செய்ய வேண்டும் இதுவே எமது கோரிக்கையாகுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

 

நேற்று முன்தினம் வியாழக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசும் இணைந்து நடாத்திய மேதினக்கூட்டம் கரவெட்டி சாமியன் அரசடியில் உள்ள ஞானவைரவர் கோவிலுக்கு முன்பாக இடம்பெற்றது.  இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறுகையில்; ஜ.நா. தீர்மானத்திலே பொறுப்புக் கூறல் இருதரப்பிற்கும் வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு  ஒரு வருடகாலத்தில் மனித உரிமை மீறல்கள் , அது தொடர்பான குற்றங்களையும் விசாரிப்பதேயாகும்.  ஆனால் கூட்டமைப்போ போர்க்குற்றங்களை விசாரிப்பதாக மக்களிற்கு  பொய் கூறி     வருகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவர் அப்பட்டமான பொய்களை கூறி வருகிறார். மனித உரிமையினை விசாரிப்பது போர் சம்பந்தப்படாத விடயம்.  இதன் காரணமாகவே நானும் , மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பும் தொடர்ச்சியான எமது பக்க கருத்துக்களை முன் வைத்தோம். மன்னார் ஆயரின் கருத்தினை  தமிழ் தேசிய க் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவர் நிராகரித்துவருகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த அனந்தி சசிதரன், மற்றும் சஜீவன் ஆகியோரும் தமது கருத்துக்களை ஐ.நாவில் பதிவு செய்தனர். உயர்மட்ட தலைவர்கள் அங்கு கூடியிருந்தும் அவர்களால் பேசமுடியவில்லை. அவர்கள் மக்களிடம் பேசும் கருத்து வேறு அங்கு பேசும் கருத்து வேறு, அவ்வாறு கூறாவிடின் அவர்கள் ஊர்திரும்பி வரமுடியாது. ஜெனிவாவில் அவர்கள் பதிவு செய்த கருத்திற்கும் எமது கருத்திற்கும் வித்தியாசம் இல்லை. தேசியத்தை பற்றியும், இனப்படு கொலை பற்றியதுமான பேச்சாகவே இருந்தது. ஐ.நாவில் பேசிய ஒரு காரணத்திற்காக அனந்தி சசிதரனை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமர்ச்சித்துள்ளார். அவர் பேச வாய்ப்பில்லாத போதும் பேசுவதற்கு ஓர் வாய்ப்புக் கொடுத்து விட்டு அவரை கேவலமாக பேசி அங்கிருந்து வெளியேற்றிவிட்டார். கஜேந்திர குமாரின் பேச்சை வாசித்தார் எனக் கூறியே வெளியேற்றப்பட்டார். அவரின் பேச்சு தமிழ் தேசியம் சார்ந்து இருந்ததன் காரணத்தால் கஜேந்திரகுமார் எழுதிய பேச்சு என அவர்கள் எண்ணியிருக்கிறார்கள்.  பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குமாறோ, இராணுவத்தை வெளியேற்றுமாறோ கூட்டமைப்பை கோரவில்லை. போர் முடிவுற்று ஐந்தாண்டு கடந்துள்ள நிலையிலும் மக்களின் பிரச்சினை தீரவில்லை. அதிகரித்துக் கொண்டே செல்கின்றது சிலர் யோசிக்கலாம் அரசைப் பற்றியோ, ஈ.பி.டி.பி பற்றியோ பேசாமல் கூட்டமைப்பை பற்றி இவர்கள் பேசுகிறார்களே என அதற்கான காரணம் அவர்கள் வல்லரசுடன் பேசுவது குறைவு. எமது அழிவிற்கு காரணமானவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே அதனால் தான் அவர்களைப் பற்றி பேசுகின்றோம். போர் முடிந்து 5 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது உத்தியோகபூர்வமாக காணி, கடற்றொழில் அபகரிப்பு என்பன நடக்கின்றன.  தமிழர் தேசத்தில் ஜனநாயகம் இல்லை என்றார்.  இம்மேதினக் கூட்டத்தில் குமார் பொன்னம் பலத்தின் துணைவியார் வல்வெட்டிதுறை நகரசபை தலைவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தமிழ் தேசிய முன்னணியின் கிளிநொச்சி, திருமலை, வவுனியா மாவட்டங்களின் இணைப்பாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.  

 

thinakkural.lk/article.php?local/vrlkxpmyy29000d5ab8dc7ef21225uiekd67ca92e41d730982c5c602xvsuy#sthash.m9wuTazr.dpuf

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.