Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“மனித உரிமைகள் விவகாரத்தில் அவுஸ்திரேலியாவின் மௌனம் இலங்கைக்கான அன்பளிப்பு”

Featured Replies

9c449e17-66bf-45f6-a313-8e03b8ffa348-460

Apparently, the relationship between the two countries (cricket aside) genuinely could not be closer. Photograph: /Sri Lankan High Commission In Australia

(http://www.theguardian.com/commentisfree/2014/may/08/australian-silence-on-human-rights-is-our-gift-to-sri-lanka)

 

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர்  புன்முறுவலுடன் அவுஸ்திரேலிய குடிவரவு, எல்லைப் பாதுகாப்பு அமைச்சருக்கு டில்மா  தேயிலைப் பெட்டியை அன்பளிப்பாக வழங்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இதயசுத்தியுடனான நெருக்கத்தைக் கொண்டிருக்க முடியாதென (கிரிக்கெட்டுக்கு அப்பால் ) தென்படுகிறது.  தமது பெற்றோரின் கலாசாரத்திற்குப் புறம்பான கலாசாரத்தில் வளரும் குழந்தைகள், தாங்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதை ஒருபோதும் அறிந்திராத குடியேற்றவாசிகளுக்கு இராஜதந்திர ரீதியான நட்புறவானது குழப்பமடைந்த மனதை ஆறுதல்படுத்துவதற்கு உதவும்  புத்திசாலித்தனமற்ற வழிமுறையாக அமையக் கூடும் . .ஆனால், இலங்கையில்  பிறந்து அவுஸ்திரேலியாவில்  வளர்ந்த சிலருக்கு இரு நாடுகளின் பரஸ்பர ஆகர்சிப்புடனான கூட்டணைவு பற்றிய இந்த வாரத் தலையங்கங்கள் மகிழ்ச்சியான சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்கவில்லை.  போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. அறிக்கைகளின் பின்னர் தப்பிச்  செல்ல விரும்பும் ஆட்களின் வெளியேற்றத்தைத் தடுப்பதற்காக இலங்கைக் கடற்படைக்கு அவுஸ்திரேலியப் படகுகள் விநியோகிக்கப்பட்டமையும் மனுஸ் தீவில் உள்ள புகலிடம் கோரும் தமிழர்களை  இலங்கை இராணுவத்தின் முன்னாள் அதிகாரி மேற்பார்வை செய்வதாக வெளிவந்திருப்பதும் அந்தப் படத்தின் பரிமாற்றம் தொடர்பாக எனக்கு மேலதிக வெறுப்பும் சங்கடமும் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது. யாவற்றுக்கும்  மேலாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாரிய ஒற்றுமையைக் கொண்டாடும் தருணமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.  அந்தப் படத்தின் பரிமாற்றத்தின் பாசாங்குத்தனம் பற்றிய ஏதோவொன்று எனக்கு மேலதிக வெறுப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியிருந்தது.  இவ்வாறு சுனிலி கொவின்னாகே என்பவர் பிரிட்டனின் "த கார்டியன்'  பத்திரிகையில் நேற்று வியாழக்கிழமை  எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;  யாவற்றுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் திடமான உறுதிப்பாட்டைக் கொண்டாடும் தருணமாக இது எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.  2009  இல் முடிவடைந்த இலங்கை யுத்தத்தின் போதான மனித  உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பான சர்வதேச  விசாரணைக்கு ஆதரவளிப்பதில்லையென இரு நாடுகளும் இணங்கிக் கொண்டிருந்தன.  பதிலளிக்கும் கடப்பாடும் மனித உரிமைகள் தொடர்பான கவலைகளும்  உள்மட்டப்  பொறிமுறைக்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஏனைய  நாடுகள் பரிந்துரைத்திருந்த எந்தவொரு சர்வதேச விசாரணையினால் அல்ல என்பதையும் அவுஸ்திரேலியா  இணங்கிக் கொண்டிருப்பதையிட்டு நன்றி செலுத்துவதாக இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கை அமைந்திருந்தது.   அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் கடந்த மாத விஜயம்  இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மட்டத்தைச்  சாதகமான முறையில் மேம்படுத்தியிருப்பதாகவும் பக்கச்சார்பான தன்மையுடன் தெரிவிக்கப்படும் ஆதாரமற்றதும் அடிப்படைத்தன்மை கொண்டிராததுமான குற்றச்சாட்டுக்கள் காரணமாக இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் பற்றிய புரிந்துணர்வைக் கொண்டதாகவும் அமைந்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் தொடர்ந்து கூறப்பட்டிருந்தது.    அவுஸ்திரேலியாவின் அண்மைக்கால அரசியலைத் தொடர்ந்து பார்த்து வருவோருக்கு அந்த இராஜதந்திர ரீதியான அடையாளத்துவப்படுத்தலின் சாரமானது தெளிவற்றதொன்றாக தென்படக் கூடும். எந்தவொரு விடயத்தையும் செய்வதற்கு அதிகளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் பொ ழுது ஒப்பீட்டளவில் உங்களால் சிரிக்க மட்டுமே  முடியுமென்ற  விடயமும் இருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அவுஸ்திரேலியா  தற்போது உறுப்பினராக இல்லை. விசாரணைக்கு அழைப்புவிடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக அவுஸ்திரேலியா வாக்களித்திருக்கவில்லை.   ஆனால், இணையனுசரணை வழங்க மறுத்திருந்தது. பின்னர் அத்தீர்மானம் நிறைவேறியிருந்தது. அதேவேளை என்னைத் தவிர வேறு யாருடனும் பேசுவதற்கான நோக்கமும் எனக்கு இல்லை.  அவுஸ்திரேலியாவின் செயற்பாடுகளுக்காக ஆஸி.  அரசுக்கு இலங்கை நன்றி தெரிவிக்க முன்வந்ததையிட்டு நான் அதிகளவுக்கு அசௌகரியமும் வெட்கமும் அடைந்துள்ளேன். விசாரணையை எதிர்க்கும் சீனா, ரஷ்யா, கொங்கோ ஆகிய ஒரே குழுவில் அவுஸ்திரேலியா இருக்கின்றது.    கண்டிக்கப்பட வேண்டிய  பயங்கரவாத அமைப்பான தமிழ்ப்  புலிகள் தோற்கடிக்கப்பட்டமை நல்லதொரு பெறுபேறாக அமைந்திருக்கவில்லை என்பதைக் குறிப்பிடுவதற்கான அர்த்தத்தை  நான் நிச்சயமாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால் பதிலளிப்பதற்கான விடயம் அங்கு இருக்கின்றது. விசாரணைக்கான ஆணையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்கியிருக்கிறது. ஏனைய பல பாரிய விசாரணைகளுக்குப் பின்னரே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.  குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையா அல்லது அடிப்படைத் தன்மையற்றவையா என்பது பற்றித் தீர்மானிப்பது  விசாரணையைப் பொறுத்த விடயமாகும். குற்றம் சாட்டப்படும்  நாட்டினால் விசாரணையைத் தீர்மானிக்க முடியாது.   இரு தரப்பினரினதும் அட்டுழியங்கள் பற்றியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. நீதியையும் பதிலளிக்கும் கடப்பாட்டையும் உறுதிப்படுத்துவதற்கு சுதந்திரமானதும் நம்பகரமானதுமான விசாரணை தேவையென ஐ.நா. அழைப்பு விடுத்திருந்தது கதையின் இரு பக்க விடயங்களும் கூறப்பட்டு பரிசீலிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதை எதிர்பார்ப்பதாக  அமையக் கூடும்.  நான் வந்து சேர்ந்த இரு இடங்களிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களும் மனித உரிமைகள் தொடர்பான விசாரணையை நசுக்குவதற்கு கொண்டுள்ள எண்ணப்பாடானது ஜீரணிப்பதற்கு கடினமானதாகும்.  இந்த குறிப்பிட்ட இரு தேசிய ‘வெட்கத்தில்’ நிச்சயமாக சிறியளவிலான பெறுபேறு காணப்படுகிறது. எவரினதும் தேசப்பற்றற்ற உணர்வின் பெறுபேறாக எதுவும் மாறாது.  நாங்கள் என்ன செய்கிறோமா அந்த அலுவலைச் செய்வதற்கான முயற்சியிலேயே நாம் செல்கின்றோம்.  எனது விடயத்தில்  நான் இந்தியன் என்று ஆட்கள் யூகிக்கும்போது நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால்  எம்மில்  அங்கமொன்று இருக்கின்றது. நாங்கள் பேச வேண்டும். எதனையானது கூறவேண்டும். என்பதனை அது அறியும். விருப்பமாக இருப்பதாகத் தோன்றினாலும் கூட ,  இப்போது எதனையும் அர்த்தபுஷ்டியுடன் எம்மால் செய்ய முடியாது. உண்மை வெளிவருவதற்காக நாம் காத்திருக்கும்போது அதனை  சத்தமின்றி வைத்திருக்குமாறு வலியுறுத்தி  ஆட்டிவிப்போருக்கு எதிரான செயற்பாடும் சிறப்பானதாகும். - 

 

http://www.thinakkural.lk/article.php?article/bbznqgwjxc6281f86890095c12892gfagp957e9b949d11d15f0d0cd5ghob2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.