Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓரினச்சேர்க்கையினாலேயே அதிகமாக நாட்டில் எயிட்ஸ் பரவுகின்றது : வைத்திய அதிகாரி சிசிர லியனகே : (கேள்வி பதில்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணல்:  எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத்

 

'இலங்கையில் பாலியல் நோய்களின் அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது. பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் அதிகரித்தமைதான் தற்போது இந்நோய்கள் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன. இது கவலைக்குரிய நிலையாக உள்ளது.

நம்பகத்தன்மையான துணையுடன் மாத்திரம் பாலியல் உறவு வைத்துக் கொள்வதனூடாக பாலியல் நோய்களை கட்டுப்படுத்த முடியும். பாலியல் நடவடிக்கைகளின் போது மிகவும் பாதுகாப்பாக செயற்பட வேண்டும்' என்கிறார் பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய்த்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி சிசிர லியனகே.

 

9110513476_788629211168160_6996773965776

கேள்வி: பாலியல் நோய்கள் எவை?

பதில்: பாலியல் செயற்பாடுகளின் ஊடாக பரவுகின்ற நோய்களேயே நாம் பாலியல் நோய்கள் என அடையாளப்படுத்துக்கின்றோம். இருபதுக்கு அதிகமான பாலியல் நோய்கள் உள்ளன. பிரதானமாக எல்லோருக்கும் தெரிந்த எயிட்ஸை குறிப்பிட முடியும்.

அதேபோல் சிபிலிஸ், கொனோரியர், ஹேபீஸ், போன்ற நோய்களும் பாலியல் செயற்பாடுகளினுடாக பரவுகின்ற சில நோய்களாகும்.

 

கேள்வி: எயிட்ஸ் என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த நோய், ஆனால் ஏனைய நோய்கள் பற்றி பலருக்கும் தெரியாத நிலை உள்ளது அவை பற்றிய சிறிய அறிமுகத்தை தாருங்கள்

 

 

91images%20%281%29.jpgபதில்: எயிட்ஸூக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அது மிகவும் பாரதூரமான நோய் என்பதால் அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஏனைய நோய்கள் அப்படியல்ல அவற்றுக்கான சிகிச்சை முறைகள் உள்ளன அவற்றைக்கட்டுப்படுத்த வழிமுறைகள் உள்ளன.

சிபிலிஸ் (Syphilis) என்ற நோய் பெரும்பாலும் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பை அண்டிய பகுதிகளில் சிறுகாயங்கள் போன்று ஏற்படலாம். இதனைத் தான் நாம் சிபிலிஸ் என அடையாளப்படுத்துகின்றோம். வாய்வழி பாலியல் உறவு மற்றும் குதவழி உறவு வைப்பவர்களுக்கு அவ்வுறுப்புகளை அண்டிய பகுதிகளிலும் இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
பெரும்பாலும் பாலியல் தொடர்பு ஊடாகவே சிபிலிஸ் ஏற்படும்.

 

அல்லது தாயின் மூலம் பிள்ளைக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இது மூன்று கட்டங்களில் ஏற்படும். முதலாவது சிறு காயம் போன்று தோன்றி தானாக மறையும், இரண்டவது கட்டம் காயங்கள் ஏற்படும். மூன்றாம் கட்டம் உடலில் பல பாகங்களில் பரவ வாய்ப்புள்ளது.

 

அடுத்தது கொணேரியா  (Gonorrhea)  எனப்படும் ஒரு வகை நோய். இது பாலியல் உறுப்புக்களை அண்டிய பகுதிகளில் சலம் வெளியேறுதல், அல்லது சலம் வெளியேறாமல் சிறுகாயங்கள் வீக்கங்கள் ஏற்படுதல் போன்ற குணங்குறிகளை அவதானிக்க முடியும்.

அதேபோல் சிறுநீர் அலட்சி போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை பயிற்சி பெற்ற பாலியல் நோய் தொடர்பான நிபுணர்களுடாக சிகிச்சை பெற வேண்டும். சிலவேளைகளில் ஆய்வுகூட முடிவுகள் இல்லாமல் நோய்களை இனங்கான முடியாமல் செல்லும்.

 

கேள்வி: பலபேருடன் பாலியல் தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு இலகுவாக இந்நோய்கள் தொற்றுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே இப்படியான தொடர்பு வைத்திருப்பவர்கள் இவ்வாறான நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள எவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்.

 

பதில்:  உண்மையில் நம்பிக்கையான தனது ஒரு துணையுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு பாலியல்சார் நோய்கள் தொற்றுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.

இரு துணைகளில் ஒருவராவது வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் இவ்வாறான நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியமற்ற உறவுகளை தவிர்ந்திருப்பது மிகவும் சிறந்தது.

இளம் வயதில் (திருமணத்துக்கு முன்னர்) பாலியல் உறவுகளை தவிர்ந்து கொள்வது சிறந்தது. உடலுறவின்போது ஆணுறைகளை பயன்படுத்தி உறவுகளை மேற்கொள்வது சிறந்தது. வெளிநாடுகளில் பெண்கள் பயன்படுத்தும் சில பாதுகாப்பு உறைகள் உள்ளன. ஆனால் இலங்கையில் அவை குறைவு எனவே ஆணுறைகளை பயன்படுத்துவது சிறந்தது.

இதனையும் தாண்டி பாலியல் இன்பங்களை பெற்றுக் கொள்ள வேறு வழிமுறைகள் உள்ளன உதாரணமாக சுயஇன்பம் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

 

கேள்வி: சுயஇன்பம் தொடர்பில் பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் உள்ளன. அது தொடர்பில் சிறு விளக்கம் தாருங்கள்.

 

 

பதில்: சுயஇன்பத்தினூடாக  (Masturbation) பாலியல் நோய்கள் பரவுவதற்கு எந்த ஒரு வாய்ப்புமில்லை. சுய இன்பம் காணுவதால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை, இவ்வாறு செய்வதால் எனக்கு ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால் மட்டுமே ஏதாவது உள ரீதியான பாதிப்பு ஏற்படுமே தவிர வேறு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

குடும்ப வாழ்விலும் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஒரு நாளைக்கு பல தடவைகள் சுய இன்பம் காணுவதால் கூட எவ்வித பாதிப்பும் ஏற்படாது. திருமணம் முடித்த புதிதில் பல தடவைகள் உறவு கொள்பவர்கள் இருக்கிறனர். அவர்களுக்கு அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. அது போலதான் சுயஇன்பம் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவாய்ப்பில்லை.

ஆண்களுக்கு உற்பத்தியாகின்ற விந்து சுய இன்பம் காணாவிடினும், உடலுறவு கொள்ளாவிட்டாலும் இயற்கையாகவே அது வெளியேறிவிடும்.

91images%20%282%29.jpg

கேள்வி: இன்று பரவலாக பேசப்படுகின்ற விடயமாக ஓரினச் சேர்க்கை  (Homosexual)   உள்ளது. இதனூடாக பாலியல் நோய் தொற்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?

 

 

பதில்: ஆண்களுக்கிடையில் இடம் பெறுகின்ற ஓரினச்சேர்க்கை உறவால் அதிகமாக பாலியல் நோய்கள் பரவுவதற்கு வாய்புள்ளது. மலவாயிலில் உறவு கொள்வதன் ஊடாக மலவாயிலில் அதிகமாக பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் குதம் அதிகமாக பாதிக்கப்பட்டு இரத்தக்கசிவுகள் ஏற்படும் அந்த இரத்தமும் விந்தும் கலக்கும் போது பாலியல் நோய்கள் பரவுவதற்கு அதிமான வாய்ப்புள்ளது.

மலவாயில் என்பது பாலியல் தேவைக்காக பயன்படுத்தப்படும் உறுப்பல்ல. எனவே இதில் உறவு கொள்ளும் போது பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். இதனுடாக இலகுவாக எச். ஐ.வி போன்ற ஒரு நோயக்;கிருமி உடலில் தொற்றிக் கொள்ளும்.

வாய்வழி பாலியல் உறவு வைத்துக் கொள்வதனூடாகவும் எயிட்ஸ் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.

அதேவேளை பெண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கிடையில் பாலியல் நோய்கள் பரவும் வீதம் மிகக் குறைவாகவே உள்ளது. பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் உறவு கொள்ளும் முறையில் பரவும் வீதம் குறைவாக உள்ளது. எனவே இது தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவது குறைவு.

 

கேள்வி: எமது நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் என்பவற்றுடன் ஓரினச்சேர்க்கை என்பது முரண்படுகின்றது. இதுபற்றி ஒரு சிறியவிளக்கம் தாருங்கள்.

 

 

பதில்: உண்மையில் எமது நாட்டில் சட்ட விரோதமான ஒரு செயலாகவே இது கருதப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்த போதிலும் சில நாடுகளில் மனித உரிமை என்ற தோரணையில் சட்டமாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அவ்வாறில்லை. எனவே எமது நாட்டுக்கு தற்போது இந்த விடயம் தேவையில்லை என்பது தான் எனது கருத்து. இந்த ஓரினச்சேர்க்கை தொடர்பாளர்களை வேறு சில வழிமுறைகளினூடாக நாம் அவர்கனை அதில் இருந்து விடுவிக்கும் வழிவகைகளை சிந்திக்க வேண்டும்.

இதனை நாம் எச்.ஐ.வி தொற்று தொடர்பில் நோக்கினோமேயானால் இந்தத் தொடர்பு வைத்திருப்பவர்கள் எமது சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வருவது மிகவும் குறைவு. அவ்வாறு தொடர்புள்ளவர்களும் எம்மிடம் வரலாம் அதற்கான சிகிச்சைகளை பெற்றுத்தர தயாராக இருக்கின்றோம்.
எங்களிடம்  சிகிச்சைக்காக வந்தால் அனைத்து விடயங்களிலும் இரகசியம் பேணப்படும். எனவே அவ்வாறான தொடர்புள்ளவர்களும் எம்மிடம் சிகிச்சைக்காக வரமுடியும்.

இவர்கள் இவ்வாறு வராமல் இருக்கும் பட்சத்தில் இந்த நோய் தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும் என்பது மட்டும் உண்மை. எமது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. எனவே சிகிச்சை தேவை என எண்ணுபவர்கள் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளமுடியும்.

உண்மையில் எச்.ஐ.வி. தொற்று பல வகையில் பரவுகின்றன, பாலியல் தொழிலாளர்கள் ஊடாக, ஊசி மூலம் போதை பொருள் ஏற்றுவதூடாக என பல வகையிலும் பரவும் வாய்ப்புள்ளது. ஆனாலும் கூட இலங்கையில் ஓரினச்சேர்க்கை மூலமாகவே அதிகமாக எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகின்றது.

 

கேள்வி: நாட்டில் தற்போது எத்தனை பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்? 

 

பதில்: 1989 ஆம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் இறுதி வரையில் நாங்கள் இரத்தப்பரிசோதனை மேற்கொண்டு  1896 பேரை  எயிட்ஸ் நோயாளிகளாக இனங்கண்டுள்ளோம். இவர்களில் 300 - 310 இடைப்பட்டவர்கள் எயிட்ஸினாhல் உயிரிழந்திருக்கின்றனர்.

தற்போது எங்களிடம் 1000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் இனங்காணப்பட்ட போதிலும் கூட  சிகிச்சைகள் பெற்றுக் கொள்வதில்லை. அதேவேளை 3000 முதல் 5000 வரையிலான எயிட்ஸ் நோயாளிகள் நாட்டில் இருக்ககக்கூடும் என மதிப்பிட்டுள்ளோம்.

இலங்கைக்குள்ளேயும் எச்.ஐ.வி தொற்று ஏற்படுகின்றது, நாம் இனங்கண்டுள்ள எச்.ஐ.வி தொற்றுள்ளவர்களில் 40-50 வீதமானவர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளிநாடு சென்றவர்களாக இருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்தே இந்நோய் பரவிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

 

கேள்வி: உலகளாவிய ரீதியில் அதிகம் கதைக்கப்படும் ஒரு விடயம் தான் மாறிய பாலினர் (Transfer Gender) இவர்கள் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைத் தாருங்கள்.

 

 

பதில்: இதனை ஒரு பாலியல் நோய் என்ற வட்டத்துக்குள் எம்மால் கொண்டுவர முடியாது, உளவியல் பாதிப்பு என்றும் கூறமுடியாது. தான் சார்ந்த பால் அல்லாத பிறபாலுக்கு உரித்துடையவர் என ஒருவர் எண்ணுகின்றனர். அது இயற்கையாகவே தோற்றம் பெறுகின்றது.

இதில் அதிகமாக ஆண்கள் தம்மை பெண்ணாக எண்ணுவது தான் நடக்கின்றது. எனவே இவர்களை நாம் ஒதுக்கிவிடாமல் அவர்களின் உணர்வுகளை புரிந்து செயற்பட வேண்டியுள்ளது.

ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், இவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக அதில் இருந்து விடுபட்டு விடலாம். ஆனால் மாறிய பாலினரால் அவ்வாறு முடியாது. குறிப்பாக சில நாடுகளில் அவர்களின் பால் உறுப்புக்களை கூட சத்திரசிகிச்சை மூலம் மற்றியமைத்து அவர்களுக்கான தேவைகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இதில் பெண்களின் உணர்வுகளை பெறும் ஆண்களும் இருக்கின்றனர். ஆண்களின் உணர்வுகளைப் பெறும் பெண்களும் இருக்கின்றனர்.

கேள்வி: தமது பாலியல் உறுப்புக்களை பொது இடங்களில் பெண்களுக்கு காட்டி பயமுறுத்தும் நடவடிக்கையில் பொதுவாக நகர்புறங்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இது தொடர்பில் சில விடயங்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.

 

 

பதில்: அசாதாரண பாலியல் நடத்தை என்று இதனை அடையாளப்படுத்த முடியும். இது சட்டத்துக்கும் முரணான ஒரு விடயம். இவ்வாறானவர்கள் இதனூடக அவர்களது சில பாலியல் ஆசைகளை நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

இவர்களை பாலியல் நோயாளர்கள் என்ற வட்டத்துக்குள் எடுக்கமுடியாது. இவர்களை உளவியல் நோயாளர்களாகத்தான் அடையாளப்படுத்த வேண்டும்.

இவர்களை நிச்சமாக மனோதத்துவ நிபுணர்களிடம் தான் காண்பிக்க வேண்டும். பொலிஸாரால் இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய மனோதத்துவ வைத்தியர்களிடம் சிகிச்சைக்காக அனுப்ப வேண்டும்.

91images.jpg

 

நாங்கள் பல்கலைக்கழகங்களில் படிக்கும் காலத்தில் இருந்தே இவ்வாறான விடயங்கள் இருந்தன. எங்களுடன் படித்த பெண்பிள்ளைகளுக்கும் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக பெண் விடுதிகளுக்கு அருகில் இவ்வாறு செயற்படுபவர்களை அவதானிக்க முடியும். பாதுகாப்பு பிரிவினர் தான் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

 

கேள்வி: தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் ஊடாக எவ்வாறான சேவைகள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.

பதில்:  இப்பிரிவின் மத்திய நிலையம் கொழும்பில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எமது கிளைகள் உள்ளன. அவற்றிலும், வைத்தியசாலைகளாலும் இனங்காணப்படுகின்ற நோயாளிகளுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கின்றோம்.

இந்நோய்; தொடர்பான நிபுணர்கள், தாதிமார்கள், சுகாதார அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. எந்த ஒரு நோயாளிக்கும் இங்கு சுயாதீனமாக வந்தும் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். இங்கு முழுமையான இரகசியம் பேணப்படும். எனவே சிகிச்சை தேவை என எதிர்பார்ப்பவர்கள் தாராளமாக எம்மிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.

ஒருவருக்கு நோய்த் தொற்று காணப்பட்டால் அவருடன் தொடர்புபட்ட ஏனையவர்களையும் இனங்கண்டு நாம் சிகிச்சை வழங்குவோம். இதற்கென பயிற்றப்பட்ட 7 வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட குழு செயற்படுகின்றது.

 

கேள்வி: பாலியல் நோய்கள் தொடர்பாக வேறு ஏதேனும் கூற விரும்புகின்றீர்களா?

பதில்: கடந்த வருடம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மேற்கொள்ளப்படும் இரத்தப்பரிசோதனையின் மூலம் சிபிலிஸ் என்ற நோய், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பரவும் வீதம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனவே இந்த நிலை கவலைக்குரியது. இதில் இருந்து நாட்டில் பாலியல் நோய்களின் அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது.

பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் அதிகரித்தமைதான், தற்போது இந்நோய்கள் பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன. எனவே இவ்வாறான உறவுகளை வைத்திருப்பவர்கள் தம்மால் நம்பிக்கையான ஒரு துணையுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள முடியாது. அதனையும் தாண்டி பலருடன் உறவு வைக்க வேண்டும் என்ற தேவையுடையோர் கட்டாயம் ஆணுறைகளை பயன்படுத்துங்கள்.

உண்மையில் இளைஞர்களை பொறுத்த மட்டில் இயற்கையாகவே பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக காதலர்களுக்கு மத்தியில் பெரும்பாலும் இவ்வாறான உறவு பொதுவாக இருந்து வருகின்றன. அவை எல்லையை கடந்து விடாது மிகவும் அவதானமாக இருப்பது சிறந்தது.
அவ்வாறு காதலர்களுக்கிடையிலும் பாலியல் உறவு வைப்பவர்கள் இருந்தால் பாதுகாப்பாக அணுறைகளை பயன்படுத்துவது சிறந்தது. தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புப்பிரிவை தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் 0112667163, 0112667029, 0112696433 ஆகிய இலக்கங்களுடாக தொடர்பு கொள்ள முடியும்.

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=91&display=0#sthash.di5v6rlZ.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.