Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவில் ஈழத்தமிழர் அகதிமுகாம் வாழ்வும் அவுஸ்திரேலியாவுக்கான படகுப் பயணமும்

Featured Replies

இந்தியாவுக்குள் நுழைவிசைவின்றி சட்டவிரோதமாக நுழையும் அனைத்து அந்நியர்களும் இந்தியாவின் 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டம் மற்றும் 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்படுவர்.  இவ்வாறு அவுஸ்திரேலியாவை தளமாகக்கொண்ட Eureka Street இணையத்தில் Paul White எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.  

 

கடந்த வாரம் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு கிறிஸ்மஸ் தீவில் இரண்டு படகுகள் கரையொதுங்கின. தற்போது இப்படகில் பயணித்த இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் எவ்வித பாதுகாப்பும் வழங்காது இலங்கைக்  கடற்படையிடம் ஒப்படைக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இப்படகுகளில் ஒன்றில் இலங்கையைச் சொந்த இடமாகக் கொண்ட 153 தமிழர்கள் பயணித்துள்ளனர். இவர்களுள் 37 சிறார்களும் அடங்குவர். இச்சிறார்களில் மூன்று மாதக் குழந்தையும் உள்ளது. இக்குழந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளது. 22 மீற்றர் நீளமான இப்படகு இரண்டு வாரங்கள் வரை கடலில் நின்றுள்ளது. "நாங்கள் அகதிகள். நாங்கள் இலங்கையிலிருந்து வருகிறோம். நாங்கள் இந்தியாவில் தங்கியிருந்தோம். எங்களால் அங்கு வாழமுடியவில்லை. இதனாலேயே நாங்கள் அவுஸ்திரேலியாவுக்கான எமது பயணத்தை ஆரம்பித்தோம்' என அப்படகிலிருந்த தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

 இத்தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கையில்  உள்நாட்டுப் போர் தீவிரம் பெற்றிருந்த 1983 - 2009 காலப்பகுதியில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றவர்களாவர். இலங்கையில் கடத்தல்கள், சித்திரவதைகள், காணாமற்போதல்கள் போன்றன தொடர்வதாக ஐ.நா. வல்லுனர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இலங்கையில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரில் 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு மில்லியன் வரையான மக்கள் இடம்பெயர்ந்தனர். தமிழர்கள் நாள்தோறும் விமானத் தாக்குதல்கள் மற்றும் மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டதால் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர்.  இந்தியா 1951 இல் வரையப்பட்ட அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடவில்லை. இந்தியாவில் அகதிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையைக் கொண்டிருக்கவில்லை. இந்தியாவுக்குள் நுழைவிசைவின்றி சட்டவிரோதமாக நுழையும் அனைத்து அந்நியர்களும் இந்தியாவின் 1946ஆம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டம் மற்றும் 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்படுவர். ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையகத்தின் சான்றிதழானது இந்தியாவில் அகதிகள் தடுத்து வைக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு வழங்கவில்லை.  இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 115 தொடக்கம் 130 வரையான அகதி முகாம்களில் 100,000 இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த அகதிகளில் சிலர் கிடுகால் வேயப்பட்ட கூரைகளைக் கொண்ட குடிசைகளிலும் ஏனையோர் சீமெந்தால் கட்டப்பட்ட சிறிய வீட்டுத் தொகுதிகளிலும் வாழ்வதாக உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

 

இங்கு போதியளவு மலசலகூட வசதியோ, குளியலறை வசதியோ அல்லது போதியளவு குடிநீர் வசதியோ காணப்படவில்லை. இங்கு குப்பைகளைச் சேகரிப்பதற்கான வசதியோ, மருத்துவ வசதிகளோ மேற்கொள்ளப்படவில்லை. மின்சாரம் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழமையாக காலை ஆறு தொடக்கம் மாலை ஆறு மணிவரையே மின்சாரம் வழங்கப்படுகிறது. சில முகாம்களில் மின்சார வசதி செய்து கொடுக்கப்படவில்லை. திருவநந்தபுரத்தில் உள்ள அகதி முகாமில் உள்ள ஆறு வீடுகள் அண்மையிலேற்பட்ட பருவப்பெயர்ச்சி மழையால் சேதமடைந்தன. இதில் சிறுமி ஒருவர் இறக்க நேரிட்டது.  இங்கு இரண்டு வகையான முகாங்கள் காணப்படுகின்றன. பொதுவான முகாம்கள், சிறப்பு முகாங்கள் போன்றனவே அவையாகும். பொதுவான அல்லது சாதாரண முகாங்களிலுள்ள மக்கள் வெளியில் செல்ல முடியும்.

 

ஆனால் இவர்கள் மூன்று விதமான காவற்துறையின் அனுமதிப் படிவத்தைப் பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்புப் படையினரால் கண்காணிக்கப்படுகின்றன. போக்குவரத்தில் சில மட்டுப்படுத்தல்கள் இங்கு உள்ளன. அகதி முகாம்களில் பணியாற்றுவதற்கு அரச  சார்பற்ற நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையகம் கூட இந்த முகாம்களுக்குள் பிரவேசிக்க முடியாது.  சாதாரண முகாம்களில் வாழ்வோர் பாதுகாப்பு அதிகாரிகளால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக அனைத்துலக மன்னிப்புச் சபையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கும்மிடிப்பூண்டி முகாமிலிருந்து இரும்புத் தொழிற்சாலைக்குப் பணிபுரியச் செல்வோர் அங்கிருந்து இரும்புகளைக் களவாடிக் கொண்டு வந்து தம்மிடம் தரவேண்டும் என தமிழ்நாடு காவற்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவான கியுப் பிரிவு காவற்துறையினர் பலவந்தப்படுத்துவதாக அங்குள்ள அகதி ஒருவர் அனைத்துலக மன்னிப்புச் சபையிடம் தெரிவித்துள்ளார்.

 

இதேபோன்று 2008 மற்றும் 2011 காலப்பகுதியில் வங்கிகளில் கொள்ளையடிக்குமாறு அகதிகள் பலவந்தப்படுத்தப்பட்டதாக அனைத்துலக மன்னிப்புச் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றங்களைப் புரியும் அகதிகள் கைதுசெய்யப்பட்டால்  அவர்கள் "சிறப்பு முகாம்களுக்கு' மாற்றப்படுவர்.  போரின் பின்னர் இலங்கைக்குத் திரும்பிய அகதிகள் பலர் தமது சொந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளனர். தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றவாதம் இடம்பெறுவதாக தமிழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. "எனது சகோதரன் தனது நிலத்தைப் பார்ப்பதற்காகச் சென்றபோது எமது சொந்தக் கிராமத்தின் கிட்டத்தட்ட 100 சதவீதமான நிலங்கள் தற்போதும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ளதைக் கண்டார்' என இந்தியாவிலுள்ள தமிழ் அகதி ஒருவர், அனைத்துலக மன்னிப்புச் சபையிடம் தெரிவித்துள்ளார்.

 

 இலங்கையில் போர் முடிவடைந்து பல ஆண்டுகளாகியும், காவற்துறையின் தடுப்பிலுள்ள போதான சித்திரவதைகள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கை ஒரு எதேச்சாதிகாரப் போக்குடைய ஒரு நாடாக மாறிவருவதாக 2013 இல் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவி பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார். தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், கொலை, தடுத்துவைப்பு மற்றும் பலவந்தக் காணாமற் போதல்கள் ஆகிய ஆபத்தைச் சந்திக்கின்றனர் என சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் யுவான் மென்டெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.  மார்ச் 2014 தொடக்கம் தமிழர் பகுதிகளில் சிஇலங்கை அதிகாரிகளின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இங்கு கைதுசெய்தல்கள் அதிகரித்துள்ளன. கொலைகளும் இடம்பெற்றுள்ளன. சுதந்திரமான நடமாட்டம் மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தளவில் தற்போது இனப்படுகொலைக்கான ஆபத்து மத்திமத்திலிருந்து உச்சம் வரை அதிகரித்துள்ளது எனவும் மீண்டும் இலங்கையில் மோதல் உருவானால் இனப்படுகொலை உட்பட பாரிய வன்முறைகள் வெடிக்கும் என Sentinel Project மதிப்பீடு செய்துள்ளது.  

 

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகும் இலங்கைத் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த 12 மாதங்களாக அவுஸ்திரேலியாவால் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதாக இலங்கையின் மனித உரிமைச் சட்டவாளர் லக்சன் டயஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு பலவந்தமாக நாடு கடத்தப்படும்  இலங்கைத் தமிழர்கள் அவர்களது சொந்த நாட்டில் விசாரணை செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாவதுடன், மீண்டும் இவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக லக்சன் டயஸ் தெரிவித்துள்ளார்.  

 

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத்  தமிழர்கள் இருவர் இலங்கைக் காவற்துறையினர் தம்மை அவுஸ்திரேலிய சமஷ்டி நிர்வாக காவற்துறை அதிகாரியின் முன் தாக்கியதாக வாக்குமூலம் வழங்கியதாக 2011 இல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்தியாவில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, தமது சொந்த நாடான இலங்கையில் இனப்படுகொலை ஆபத்தை முகங்கொடுப்பதால் தற்போது தாம் வேறு நாடுகளுக்குச் செல்ல முடியாது அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக இலங்கைத் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கூறுகின்றனர். அகதிகளுக்கு நிரந்தரப் பாதுகாப்பு நுழைவுவிசைவுகளை வழங்காது மறுப்பதானது வலிதற்றதாகும் என அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.  

 

http://thinakkural.lk/article.php?article/jwkxmleikv1445b265ce60fe3269fecri4c5384e622b09eb829b8dfua7tt#sthash.XyDaXzET.dpuf

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.