Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலுக்குச் செல்ல பாப்பரசருக்கு அனுமதி மறுப்பு! - மடு வரை செல்லவே அரசு அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
முள்ளிவாய்க்காலுக்குச் செல்ல பாப்பரசருக்கு அனுமதி மறுப்பு! - மடு வரை செல்லவே அரசு அனுமதி 
[Thursday 2014-07-17 18:00]
pope-francis-150-3-news.jpg

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வரும் புனித பாப்பரசரை, இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசு மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் வடக்கு கிழக்கில் மடுத் திருத்தலம் வரை புனித திருத்தந்தை செல்லவும், அங்கு திருப்பலிப் பூசைகளில் ஈடுபடவும் மட்டும் இலங்கை அரசு சார்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது எனவும் அறியவருகின்றது. புனித பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்கும் இலங்கைக்கான வத்திக்கான் பிரதிநிதி பேராயர் பியூரி நக்யுஎன் வான் டாட் கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

  

அப்போது தமிழ் சிவில் சமூக அமைப்பினர் அவரைச் சந்தித்துப் பேசினர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழர்கள் பேரழிவைச் சந்தித்த முள்ளிவாய்க்காலுக்கு அல்லது குறைந்தபட்சம் மடுத்திருத்தலத்துக்காவது பாப்பரசர் வருகைதந்து யுத்தத்தில் மாண்டவர்களுக்காக திருப்பலிப் பூசை ஒன்றை நடத்த வேண்டும் என அப்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை அடுத்தே பாப்பரசரின் இலங்கை வருகை தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்கும் உயர்மட்டக் குழுவினர் இலங்கை அரச தலைமையுடன் தொடர்பு கொண்டு, பாப்பரசர் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்வது தொடர்பான யோசனையை முன்வைத்தனர் என்று கூறப்படுகிறது.

ஆனால் பாப்பரசர் முள்ளிவாய்க்காலுக்கு செல்வதற்கான திட்டத்தை பாதுகாப்பு உயர் வட்டாரங்கள் அடியோடு நிராகரித்து விட்டன என்றும் - வடக்கு, கிழக்கில் விரும்பினால் பிரசித்திபெற்ற மடுத்திருத்தலம் வரை சென்று அங்கு பூசை வழிபாடுகளை அவர் நடத்துவதற்கு அனுமதிக்கமுடியும் எனப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=113307&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.