Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பல் + கனடிய தமிழ் காங்கிரஸ்...

Featured Replies

கீழே உள்ள பதிவு facebook இல் "கடி நொடி" என்னும் குழுவால் பதியப்பட்டது.....

கீழே விவாதிப்பது சரியா பிழையா ????

 

10491204_1515373358674523_72483905603149

 

ஏலேலோ அஜ்லசா ஏலேலோ அஜ்லசா என்ற வார்த்தை தமிழ் இனத்திற்கு கேட்கும் பொழுது, அது கடல் தொழிலாளிகள் தன் கழைப்பையும் மீறி குடும்பத்தின் சூழ் நிலையை கருத்தில் கொண்டு கட்டுமரத்தை தள்ளும் போது பாடும் பாடல்.

கனடியத் தமிழர் காங்கிரஸ்சின் (CTC) உல்லாசக் கப்பல் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி TORONTOவில் இருந்து வெளிக்கிடப் போகின்றது, எல்லோரும் முற்பதிவுகள் செய்யுங்கள் என்று கனடியத் தமிழர் காங்கிரஸ் கூவிக் கூவி பற்றுச் சீட்டுக்களை விற்பனை செய்கின்றார்கள்.

கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) கப்பலில் உல்லாசப் பயணம் செய்து பணம் சேகரிப்பதை கடிநொடியாகிய நாம் எந்தக் காலத்திலும் வரவேற்க மாட்டோம்.

தனிப்பட்டவர்களோ அல்லது சாதாரண அமைப்பை சேர்ந்தவர்கள் இப்படியான நிகழ்வுகளை வைத்தால், கடிநொடியாகிய எமக்கு கேள்வி கேட்கும் அதிகாரமில்லை.

ஆனால் கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினர், கனடாவில் தாங்கள் தான், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று உலகத்தமிழர்கள் மத்தியிலும் மற்றும் மேற்குலக நாடுகள் மத்தியிலும் முழக்கமிட்டு சொல்கின்றார்கள்.

இவர்களின்(CTC) முக்கிய செயற்பாடுகள்.

1) தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை கனடாவில் வளர்ப்பதும்.

2) தமிழர்களிற்கான அரசியல் வேலைகளை, கனடா அரசினூடாகவும் மற்றும் மனித உரிமை கழகங்களூடாகவும் செயற்படுத்தல்.

3) ஈழத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் புலத்திற்கு வரும் பொழுது அவர்களிற்கு உதவிகள் செய்வதும் மற்றும் ஈழத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளிற்கு பக்க பலமாக இருப்பதும்.
இப்படியான செயற்பாடுகளை செய்வதால் தான் கனடாவில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த அமைப்பில்(CTC) அங்கத்தவர்களாவும் மற்றும் ஆதரவும் கொடுக்கின்றார்கள். அதன் அடிப்படையில் தான் கனடாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் இந்த அமைப்பிற்கு உதவிகள் செய்கின்றார்கள். ஏன் என்றால், அரசியல் கட்சிகளிற்கு மக்களின் ஓட்டுகள் தேவைப்படுகின்றது.

அப்படியானால், கனடாத் தமிழர்களிற்கு எல்லா தார்மீக உரிமைகளும் இருக்கின்றது, இந்த கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) பிழைகள் விடும் பட்சத்தில் கேள்விகள் கேட்பதற்கு.

இந்த அமைப்புக்கு(CTC) பணம் சேர்ப்பதற்கு பல வழிகள் இருக்கின்றது.

ஆனால் ஏன் இந்த உல்லாசக் கப்பல் பயணம் ?

தாராளமாக மது அருந்தி நடனங்கள் செய்து பணம் சேகரித்து தமிழ் இனத்தின் கலாச்சாரத்தையும் தமிழர்களின் எதிர்காலத்தையும் நீங்களா(CTC) காப்பாற்றப் போகின்றீர்கள் ?

கடல் பயணங்கள் எப்படி இருக்கும் என்று உங்களிற்கு(CTC) ஏதேனும் அனுபவம் இருக்கின்றதா ?

கனடாவிற்கு போன இரு கப்பலிலும் பயணம் செய்தவர்கள் தங்களின் உயிர்கள், தரையை தாண்டும் வரை இருக்குமோ என்று ஏங்கியவர்கள்.

அவுஸ்ரேலியாவிற்கு போகின்றவர்கள் சிங்களவனிடம் இருந்து தங்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக பெருங்கடலில் பயணங்கள் செய்கின்றார்கள். பசியோடும் பட்டினியோடும் தண்ணீருமில்லாது பச்சிளங் குழந்தைகளோடு பயணங்கள் செய்து கரை சேர்ந்தவர்களும் சேராதவர்களும் பலர்.

இப்படியான எம் உறவுகளிற்கு, கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) உதவிகள் செய்கின்றோம் என்று சொல்லி அவர்களிற்கு முழுமையான உதவிகள் செய்யவில்லை என்று கனடாவிற்கு கப்பல் மூலம் சென்றவர்கள் எமக்கு பல மின்னஞ்சல்கள் அனுப்பி இருக்கின்றார்கள்.

ஆனால் கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) இப்படியான உல்லாசக் கப்பல் நிகழ்வை நடத்துவதை எந்த மானமுள்ள தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

பாதிக்கப்பட்ட ஈழத் தமிழரின் அரசியல் நலனுக்காகவென்று சொல்லி விளம்பரம் செய்து பணம் சேர்க்க, இப்படியான உல்லாசக் கப்பல் நிகழ்வை நடத்துவதற்கு கடிநொடியாகிய நாம் மக்களோடு சேர்ந்து எதிர்ப்போம்.

நீங்கள் இப்படியான நிகழ்வுகளை செய்வதனால் தான், சிங்களவன் உங்களின் அமைப்பை(CTC) கேலிக் கூத்தாக பார்க்கின்றான். தயவு செய்து இப்படியான நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கடந்த 5 வருடத்தில், ஈழத்தில் பாதிக்கப் பட்ட எம் உறவுகளிற்கு எந்த வகையில் உதவிகள் செய்தீர்கள் என்று பட்டியலிட முடியுமா(CTC) ?

யாரும் உங்களிடம் கேள்வி கேட்டாள் பதில் இருக்காது, ஆனால் பொதுவாக தப்பிப்பதற்காக சொல்வது, நாம் (CTC) அதை தெரியப் படுத்தினால் சிங்களவன் கண்டு பிடித்துவிடுவான் என்று சொல்லி மக்களை முட்டாள்கள் ஆக்காதீர்கள்.

சிங்களவனை, நீங்கள்(CTC) ஏமாற்றாலாம் ஆனால் எம்மை ஏமாற்ற முயற்சிக்காதீர். கடிநொடியாகிய நாம் புலத்தில் வாழும் எம் உறவுகளிற்கு எல்லா உண்மைகளையும் உடனுக்குடன், தவறு செய்பவர்களை இனம் கண்டு தெரியப் படுத்துவோம்.

கடிநொடி எங்கும் செல்லும் எதிலும் நுழையும் ஆனால் உண்மைகளை மட்டும் வெளிக்கொண்டு வரும்.

நன்றி,
கடிநொடி (Facebook ID : KadyNody)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.