Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்களுக்கு... கருத்தடை ஆபரேஷன் பாதிப்பை உண்டாக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
0.jpeg
 

 

கருத்தடை ஆப்பரேஷன், ஆண்மைக் குறைவை உண்டாக்குமா?

பெரும்பாலும் இந்தியாவைப்பொருத்தமட்டில் பெண்கள்தான் இந்த ஆப்பரேஷனை செய்து கொள்கிறார்களே தவிர இதைச்செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு...
 
பெண்களுக்கு நடக்கும் கருத்தடை / குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷன்களை விடவும் ஆண்களுக்கு செய்யும் ஆப்பரேஷன் மிக எளிதானதும், ரிஸ்க் இல்லாததும், அதிக வேதனைகளற்றதுமாய் இருந்தும் அதைச்செய்ய ஆண்கள் தயங்குவதற்கு என்ன காரணம்?...
 
முதல் காரணம் இப்படியொரு ஆப்பரேஷனை செய்து கொண்டால் எங்கே நாம் ஆண்மையை இழந்து பொட்டையாகி விடுவோமோ என்ற பயம்தான்...
 
குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷனுக்கும் ஆண்மைக்கும் சம்மந்தமேயில்லை என்பது மருத்துவ உண்மையாக இருந்தாலும் இதைச்செய்து கொண்டால் அதன் பிறகு விந்து வராதோ?... செக்ஸில் உச்சக்கட்டத்தை அடைய முடியாதோ?... செக்ஸ் உறவில் பெண்ணை திருப்திப்படுத்த முடியாமல் போகுமோ?... என்றெல்லாம் பலவிதமான பயக்கேள்விகள் பல ஆண்களின் மனதிலும் அரித்துக்கொண்டேயிருப்பதால்தான் பெரும்பாலும் பெண்களே கருத்தடை ஆப்பரேஷன்களை செய்து கொள்ளுகிறார்கள் நம் நாட்டில்...
 
அதேப்போல இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆணுக்கும் பெண்ணுக்கும் என தனித்தனியாய் பிரிக்கப்பட்ட சில குடும்ப சமூக காரணங்களும் உண்டு...
 
உதாரணத்திற்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்து கொண்டபிறகு ஒரு குடும்பத்திலிருக்கும் வாரிசுகள் ஏதோவொரு சூழலில் உயிரிழக்க நேர்ந்தால்... அங்கு மனைவி கருத்தடை ஆப்பரேஷன் செய்திருந்தால் அதை ரிவெர்ஸ் செய்யமுடியாத பட்சத்தில் அந்தக்குடும்பத்தில் கணவன் வேறொரு பெண்ணின் மூலம் மீண்டும் வாரிசுகளை உண்டாக்கிக்கொள்வதை சமூகமும் அவர்கள் சார்ந்த குடும்பமும் அங்கீகரிக்கலாம்... ஆனால் அதே குடும்பத்தில் ஒருவேளை அந்தக்கணவன் ஏற்கனவே கருத்தடை ஆப்பரேஷன் செய்திருந்தால்... அந்த மனைவி வேறொரு ஆணின் மூலம் மீண்டும் வாரிசை உண்டாக்குவதை அவர்கள் சார்ந்த குடும்பமோ... சமூகமோ இங்கே ஏற்றுக்கொள்ளுமா?... இதுவும்கூட பெரும்பாலான ஆண்கள் குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்து கொள்ளத்தயங்கும் காரணமாய் இருக்கலாம்...
 
ஆண்களுக்கான கருத்தடை / குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷன் விஷயத்தில் இருக்கும் சிலபல சந்தேகங்களை தீர்க்க முயல்வதுதான் இந்தக்கட்டுரையின் நோக்கம்...
2.jpg
 
ஆண்களின் கருத்தடை ஆப்பரேஷனுக்கு VASECTOMY என்று பெயர்... இதில் கருத்தடை நோக்கத்தில் எதை கட்(Cut) செய்வார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது...
 
ஆண்களின் கருத்தடை ஆப்பரேஷன் என்பது கிராமப்புறத்தில் கெடா ஆடுகளுக்கும், வண்டியிழுக்கப்போகும் காளை மாடுகளுக்கும் செய்யும் காயடித்தல் போன்றதல்ல என்பதை தெரியாதவர்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்...
 
ஆண்களுக்கு இயற்கை வழங்கிய விந்தணு ஒரே இடத்திலிருந்து வெளியாகும் ஒரே விஷயத்தை மட்டும் கொண்டதல்ல... உறவின்போது வெளியாகும் விந்தணுவில் கர்ப்பத்தை உருவாக்கும் உயிரணுவின் பங்கு வெறும் 5% மட்டும்தான்... (விந்தணு வேறு... உயிரணு வேறு... விந்தணு என்பது 5% உயிரணுவையும் உள்ளடக்கியது...)
 
ஆக... ஆண்களின் கருத்தடை ஆப்பரேஷனில் கட் ஆகப்போவது இந்த 5% உயிரணு உருவாகி விந்தணுவோடு கலக்கும் குழாய்தான்...
 
Vasectomyயை விளக்கும் இந்தப்படத்தை பார்த்து கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்...
vasectomy.jpg
 
இந்த ஆப்பரேஷன் மிகுந்த வலியையும் வேதனையையும் கொடுக்கக்கூடியதா?...
ஆப்பரேஷன் என்றாலே பயப்படும் மனோபாவம் இப்போதெல்லாம் கொஞ்ச கொஞ்சமாக மாறிவந்தாலும்கூட இன்னும் முழுதாக மாறிவிடவில்லை என்பதும் நிஜம்தான்...
 
Vasectomy ஒரு முப்பது நிமிட ஆப்பரேஷன்தான்... பெரும்பாலும் லோக்கல் அனெஸ்தீசியா மூலமே செய்யப்படுகிறது... உயிரணு டியூப்பை கட் செய்யும்போது மிகச்சிறிய அளவில் ஒரு சில நொடிகளுக்கு வலிக்கலாம்... ஆப்பரேஷனுக்கு பிறகு 24மணி நேரம் முழு ஓய்வில் இருக்கவேண்டியதும்... அதன்பிறகு ஒரு சில நாட்களுக்கு கடினமான மற்றும் பாரமனா பொருட்களை தூக்கும் வேலைகளில் ஈடுபடாமலிருப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது...
 
Vasectomyக்கு பிறகும் அந்த ஆணால் விந்தணுவை வெளியேற்றமுடியுமா?...
நிச்சயமாக முடியும். செமன் எனப்படும் விந்தணுவானது செமினல் வெஸில் மற்றும் ப்ரோஸ்டேட் க்ளாண்டிலிருந்து உற்பத்தியாவது. அவை இரண்டும் இந்த ஆப்பரேஷனில் தொடப்படுவதில்லை என்பதால் அவை வழக்கம்போல தனது பணியைச்செய்யும். கட் செய்யப்பட்ட உயிரணுவின் பங்கு வெறும் 2 முதல் 5% மட்டுமே என்பதால் இந்த ஆப்பரேஷனுக்கு பிறகு வெளியாகும் விந்தணுவின் அளவிலோ, மகிழ்ச்சியிலோ நிச்சயம் மாற்றம் இருக்காது.
 
Vasectomyக்கு பிறகும் உயிரணு உற்பத்தியாகுமா?...
Vasectomyக்கு பிறகும் உயிரணு உற்பத்தியாகக்கூடிய டெஸ்டிஸ்ல் தொடர்ந்து உற்பத்தியாகிக்கொண்டேதான் இருக்கும். ஆனால் காலப்போக்கில் இது கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கிவிடும்.
 
Vasectomyக்கு பிறகும் உற்பத்தியாகும் உயிரணுக்கள் அதன் வெளியேறும் பாதை கட் செய்யப்பட்டிருப்பதால் என்னவாகும்?...
இயற்கையின் படைப்புப்படி அந்த உயிரணுக்கள் Vasectomy செய்யப்பட்ட ஆணின் உடலாலேயே (reabsorbed) உட்கிரகித்துக்கொள்ளப்படும்.
 
Vasectomy செய்து கொண்ட பிறகு முழுமையான கருத்தடை என்பது எப்போது ஆரம்பிக்கிறது?...
Vasectomyக்கு பிறகு கிட்டத்தட்ட 15 முதல் 20 தடவை வரையிலான உறவின் போதான / சுய இன்பத்தின் மூலமான வெளியேற்றத்திற்குப்பிறகுதான் விந்தணுவில் உயிரணு இல்லாத நிலை உண்டாகும் என மருத்துவம் விளக்கமளிக்கிறது. (ஏற்கனவே பெனிஸ்க்கு செல்லும் வழியில் படிந்திருக்கும் உயிரணுக்கள் வெளியேறுவதற்காகத்தான்...) அதுவுமில்லாமல் இந்தக்காலகட்டத்துக்கு பிறகு விந்தணுவில் உயிரணு கலந்திருக்கிறதா என்று லேப் டெஸ்ட் செய்து கொள்வதும் நல்லதுதான் என்கிறது.
 
Vasectomyக்கு பிறகு மகிழ்ச்சி ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறையுமா?...
அப்படி அளவு குறைந்ததாகவோ, இல்லை... செக்ஸ் செயல்பாடுகள் குறைந்ததாகவோ எவ்வித ஆதாரங்களும் இதுவரையிலும் பதிவு செய்யப்படவில்லை...
 
Vasectomy கர்ப்பத்தை தடுப்பதில் 100% நம்பகமானதுதானா?...
99% அதிகமான Vasectomyகள் வெற்றிகரமானதும் நம்பகமானதும்தான் என்றாலும் சில நேரங்களில் வெகு அபூர்வமாக Vasectomyக்கு பிறகான முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் கட் செய்யப்பட்ட உயிரணுப்பாதையானது மீண்டும் ஒன்றோடொன்று சேர்ந்து பாதையைத்திறந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு.
 
Vasectomy ரிவெர்ஸிபிலா?...
பெரும்பாலும் இதுவொரு நிரந்தரத்தீர்வென்பதால் ரிவெர்ஸ்க்கான சாத்தியங்கள் குறைவென்றாலும் பெரியதொரு நுண்ணிய ஆப்பரேஷன் மூலம் ரிவெர்ஸ் செய்து கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்த ரிவெர்ஸ் ஆப்பரேஷனுக்கு VASOVASTOSTOMY என்று பெயர்...
 
ஆயினும் இதில் உயிரணு ரெக்கவரி என்பது ஆணின் வயது மற்றும் Vasectomy செய்யப்பட்டதிலிருந்து ரிவெர்ஸ் செய்யப்பட்ட காலத்தின் அளவு ஆகிய காரணிகளை அடிப்படையாகக்கொண்டதுதான்... பெரும்பாலும் Vasectomy செய்யப்பட்டதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் செய்யப்படும் ரிவெர்ஸிபிள் மட்டும்தான் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் கொண்டதாக கருதப்படுகிறது.
 
Vasectomyக்கு பிறகு ப்ரோஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறதா?...
Vasectomyக்கும் ப்ரோஸ்டேட் கேன்சருக்கும் தொடர்பிருப்பதாய் இதுவரையிலும் எவ்வித ஆய்வுகளும் நிரூபிக்கவில்லை.
 
Vasectomyக்கு பிறகு எப்போது செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்?...
Vasectomyக்கு பிறகு ஒரு சில நாட்கள் கழித்து உறவு வைத்துக்கொள்வது நல்லது என்றாலும் உடனேயே உறவு வைத்துக்கொண்ட நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் ஏற்கனவே கூறியபடி முதல் 15 முதல் 20தடவை வரையிலான உறவில் சரியான கர்ப்பத்தடை சாதனங்களை பயன்படுத்திக்கொள்வது முக்கியமானது.
 
மற்றபடி Vasectomyக்கு முன்பும் பின்புமான விந்தணுவின் அளவிலோ, வெளியேற்றத்திலோ, மகிழ்ச்சியிலோ எவ்வித வேறுபாடும் உண்டாகாது...
 
Vasectomy ஆண்மைக்குறைவை(impotent) ஏற்படுத்துமா?...
Vasectomy ஒருபோதும் ஆண்மைக்குறைவையோ... விரைப்புத்தன்மை குறைபாடுகளையோ உண்டாக்காது என்பது நிச்சயம். பெரும்பாலான ஆண்மைக்குறைவு / விரைப்புத்தன்மை குறைபாடுகளுக்கு மனதளவிலான காரணங்கள்தான் அதிகம் என்பதால் ஏற்கனவே அப்படிப்பட்ட மனக்குழப்பம் உடையவர்களுக்குத்தான் இதுபோன்ற பிரச்சினைகள் உண்டாகுமேயொழிய Vasectomy மூலம் இந்தக்குறைபாடுகள் உண்டாவதற்கு வாய்ப்பேயில்லை என்பதுதான் நிஜம்...
 
Vasectomyக்கு பிறகும் செக்ஸில் உச்சக்கட்டத்தை அடையமுடியுமா?...
நிச்சயமாய் முடியம்... Vasectomyக்கு பிறகும் அந்த ஆணும், அவருடன் உறவு கொள்ளும் பெண்ணும் உச்சக்கட்டத்தை அடைவதும், செக்ஸில் மகிழ்ச்சியான உறவு கொள்வதும் இயல்பாகவே நடக்கும் என்பதோடு இதில் எவ்வித குறைபாடுகளுக்கும் வாய்ப்பேயில்லை... ஆணுக்கு வழக்கம்போலவே உச்சகட்டத்தின்போது விந்தணு வெளியேற்றமும் இருக்கும்.
 
என்ன மக்களே?... இந்தக்கட்டுரையின் மூலம் இவ்வளவு நாள் நீங்கள் அறிந்திராத சில பல சந்தேகங்கள் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்...
doubt.png
 
உங்களுக்குத்தெரிந்ததை தெரியாத நண்பர்களுக்கும் சொல்லி விழிப்புணர்வை உருவாக்க உதவுங்கள்..
 
நன்றி தமிழ்மணம்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.