Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோமளவல்லி, நீ கொள்ளையடி – நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோமளவல்லி, நீ கொள்ளையடி – நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் : சசீதரன்

 

jayalalithaa-253x300.jpgஜெயலலிதா பிணையில் விடுதலையான செய்தி வெளியானதும் தமிழ்த் தேசிய வாதிகள் கொண்ட ஆரம்பித்துவிட்டனர். கோமளவல்லி ஐயங்கார் என்ற இயற்பெயர்கொண்ட கன்னடப் பார்ப்பனப் பெண்ணான ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போதும் பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதும் தமிழ்த் தேசிய வாதிகளின் வில்லத் தனமான உணர்ச்சிகள் ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கொச்சப் படுத்தி மேலும் அழிவிற்கு உள்ளாக் வருகின்றது

தமிழ்த் தேசிய வாதிகளின் பிரதான கழிப்பறையான அமெரிக்கனின் முகநூல் தளத்தில் ஆரம்பித்து ஊடகங்கள் ஈறாக உணவு விடுதிகளில் நடைபெறும் விருந்துபசாரங்கள் வரை ஜெயலலிதா மட்டும் தான் இன்றைய பேச்சு. ஒரு காலத்தில் வாழைக் குலையும் சாராயப் போத்திலும் விதானையாருக்குக் கொடுத்து கள்ளச் சேர்பிட்கட் வாங்கியது போல ஜெயலலிதா போன்ற கொள்ளைகாரர்களுக்கு வால் பிடித்து ஈழம் பிடித்துத் தருவோம் என்று அறிவித்த தமிழ்த் தேசிய வாதிகளுக்கு ஜெயலலிதா பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தீபாவளி. லண்டனில் ஹரோ பகுதியில் களியாட்ட விருந்து வேறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதெல்லாம் தமிழ் மொழித் தேசியத்தின் விளைபலனா என்று எண்ணத் தோன்றும். பிரஞ்சு மொழித் தேசியம், ஆங்கில மொழித் தேசியம், ஹிந்தி தேசியம் என்று யாரும் இதுவரை கூறியதில்லை.

தேசியம் என்றால் என்ன, தமிழ்த் தேசியம் என்பதன் பொருள் என்ன?

தேசியம் என்பது அன்னிய அதிகாரத்திற்கு எதிரான தேசத்தை உருவாக்கும் முறைமை. அதிலென்ன தமிழ்த் தேசியம்.? நேபாளி மொழி பேசும் பல் தேசிய இனங்கள் நேபாளத்தில் சுய நிர்ணைய உரிமை கோருகிறார்கள். ஐயர்லாந்துக் காரர்களும் பிரித்தானியர்களும் ஆங்கிலம் பேசுகிறார்கள். இவர்களிடம் போய் ஆங்கில தேசியம் என்று பேசினால் இரண்டு பகுதியுமே ஏற்றுக்கொள்ளாது. இதே போல தான் ஸ்கொட்லாந்து மக்களும் கூட. இது இன்னும் பிரன்ஸ்-பெல்ஜியம், பிரன்ஸ்-கோர்ஸ் என்று நீண்ட பட்டியலையே வழங்கலாம். ஆக தேசியம் என்பதும் தேசியப் போராட்டம் என்பதும் தேவையானதும் முக்கியமானதுமாகும் ஆனால் தமிழ்த் தேசியம் என்ற கண்றாவி அதன் நிறத்தையே மாற்றி அடிப்படை வாதம் போல தேசியத்தை மாற்றிவிட்டனர். இப்போது இஸ்லாமிய அடிப்படை வாதம், பௌத்த அடிப்படை வாதம், இந்துத்துவ அடிப்படை வாதம் போன்று தமிழ்த் தேசிய அடிப்படை வாதம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஈழத் தேசியத்தை தமிழ்த் தேசியமாக மாற்றி அதனை அடிப்படை வாதமாக்குவதற்கும் அழிப்பதற்கும் அதிகாரவர்க்கம் நிறையப் பங்களித்துள்ளது. புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்திய காலத்தில் வாடகைக்குப் பிடிக்கப்பட்ட நெடுமாறன், சீமான், வை.கோபாலசாமி ஈறான வகையறாக்களே தமிழ்த் தேசியத்தின் கர்த்தாக்கள். இவர்களே காங்கிரசைக் காணப் பிடிக்கவிலை என்று மோடி பாசிசத்தையும், கருணாநிதி பிடிக்கவில்லை என்று ஜெயலலிதாவையும் உருவேற்றுபவர்கள். ஏதாவது ஒருவழியில் அதிகாரவர்க்கத்தின் ஒட்டுண்ணிகளாக வாழப் பழகிக்கொண்டவர்கள்.

தேசியம் என்பது வெறுமனே மொழிசார்ந்த அடையாளமல்ல, ஒரு பிரதேசத்துள் வாழும் வரலாற்று வழி வந்த மக்கள் கூட்டத்தினர் தமக்கான பண்பாட்டு நடைமுறைகள் ஊடாக பொதுவான கலாச்சாரத்தைக் கொண்டிருப்பர். இவர்களிடையே தனியரசு அமைக்கக்கூடிய பொதுவான பொருளாதாரப் பிணைப்பு ஒன்று காணப்படும். மொழி இவர்களை இணைக்கும் மற்றொரு அம்சமாக இருக்கும். இவர்களை இணைக்கும் மத்தியத்துவப்படுத்தப்பட்ட சந்தைப் பொருளாதாரம் தோன்றும். இதுவே ஒரு தேசிய இனம் தோன்றுவதற்கான அடிப்படைகள். ஒரு மொழி பேசும் வெவ்வேறு முரண்பட்ட தேசிய இனங்களை பல்வேறு நாடுகளில் காணலாம். ஆக, தமிழ்த் தேசியம் என்ற ஒன்று தேசியமல்ல, அது பிழைப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக தங்குமடம்.

தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன?

சிறீ லங்காவின் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடுவதற்கு ஈழத் தமிழர்கள் தமது சுய நிர்ணைய உரிமைக்கான ஆயுதமேந்திய மக்கள் யுத்ததை நடத்துவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்பது உண்மை. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நாங்கள் கையெலெடுக்கிறோம் என்று அதனை அடிப்படை வாதமாக மாற்றிய தமிழ் நாட்டு மற்றும் புலம் பெயர் பிழைப்பு வாதிகள் தாம் அதிகாரத்தின் ஒட்டுண்ணிகளாக வாழ்வதற்கு ஒவ்வொரு காரணங்களை வைத்திருக்கிறார்கள்.

தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஒரு தேசிய இனம் தனது பிரிந்து செல்லும் உரிமைக்காக நடத்துகின்ற போராட்டம். அது தனத்த் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கும், தேசிய விழுமியங்களான கலாச்சார, மொழி, பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கும் நடத்தும் போராட்டம். வெறுமனே மொழியை மட்டுமே முன்வைத்து நடத்தப்படும் உணர்ச்சிகரக் காட்டுத் தர்ப்பார் அல்ல.

சரி, அப்படியானால் தமிழ் நாட்டிலிருந்து ஈழத் தேசியத்திற்கு ஆதரவாக யாரும் போராடக்கூடாதா என்ன?

நிச்சயமாகப் போராட வேண்டும் உலகில் எங்கு மக்கள் ஒடுக்கப்பட்டாலும் மனிதகுலம் என்ற அடிப்படையில் போராடுவதே சரியானது, அதிலும் தமிழ் நாட்டின் பின்புறத்தில் மொழி உட்பட பல்வேறு தொடர்புகளை உடைய கோமளவள்ளி ஐயங்கார் ஈழ தேசத்தின் விடுதலைக்காக அவர்கள் தமது ஆதரவைத் தெரிவிப்பது நியாயமானதே. ஆனல் தமிழ் மொழி தேசியவாதிகள் என்றும் உணர்வாளர்கள் என்றும் தம்மைத் தாமே அழைத்துக்கொண்டு ஈழத் தமிழரகளுக்காக மட்டுமே போராடுவதைத் தமது தொழிலாலக் கொண்டிருக்க்கும் இவர்கள் மீது சந்தேகம் எழுவது இயல்பானதே.

அவர்கள் பேசும் தமிழ்க் கலை மொழி என்று அவர்களின் வட்டத்தின் உள்ளேயே சுற்றிப் பார்த்தால் கூட அவை அதிகமாக அழிவிற்கு உள்ளாக்கப்படுவது தமிழ் நாட்டில் தான். அதுவும் தமிழ்த் தேசியத்தின் தூண்கள் என்று அறிவித்துக்கொள்ளும் சினிமாக்காரர்களால் தான்.! சமூகத்தின் மீது வன்முறை, பாலியல் வக்கிரம், அரைகுறை ஆங்கிலம் கலந்த அழுகிய தமிழ் ஆகியவற்றைக் கலந்த நச்சுக் கலவை தான் தமிழ்ச் சினிமா. இவை எல்லாம் தமிழ்த் தேசிய வாதிகளின் கண்களுக்குத் தெரிவதில்லை. தமிழ் நாட்டில் வறுமை, சாதிக்கொடுமை, பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கூட்டுக் கொள்ளை, இந்துத்துவத்தின் பாசிச வெறி ஆகிய அனைத்தையும் கடந்து ஈழ உணர்வு மட்டும் இவர்களுக்கு வருகிறது என்றால் அதை என்னென்பது!

தமிழ்த் தேசியவாதிகளும் உணர்வாளர்களும் யார்?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே பரமக்குடியில் கொன்று போட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிணங்களின் மேல் ஏறி நின்று பாக்கு நீரணைக்கு மேலால் எட்டிப்பார்த்து ஈழம் பிடிப்பதற்கு ஜெயலலிதாவை தமிழ்த் தேசிய வாதிகள் அழைக்க அதற்கு அரோகரா போட்டவர்கள் புலம்பெயர் புலி வியாபாரிகள்.

தன்னைச் சூழவரை நடக்கும் அனீதிகளைக்கு எதிராகக் கோபம் கொண்டு போராட முற்படுகிற மனிதனே சமூகப் போராளியாக முடியும். அதனைப் புறம்தள்ளிவிட்டு, தனக்கு நேரடியாகத் தொடர்பற்ற ஒரு மக்கள் கூட்டத்தின் பிரச்சனைக்காகப் போராட மட்டுமே நரம்புகள் முறுக்கேறும் என்றால் அவர்கள் யார்?

இக்கும்பல்கள் ஈழ மக்களின் விடுதலைப் போராடத்தை தாம் கையெலெடுத்து உலகில் போராடும் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தி அழித்துள்ளனர்.

ஈழ தேசியத்தை அடிப்படை வாதமாக்க்கி தமிழ்த் தேசியம் என்று கடத்தி வைத்திருப்பவர்கள் ஈழத் தமிழர்களுக்கு இதுவரை என்ன செய்தார்கள்?

இதுவரை எதுவுமே செய்ததில்லை. முள்ளிவாய்காலில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த வேளையில் அதன் கோரத்தைத் தணிப்பதற்காகவெனினும் போராட்டங்கள் நடத்தாமல் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். முள்ளிவாய்காலில் புலிகளும் பிரபாகரனும் கொலை செய்யப்பட்ட போது கூட பிரபாகர வருவார் மக்களே அமைதியாக இருங்கள் என்று இலங்கை இந்திய அதிகார வர்க்கங்களுக்குச் சேவை செய்தவர்கள் இவர்கள். இவர்கள் செய்யத் துணியாதவற்றைப் பட்டியல் போடலாம்.

முதலாவதாக, தமிழகம் எங்கும் முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யக் கோரியோ, முப்பதுவருடங்களாக மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்பட்டுக்கொண்ருக்கும் அகதிகளுக்கான அடிப்படை உரிமைகளுக்காகக் கூட இவர்கள் குரல்கொடுத்ததில்லை.

தமிழ் நாட்டிலிருந்து அண்மைக்கால தொப்புள் கொடி உறவுகளாகக் கருதப்படும் மலையக மக்கள் குறித்து இவர்கள் துண்டறிகை கூட விட்டதில்லை. இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்கு மிளச் சென்ற மலையகத் தமிழர்கள் அங்கும் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகளை இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. சினிமா, தொலைக்காட்சி சீரியல், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் போன்றவற்றால் தமிழ் கொலைசெய்யப்படும் போதெல்லாம் இவர்கள் கண்டுகொண்டதில்லை. இப்படிப் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஜெயலலிதாவை உணர்வாளர்கள் ஏன் ஆதரிக்கிறர்கள்?

இவர்கள் எப்போதும் உலகின் மிகக் கேவலமான அரசியல் வாதிகளின் வால்களாகவே இருந்துள்ளனர். ஜெயலலிதா என்ற அரசியல் மாபியாவும் மனநோயாளியும் கூவம் நதிக்கரையில் வாழ்க்கையை ஓட்டும் குழந்தைகளின் பணத்தையும் கொள்ளையடித்து மில்லியன் கணக்கில் சொத்துச் சேர்த்துக்க்கொண்டார். அது மட்டுமல்ல கின்னஸ் சாதனை நூலில் இடம் பெறும் அளவிற்கு திருமண வைபவத்தை நடத்திக்காட்டி மக்களுக்குச் சொன்னது ஒரு செய்தியைச் சொன்னார். நான் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிப்பேன் முடிந்தால் நடவடிக்கை எடுத்துப்பாருங்கள் என்று சவால் விட்டார்.

புலிகளை மட்டுமல்ல, ஈழ தேசத்திற்கான விடுதலைப் போராட்டத்தையே பயங்கரவாத யுத்தம் என வர்ணித்த ஜெயலலிதா ஆதரிக்கப்படும் அவமானத்திற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் தான் தமிழ்த் தேசியம்.

ஜெயலலிதாவை தமிழ் உணர்வாளர்கள் ஆதரிப்பதன் காரணங்கள் எவை?

ஈழ தேசியத்தை மொழி சார்ந்த தமிழ்த் தேசியமாக நாடுகடத்திய இவர்கள் ஜெயலிதாவை ஆதரிப்பதற்கு முன்வைக்கும் காரணங்கள் நகைச்சுவை நிறைந்த வில்லத்தனமானவை.

ஜெயலலிதாவின் கட்சி நின்று போனால் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்துவிடும் என்பதால் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டு மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்கிறார்கள். அதாவது தமிழர்களின் மானிலக் கட்சிகள் அழிக்கப்பட்டு மத்திய கட்சிகள் ஆட்சி செய்யும் என விவாதிக்கும் இவர்கள் ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள்.

சரி, இவர்களின் கருத்துச் சரியானது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து மாநிலக் கட்சியை அழிவுக்குத் தள்ளிய ஜெயலலிதாவைத் திட்டுவதே நியாயமாக இருந்திருக்க முடியும். அதைவிடுத்து மம்ஜீ நீ கொள்ளையடி, நாங்கள் ஆதரவு தருகிறோம் என்கிறார்கள், ஈழத் தமிழர்களின் கண்ணீரின் மேல் வியாபாரம் நடத்தும் இப் பிரகிருதிகள்..

கொலை, கொள்ளை, திருட்டு, ஏமாற்று வேலைகள் போன்ற அனைத்தையும் கொண்ட மாபியா வலையமைப்பின் தலைவியான ஜெயாவை மட்டுமல்ல கருணாநிதி, நரேந்திர மோடி, கோபாலசாமி நாயுடு போன்ற எல்லாப் பிழைப்புவாதிகளையும் ஆதரிக்கும் இவர்கள் ஈழ தேச விடுதலைப் போராட்டம் தொடர்பான தவறான விம்பத்தை உலகமக்களுக்கு வழங்குகிறார்கள்.

நாளாந்தம் இனக்கொலைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் போராட்டம் குறித்த தவறான பார்வையை வழங்கி அதனை அழிப்பதற்கு இவர்களுக்கு என்ன தேவையிருக்கிறது?

இதற்குப் பல்வேறு அழிவு சக்திகளின் ஒருங்கிணைவே காரணம். லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது இதுவரைக்கும் இல்லாத ஆங்கில தேசியவாதம் பேசப்பட்டது. ஆனால் ஒலிம்பிக் அரங்கத்தினுள் கொக்காகோலா என்ற அமெரிக்க நிறுவனம் விற்பனை செய்த குடிபானங்களைத் தவிர அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தது. இதே போல புலிகள் புலிகளின் அடையாளம் என்பவற்றை பயன்படுத்கி ஒருங்கிணைப்பது புலம் பெயர் வியாபாரிகளின் வர்த்தகத் தேவைகளுக்கு இலகுவான வழியாக அமைகிறது.

மல்ரி மில்லியன் வியாபாரங்களான கோவில், போக்குவரத்து, கல்வி, மாவீரர் விழா, தொலைக்காட்சி, சினிமா போன்ற பல்வேறு வியாபாரங்கள் அரசியலும் ஆபத்தும் இல்லாத இந்த ஒருங்கிணைவைப் பயன்படுத்தி வியாபாரம் நடத்த ஏதுவாகி விடுகின்றது. தவிர, புலம்பெயர் நாடுகளில் முடங்கிய புலிகளின் பணத்தை பதுக்குவதற்கு புலிகள் மற்றும் தமிழ்த் தேசிய அடையாளம் வாய்ப்பாக ஆமைந்தது. தமிழ்த் தேசிய அடையாளத்திற்கு எந்த வகையான சமூகத் தன்மையும் கிடையாது. ராஜபக்ச உட்பட ஏகாதிபத்திய நாடுகள், இந்திய உளவுத் துறை போன்ற பல்வேறு நாசகார சக்திகளை இது பலப்படுத்துவதாக அமைகிறது. இதனால் அதிகாரவர்க்கமும் உளவுத் துறைகளும் இதனை வளர்க்கின்றன.

புலம்பெயர் நாடுகளில் நடத்தப்படும் வியாபாரத்திற்கு எங்காவது ஒரு மூலையில் இலாபம் காட்டியாகவேண்டும். புலம்பெயர் செயற்பாடுகள் ஐ.நாவிலும் தமிழ் நாட்டிலும் அறுவடை செய்யப்படுகின்றன என்று சொல்லியாக வேண்டும். அதனால் தான் தமிழ் நாட்டு உணர்வாளர்களுக்கும் புலம்பெயர் வியாபாரிகளுக்கும் இடையேயான பிணைப்பு ஏற்பட்டது

யாரை நம்புவது?

தமிழ் நாட்டிலும் உலகம் முழுவதும் வாழும் மக்கள் தங்களைச் சுற்றி நடக்கும் அனீதிகளுக்காக அணிதிரண்டு போராடுகிறார்கள். அவ்வாறு தமிழ் நாட்டிலும் போராடும் சக்திகள் ஈழ மக்கள் ஒடுக்கப்படும் போதும் குரல் கொடுக்கிறார்கள். முதலாவது இவர்கள் தங்கள் முன்னால் உள்ள பிரச்சனைகளுக்காகப் போராடுகிறார்கள். இதன் விரிவாக்கமாக ஈழப் பிரச்சனைக்காகவும் போராடுகிறார்கள். இவர்களிடம் வியாபார நோக்கங்கள் கிடையாது. இவர்கள் அதிகார வர்க்கத்தினதும் பிழைப்பு வாதிகளதும் எதிரிகள். இவர்களே போராடும் மக்களது நண்பர்கள். இவ்வாறன அமைப்புக்களை அடையாளம் காண்பதும் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வதும் அவசியமானது மட்டுமல்ல அது ஒன்று மட்டுமே சாத்தியமானது.

http://inioru.com/?p=42380

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.