Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமந்தை சோதனைச்சாவடியும் வெளிநாட்டவர்களின் பயணப் பிரச்சனையும் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஓமந்தை சோதனைச்சாவடியும் வெளிநாட்டவர்களின் பயணப் பிரச்சனையும் - நவ கபில்:-
21 அக்டோபர் 2014
Omanthai_CI.jpg

இலங்கையில் பாதுகாப்பு தோரணைகள் காலத்திற்கு காலம் மாற்றமடைந்து வருகின்றமை பல்வேறு வழிகளிலும் இடையுறுகளையும் விசனங்களையும் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

எனினும் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு வியூகங்கள் இன்றியமையாத ஒரு விடயமாக காணப்பட்ட போதிலும் அதனூடாக சாதிக்கப்பட்டவை என்ன என்பது கருத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது.

அந்த வகையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தங்களின் போது ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி முக்கிய பங்கை வகித்திருந்தமை மறுக்க முடியாத விடயமாகும்.

இவ்வாறான நிலையில் காலத்திற்கு காலம் ஓமந்தை சோதனை சாவடியிலும் பாதுகாப்பு நிலையை கருத்தில் காட்டி பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்ட விடயமே.

இவை யுத்த கால நிலையை கருத்தில் கொண்டு அமைந்திருந்தாலும் தற்போதைய சூழலில் ஓமந்தை இராணுவ சோதனை சாவடி பல்வேறு விமர்சனங்களுக்கும் விசனங்களுக்கும் உள்ளாகியிருப்பது பாதுகாப்பு தரப்பினரும் அறிந்த விடயமாகவே உள்ளது.

குறிப்பாக இரு நாடுகளில் எல்லையோரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்படும் சோதனை சாவடியை விட மோசமாக உள்நாட்டு மக்களை சோதனைக்குட்படுத்தும் துர்ப்பாக்கிய நிலையையே வடக்கை கடக்கும் அனைவரும் எதிர்கொள்கின்றனர் என்பதே ஜதார்த்தம்.

யுத்த காலத்தில் வடக்கில் இருந்து தெற்கிற்கும் தெற்கில் இருந்து வடக்கிற்கும் நகரும் மக்கள் உடல் மற்றும் உடமை சேதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பல மணி நேர விரயத்தின் பின்னர் நகர அனுமதிப்பது வழக்கமாக இருந்து வந்தது.

இதன் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடி என்றால் எல்லோரும் கிலி; கொள்ளும் அளவிற்கு இருந்தது மாத்திரமன்றி சர்வதேச பார்வையிலும் ஓமந்தை சோதனை சாவடி அவதானிக்கப்பட்ட விடயமாகவே உள்ளது.

இந் நிலையில் யுத்தத்தின் பின்னரும் இச் சோதனைசாவடியின் செயற்பாடு இடம்பெற்று வருகின்றமை பாதுகாப்பு விடயமாக காட்டப்பட்டு வருகின்ற போதிலும் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்வை சோதனை செய்வதாகவே இது அமைந்துள்ளது என்பதே பலரது கருத்துமாகும்.

யுத்தம் நிறைவடைந்து ஓராண்டு கடந்த நிலையில் வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொலிபஸ் பெரோரா ஓமந்தை சோதனைச்சாவடியில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டு ஓமந்தை சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு மாத்திரமே சோதனை இடம்பெறும் எனவும் ஏனைய வாகனங்கள் சுதந்திரமாக செல்ல முடியும் எனவும் அறிவித்ததுடன் ஊடகவியலாளர்கள் ஓமந்தை சோதனைச்சாவடியில் செய்தி சேகரிக்கவும் அன்றைய தினம் அனுமதித்திருந்தார்.

இத்தனை ஆண்டுகளாக வேதனை நிறைந்த கதைகளை கூறிய ஓமந்தை சோதனைச்சாவடி அகற்றப்பட்டதாக பூதாகாரமாக வெளியில் வந்த அந்த செய்தி நீண்ட நாள் நிலைப்பதற்கு வாய்ப்பின்றி போயிருந்தது.

ஓரு சில வாரங்களிலேயே மீண்டும் சோனைகள் கெடுபிடியாக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் உட்பட பலரும் மறிக்கபட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அரச ஊழியர்களும் கடும் சோதனைக்க உட்படுத்தப்பட்டிருந்தமை வரலாறாகியது.

அத்துடன் இவ் ஓமந்தை சோதனைச்சாவடி உள்ளுர் மக்களுக்கு மாத்திரமின்றி வெளிநாடுகளில் இருந்து வருவபவர்களுக்கு பெரும் சோதனை மிகுந்ததாகவே இருந்தது என்பதற்கு மறுப்பதற்கில்லை. பல தடவைகள் ஓமந்தை சோதனைச்சாவடியில் வெளிநாட்டவர்கள் வடக்கிற்குள் நுழைவதற்கு பல்வேறு வகையான நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பு கொண்டு வருவதும் பின்னர் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் தேர்தல்கள் களை கட்டும் போது முழுமையாக நிக்குவதுமான ஓரங்க நாடகம் பல நிகழ்ந்திருந்தன.

இவ்வாறான காலச்சூழலிலேயே விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் என்றும் அதன் மூலம் வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தல் எனவும் தெரிவித்து ஓமந்தை சோதனைச்சாவடி படு பயங்கரமான சோதனைச்சாவடியாக உரு மாற்றப்பட்டது.

வடக்கில் இருந்து தெற்கிற்கும் தெற்கில் இருந்து வடக்கிற்கும் நகரும் அனைவருமே சந்தேக கண் கொண்டு பார்க்கப்படும் ஒரு மத்தியஸ்தானமாக உருவாகிய ஓமந்தை சோதனைச்சாவடியில் பல சோகங்கள் நிகழ்ந்ததை காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையிலும் கண்ணீரோடு கூறி நின்றது.

இஷ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடைப்பட்ட பகுதியும், இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடைப்பட்ட பகுதியும் எவ்வாறு எப்போதெல்லாம் பதற்றமாக இருக்குமோ அதேயளவிற்கு ஓமந்தை சோதனைச்சாவடியை உருவாக்கிய பெருமை பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளில் காணமுடிந்தது.

இந் நிலையிலேயே கொழும்பில் இடம்பெற்ற பயிற்சிக்காக சென்ற ஊடகவியலாளர்கள் மறிக்கப்பட்டு கஞ்சா கொண்டு சென்றதாக சிரமங்கள் கொடுக்கப்பட்டு ஊடகவியலாளர்களை அர்த்த சாமத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு கொண்டு சென்றிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே ஓமந்தை சோதனைச்சாவடிய அமைக்கப்பட்டுள்ள காணிகள் உள்ளடங்களாக 20 ஏக்கர் காணிகளை காணி சுவீகரித்தல் சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்பு படைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அக் காணிகளுக்கான உரிமையாளர்கள் பலர் வவுனியா மாவட்டத்திலேயே உறவினர்கள் மற்றும் நண்பாகள் வீடுகளில் வாழும் நிலையில் இக் காணிகளை சுவீகரித்து இச் சோதனை சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது அக் காணிகளுக்குரிய உரிமையாளர்கள் பல்வேறு சட்ட முறைமைகளை பிரயோகித்தும் அவை தீர்வின்றி தொடரும் கதையாகியுள்ளது.

இந் நிலையிலேயே தற்போது வடக்கிற்கு செல்லும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய நடைமுறைகளை பாதுகாப்பு அமைச்சு கொண்டு வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் கொண்டு வரப்பட்ட இந் நடைமுறை தொடர்பில் வெளிப்படையான தன்மை இல்லாத நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பலரும் ஓமந்தை சோதனைச்சாவடியில் இருந்து திருப்பி அனுப்பட்ட துர்ப்பாக்கியம் நிகழ்ந்த போது யாழ்;பபாணத்தில் தமது உறவுகளுக்காக காத்திருந்த பலரும் செய்வதறியாது திகைத்திருந்தனர்.

புதிய நடைமுறை தொடர்பில் யாரிடம் கேட்டறிவது என்பது கூட தெரியாத நிலையில் பல கோட்டல் உரிமையாளர்களும் தமது கோட்டல்களில் பதிவு செய்யப்பட்டதன் பிரகாரம் விருந்தினர் வராமையினால் விழிபிதுங்கியிருந்த நிலையிலேயே புதிய நடைமுறை தொடர்பில் ஒவ்வெருவரிடமும் அறிய முயன்றனர்.

இதன்போதே இணையத்தளங்களில் வெளிநாட்டவர்களின் பயணக்கட்டுப்பாடு தொடர்பிலும் வடக்கிற்கான பயணங்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச் செய்தி வெளியாவதற்குள் பல வெளிநாட்டவரும் வட பகுதிக்குள் செல்ல முடியாத வகையில் திருப்பி அனுப்பப்பட்ட நிலை காணப்பட்டது.

இந் நிலையில் ஜனாதிபதியின் வட பகுதி விஜயத்திற்காகவே இவ்வாறான பாதுகாப்பு நடைமுறை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்தபோதிலும் கடந்த 15 ஆம் திகதி இவ்விடயம் தொடர்பில் வாய் திறந்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக நிலைய பணி;ப்பாளர் பிரிகேடியர் வணிகசூரிய வெளிநாட்டவர்கள் தொடர்பில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய நடைமுறைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இதன் பிரகாரம் வடக்கிற்கு செல்லும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்று செல்லவேண்டும் எனவும் இல்லையேல் பல்வேறான இடையூறுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படலாம் எனவும் இவ்வாறான நடைமுறை கொண்டு வருவதற்கான காரணம் 100ற்கு 99 வீதமானவர்கள் வடபகுதிக்கு நல்ல நோக்கங்களுக்காக அல்லது மக்களுக்கு உதவும் செயற்பாடுகளுக்காக சென்றாலும் அதில் ஒரு சிலர், நாட்டில் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தவும் இலங்கை தொடர்பில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அதற்கு நாம் இடம்தரபோவதில்லை என தெரிவித்திருந்தார்.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறுவது தொடர்பில் தொலைபேசி இலக்கமொன்றினையும் முகவரியொன்றினையும் வெளியிட்டிருந்தார்.

இதன் பின்னர் பல வெளிநாட்டவர்கள் ஓமந்தை சோதனைச்hவடியில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளிநாட்டவர்கள் என்ற காரணமத்தினால் பாதுகாப்பு அமைசிசின் அனுமதி பெறவில்லை என தெரிவித்து திருப்பி அனுப்பட்டதுடன் புகையிரத்தில் பயணம் செய்வொரும் ஓமந்தை புகையிரத நிலையத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
இந் நிலையிலேயே வன்னி பாராளுமன்ற உறு;பபினர் சிவசக்தி ஆனந்தன்  தெரிவிக்கையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை உடையவர்கள் வடக்குக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியை பெற வேண்டும் என்று அமுல்படுத்தப்பட்டிருந்த நடைமுறையை இறுதி யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களில் அதாவது 2011ம் வருடம் ஜீலை மாத தொடக்கத்தில் நீக்கியிருந்த சிறீலங்கா அரசு, கடந்த 15.10.2014 அன்று அதாவது இறுதி யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களில் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் இந்த அறிவிப்பை வெளிநாடுகளிலிருந்து வட பகுதிக்கு செல்பவர்களை கட்டுப்படுத்தும், அல்லது அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். இதை விடவும் இலங்கையின் வேறு எந்த ஒரு பகுதிக்கும் பயணிப்பதற்கு விதிக்கப்படாத நடைமுறையானது வடக்கு மாகாணத்துக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ளமையானது சிறீலங்கா அரசின் இராணுவ மேலாதிக்க மனோநிலையின் வெளிப்பாடாகும்.  

வடபகுதி மண்ணும் அந்த மண்ணுக்குரிய தமிழ் பேசும் மக்களும் தொடர்ந்தும் இராணுவ முற்றுகைக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கும், வடபகுதிக்கு யார் யார் வருகிறார்கள்? யார் யார் வடபகுதி மக்களை சந்தித்து பேசுகின்றார்கள்? என்று சிறீலங்கா அரச இயந்திரம் வடபகுதி மக்களை மிகத்தீவிரமாக கண்காணிக்கின்ற அதேவேளை அம்மக்களை சந்தித்து பேச வருபவர்களை பின்தொடர்ந்து செல்கின்றது என்பதற்கும் பாதுகாப்பு அமைச்சின் குறித்த அறிவிப்பு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். அத்துடன் சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடுகள் தொடர்ந்தும் தமிழ் மக்களின் இருப்பை, இயல்பு வாழ்க்கையை குலைக்கின்றன என்பதற்கும் குறித்த அறிவிப்பு கட்டியம் கூறுகின்றது.

கூடவே இலங்கையின் வேறு எந்த பகுதிக்கும் பின்பற்றப்படாத நடைமுறையை வடக்குக்கு மட்டும் அமுல்படுத்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்திருப்பதானது, தமிழ் மக்களை அடக்கி ஆள நினைக்கும் அரச பயங்கரவாதத்தின் இராணுவ மயப்படுத்தும் சிந்தனையின் ஓர் அங்கமே ஆகும். மேலும் வடமாகாணம் இலங்கையின் ஒரு பகுதியா? இல்லை தனி ஒரு நாடா? என்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே வடக்கு மக்களையும் அவர் சார் வெளிநாட்டு உறவுகளையும் புதிய நடைமுறை கொண்டு அல்லோல கல்லோலப்படவைக்கும் இச் செயற்பாடுகள் ஆழ் மனப்பகையின் வெளிப்பாடாகவே எண்ணத்தோன்றுகின்றது.
எனவே ஆட்சியாளர்கள் அன நல்லுறவின் வளர்ச்சிக்கு இன ரீதியான ஓரங்கட்டல் எனும் ஆயுதத்தை விடுத்து ஆக்கபூர்வமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்பதே காலத்தின் தேவை.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112729/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.