Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தீர்மானங்களை நிறைவேற்றும் சபையல்ல! - அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்

Featured Replies

cvk5983rf.jpg

 

கடந்த 25 ஆம் திகதியுடன் வட மாகாண சபை உருவாக்கப்பட்டு ஒரு வருடகாலம் நிறைவடைந்திருக்கும் நிலையில் குறித்த வருடத்தில் சுமார் 138 தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
 
ஆனாலும் தீர்மானங்கள் நிறைவேற்றும் சபையாக நாம் இருக்கவில்லை எனவும் அவர் கூறினார். மாகாண சபையின் ஒரு வருட நிறைவின் பின்னர் 18 ஆவது அமர்வு பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவைத் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அமர்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் -
 
நாம் ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கின்றோம். இந்த ஒரு வருடகாலத்தில் மொத்தமாக 138 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றோம். வெளியில் உள்ளவர்கள் சில விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். நாங்கள் தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றும் சபையாக இருக்கின்றோம் என கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. நாங்கள் எங்கள் மக்களுடைய அரசியல், சமூக, வாழ்வாதார, மீள்குடியேற்றம், காணி பிரச்சினைகள், படையினரின் ஆக்கிரமிப்புக்கள், படையினரின் பிரசன்னங்கள் குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றோம்.
 
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் அனுப்பியிருக்கின்றோம். அதற்குள் 2014ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பித்திருக்கின்றோம். நிதி நியதிச் சட்டம், முத்திரை வரி கைமாற்றுச் சட்டம். ஆகிய நியதிச்சட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றோம்.
 
இவற்றையெல்லாம் நாம் குறுகிய காலத்திற்குள் செய்து முடித்திருக்கின்றோம். மற்றைய மாகாணங்கள் 25 வருடகால அனுபவத்தை பெற்றிருக்கும் நிலையில் நாங்கள் வெறுமனே ஒரு வருடகால அனுபவத்தில் இத்தனையையும் செய்து முடித்திருக்கின்றோம். எம்மைக் குறித்து பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும், நாம் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றோம். என்பதே உண்மையாகும் - என்றார்.
 
http://malarum.com/article/tam/2014/10/28/6541/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-138-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-.html#sthash.NGsOASmZ.dpuf
 
 
  • தொடங்கியவர்

 

http://thinakkural.lk/video.php

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.