Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப் படுகின்றமைக்கு ஐ.நா கடும் கண்டனம் - பீரிஸிடம் எடுத்துரைப்பு

Featured Replies

un_CI.jpg

ஜெனீவா மனித உரிமைச் சபையின் சர்வதேச விசாரணைக்கு சாட்சியம் வழங்கும் நபர்கள்; கைது  செய்யப்படுகின்றமை விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் கடும் கண்டம் தெரிவித்துள்ளதாக  கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

சாட்சியம் வழங்கிய நபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டமை மற்றும் புலனாய்வு  துறையினரின் தேவையற்ற விசாரணைகள் குறித்து வெளியுறவு அமைச்சர் பேரரிசிரியர்  பீரிஸிடம் கடும் கண்டனம்; வெளியிட்டதாக கூறப்படுகின்றது.

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது என  அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற  மனித உரிமைச் சபையின்  கூட்டத்தொடரில் உறுதியளித்திருந்தது.

அந்த உறுதி மொழிக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்று ஐ.நா அதிகாரி ஒருவர்  கூறியதாகவும் புலனாய்வு பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டினார் என்றும்  கொழும்புத் தகவல்கள் குறிப்பிட்டன.

அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மீளிணக்க  ஆணைக்குழுவிற்கு முன்பாக சாட்சியமளித்த சில குடும்ப பெண்களும் மற்றும் விடுதலை  செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை குறித்தும்  தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது எனவும் ஐ.நா அதிகாரி வெளியுறவு அமைச்சர்  பேராசிரியர் பீரிஸிடம் கூறியதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113017/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.