Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லயன்எயர் விமானம் வீழ்த்தப்பட்ட வழக்கு – நீதிமன்றில் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து விசாரணை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
லயன்எயர் விமானம் வீழ்த்தப்பட்ட வழக்கு – நீதிமன்றில் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து விசாரணை. 
[Tuesday 2014-11-04 09:00]
court-order-150-news.jpg
இரணைதீவு கடலில், கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது தொடர்பான வழக்கை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விசாரிக்குமாறு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமா சுவர்ணாபதி பணித்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே நீதிபதி மேற்கண்டவாறு பணித்தார். இதன்படி இம்மாதம் 10, 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
   
இரணைதீவுக் கடலில் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்களில் 11பேர் தங்களுடைய உறவினர்களின் பொருட்களை அடையாளம் காட்டியுள்ளனர் என்று பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தஸநாயக்க தெரிவித்தார். இதற்கு முன்னரும் இந்த வழக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.
 
சம்பவம் தொடர்பில் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் இருவரையும் அந்த மூன்று நாட்களும் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஆஜர்படுத்துமாறும் பணித்தார்.http://www.seithy.com/breifNews.php?newsID=120035&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.