Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோதிடர்களே தேர்தல் திகதிகளை தீர்மானிக்கின்றனர்! - ரணில் குற்றச்சாட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜோதிடர்களே தேர்தல் திகதிகளை தீர்மானிக்கின்றனர்! - ரணில் குற்றச்சாட்டு. 
[Tuesday 2014-11-04 09:00]
Ranil-200-1-news.jpg
தேர்தல் திகதி பற்றிய தீர்மானத்தை ஜோதிடர்களிடம் விட வேண்டிய பரிதாப நிலையில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பரிய இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது, ஜனாதிபதிக்கும் அவரின் கீழ் வரும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்ட செலவின் தலைப்புகள் மீதான விவாதத்தை தொடங்கிவைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
அரசியலமைப்பின் படி தேர்தல் திகதியை தீர்மானிப்பவர் தேர்தல்கள் ஆணையாளர் தான். ஆனால், இந்த அரசாங்கத்தில் அவருக்கு இந்த அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளது. இப்போது ஜோதிடர்களே தேர்தல் திகதிகளை தீர்மானிக்கின்றனர். அரசியலமைப்பின்படி, ஜனாதிபதிக்கு பதவியின் நான்கு வருட பூர்த்தி செய்த பின்னர் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் உண்டு. எதிர்வரும் தேர்தலில் முழு பொலிஸ் திணைக்களத்தையுமே அரசாங்கத்துக்காக வேலை செய்ய வைப்பதற்கு ஊக்குவிக்கும் நோக்கில் உயர் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து ஒரு கூட்டமொன்றை அரசாங்கம் நடத்தியுள்ளது.
 
பொலிஸ் திணைக்களம் அரசை பாதுகாப்பதற்காகவே உள்ளதன்றி அதிகாரத்திலுள்ள கட்சியை பாதுகாக்கவென உருவாக்கப்படவில்லை. ஆளும்கட்சி தனது நிகழ்வுகளுக்காக அரசியல் சோடனைகளை செய்வது பரவாயில்லை. ஆனால் இந்த வாய்ப்பு வேறு காட்சிகளுக்கும் வழங்கப்படவேண்டும். இப்போது பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்துக்காக மட்டும் வேலை செய்யும் படி கேட்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் செயலாளரும் இந்த கூடத்தை நடாத்தினர் என்று அவர் குற்றம் சாட்டினார்.http://www.seithy.com/breifNews.php?newsID=120039&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.