Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணமற்போன கணவரை மீட்டுத்தருமாறு தொடர்போராட்டங்களை நடத்திவரும் மயூரி இனோகா கடத்தப்பட்டு எச்சரிக்கை

Featured Replies

mayuru%20inoka_CI.jpg

காணமற்போன தனது கணவரை மீட்டுத்தருமாறு தொடர்போராட்டங்களை நடத்திவரும் மயூரி இனோகா என்ற பெண்மணியை இனந்தெரியாதவர்கள் கடத்தி கணவரை தேடும் முயற்சியை கைவிடுமாறு எச்சரித்த பின்னர் வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு  தெரிவித்துள்ளதாவது

காணமற்போன மதுசிகா ஹரிஸ் டி சில்வாவின் மனைவி மயூரி  நவம்பர் முதலாம் திகதி கடத்தப்பட்டார்.இவரது கணவர் செப்டம்பர் 2013 காணமற்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணமற்போனவர்களுக்காக சீதுவ-ரத்தொழுவையில் நவம்பர் 27 ம் திகதி நடைபெற்ற நிகழ்வில் மயூரி கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.

இதன்பின்னரே அவர் கடத்தப்பட்டுள்ளார். தன்னுடைய இரட்டை குழந்தைகளுக்காக பால்மா வாங்குவதற்காக அனுராதபுரத்தில் கடையொன்றிற்கு சென்றுகொண்டிருந்த வேளையே அவர் கடத்தப்பட்டுள்ளார். தன்னை பின்தொடர்ந்து வந்த அவர்கள் பின்னர் தான் பயணித்த முச்சக்கரவண்டியையே பயன்படுத்தி தன்னை கடத்திச்சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் ஒருவர் என்னை முச்சக்கர வண்டியில் கூட்டிச்சென்று, பின்னர் தன்னை வான் ஒன்றில் ஏற்றியதாகவும், குறிப்பிட்ட வான் ஒரு மணிநேரமாக பயணித்துக்கொண்டிருந்த வேளை தான் துற்பிரயோகத்திற்;கும், மிரட்டலிற்க்கும் உட்படுத்தப்பட்டதாகவும், காணமற்போனவர்கள் சார்பாக செயற்படும் அமைப்புகளின் நிகழ்வுகளில் பங்கெடுக்க வேண்டாமென தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை கடத்தியவர்களில் ஒருவர் பல தடவை துப்பாக்கியை காட்டி தன்னை சுடப்போவதாக மிரட்டடியதாகவும்,தனது கணவர் இருக்கும் இடத்திற்;கு தன்னையும் அழைத்துப்போகபோவதாக தெரிவித்ததாகவும், குறிப்பிட்டுள்ள மயூரி,தான் மிகுந்த அச்சமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் அவர்கள் தன்னை நொச்சியகமவில் உள்ள வீதியொன்றில் வீசிவிட்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணமற்போன தனது கணவர் எங்கிருக்கின்றார் என்ற விபரங்களை வெளியிடுமாறு கோரி மயூரி ஒவ்வொரு மாதமும் -அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்க்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.அவரது கணவர் தொடர்பான விசாரணை இன்று அனுராதபுரம் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

மயூரி தனது கணவர் காணமற்போனதன் பிண்ணனியில் இருப்பதாக தான் கருதும் பொலிஸ்உத்தியோகத்தர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னரும் மயூரி மிரட்டல்களுக்குள்ளாகியுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113204/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.