Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜபக் ஷவுக்கும் மங்களவிற்குமிடையில் இரகசிய சந்திப்பு , ஜனவரி 2 , ஜனாதிபதி தேர்தல்?

Featured Replies

mangala-samaraweera-mahinda-rajapaksa_2.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக  அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த மூன்றாம் திகதி இரவு மொரட்டுவை பகுதியில் வைத்து இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும்  அந்த சந்திப்பின்போது  அரசியலமைப்பு திருத்தம் மற்றும் தற்போதுள்ள அமைச்சுக்களில்  சிலவற்றை மாற்றியமைத்தல்  மற்றும் மங்களவின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும்  தெரிவிக்கின்றன.
 
அத்தகவல்கள் மூலம் மேலும் தெரிய வருவதாவது,
ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன்  இணையவுள்ளதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகின. இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதிக்கும் மங்களவிற்குமிடையில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது.
 
கடந்த மூன்றாம் திகதி இரவே  இந்த இரகசிய சந்திப்பு ஜனாதிபதிக்கும் மங்கள சமரவீரவுக்கும் இடையில்  இடம்பெற்றதாகவும் அச்சந்திப்பையடுத்து  மங்களசமரவீர  சிங்கப்பூருக்கு பயணமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சிங்கப்பூர் சென்றுள்ள மங்கள சமரவீர நாடு  திரும்பியதும் ஜனாதிபதியுடன் மற்றுமொரு முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
 
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் விரைவில் அவர்களது பெயர் விபரங்களையும் வெளியிடுவோம் எனவும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் அண்மையில் பகிரங்கமாக தெரிவித்தார்.
 
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கு பிரதி தலைவர் பதவி வழங்கப்பட்டதையடுத்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைவதற்காக வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது சர்வதேச அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பேசப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க  குமாரதுங்க மங்கள சமரவீரவை அரசாங்கத்துடன் இணைய வேண்டாம் என கூறியதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://virakesari.lk/articles/2014/11/09/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

மங்கள, நாமல் நான்கு முறை சந்திப்பு

 

 

samaraveera.jpgஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும்  இடையில் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, சிங்கபூருக்கு பயணிப்பதற்கு முன்னர், அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், கொழும்பிலுள்ள மங்களவின் வீட்டில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/132502-2014-11-08-14-08-48.html

  • தொடங்கியவர்

மங்கள இணைந்தால் அமைச்சரவை மாற்றம்?

 

சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது விஜயத்தை முடித்து கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 
அவர், நாடு திரும்பியதன் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொண்டாராயின் அமைச்சரவையில் இன்று அல்லது நாளை திங்கட்கிழமை மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவருகின்றது.
 
மங்கள சமரவீர, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் அவருக்கு வெளிவிவகார அமைச்சர் அல்லது துறைமுக அமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம் இணைங்கி கொண்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 
 

ஜனவரி 2 ஆம் திகதி, ஜனாதிபதி தேர்தல்?

 

அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.