Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆழமான ஆபத்து—ஜெரமி பேஜ்- ரஜீபன் - தமிழில் ரஜீபன்

Featured Replies

china%20sub_CI.jpg

கடந்த வருடம் டிசம்பர் மாதம்  தனது நாட்டிலுள்ள தூதரகங்களில் பணியாற்றும் உலக நாடுகளின்பாதுகாப்பு அதிகாரிகளை தனது தலைநகரத்திற்க்கு வருமாறு சீனா அரசாங்கம் தீடீர் உத்தரவொன்றை பிறப்பித்தது. அந்த சந்திப்பின் போது சீனா அதிகாரிகள் தமது நாட்டின் நீர்மூழ்கி விரைவில் மலாக்கா நீரிணையூடா பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.-

மலாக்கா நீரிணை என்பது இந்தோனேசியாவிற்க்கும்- மலேசியாவிற்க்கும் நடுவில் அமைந்துள்ள பகுதி,உலகின் பெருமளவு வர்த்தகம் இப்பகுதியூடாகவே இடம்பெறுகின்றது.

இந்த சந்திப்பிற்கு இரண்டு நாட்களுக்கு பின்னர்-எதிரி நாடுகளின் கலங்களை கண்டுபிடித்து தாக்கி அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சீனாவின் அதிநவீன நீர்மூழ்கிகளில் ஒன்றான-ஹன்டர்கில்லர்- மலாக்கா நீரிணை பகுதியில் பயணம்செய்து காணமற்போனது- பின்னர் அது இலங்கை கடற்பரப்பிலும் பின்னர் பேர்சிய வளைகுடாவிலும் தோன்றியது. பின்னர் மலாக்கா நீரிணை ஊடாக மீண்டும் பயணித்து பெப்ரவரியில் சீனாவை வந்தடைந்தது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இந்து சமுத்திரப்பகுதியில் அறிவித்துவிட்டு மேற்கொண்ட  முதலாவது பயணமிது.

சீனா இதன் மூலமாக தெளிவான ஒரு செய்தியை தெரிவித்தது- ஆழமான கடற்பகுதியூடாக பயணம் செய்யக்கூடிய அணுவாயுதநீர்மூழ்கியை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இணையவேண்டுமென்ற சீனாவின் நீண்ட நாள் கனவு சாத்தியமாகிவிட்டது.

இதன பின்னர் மீண்டும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சு வெளிநாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்திருந்தது-இம்முறை இந்துசமுத்திர பகுதியில் தனது நீர்மூழ்கியை நிறுத்தியுள்ளது குறித்து குறிப்பிடுவதற்காக அவர்களை அழைத்திருந்தது.இம்முறை அந்த நீர்மூழ்கி இலங்கையில்  காணப்பட்டது.

பிராந்திய அச்சங்கள்

சீனாவின் நீர்மூழ்கிகளின் நடவடிக்கை தீவிரமடைந்துவருவது, பிராந்தியத்தின மிகப்பெரும் இராணுவசவாலக மாறிவருகின்றது, சீனாவின் நீர்மூழ்கிகளின் எண்ணிக்கையும் திறனும் அதிகரித்து வருவது-அதன் அணுவாயுத திறனை மாத்திரம் அதிகரிக்கவில்லை,தனது பகுதிகள் என சீனா கருதுபவற்றை பாதுகாக்க கூடிய அதன் திறனையும் அதிகரிக்கின்றது. இந்த வருடம் சீனா பூமர் எனும் நீர்முழ்கியை கடலுக்குள் அனுப்பவுள்ளது. இந்த நீர்மூழ்கி அணுஏவுகணைகளை கொண்டிருக்கும் என்கின்றனர்- அமெரிக்காவின் கடற்படை புலனாய்வு அதிகாரிகள். சீனா தனது அதிநவீன பூமர்களை மறைப்பதற்க்கு நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை,சீனாவின் ஹைனான் பிராந்தியத்திற்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்ட உல்லாசப்பயணிகளால் இந்த பூமர்கள் மூன்றை கடற்கரையோரமொன்றில் காணமுடிந்துள்ளது.

இந்த பூமர்களில் காணப்படும் ஏவுகணைகள் கிழக்குஆசியாவிலிருந்து ஹவாய் மற்றும் அலாஸ்காவை தாக்க கூடியவை. பசுபிக்கின் நடுப்பகுதியிலிருந்து அமெரிக்காவின் சில பகுதிகளை இலக்குவைக்க கூடியவை என்பதை அமெரிக்க அதிகாரிகளே ஏற்றுக் கொள்கின்றனர். எமது தாய்மண்ணை பெருமிதம்கொள்ளச்செய்யும், எதிரி களை நடுங்கச்செய்யும் துருப்புச்சீட்டு இது எனதெரிவிக்கின்றார்- சீனாவின் கடற்படைத்தளபதி அட்மிரல் செங்கிலி கம்யுனிஸ்ட் கட்சியின் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையொன்றில் இதனை தெரிவித்த அவர் இது கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த சக்தி, எமது வல்லரசு அந்தஸ்தை சுட்டிக்காட்டுவதுடன்,தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார்.

ஏயை நாடுகளின் கடற்படைத்தளபதிகளுக்கு இந்துசமுத்திரப் பகுதியில் தடையற்ற பயணத்தை சீனா நீர்மூழ்கி மேற்கொண்டது என்பது மிக முக்கியமான விடயம்.

ஹவாயிலுள்ள அமெரிக்க கடற்படையின் பசுவிக் கடற்படை பிரிவுவரை தன்னால் சென்றுவர முடியும் என சீனா நிரூபித்துள்ளது அவர்களை அதிர்ச்சியிலாழ்த்தியுள்ளது.

அவர்கள் தங்களுடைய செய்தியை மிகத்திறமையாக தெரிவித்துள்ளனர் என்கிறார்-அமெரிக்காவின் கடற்படை பிரிவொன்றிற்கு பொறுப்பாகவுள்ள நீர்மூழ்கி அனுபமுள்ள ரொபேர்ட் தோமஸ்- நாங்கள் தொழிற்சார் தன்மையுடைய கடற்படையை கொண்டிருக்கிறோம், தொழிற்சார் தன்மையுடைய நீர்மூழ்கி பிரிவை கொண்டிருக்கின்றோம், நாங்கள் வல்லரசு, என்ற  செய்தியை சீனா தெரிவித்துள்ளது என்கிறார் அவர்.

கடந்த வருடங்களில் உலக நாடுகளின் கவனம் சீனாவின் அதிகரித்து வரும் இராணுவத் தளபாடங்கள் குறித்து திரும்பியுள்ளது. விமானங்தாங்கி கப்பல்கள், அதிநவீன தாக்குதல் விமானங்கள், என அது தன்னை பலப்படுத்தியுள்ளது.

சீனாவின் நீர்மூழ்கிகள் ஏன் முக்கியமானவை ஆனால் நீர்மூழ்கியின் கதை வேறு- அது கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த ஆயுதம்-ஒரு நீர்மூழ்கியே சீனாவின் வல்லமையை பறைசாற்றவும்,தன்னுடைய வெறும் பிரசன்னம் மூலமாக ஏனைய நாடுகளை தடுத்து நிறுத்தவும் போதுமானது.

தாய்வான், அல்லது ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடனான மோதலில் அமெரிக்கா தலையிடுவதை தடுப்பதற்கான தந்திரோபாயத்தின் ஒரு பகுதியே இந்த நீர்மூழ்கிகள் என அமெரிக்கா கருதுகின்றது. அமெரிக்காவின் சகாக்களான ஜப்பானும்,பிலிப்பைன்சும் சீனாவுடன் நிலப்பகுதிக்கான தகராறில் சிக்கியுள்ளன.

சீனாவின் ஒரு சில பூமர் நீர்மூழ்கிகளே , அமெரிக்காவை கடலிலிருந்து மேற்கொள்ளப்பட கூடிய ஏவுகணை தாக்குதல் குறித்து சிந்திக்க தூண்டியுள்ளது- அதனை எதிர்கொள்வது குறித்து அமெரி;க்கா திட்டமிட்டுவருகின்றது.

சீனாவின் ப+மர் நீர்மூழ்கிகள் உலகில் கடல் ஆகாயம் மற்றும் தரையிலிருந்து அணுவாயுத தாக்குதல்களை மேற்கொள்ள கூடிய 3 நாடுகளில் ஒன்றாக சீனாவை மாற்றியுள்ளது- அமெரிக்காவும், ரஷ்யாவும் மற்றயை நாடுகள்.

அமெரிக்காவின் நீர்மூழ்கிகளையும்,சர்வதேச அளவில் பயணம் செய்ய கூடிய அதன் திறமையையும், உலகின் பல பகுதிகளில் அதனால் அமெரிக்கா செல்வாக்கு செலுத்தக்கூடியதாக உள்;ளதையும் சீனா பல வருடங்களா அவதானித்திருக்க வேண்டும்- அதன் பின்னர் அவாகள் அதனை பின்பற்ற முனைகின்றனர் என்கிறார் அட்மிரல் தோமஸ்.

மீண்டும் பனிப்போரா?
பனிப்போர் காலத்தில் அமெரிக்க –சோவியத் நீர்மூழ்கிகள் மத்தியில் இடம்பெற்ற போட்டிபோன்ற ஒன்றை ஆசியாவில் சீனாவின் நீர்மூழ்கிகள் ஆரம்பித்துவைக்கலாம் என்பது கடற்படை நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.

அக்காலப்பகுதியில் இரு நாடுகளும் தமது நீர்மூழ்கிகளை ஏனைய நாட்டை நோக்கி தாக்குவதற்க்கு ஏதுவாக கடலுக்கு அடியில் அனுப்புவது வழமையாக காணப்பட்டது, அதேபோன்று  ஏனைய நாடுகளின் நீர்மூழ்கிகளை இனம்கண்டு அழிப்பதற்காக நீர் மூழ்கிகளையும் அனுப்பின.

சோவியத்தின் வீழ்ச்சி அந்த போட்டியை முடிவிற்க்கு கொண்டுவந்தது- ஆனால் இன்று சீனா தனது கடலுக்கடியிலான பலத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளதையடுத்து-அமெரிக்காவின் ஆசிய சகாக்கள் அதனை எதிர்கொள்ள தமது நீர்மூழ்கிகளின் பலத்தை அதிகரி;க்க தொடங்கியுள்ளன. சீனாவோ அல்லது அமெரிக்காவோ பனிப்போர் காலம் திரும்புவதை விரும்பவில்லை.

அவர்களது பொருளதாரங்கள் ஒன்றில்ஒன்று தங்கியுள்ளன.சந்தையை மையமாக வைத்து சிந்திக்கும் இன்றைய சீனா சர்வதேச புரட்சி குறித்தோ அல்லது அமெரிக்காவிற்க்கு சமமான இராணுவ திறன் குறித்தோ சிந்திக்கவில்லை. தங்களது நீர்மூழ்கிகள் ஏயைநாடுகளை அச்சுறுத்தவில்லை என தெரிவிக்கும் சீனா அதிகாரிகள் தங்களுடைய  பிரதேசத்தை பாதுகாப்பதற்க்கும், சர்வதேச நலன்களைவ விஸ்தரிப்பதற்க்குமே அவை என்கின்றனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிரான ரோந்து நடவடிக்கைகளில் இந்து சமுத்திர பகுதியில் உள்ள தமது நீர்மூழ்கிகள் உதவும் என்றும் சீனா தெரிவிக்கின்றது.

இந்துசமுத்திரம் மற்றும் பசுவிக்கில் தமது நீர்மூழ்கிகள் சர்வதேசட்டங்களை பின்பற்றுகின்றன என தெரிவிக்கும சீனாவின் பாதுகாப்பு அதிகாரிகள்,சகல தரப்புகளுடனும் சிறந்த தொடர்பாடல்களை பேணுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

சீனா தனது பாதுகாப்பு கொள்கைகளை மாற்றாமல் தனது சர்வதேச கடமைகளை நிறைவேற்ற நீர்மூழ்கிகள் உதவுகின்றன என்கிறார் அந்த நாட்டின் பாதுகாப்பு பேச்சாளர்.

அமெரிக்கா தயாராகிறது எனினும் ஆசியாவில் தனது இராஜதந்திர மற்றும் இராணுவவளங்களை குவிக்கும் தனது தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா தனது நீர்மூழ்கிகளை முன்னணிக்கு நகர்த்தியுள்ளது.

அமெரிக்காவின் கடலுக்கடியிலான பலத்தின் 60 வீதம் பசுவிக்கிலேயே காணப்படுகின்றது. அடுத்த வருடம் அமெரிக்கா தனது தாக்குதல் நீர்மூழ்கியை குவாமில் நிறுத்தவுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து ஜப்பானின் ஒகினாவாவில் அமெரிக்கா 6 நீர்மூழ்கிகளை நிறுத்தியுள்ளது,ரஷ்யாவின் நீர்மூழ்கிகளை கண்டறிவதற்கான திறனை அதிகரித்துள்ள அமெரிக்கா, சீனாவின் நீர்மூழ்கிகளை கண்டுபிடிப்பதற்காக கடலுக்கடியில் இயங்கும் ஆளில்லா கலங்கள் போன்ற தொழிநுட்பங்களை பரிசோதனை செய்துவருகின்றது.

வேறு பல ஆசிய நாடுகளும் தமது நீர்மூழ்கி பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

பசுவிக்கிலுள்ள அமெரிக்க  நீர்மூழ்கிகளின் தளபதி ரியர் அட்மிரல் பிலிப்சாவ்யெர் பனிப்போர் காலத்தை விட தற்போது அப்பகுதியில் அதிகளவு நீர்மூழ்கிகள் காணப்படுவதாக தெரிவிக்கின்றார்-இவற்றின் பாதுகாப்பே எனது மிகப்பெரும் கவலை, ஒரே கடற்பரப்பில் பல நீர்மூழ்கிகளை விடும்போது அவை மோதிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவிடம் தற்போது மிக வலுவான தாக்குதல் நீர்மூழ்கி தொகுதியொன்று காணப்படுகின்றது.அவற்றில் 5 அணுவாயுத மாதிரிகள், பூமர்களும் காணப்படுகின்றன.

சீனா நீர்மூழ்கிகளின் வரலாறு நீர்மூழ்கிகளை உருவாக்குவதற்கான சீனாவின் ஆர்வம் 1960 களிலேயே ஆரம்பமாகிவிட்டது 1000 வருடங்கள் ஆனாலும் அணுவாயுத நீர்மூழ்கியொன்றை உருவாக்குவோம் என்றார் மா வோ-சேதுங்.

1950 களிலிருந்து சீனா டீசல் நீர்மூழ்கிகளை பயன்படுத்தி வந்துள்ளது.ஆனால் அவை நீரிற்கு மேலாக அடிக்கடி வரவேண்டிய தேவை காணப்பட்டதால் அவற்றை இனம்காண்பது சுலபமாக காணப்பட்டது. அணுசக்தி நீர்மூழ்கிகள் வேகமானவை நீண்ட காலம்கடலுக்குள் இருக்க கூடியவை.

1970 ஆம்ஆண்டு மாவோவின் பிறந்தநாளின் போது சீனாதனது முதலாவது அணுசக்தி நீர்மூழ்கியை வெள்ளோட்டம் விட்டது.1988 இல் தனது கடலுக்கடியிலான ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டது, சீனாவின் நவீன கடற்படையின் ஸ்தாபகரான 1980 களில் சீனாவின் தாக்குதல் நீர்மூழ்கிகளின் பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.

 
தென் ஜப்பானிலிருந்து பிலிப்பைன்ஸ் வரையும், வடஜப்பானிலிருந்து இந்தோனேசியா வரையும் உள்ள அமெரிக்க படைகளால் சீனா நெருக்கடியை எதிர்கொள்வதாக அவர் கருதினார். சீனா தனது கடல் ஆதிக்கத்தை அதிகரிக்க வேண்டும்-2050 ற்க்குள் உலக கடல்வல்லரசாக வேண்டும் என்றார் அவர்.

எனினும் இதுவரை சீனாவின் நீhமூழ்கிகளின் திறன் அமெரிக்காவை நெருங்க முடியாதவையாக உள்ளன. அமெரிக்காவிடம் 14 பூமர்களும்,55 அணு தாக்குதல் நீர்மூழ்கிகளும் உள்ளன.

எனினும் அமெரிக்காவின் கவலை இந்த நிலையை எவ்வாறு தொடர்ந்து காப்பாற்றுவது என்பதுதான்-நிதி நெருக்கடி காரணமாக 2028 இல் அது தனது நீர்மூழ்கிகளின் எண்ணிக்கையை குறைக்க எண்ணியுள்ள பனிப்போர் சோவியத்தின் பொருளாதாரத்தை வீழ்த்திய விதத்தை நன்கு அறிந்துள்ள சீனா அமெரிக்காவிற்க்கு சமமாக மாறுவதற்க்கு நினைக்கவில்லை.

நாங்கள் அந்தளவிற்க்கு முட்டாள்களில்லை,என தெரிவிக்கும் சீனாவின் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர்,நம்பகத்தன்மை மிக்க சக்தியாக விளங்குவதற்க்கு எமக்கு நீர்மூழ்கிகள் அவசியம், பேரம்பேசுவதற்க்கும் அவை தேவை- அவை பசுவிக்கிற்க்கு சென்றேயாகவேண்டும் என்கிறார் அவர்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.