Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலை என்ற வார்த்தையினை உச்சரிக்க தமிழர்தரப்பு தயங்குவது எதற்காக - கதிரவன்

Featured Replies

 

அடக்குமுறைக்கும் அடிமை வாழ்வுக்கும் ஒருமுற்றுப்புள்ளி வைத்து சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக போராடிய ஈழத்தமிழினம் அதற்காக கொடுத்த விலைகள் மதிப்பிடமுடியாதவை. ஒரு இனம் இன்னொரு இனத்தினால் அடிமைப்படுத்தப்படுவைதையோ அடக்கியாளப்படுவதையோ உலகத்தின் எந்த ஒரு சட்டமும் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இலங்கைத்தீவிலே சிங்களமேலாதிக்கத்தால் தமிழர்கள் அடக்கியாளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டபோது அது உள்நாட்டு பிரச்சினை என்று உலகத்தில் யாரும் அதைக்கண்டுகொள்ளவில்லை ஏன் என்றுகேட்க யாரும் இல்லை என்ற காரணத்தினால் சிங்கள இனவெறியர்கள் அப்பாவித்தமிழர்களை படுகொலைசெய்து அவர்களின் சொத்துக்களைக்கொள்ளையடித்து கொடும் தாண்டவம் ஆடியபோது தம்மை தற்காத்துக்கொள்வதற்காக தமிழர்கள் ஆயுதம் ஏந்தவேண்டியகட்டாயத்திற்குள் தள்ளப்பட்டார்களே தவிர

சிங்கள அரசோடு போர்செய்யவேண்டும் என்று கொழுப்பெடுத்து ஆயுதம் ஏந்தவில்லை இதனை முதலில் எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

சுதந்திரம் என்ற ஒன்றுக்காக ஈழத்தமிழினம் எத்தனையோ இழப்புக்களை சந்தித்து எத்தனையோ தியாகங்களைச்செய்து இன்றும் சொந்தநாட்டிற்குள்ளே அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆயுதம் ஏந்தியவர்கள் எல்லோருமே பயங்கரவாதி என்று கூறிவிட முடியாது 1961-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவனாக இருந்த நெல்சன்மண்டேலாவிற்கு உலக சமாதானத்துக்காக அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது எப்படி? நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா சபை எவ்வாறு அறிவித்திருக்கின்றது. அகிம்சை ரீதியான போராட்டங்களிற்கு சர்வாதிகாரிகள் தலைசாக்காதபோது நிச்சயமாக வன்முறை தலைதூக்கும் இதற்கு நெல்சன்மண்டேலா ஒரு உதாரணம் தமிழினத்தின் விடுதலைக்காகப் புறப்பட்ட எத்தனையோ இளைஞர்களை

சிங்கள இனவெறி இராணுவம் வதைமுகாம்களுக்குள் வைதைத்து படுகொலை செய்து புதைத்துவிட்டது இவர்களை நெல்சன்மண்டேலாக்களாக்கி விருதுகள் கொடுக்காவிட்டாலும் பயங்கரவாதிகள் என்று பழிசொல்லாமல்விட்டாலே போதும்.

npc_1.JPG

ஆனால் சிங்களப்பேரினவாதம் தமது உரிமைக்காக நியாயமான கோரிக்கைகளுடன் போராடிய தமிழினத்தை பயங்கரவாதம் என்ற ஒரு பாரியபோர்வையினால் மூடி மிகவும் கோழைத்தனமாக படுகொலைசெய்தது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றும் தீவிரவாத ஒழிப்பு என்றும் மிகவும் சூட்சமமான முறையில் உலக அரங்கிலே பரப்புரைகள் செய்து ஈழத்தில் ஒரு சிறிய பகுதிக்குள் இருக்கும் விடுதலைப்புலிகள் இந்த உலகத்திற்கே ஆபத்தானவர்கள் என்று ஒரு பீதியினை உண்டுபண்ணி சில சுயநலவாத நாடுகளுடன் கைசேர்த்து 2009ஆம் ஆன்டு நான்கரை லட்சம் தமிழர்களை தனது கொலைவெறி இரானுவத்தின் முற்றுகைக்குற்படுத்தி மனிதகுலமே வெட்கப்படும் அளவு மன்னிக்கமுடியாத கொடுமைகளைச்செய்தது சிங்களதேசம் எந்த விடுதலைக்காக தமிழர்கள் போராடி ரத்தம் சிந்தி உயிர்த்தியாகங்கள் செய்தார்களோ அந்தப்போராட்டம் திட்டமிட்டு தீவிரவாதம் என்ற பெயருடன் முடக்கிவிடப்பட்டுள்ளது.

tna_jaffna.jpg

விடுதலை கேட்ட ஒரே காரணத்துக்காக எத்தனை அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டார்கள் எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள் எத்தனை தமிழர்கள் கடத்தப்பட்டார்கள் காணாமல்ப் போனார்கள் இதற்கெல்லாம் எங்களையும் கடவுளையும் தவிர சாட்சிகள் இல்லை போர் தொடர்பான நடைமுறைகள், ஜெனீவா பிரகடனம், அடிப்படை மனித உரிமைகள், இன அழிப்பு அதற்கான சட்டங்கள், நடைமுறைகள் எல்லாவற்றையும் ஐநா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன வைத்திருக்கின்றன தனது உறுப்பு நாடுகள் அவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றெல்லாம் கூறுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் மீறி பல்லாயிரம் தமிழர்களைப்படுகொலை செய்த சிங்களக்கொலைவெறி இரானுவத்திற்கு இந்த உலகம் என்ன தண்டனை கொடுக்கப்போகின்றது என்பது கேழ்விக்குறியாகவே உள்ளது.

வார்த்தைகளால் வர்நிக்கமுடியாத அளவுவேதனைகளையும் ஈடுசெய்யமுடியாத இழப்புக்களையும் சுமந்தபடி இன்னமும் சொந்தநாட்டில் அடிமைகளாகவும் அகதிகளாகவும் தமிழர்கள் தலைகுனிந்து வாழ்ந்துகொண்டிருக்க மன்னிக்கமுடியாத பாவத்தையும் பழியையும் செய்த கொடிவர்கள் உலகெங்கும் தம்மை வீரர்களாகவும் தர்மவான்களாகவும் அடையாளப்படுத்தி தலைநிமிர்ந்து உலாவருகின்றனர் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும் இவர்களது சாயம் வெழுக்கவேண்டும் இவர்களது முகமூடிகள் கிழிக்கப்படவேண்டும் அதற்காக தமிழர்களாகிய நாங்கள் என்னசெய்யப்போகின்றோம் தமிழர்களின் போசும் சக்திகளும் தமிழ்த்தலைமைகளும் என்னசெய்யப்போகின்றன இறுதி யுத்தத்தில் நடந்த கொடுமைகளுக்கு நீதியும் நியாயமும் கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வெருதமிழனுக்கும் என்ன பதில்சொல்லப்போகின்றன.

north_council.png

இன்று உலக அரங்கில் தமிழர்களது அரசியல் பிரவேசம் பிரகாசிக்கத்தொடங்கியுள்ளதால் ஓரளவு எமது கோரிக்கைகளுக்கு உலகம் செவிசாய்க்கத்தொடங்கியுள்ளது. எனவேதான் சிங்கள அரசிடம் உலகநாடுகள் போர்க்குற்ற விசானணையினைக்கோரி நிற்கின்றன. இதற்காக புலம்பொயர்ந்த தமிழர்கள் மிகவும் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கு ஆதரவாக தாயகத்தில் உள்ள தமிழர்களின் தலைமைகள் என்ன செய்யப்போகின்றன? என்ன செய்துகொண்டிருக்கின்றன என்ற கேள்வி இங்கே பலமாக எழுகின்றன காரணம் இன்று உலகநாடுகள் எல்லாம் சிங்கள அரசிடம் போர்க்குற்றவிசாரனை கோரியுள்ளபோது அதனை ஏற்றுக்கொண்டாற்போல் இன்று தமிழர்களின் போசும் சக்தியாக இருக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் வடமாகாணசபையும்

தலைசாய்த்து நிற்கின்றன.

போர்க்குற்றவிசாரணை என்பதுதான் தமிழர்களின் இறுதித்தீர்வாகுமா? இந்தப்போர்க்குற்றவிசாரனண என்பது தமிழர்களுக்கு எதனைப் பெற்றுத்தந்துவிடப் போகின்றது? உலகநாடுகள் கோரியுள்ள போர்க்குற்றவிசாரணை என்றால் என்ன?

இதனை தொளிவுபடுத்தவேண்டிய தேவை இங்கே உள்ளது

போர்க்குற்ற விசாரணை என்றால் என்ன? அதனால் தமிழர்களுக்கு கிடைக்கப்போவது என்ன?

போர் என்பது இரண்டுநாடுகளுகிடையிலோ அல்லது இரண்டு படைகளுக்கிடையிலோ நடைபெறும் ஒன்று ஆனால் அந்தப்போருக்கென்று சில விதிமுறைகளும் சட்டங்களும் ஐநாசபையினால் வகுக்கப்பட்டுள்ளது அந்த விதிமுறைகளை மீறுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப்போர்க்குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தி சர்வதேசநீதிமன்றில் நிறுத்தி அவர்களுக்கு தண்டனைகொடுக்ககவேண்டும் என்பதே ஐநாசபையின் சட்டமாகும் ,ஆனால் ஏனோ இலங்கையில் ஈழத்தமிழர்கள் அரசபடைகளால் படுகொலைசெய்யப்பட்டபோது சர்வதேசம் அதனை உள்நாட்டுப்பிரச்சினை என்று கூறி கண்டுகொள்ளவில்லை ஆனால் ஒட்டுமொத்த தமிழர்களின் உழைப்பின் பலனாக சர்வதேசம் இன்று இலங்கை அரசிடம் போர்க்குற்றவிசாரணையினை கோரிநின்றாலும் அதனால் தமிழர்களுக்கு என்ன

பலன்கிடைக்கப்போகின்றது ? ஒருவேளை சர்வதேசம் தனது பிரதிநிதிகளை அனுப்பி சிங்கள அரசை போர்க்குற்ற விசாரணைக்குற்படுத்தினால் அதில் இருந்து தப்பித்துக்கொள்ளத்தேவையானவற்றையெல்லாம் சிங்கள அரசு திரைமறைவில் செய்துகொண்டிருக்கின்றது எனவே நிச்சயமாக அது தப்பித்துக்கொள்ளும் காரணம் போர்க்களத்தில் செய்யப்படுவது கொலை அல்ல என்ற ஒரு தத்துவம் உள்ளது அதனைசிங்கள அரசு பயன்படுத்திக்கொள்ளும் போர்க்குற்ற விசாரணை என்று ஆரம்பிக்கப்பட்டால் அது சிங்கள இரானுவத்தின் மீது மட்டும் மேற்கொள்ளப்படமாட்டாதுபோரிலே சம்மந்தப்பட்ட விடுதலைப்புலிகள் மீதும் அது திரும்பும் அந்த சர்தர்ப்பத்தை பயன்படுத்தி சிங்கள அரசு போர்க்குற்றம் என்ற விசாரனையினை புலிகளின் தரப்புமீதும் திசைதிருப்பிவிட்டு தான் தப்பித்துக்கொள்ளும் எனவே இந்தப்போற்குற்றவிசாரனை என்பதை தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளக்கூடாது அப்படி ஏற்றுக்கொள்வார்களேயானால் தமிழர்கள் சிங்கள அரசிடம் இருந்து தம்மை பாதுகக்கப்போராடினார்களே தவிர சிங்கள அரசுக்கு எதிராக போர் செய்யவில்லை என்பதனை புரிந்துகொள்ள சர்வதேசம் தவறிவிடும் எனவே சர்வதேசத்திடம் தமிழர்கள் கோரவேண்டியது போர்க்குற்றவிசாரணை அல்ல இன அழிப்பு விசாரணை என்பதேயாகும் இதனை நன்றாக அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

போருக்கும் போராட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாத உலகமும் அதை தெளிவுபடுத்த தயங்கிங்நிற்கும் எம்மவர்களும் இன்று தமிழர்களின் அரசியலில் போசும் சக்தியாக இருக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் வடமாகாணசபையும் ஏனோ இந்த இன அழிப்பு என்ற வார்த்தையினை உச்சரிக்கக்கூட தயங்கிநிற்கின்றமை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மிக மிக மனவேதனையினையினையும் நம்பிக்கையீனத்தினையும் கொடுக்கின்றது.

குறிப்பாக வடமாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் கடந்துவிட்டபோதும் இதுவரைக்கும் இன அழிப்பு என்ற வார்த்தையினை ஒருமுறைகூட உச்சரிக்கவில்லை ஏனைய மாகாணசபை உறுப்பினர்களையும் இன அழிப்பு என்பதைப்பற்றி வாய் திறக்கக்கூடாது என்று வடமாகாண முதலமைச்சரும் கூட்டமைப்பின் சில தலைவர்களும் நாசுக்காக எச்சரித்துள்ளனர்.

இதற்கான சரியான காரணம் என்ன என்பதைக்கூட மக்களுக்கு தொழிவுபடுத்தவில்லை எங்களுக்காக குரல்கொடுப்பார்கள் என்று அவர்கழுக்கு வாக்களித்த மக்கள் என்ன ஆட்டுமந்தைகளா? அரசியல் தந்துரோபாயம் என்றும் ரகசியப்போச்சுவார்த்தை

என்றும் இன்னமும் எத்தனைகாலம் தமிழர்கள் மாறி மாறி ஏமாற்றப்படப்போகின்றார்கள் அரசியல் என்பது வெளிப்படையாகச்செய்யப்படவேண்டியது. மக்களை சரியான நேரங்களில் தொளிவுபடுத்தி அரசியல்ரீதியான விழிப்புணர்வுகளை உண்டுபண்ணி மேலும் மேலும் விடுதலைக்காக போராடவேண்டிய உந்துதலைக்கொடுக்கவேண்டியவர்கள் சிலவேளைகளின் மக்களை மந்தகதிக்குள் தள்ளுவது எமது விடுதலைப்போராட்டத்திற்கு உகந்ததல்ல.

தலைநிமிர்ந்து நடக்கவேண்டிய பாதிக்கப்பட்ட தமிழர்களாகிய நாங்கள் முக்காடுபோட்டுக்கொண்டு தலைகுனிந்து நடக்கின்றோம் மன்னிக்கமுடியாத பாவத்தினை செய்துவிட்டு தலைகுனிந்து நடக்கவேண்டிட சிங்களப்பேரினவாதிகள் தலைநிமிர்ந்து நடக்கின்றார்கள் இவர்களின் முகமூடிகளைக்கிழித்து இவர்கள் செய்தது இன அழிப்பு என்பதனை வெளிச்சமிட்டுக்காட்டவேண்டியவர்கள் ஏனோ அசமந்தமாக உள்ளனர். இதற்காண காரணத்தினை அவர்கள் தெளிவுபடுத்தவேண்டும் யாரையும் விமர்சிக்கவேண்டும் என்று இதனைகுறிப்பிடவில்லை யாதார்த்தத்தினை மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இன அழிப்பு என்பதை விடுத்து போர்க்குற்றம் என்பதனைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கும் தமிழ்த்தலைமகள் போர்க்குற்றம் ,இன அழிப்பு, என்ற இரண்டுக்கும் இடையே இருக்கின்ற கருத்துவேறுபாடுகளை புரிந்துகொள்ளத்தவறிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும் முள்ளிவாய்க்கால் படுகொலையினை செய்த சிங்கள பேரினவாதசக்திகளைத் தண்டிக்கவேண்டுமேயானால் போர்க்குற்றம் என்பதைவிட இனவழிப்பு என்பதுதான் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் இதனை எப்போது புரிந்துகொள்ளப்போகின்றனர்.

எம்மவர்கள் கடந்தசிலநாட்களுக்கு முன்னர் வடமாகாணசபையில் இனஅழிப்பு தொடர்பான பிரேரணையினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மறுதலித்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த செங்கோலை மற்றொரு மாகாணசபை உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் தூக்கி வீசியிருந்தார் இவர் நீண்டகாலமாக இன அழிப்பு சம்மந்தமான பிரேரனை ஒன்றை தயாரித்து அதை விவாத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு கேரி வந்தார் ஆனால் அதனை நீண்டகாலமாக வடமாகாண சபை விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ள மறுத்துவந்த முதலமைச்சர் இப்போது ஜனாதிபதி தேர்தலின் பின்னராக விவாதிக்கலாமென கூறியுள்ளார்.

கே.சிவாஜிலிங்கத்தின் பிரேரணை முன்மொழியப்பட்டு அது ஏற்று ஆமோதிக்கப்பட்டிருந்தது. பிரேரணை தொடர்பில் எவருடையதுமான ஆட்சேபனை உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்ட போது எதிர்கட்சிகள் உள்ளிட்ட எவையுமே ஆட்சேபித்திருக்கவில்லை. பிரேரணைக்கு ஆதவாக கூட்டமைப்பு உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன், விந்தன் கனகரத்தினம் ஆகியோரும் சித்தார்த்தன் போன்றவர்களும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையினில் குறித்த பிரேரணையினை தான் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் திருத்தங்களை செய்த பின்னர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விவாதிக்கலாமெனவும் முதலமைச்சர் கருத்து தெரிவித்தார். இதற்கான காரணத்தினை அவர் கூறவில்லை எனினும் அதனை நிராகரித்த கே.சிவாஜிலிங்கம் வாக்கெடுப்பிற்கு விடுமாறு கோரினார்.அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையினை ஒத்திவைப்பதாக தெரிவித்து வெளியேற முற்பட்டபோது கோபமுற்ற சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசியெறிந்தார். கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக இழுபறிப்பட்டு செல்லும் அப்பிரேரணையினை பொதுவாக்கெடுப்பிற்கு விடுமாறு எதிர்கட்சி தலைவர் தவராசா மற்றும் ஈபிடிபி உறுப்பினர் தவநாதன் ஆகியோரும் குரல் கொடுத்திருந்தபோதும் அதனை அவைத்தலைவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததற்காண காரணத்தினை நிச்சயம் தெளிவுபடுத்தியிருக்கவெண்டும் அப்படித்தெளிவுபடுத்தும் பட்சத்தில் பல வீண்

விமர்சனங்களையும் விவாதங்களையும் தவிர்த்துக்கொள்ளமுடியும் பொதுமக்களும் உன்மை என்ன என்பதைப் புரிந்துகொள்வார்கள்.

இலங்கையிலே நடந்தது இனப்படுகொலையே என்பதனை ஆறுமாதகாலமாகியும் ஏற்றுக்கொள்ள வடமாகாணசபையினால் முடியவில்லை என்றால் ஐநாசபையும் அதன் உறுப்புநாடுகளும் எப்படி ஏற்றுக்கொள்ளும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும் போர்க்குற்றம் போர்க்குற்ற விசாரணை என்று பேசும் மேடைப்பேச்சாளர்கள் இனியும் சர்வதேசத்திடம் போர்க்குற்ற விசானையினைக் கோரி நிற்பார்களேயானால் அவர்களை அரசியலில் இருந்து தூக்கி எறிவதை விடவேறு வழியில்லை காரணம் இலங்கையில் எப்போது போர் நடைபெற்றது. நடைபெறாத ஒரு போருக்காக எவ்வாறு விசாரனையினைக்கோரமுடியும்? இலங்கையில்

ஒருபோதும் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையில் போர் நடைபெறவில்லை அங்கே சிங்கள ஆட்சியாளர்களினால் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் நில அபகரிப்பும் ஆட்கடத்தல்களும் ஆக்கிரமிப்புக்களும் நடைபெற்றது தமிழர்கள் என்ற இனத்தின் மீது சிங்கள ஆட்சியாளர்களால் திணிக்கப்பட்ட வன்முறைக்கெதிராகவும் மறுக்கப்பட்ட தமது உரிமைகளுக்காகவும் பறிபோகும் தமது பூர்வீகநிலங்களை மீட்பதற்காகவும் தமிழர்கள் போராடினார்கள் அது சுதந்திர விடுதலைப்போராட்டம் அதற்குப்பெயர் போரல்ல இதனை முதலில் நம்மவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் தமிழர்கள் என்ற இனம் சிங்கள இனத்தினாலும் அதன் ஆட்சியாளர்களாலும் அழித்தொழிக்கப்பட்டதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன இலங்கையில் நடைபெற்றது போர் அல்ல இன அழிப்பு என்பதற்க்காக எத்தனையோ வரலாற்றுச்சான்றுகள் உள்ளன அவற்றையெல்லாம் தூசுதட்டி உலகத்தின் முன்னே தூக்கிப்போடவேண்டியவர்களுக்கு போரென்றால் என்ன போராட்டம் என்றால் என்ன என்பதைச்சுட்டிக்காட்டவேண்டுய நிலை தோன்றியுள்ளது இன அழிப்பு என்றால் என்ன? என்பதை கற்பிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

'இதுதான் இன அழிப்பு இனியேனும் ஏற்றுக்கொள்வீர்களா?

இறுதி யுத்தத்தில் நான்கரை லட்சம் தமிழ் உறவுகள் எப்படிக் கொடுரமாக வதைக்கப்பட்டார்கள் என்பதை உலகின் பிரதிநிதிகளான ஐ.நா அதிகாரிகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் அங்கிருந்து வெளியிட்ட அறிக்கையில் இருந்தே தெட்டத்தெழிவாகத் தெரிந்துகொள்ளமுடியும் இது இன அழிப்பே என்று.

வன்னியில் எம் இனத்தின் நான்கரை லட்சம் பேர் ஒரு குறுகிய பகுதிக்குள் முடக்கப்பட்டு சிறீலங்கா அரச படைகளால் நாள்தோறும் எறிகணைத் தாக்குதல்கள் மூலமும் வான்குண்டுத் தாக்குதல் மூலமும் படுகொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான உறவுகளின் பிணங்கள் வீதிகள் எங்கும் கிடப்பதை பார்த்த பச்சைப்பாலகர்கள் முதல் பல் விழுந்த முதியவர்களுக்கும் தெரியும் அங்கே நடந்தது இனப்படுகொலை என பிறந்த குழந்தைகள் . சிறார்கள் பயங்கரவாதிகள் என்ற சாயம்பூசப்பட்டு கொல்லப்பட்டார்கள் வயிற்றில் இருக்கும் சிசுக்கள் கூடக்கொல்லப்பட்டார்களே இதற்குப்பெயர் என்ன?

மக்களைக்கொல்வது பயங்கரவாதம் என்றார்கள். முள்ளிவாய்காலிலே தமிழ் மக்கள் அரசால் நாள்தோறும் படுகொலை செய்யப்பட்டார்கள் அவர்கள் இடம்பெயர்கின்றபோதும், இடம்பெயர்ந்து ஒரு இடத்தில் தனித்து நிற்கின்றபோதும் மருத்துவமனைகளுக்கு செல்கின்றபோதும் வீதிகளில் நடமாடுகின்ற போதும் என்று எங்கும் அவர்கள் கொல்லப்பட்டார்கள். கொத்தாக அவர்கள் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்கள்.

இதற்கான தண்டனையினை பெற்றுக்கொடுக்கப்போவது எப்போது?

முல்லைத்தீவு சுதந்திரபுரச்சந்தி திடலில் ஐநாவின் உலக உணவுதிட்ட அதிகாரிகள் கொடியை ஏற்றி நிலைகொண்டு நிவாரணத்தை வழங்கிக்கொண்டிருந்த போதும் அந்த திடல் மீது 26-01-09 அன்று பகல் இரவாக எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது, அப்பகுதியில் இருந்த செஞ்சிலுவைக் குழு அலுவலகமும் தாக்கப்பட்டது. அன்று மட்டும் 302 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1199 பேர் படுகாயமடைந்தனர். அன்று அதிகளவில் உடையார்கட்டு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளெங்கும் பிணக்காடாக. யார் இருக்கிறார்கள், யார் மடிந்தார்கள் என்பதை அறியாமல் உயிருடன் இருந்தவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடினர்.

அவலங்களின் சாட்சியாக நின்ற ஐநா அதிகாரிகளும், சர்வதேச செஞ்சிலுவைக்குழு அதிகாரிகளும் சிறிய பதுங்குகுழிகளுக்குள் பாதுகாப்பு தேடி இருந்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்கள் என்பதற்கு சாட்சியாக இன்றும் அவர்கள் உள்ளனர் தானே பாதுகாப்பு வலையம் என அறிவித்து அதில் பன்னாட்டுப்  பிரதிநிதிகள் சாட்சியாக இருக்க, சிறீலங்கா அரசு தமிழ் மக்களை படுகொலை செய்து நாள்தோறும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தியமை. அரச பயங்கரவாதம் இல்லையா? அரசே நடத்தும் இனப்படுகொலை இல்லையா?

இவ்வாறே, போரின் போது மருத்துவமனைகள் இலக்கு வைக்கப்படக் கூடாது என்ற மரபையும் புறந்தள்ளி, ஐநா அதிகாரியும் பன்னாட்டு செஞ்சிலுவைக்குழுப் பிரதிநிதிகள் நின்றவேளையில் சிறீலங்கா அரசுப்படைகள் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கிவந்த புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது 2009.02.02 தொடக்கம் 2009.02.04 திகதி வரை குண்டுகளை வீசி நோயாளர்களைக் கொன்றதற்கு சாட்சியாக ஐநா அதிகாரிகளே உள்ளனர்.

4ம் திகதி சிறீலங்காவில் சுதந்திரநாள் கொண்டாட்டம். அன்றுதான் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்றாக அழிந்துச் செயலிழக்கச் செய்யப்பட்ட நாளாகவும் அமைந்தது. புதுக்குடியிருப்பு மருந்துவமனை தொடர் விமானக் குண்டுவீச்சுகளாலும் ஆட்லறி கொத்துக்குண்டுகளாலும் தாக்கப்பட்ட போது அங்கு அப்பாவி மக்கள் 500 பேர் சிகிச்சை பெறுகின்றார்கள் என்பதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரிதிநிதி உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டிருந்தார். ஆனால் சில தினங்கள் கழித்து புதுக்குடியிருப்பு மருத்துவமனை தாக்கப்பட்டது. 02/02/2009 தொடக்கம் 04/02/2009 குண்டுவீசி நோயாளர்கள் கொன்றழிக்கப்பட்டார்கள்.

ஐ.நா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கப் பிரதிநிதிகள் குறித்த மருத்துவமனை வளாகத்தில் தங்கிநின்ற நிலையிலேயே சிறிலங்கா அரசு படைகள் மேற்படி மருத்துவமனை மீது தாக்குதலை மேற்கொண்டன. இவையெல்லாம் சிங்கள அரசு செய்தது இன அழிப்பு என்பதற்கு சாட்சிகள் இல்லையா

பிரித்தானிய ஸ்கை ஒலிபரப்பு நிறுவனத்திற்கு 03/02/2009 அன்று வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றில் பாதுகாப்பு வலத்திற்கு வெளியே எந்த வைத்தியசாலையும் இல்லை. அதனால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஒரு நியாயபூர்வமான இலக்கு என்று வைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நியாயப்படுத்தி சிறிலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கருத்துத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள் தாக்கப்படுவதை நியாயப்படுத்தியும் இனியும் மருந்துவமனைகள் தாக்கப்படும் என்பதை வலியுறுத்தியும் மேற்படி சிறிலங்கா அரசின் இராணுவப் பேச்சாளாரும் மற்றும் ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் உத்தியோக பூர்வமாகவே உலக செய்தி நிறுவனங்களில் கருத்துக்களை வெளியிடுகின்றது. சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு இவ்வாறான ஒரு கருத்தை துனிகரமாக அவர்களால் கூறமுடிகின்றது என்றால், தமது ஆக்கிரமிற்புகுற்பட்ட தமிழர்களை எந்தவகையில் படுகொலைசெய்திருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ளமுடியும் .

முள்ளியவனையில் இயங்கிய முல்லைத்தீவு பொது மருத்துவமனை, வள்ளிபுனத்தில் இயங்கிய முல்லைத்தீவு பொது மருத்துவமனை, விசுவமடுவில் இயங்கிய கிளிநொச்சி பொது மருத்துவமனை, உடையார்கட்டில் இயங்கிய கிளிநொச்சி பொதுமருத்துவமனை, மூங்கிலாறில் இயங்கிய மல்லாவி மருத்துவமனை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை என்பன மருத்துவமனைகள் என்பதற்காகவே தாக்கப்பட்டன இவையெல்லாம் இன அழிப்பு என்பதை எம்மவர்க்கு ஏன் உணர்த்தவில்லை?

1958 முதல் இன்று வரை தமிழினத்துக்கு உரிமைகள் வழங்கப்படுவதாக கைச்சாத்திடப்பட்ட உடன்பாடுகள் எல்லாம் சிறிலங்கா அரசால் பல தடவைகள் குறிப்பாக கடைசி நோர்வே போர்நிறுத்த உடன்பாடு வரை கிழித்தெறியப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். கடைசியாக நடந்த பேச்சுக்களின் போது இணைத்தலைமை நாடுகள் சிறிலங்காவுக்கு சார்பாகவே செயற்பட்டன. இந்த பேச்சுகாலத்தில் சிறிலங்கா படைத்தரப்பு தன் படையை பலப்படுத்தவே பயன்படுத்தியது என்பதும் தெளிவாக தெரிந்தது. பேச்சுகளின் காலங்களை தமிழரை ஏமாற்றும் காலங்களாகவே சிறிலங்கா அரசு பயன்படுத்தியது. இதயெல்லாம் எவ்வாறு இலகுவாக மறந்து மறந்தோம் மன்னித்தோம் என்றுகூறிவிட்டு மீண்டும் இவாறான அழிவுகளை எப்போது எதிர்கொள்ளப்போகின்றோம் என்று தெரியாமல்

தினம் தினம் ஏக்கத்தோடு வாழமுடியும் மனிதகுலமே மன்னிக்கமுடியாத பாவங்களையெல்லாம் செய்துவிட்டு வரலாறுமுழுக்க தமிழினம் கலங்கித்துடிக்கும் வேதனைகளையும் வலிகளையும் தமிழர்க்ளுக்கு செய்துவிட்டு வீரரென்றும் தீரரென்றும் மார்தட்டிக்கொள்ளும் இனப்படுகொளையாளிகளை எவ்வாறு தண்டிக்கப்போகின்றோம் இவர்களைப்போர்க்குற்றவாளிகள்

என்பதை விட இனப்படுகொலையாளிகள் என்று உலகிற்கு புரியவைக்கப்போவது எப்போது இன அழிப்பு என்ற வார்த்தைப் பிரயோகத்தினால் நாங்கள் அனுபவித்த கொடுமைகளையும் சோதனைகளையும் விட இனி எந்தப்பாதகமும் எமக்கு நேர்ந்துவிடாது.

இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களின் ஆட்சியிலே தமிழர்களாகிய நாங்கள் நாய்கள், பூனைகளைவிட மோசமாக நடத்தப்பட்டோம், சுயவிமர்சனங்களுக்கும் உரிமை இல்லை சுயமரியாதை உள்ள எந்த தமிழன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, எம் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நாம் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’ எனவே இந்த இன அழிப்பு என்ற வார்தையினை நாம் பிரயோகிப்பதால் இலங்கைத்தீவு கடலில் மூழ்கிவிடப்போவதில்லை அதற்காக எம்மை பயங்கரவாதிகள் என்றோ தேசத்துரோகிகள் என்றோ கூறினாலும் கவலையில்லை.

பதிவுக்காக யாழிலிருந்து

-கதிரவன்- http://www.pathivu.com/news/36199/57//d,article_full.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.