Jump to content

சாப்பாட்டில் ருசி அதிகமாக.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

* வாழைத்தண்டு வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் அத்துடன் மிளகுப்பொடி, உப்பு மற்றும் தக்காளிப் பழம் கலந்து சூப்பாக அருந்தலாம். உடலுக்கு மிகவும் நல்லது.


* அரிசி, பயிறு போன்றவற்றை வறுத்து ரவையாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். கேழ்வரகு, கோதுமை போன்றவற்றை முளை கட்டி காயவைத்து 
ரவையாக உடைத்துக் கொண்டால் தேவையானபோது உடனடியாக கஞ்சி தயாரிக்கலாம்.


* டீ போடும்போது முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பின்னர் டீத்தூள் போட்டு வடிகட்டி சூடானபால் சேர்த்தால் 
டீ திக்காகவும் சுவையாகவும் இருப்பதோடு டீ போட பயன்படுத்தும் பாத்திரமும் கறுத்துப் போகாது.


* சிறிது சிறிதாக மிகுந்த ஊறுகாயை ஒன்று சேர்த்து 

மிக்ஸியிஸ் அரைத்து சிறிது வெல்லம் சேர்த்து எண்ணெய்ச் சட்டியில் போட்டுக் கிளறி ஜாம்போல தயாரிக்கலாம். சப்பாத்தி, தோசை, பூரி, இட்லிபோன்ற பலகாரங்களுக்குத் தொட்டுக் கொள்ளப் பயன்படும்.


* தயிர்ப்பச்சடி செய்ய வறுத்த நிலக்கடலையுடன், வதக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து தயிரில் கலந்து பரிமாறலாம்.


* தக்காளி காயாக இருக்கிறதா? வாழைப்பழத்துடன் ஒரு பையில் போட்டு வைக்க சீக்கிரம் பழுத்துவிடும்.




சாப்பாட்டில் ருசி அதிகமாக...



* பட்டாணி சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும். 


* ரசம் தயாரிக்கும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசி கிடைக்கும்.


* சிறிது சர்க்கரை கலந்த நீரில் கீரையை ஊற வைத்து பிறகு சமையல் செய்து சாப்பிட்டால் கீரை ருசியாக இருக்கும்.


* அடை செய்யும் போது மாவுடன் சிறிது ஜவ்வரிசி சேர்த்தால் மொரமொரப்பாக அடை ருசியாக இருக்கும்.


* கேக் செய்யும்போது கலவையில் சிறிதளவு தேன் சேர்த்தால் சுவையான கேக் கிடைக்கும்.


* புளி ரசம் வைக்கும் போது மிளகை சற்று கூடுதலாக வைத்து அரைத்து ரசம் செய்தால் அதன் ருசியே அலாதி!.


* எந்த வகை சட்னி அரைத்தாலும் இரண்டு பல் வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்தால் ருசி கூடுதலாக இருக்கும். 
http://www.tamilbrahmins.com/food-recipes/21188-cooking-tips.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அருமையான குறிப்புக்கள் .... 
 
இணைப்புக்கு பெருமாள். 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.