Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போருக்குப் பின்னரான நல்லிணக்கத்திற்கு பொறுப்புக்கூறல் இன்றியமையாதது: அமெரிக்கா

Featured Replies

TOM-Milinowski1-300x168.jpg
 
போருக்குப் பின்னரான உண்மையான நல்லிணக்கம் ஒன்று ஏற்படுவதற்கு, யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறல் இன்றியமையாதது என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
 
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் திணைக்களத்தின் உதவிச் செயலர் டொம் மலினோவிஸ்கி நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கிறார்.
 
“போருக்குப் பின்னரான நல்லிணக்கத்தில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், இலங்கையில் யுத்தகளத்தில் பெற்றுள்ள வெற்றி போரை மட்டுமே முடிவுக்குக் கொண்டுவந்துள்ள போதிலும், அது இனங்களுக்கிடையேயான பிளவுகளை ஆற்றுப்படுத்தவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
 
“நல்லிணக்கம், நீதி மற்றும் உண்மையான சமாதானத்தை அடைய இலங்கைக்கு இப்போது நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கு அப்பாவி மக்கள் அனுபவித்த துன்பங்களை ஒப்புக்கொள்ளல், சகல தரப்பிலும் இழைக்கப்பட்ட தவறுகளினால் உண்டான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் குறித்தும் திரும்பிப் பார்ப்பது அவசியமானது,” என்று உதவி அமெரிக்க செயலர் தெரிவித்திருக்கிறார்.
 
Tom-Milinowski.jpg
 
இலங்கை தற்போது கிடைக்கப் பெற்றுள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்வதற்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவினை வெளிப்படுத்தியுள்ள திரு டொம் மலினோவிஸ்கி, “கடந்த காலத்தைக் குழிதோண்டிப் புதைப்பதன்மூலம் எந்தவொரு சமூகமும் முன்னேறிச் செல்லமுடியாது என்பதே அமெரிக்காவின் 150 வருடகால அனுபவம்” என்று வலியுறுத்தியுள்ளார்.
 
“அமெரிக்காவினதும், உலகின் ஏனைய நாடுகளினதும் 150 வருடகால பட்டறிவின்படி, சிவில் யுத்தமொன்றை உண்மையிலேயே வெல்ல முடியாது என்பதனை இலங்கைக்கும் விதந்துரைக்கிறேன். சிவில் யுத்தமென்பது ஒரு முகம்பார்க்கும் கண்ணாடிக்கும், முஷ்டிக்கும் இடைப்பட்ட சண்டையைப் போன்றது. நீங்கள் அதன் மீது ஓங்கிக் குத்துவதன் மூலம் கண்ணாடியை உடைக்கலாம், உங்களுடைய கை இரத்தத்தில் தோயலாம். ஆனாலும், இறுதியில் உங்களுடைய விம்பப் பிரதிபலிப்பிற்கு நீங்களே முகம்கொடுக்கவேண்டும்,” என்று மிகவும் ஆணித்தரமான முறையில் தனது கருத்தினை அவர் முன்வைத்துள்ளார்.
 
நேற்றையதினம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவையும் சந்தித்த திரு டொம் மலினோவிஸ்கி, இரு தரப்பு உறவுகள் குறித்தும், இலங்கையில் தற்போதைய நிலைகுறித்தும் விரிவாகக் கலந்துரையதோடு, இலங்கையின் வெற்றி நல்லிணக்கத்திலும், பொறுப்புக் கூறலிலுமேயே தங்கியிருக்கிறது என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார்.
 
மறைமுகமாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசைச் சாடிய அவர், கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கை கொடிய யுத்தமொன்றிற்கு முகம் கொடுத்திருந்த போதிலும், யுத்தத்திற்குப் பின்னரான ஐந்துவருடகாலத்தில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களை அது பயன்படுத்தத் தவறிவிட்டது என்றும் தெரிவித்தார்.
 
“போருக்குப் பின்னர் கடந்த ஐந்துவருடங்களாகக் கிடைக்கப்பெற்றிருந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி நல்லிணக்கம், மனித உரிமை மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றினை நிலைநாட்டிக்கொள்ள இலங்கை தவறியிருக்கிறது. இந்த விடயங்கள் தொடர்ப்பில் கடந்த ஐந்து வருடத்தில் இலங்கைக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடையில் பதட்டமான சூழ்நிலைகளே நிலவிவந்தன. இலங்கையர்களினது முயற்சியின் பலனாக, இந்த நாடு வரலாற்றில் தற்போது ஒரு அரிய தருணத்தை எட்டியிருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதில் கவனச்சிதறல்களேதுமின்றித் தொடர்ந்தும் உறுதியாக இருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர், நல்லிணக்கத்திற்குப் நாட்டின் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது என்றும் தெரிவித்தார்.
 
நாட்டின் அரைவாசிச் சனத்தொகையின் குரலைப் (பெண்களை) புறந்தள்ளிவிட்டுச் சமாதானத்தினை ஏற்படுத்த முடியாது என்றும் ஆண்களைப் போலவே சமாதானத்தினைத் தேடுவதில் அவர்களுக்கும் சமபங்கு உண்டு என்றும் தெரிவித்தார்.
 
“நாட்டின் பலபாகங்களிலும் உள்ள பெண்கள் யுத்தத்தின்போது தத்தமது கணவர்மாரையும், பெற்றோரையும் இழந்திருப்பதால், பெண்களைக் குடும்பத்தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்திருக்கிறது. ஆனாலும், அநேக சந்தர்ப்பங்களில் மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் கிடைக்கப்பெறும் வேலைவாய்ப்புக்களுக்கு ஆண்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுவருகிறது. இதனால் பெண் தத்தமது குடும்பங்களை முன்னேற்றும் பணியில் அதிக பின்னடைவைச் சந்திக்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த சமூகமுமே பின்னடவைச் சந்திக்கிறது,” என்று தெரிவித்த திரு டொம் மலினோவிஸ்கி, மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் பெண்களின் மேம்பாட்டிற்கு அமெரிக்கா தனது உதவிகளைத் தொடர்ந்தும் வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.