Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானுடனும் அணுசக்தி உடன்பாடு செய்து கொண்டது சிறிலங்கா – விபரங்கள் இரகசியம் (2ம் இணைப்பு)

Featured Replies

பாகிஸ்தானுடனும் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு செய்கிறது சிறிலங்கா? APR 05, 2015 | 16:54by கார்வண்ணன்in செய்திகள்

pakistan-sri-lanka-flags-300x199.jpgமூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பாகிஸ்தான் சென்றடையும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பல புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன.

இன்று இஸ்லாமாபாத்தை சென்றடையும், சிறிலங்கா அதிபர், நாளை, பாகிஸ்தான் அதிபர் மாமூன் ஹுசேன், பிரதமர் நவாஸ் ஷரீப் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தப் பேச்சுகளின் பின்னர், புரிந்துணர்வு உடன்பாடுகளும், ஒத்துழைப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளதாக, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்பாடுகளில், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

அதேவேளை, முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், சிறிலங்கா அரசாங்கத்துடன் இறுக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கொண்டிருந்த பாகிஸ்தான், தமிழ்க் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போருக்குத் தேவையான ஆயுத தளபாடங்களை கொடுத்து உதவியிருந்தது என்று பாகிஸ்தானின் டோன் நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

போரின் போது இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பிராந்திய சக்திகளான பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சிறிலங்கா தங்கியிருந்த்து என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/04/05/news/4996

 

பாகிஸ்தானுடனும் அணுசக்தி உடன்பாடு செய்து கொண்டது சிறிலங்கா – விபரங்கள் இரகசியம் APR 06, 2015 | 12:12by கி.தவசீலன்in செய்திகள்

pakistan-sri-lanka-flags-300x199.jpgபாகிஸ்தானுடன் சிறிலங்கா அரசாங்கம் இன்று அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உள்ளிட்ட ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது. 

பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கும் இடையில் நடந்த பேச்சுக்களை அடுத்தே இந்த புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

கையெழுத்திடப்பட்டுள்ள ஆறு உடன்பாடுகளில் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடும் ஒன்றாகும்.

இதனை,  இருநாடுகளின் தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், உடன்பாட்டின் விபரங்கள் ஏதும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

maithri-navas.jpg

ஏற்கனவே, சிறிலங்கா அதிபரின் இந்தியப் பயணத்தின் போது, அணுசக்தி ஒத்துழைப்புக் குறித்த உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்பட்டது.

இந்த நிலையில்,  பாகிஸ்தானுடனும் இத்தகைய உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

இன்றைய பேச்சுக்களின் பின்னர், இருநாடுகளின் தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது, தாம் பிராந்திய, அனைத்துலக விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், ஆறு உடன்பாடுகளில் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவம், விளையாட்டு, கப்பல்துறை, அணுசக்தி, போதைப் பொருள், கல்வி ஒத்துழைப்பு ஆகியன குறித்தே இந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சிறிலங்கா அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள நிலையில், சிறிலங்கா முதலாவது அணுஉலையை நிர்மாணிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.