Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் சிவகுமாரின் பதிவில் இருந்து ......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்துராமன்

1981 - அக்டோபர்- 16 -ந்தேதி -காலை 6.30 மணி +ஊட்டி - கால்ப் காட்டேஜ்
ஆயிரம் முத்தங்கள் - படத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தேன் .உதவியாளர் ஓடிவந்து 'சார்,முத்துராமன் சார் ரோட்ல மயக்கமா கிடக்கறார் சார் என்றான். ஓடிச்சென்று காரில் ஏற்றி ஊட்டி டாக்டரிடம் காட்ட, உயிர்போய் அரைமணி ஆகிவிட்டது என்றார்.
மீண்டும் காட்டேஜ்...காரிலிருந்து உடம்பை நிமிர்த்தி இறக்கும்போது அவர் மூச்சுக்காற்று குபுக்கென என்மேல் பட, அய்யோ உயிரோட இருக்கறவரை செத்துப்போயிட்டார்னு டாக்டர் சொல்லிட்டாரே' அண்ணா, அண்ணா எழுந்திருங்கண்ணா'- என்று நானும் நடிகை ராதா, அவர் அம்மா, மூவரும் யூகலிப்டஸ் ஆயிலை அவர் உடம்பு முழுக்க பூசி தேய்த்தவாறு கதறினோம். அவர் பேசவில்லை.போய்விட்டார்.
ரத்த அழுத்த நோய் பல ஆண்டுகளாக அவருக்கு... படத்தில் ராதாவுக்கு அப்பாவாக நடிக்க வந்தவர்- நான் நேற்று காலை ஓடியதைப் பார்த்து ஆர்வத்தில் ஓடியிருக்கிறார். ஊட்டியில், 7000 அடி உயரத்தில் அதிகாலையில், பனிமூட்டம் அதிகம் இருக்கும்போது, ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் ஓடியவர் மூச்சுத்திணறி விழுந்து விட்டார். ..
நெஞ்சில் ஓர் ஆலயம் - படம் கண்ணியமான இந்தக் கலைஞனை திரும்பிப் பார்க்கவைத்தது... காதலிக்க நேரமில்லை- தூக்கி நிறுத்தியது..
வங்காள நடிகரைப் போல் கம்பீரத்தோற்றம், காந்தக்கண்கள், கணீரென்ற குரல்,கனிவான உள்ளம், எவரையும் குறை சொல்லாத, எல்லோரையும் நேசித்த- சகோதரக் கலைஞன்- இதோ நம்மை விட்டு அவசரமாகப் புறப்பட்டுப் போய்விட்டார்.
தாங்க முடியாத சோகத்துடன் இந்தச்செய்தியை சென்னையிலுள்ள அவர் வீட்டுக்குத் தெரிவித்தோம்.
தாயே உனக்காக - காவல் தெய்வம் -
ராஜ ராஜ சோழன்- காரைக்கால் அம்மையார்- திருமாங்கல்யம் - தீர்க்க சுமங்கலி என அவரும் நானும் 15 படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்தோம்.
ஒரு மூத்த சகோதரனாக என் மீது அன்பைப் பொழிவார்.
அதிமுக அமைச்சராக அன்று இருந்த
ஆர். எம். வீ.அவர்கள் மூலம் அரசு போக்குவரத்து மினி பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து, டி.ஜி.பி. ஆக இருந்த பரமகுரு அவர்கள் அனுமதியுடன், வழியில் பரிசோதனைத் தடைகள் தவிர்த்து- காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல்- மாலை 4 மணிக்கு - ஊட்டியிலிருந்து புறப்பட்டு மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.
சிவாஜி அண்ணனும் திரளாக, திரை உலகத்தினரும் காத்திருந்தனர்.
சென்ற வாரம் சிரித்துக்கொண்டு ஊட்டி போனவர், சடலமாய்த் திரும்பிய கோரக்காட்சியைக் கண்டதும், மயங்கிச்
சரிந்து விட்டார் திருமதி. சுலோசனா.
'டேய் தம்பி ! அந்தக் காலத்தில் முருகன் வேஷத்தில, நாடக மேடையில நடிச்சிட்டு இருக்கும்போது, விஸ்வநாத தாஸ் உயிரை விட்டமாதிரி, முத்துராமன், படப்பிடிப்புக்குப் போய் 'ஜாக்கிங்' பண்ணும்போது உயிரை விட்டிருக்கான். நல்ல சாவு. யாரும் வருத்தப் படாதீங்க'- என்று சிவாஜி கூறியது -அதிர்ந்து இருண்டு போயிருந்த எங்களுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.
muthuraman1.jpg
muthuraman2.jpg

Actor Sivakumar FB

முத்துராமன் தமிழ் உச்சரிப்பு காதுக்கு இனிமை. சொல்வளம் மிக்க நடிகர். திருவிளையாடல் திரைப்படத்திலும், ராஜராஜ சோழன் திரைப்படத்திலும் அவரது வசனங்கள் கம்பீரமானவை. சிறந்த கலைஞன். உரிய இடம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. இப்பவும் அவர் நடித்த படங்களை விரும்பிப் பார்ப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகையர் திலகம் சாவித்திரி

எனது 10-வது வயதில் 'தேவதாஸ்' படம் பார்த்தேன். பார்வதி - தேவதாஸ் இரண்டு அமர காதலர்களின் உடல்களும் ஒரே சிதையில் தீ மூட்டப்படுவது கடைசிக் காட்சி.
படம் பார்த்துவிட்டு தாரை தாரையாக கண்ணீர் விட்டவாறு சூலூரிலிருந்து
3 கி.மீ.தூரமுள்ள என் கிராமத்துக்கு இரவில் நடந்தே போனேன்.
அன்று பார்வதியாக நடித்த சாவித்திரியை என் சகோதரியாக வரித்துக் கொண்டேன்.
வணங்காமுடி - பாசமலர் - நவராத்திரி - கொஞ்சும் சலங்கை -கை கொடுத்த
தெய்வம்- என்று எத்தனை படங்கள் , எத்தனை விதமான வேடங்கள்!!.. 'மிஸ்ஸியம்மா' - 'மாயா பஜார்' -அவரை தேவதையாகக் காட்டிய படங்கள்.
'பாச மலர் '- கிளைமாக்ஸில் பார்வையிழந்த சிவாஜியைத் தேடி மகளுடன் சாவித்திரி வருவார். 'எங்கண்ணா போயிட்டீங்க? - என்று கதறுவார்' நீ கிழிச்ச அன்பு வட்டத்தை தாண்டி என்னால எங்கயும் போகமுடியலம்மா' ன்னு சொல்லும்போதும், 'கை வீசம்மா கை வீசு.. கடைக்குப்போலாங் கை வீசு..'
என்று பாடி அழுத போதும் தமிழகத் தியேட்டர்கள் ரசிகர்களின் கண்ணீரில் மிதந்தன..
'சரஸ்வதி சபதம் -கலைவாணி ; கந்தன் கருணை-யில் முருகன் அன்னையாக என்னோடு நடித்தவர், பின்னாளில் 'புது வெள்ளம்' - படத்திலும் என் அம்மாவாக நடித்தார்..
கால வெள்ளத்தில் அவரே படம் தயாரித்து, இயக்கி, நடித்து, தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து - காலம் அவரை கடுமையாகத் தண்டித்தது..
அந்தச் சூழலிலும் என் 100- வது பட விழாவுக்கு வந்து மாலை அணிவத்து உச்சி மோர்ந்தார் அந்த அன்புச் சகோதரி நடிகையர் திலகம் !!!

savithri1.jpg
savithri2.jpg
Actor Sivakumar FB

சிறந்த நடிகை
பிராப்தம் படம் சிவாஜியை வைத்து சொந்தமாக எடுத்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டது என்று அறிந்தேன்.

Edited by Ahasthiyan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கே.பி.சார் விடைபெற்றுக்கொண்டார்.

நடிப்புலக வாழ்க்கையில் சிவாஜி, எம்.ஜி.ஆர் தொட்ட எல்லையை இயக்குநராகத் தொட்ட மேதை...60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் - திரை உலகம் - சின்னத்திரையில் ஆட்சி செய்தவர்..இவர் வாங்காத விருதுகள் - பட்டங்கள் எதுவும் இல்லை.

திருவாரூர் அருகில் நல்லமாங்குடியில் கர்ணம் கைலாசத்தின் செல்லப் பிள்ளையாகப் பிறந்தார்.. வெள்ளைக்காரக் கலைக்டரிடமே ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுவார் தந்தையார்.

4 பெண்கள், 2 பிள்ளைகள்.ஒரே ஜமுக்காள விரிப்பில் மொத்தக் குடும்பம் தூங்க வேண்டும். எனக்கு என்று பாய் , தலையணை, போர்வை எப்போது கிடைக்கும் ?என்று ஏங்கிய சிறுவன்..

12 வயதிலேயே 'நாட்டர்டேம் கூனன்' வேடமேற்று பரிசு தட்டிச் சென்றார். பி.எஸ்.ஸி-யில் முதல் வகுப்பில் தேர்ச்சி...1949 -50 முத்துப்பேட்டையில் ஆசிரியர்.

1951 -64 ஏஜிஎஸ் அலுவலகத்தில் பணி. அங்கேயே 'மேஜர் சந்திரகாந்த்' நாடகம் ஆங்கிலத்தில் எழுதி ஹீரோவாக நடித்தார்.

ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழு துவக்கி - நீர்க்குமிழி - மெழுகுவர்த்தி- சர்வர் சுந்தரம் -'மேஜர் சந்த்ரகாந்த்' -எதிர்நீச்சல்- நவக்கிரகம் - நாடகங்கள் நடத்தி சென்னையைத் கலக்கினார்.

நீர்க்குமிழி - யில் துவங்கி 100-க்குள் மேற்பட்ட படங்களில் இயக்குநராக எழுத்தாளராக - பங்களிப்பு.

கமல்,ரஜினி, சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, ப்ரியா, சரிதா, பிரகாஷ்ராஜ், விவேக்,சுஹாசினி- என பெரிய பட்டாளத்துடன் நாகேஷ், மேஜர், சௌகார் - என எண்ணற்ற கலைஞர்கள் இவரால் பட்டை தீட்டப்பட்டனர். அடியேனும் அதில் ஒருவன்.

1970-ல் அதிக பட்ச டென்சனில் மாரடைப்பு ஏற்பட்டு 6 மாதம் படுக்கை. அப்போது சத்தியம் செய்தார். இனி சிகரெட் தொடுவதில்லை- பிஸி நடிகர்கள் எனக்குத்தேவையில்லை -புது முகங்கள் போதும்- படத்தில் ஏதாவது ஒரு செய்தி சொல்ல வேண்டும் - ஆணாதிக்கம் மேலோங்கியுள்ள உலகில் என் படங்கள் இனி பெண்மையைப் போற்றும் விதமாக இருக்க வேண்டும்..

கடைசி வரை இவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்த

இந்த முடிவை கடைசி வரை காப்பாற்றினார்.

சொல்லத்தான் நினைக்கிறேன் - அக்னிசாட்சி - சிந்துபைரவி - என் வாழ்க்கையில் மறக்க முடியாத அவரது படைப்புக்கள் !!!!

sivakumar1.jpg

sivakumar2.jpg

Actor Sivakumar FB

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டைரக்டர் திரு. ஏ.சி.திருலோக்சந்தர்

தமிழகத்தின் தவப்புதல்வர்கள் ராமசாமி முதலியார்- லட்சுமணசாமி முதலியார்- இரட்டையர்கள்.டாக்டர். லட்சுமணசாமி முதலியார் எலிசபெத் ராணிக்கே பிரசவம் பார்த்தவர்.அதே டாக்டர் பிரசவம் பார்க்கப் பிறந்தவர் 6அடி 3அங்குல உயரமுள்ள டைரக்டர் திரு. ஏ.சி.திருலோக்சந்தர்.

பச்சையப்பன் கல்லூரியில், டாக்டர் மு.வ. பேராசிரியர் அன்பழகன் -மாணவர்.

புத்தகம் படிக்கும் பழக்கத்தை இவருக்கு சிறு வயதிலேயே கற்பித்தவர் - படிக்கும் பழக்கத்தை, சுவாசமாகக் கருதிய இவர் தாயார்.

கல்லூரி படிப்பு முடிந்து 1950 -ல் எம். ஜி.ஆர் அவர்கள் நடித்த 'குமாரி'- படத்தில் உதவி இயக்குநர்.

16 வருடம் கழித்து அதே எம்.ஜி.ஆரை ஹீரோவாக வைத்து 'அன்பே வா'- படத்தை இயக்கினார்

நானும் ஒரு பெண்- காக்கும் கரங்கள் - ராமு - என ஏவிஎம்மில் வரிசையாய்ப் படங்கள்.

சிவாஜியோடு 25 படங்கள் - அவரோடு ஒரே அறையில் தங்கி, ஒரே உணவை உண்டு, ஒன்றாக குறட்டை விட்டு உறங்கியவர்.

'தெய்வ மகன்'- இவரது மாஸ்டர்பீஸ்.

புரசைவாக்கம் எம்.சி.டி.எம். பள்ளித் தோழர் பாலாஜிக்கு 5 படங்கள் இயக்கினார்.

ஜெயலலிதா அம்மையாரின் முத்திரை நடிப்புப் படம்'எங்கிருந்தோ வந்தாள்'.

'பத்ரகாளி'- ராணிச்சந்திரா, விமான

விபத்தில் இறந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு 40% படத்தை 'டூப்' போட்டு எடுத்து, வெளியிட்டு வெள்ளி விழா கண்டவர்.

ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, உண்மையாக உழைத்தால், சிகரம் தொடலாம் என்று, எனக்கு, உச்சி மோந்து ஆசி வழங்கி, தமிழ் திரையுலகில், அறிமுகப்படுத்தியவர் .

83 - வயதில்' நெஞ்சம் நிறைந்த நினைவுகள்'- என்ற தன்வரலாற்று நூலை எழுதி சமீபத்தில் வெளியிட்டார் !!

அப்போது எடுத்த புகைப் படம் இது.

ac_thirologachandar.jpg

ac_thirologachandar2.jpg

Actor Sivakumar FB

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஆர்.ராதா

mr_raathaa2.jpg

எம்.ஆர்.ராதா அவர்களின் அசாத்திய நடிப்புத்திறமையையும் அவரின் இயல்பான சுபாவத்தையும் புரிந்து கொள்ள 'ரத்தக் கண்ணீர்' ஒரு படம் பார்த்தால் போதும். தொழுநோயாளி வேடத்தில் அவரை மிஞ்ச இந்தியாவில் எந்த நடிகனாலும் முடியாது.. ராதாவின் நாடகக் குழுவில் சிவாஜியும் நடித்திருக்கிறார்... நாடகமேடையில் புராணக்கதைகளை நையாண்டி செய்வதிலாகட்டும், மூடப்பழக்கங்களை தோலுரித்துக் கிண்டல் செய்வதிலாகட்டும் அவருக்கு இணையான நடிகர் யாருமே இல்லை. நடிகர்களைக் கடவுளாக கொண்டாடும் ரசிகர்களைக் கடுமையாகச் சாடினார். மண்ணில் ராமன், அரிச்சந்திரன் என்று எவனும் இல்லை என்பார்.

பொள்ளாச்சியால் ராதா நாடகக் குழு முகாமிட்டு ஒரு வாரம் நாடகம் போட்டபோது நூற்றுக்கணக்கான நடிகர்களுக்கு வாரம் முழுக்க தன் ஓட்டலிலிருந்து இலவச அசைவ உணவு வழங்கியவர் என் மாமா. 1959-ன் துவக்கத்தில் மாமாவின் நண்பரான ராதாவை சென்னையில் -இப்போதைய சிவாஜி வீட்டுக்கு எதிரில்- சந்தித்து, 'நல்ல இடத்து சம்பந்தம்'- படத்தில்- டை, கோட்டுடனிருந்த அவர் உருவத்தை வரைந்து எடுத்துப்போய் காட்டினேன். 'பிரமாதம்' என்றவர் வந்த விஷயத்தைக் கேட்டார். சினிமாவில் நடிக்க சான்ஸ் என்றேன்.

'அட, பைத்தியக்காரா, இவ்வளவு பெரிய கலையை கையில வச்சிகிட்டு நடிக்க வர்றியா ! இத பார், அரிதாரம் பூசினவன் எல்லாம் நடிகன்னு சொல்லிக்கலாம்.ஆனா, இந்த மாதிரி ஆர்ட் வரையறவன்

அபூர்வம். ஒழுங்கா போய் ஏதோ பொம்மை காலேஜ்னு சொன்னியே அதில சேர்ந்து படி. அதையும் மீறி தலையெழுத்து இதில இருந்தா அப்ப வா' என்று விரட்டி விட்டார்.

1970 - நவ- 1-ந்தேதி தீபாவளியன்று கைதிகளை மகிழ்விக்க சிறை சென்ற போது அங்கு ராதாவைச் சந்தித்தேன்.பொள்ளாச்சி மாமாவை நினைவில் வைத்திருந்தார். '10 வருஷங்களுக்கு முந்தி, அவர் உங்களை பார்க்க ஒரு பையனை அனுப்பினாரே நினைவிருக்கிறதா' என்றேன் . 'ஆமா ஒரு பொடியன். நல்லா படம் வரைவான்.

பொம்மை காலேஜ்ல சேரச்சொன்னேன்'. என்றார்.

'அந்தப் பொடியன் நாந்தாண்ணே'.....

'அடப்பாவி அங்க சுத்தி இங்க சுத்தி

நடிக்கவே வந்திட்டியா'- என்று ஒரு அதிரடிச் சிரிப்பு சிரிக்க, சிறைச்சாலையே அதிர்ந்தது!!

mr_raathaa1.jpg

Actor Sivakumar FB

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி

பள்ளிப் படிப்பு இல்லை !
பரம்பரைப் பெருமை இல்லை !
இளமையில் வறுமையை
இறுகத் தழுவியவன்- ஆயினும்
கலை உலகின் நாயகி
கலைவாணி ஆசியினை
வரமாய்ப் பெற்று - திரையில்
வரலாறு படைத்திட்டான் !
ஒரு சாண் முகத்தில்
ஓராயிரம் பாவம் காட்டி
சிம்மக் குரலில் தீந்தமிழ்
வசனம் பேசி
அவன் படைத்த பாத்திரங்கள் - திரையில்
அசைகின்ற ஓவியங்கள் !
கர்ணனாக- கட்டபொம்மனாக சிவாஜியாக -செங்குட்டுவனாக
அரிச்சந்திரனாக -அசோகனாக
அப்பராக - ஐந்தாம் ஜார்ஜாக
பாரதியாக - பொற்கைப் பாண்டியனாக
வ.உ.சி.யாக - வாஞ்சியாக
அவன் ஏற்ற வேடங்கள்
எங்களுக்குப் பாடங்கள் !
நடக்கும் நடையில்
நானூறு வகை காட்டினான் !
மரமேறிக்கு ஒரு நடை !
மனோகரனுக்கு ஒரு நடை !
சட்டி சுட்டதடா பாடலுக்கு ஒரு நடை !
போனால் போகட்டும்
போடாவுக்கு ஒரு நடை !
மொத்தத்தில்
நவரசங்களையும் நமக்கு
'நவராத்திரி' யில் காட்டிவிட்டான் !
கிருஸ்துவுக்கு முன்
கிருஸ்துவுக்கு பின் - என
மானுட வரலாறு தொடர
சிவாஜிக்கு முன்
சிவாஜிக்குப் பின் -என
தமிழ்த் திரையுலக வரலாறு
தொடரும் !
வாழ்க சிவாஜி ! ஓங்குக அவர் நாமம் !!
- செவாலியே விருது அவர் பெற்ற போது
நான் மேடையில் வாழ்த்தியது ..

sivaji2.jpg
sivaji1.jpg

Actor Sivakumar FB

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவகுமார் கல்வி அறக்கட்டளை

ஆங்கிலேயர் ஆட்சியின் கடைசி சில ஆண்டுகள்.. கோவை மாவட்டத்தில் கல்வியின் அவசியம் புரியாத காசிகவுண்டன் புதூர் என்ற எளிய கிராமத்தில் பிறந்தேன் .

பத்து மாதக் குழந்தையாக இருக்கையில் அப்பா மரணம்.

அடுத்த 4 ஆண்டில் கல்லூரி செல்ல வேண்டிய 16 வயது

அண்ணன் பிளேக்கில் போய்விட்டான்...பஞ்சம் தலைவிரித்தாடிய காலம்...இரண்டு பேர் படிப்புச்

செலவைச் சமாளிக்க முடியாமல் 3-ம் வகுப்புடன் அக்கா நிறுத்தம்.

பள்ளி இறுதிக்குப்பின் சென்னையில் ஓவியக்கலை

பயில ஒன்றுவிட்ட மாமா கல்விக்கடன் வழங்கினார்.

100-வது படம் வெளியானபோது மாணவர் சமுதாயத்துக்கு சிறு துளியாவது உதவ எண்ணி தாயார் ஆசியுடன் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை

துவக்கினேன்.

ரூ. 25,000/- வங்கி வைப்பு நிதிக்கு ரூ.2,250/- ஆண்டு வட்டி.

ரூ.1000/- 750/- 500/- எனப் பிரித்து +2 தேர்வில் முதல் நிலை பெற்ற 3-மாணவர்களுக்கு பரிசு வழங்கினோம்.

படிப்படியாக பரிசுத் தொகையை உயர்த்தி 25-ம் ஆண்டு நானே ரூ.50,000/- பரிசு வழங்கினேன்.

இப்போது பிள்ளைகள் பொறுப்பேற்று ஆண்டுதோறும் 5 லட்சத்து 50 ஆயிரம் கடந்த 10 ஆண்டுகளாக பரிசளிக்கிறார்கள்.

1980-ம் ஆண்டு முதன் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் இப் படத்தில் இருக்கிறார்கள்

sivakumar3.jpg

Actor Sivakumar FB

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி- வேலு நாச்சியார்
1827-ல் ஜான்சிராணி பிறந்தார்.
இவருக்கு 97 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தவர் நம்முடைய வேலு நாச்சியார்.
இந்திய வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து ஜெயித்த முதல் பெண்மணி
வேலு நாச்சியார்தான்.
1730-ல் ராமநாதபுரம் ராஜா செல்லமுத்து சேதுபதி மகளாய் பிறந்தார். தமிழ், மலையாளம்,இந்தி,...
ஆங்கிலம், பிரெஞ்சு கற்றார் .
வில்,வாள்,சிலம்பம்,குதிரை ஏற்றம் பயின்றார் .சிவகங்கை ராஜா முத்து வடுகநாதரை மணந்தார். 1772 -ல் வெள்ளையர், சமரசம் பேசலாம் என்று வரச்சொல்லி, நயவஞ்சகமாக இந்த ராஜாவைக் கொலை செய்ய ..,சிலிர்த்தார் நாச்சியார்... தலைமறைவாகி, திண்டுக்கல் சென்று ஹைதர் அலியிடம் 8 ஆண்டுகள் பயிற்சி..அவரிடம் படை உதவி பெற்று ..பாளையக்காரர் கூட்டுடன் 4 முனைத்தாக்கு நடத்தினார்.... சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயிலுக்குள் இருந்த ஆயுதக் கிடங்கை, முதல் மனித வெடிகுண்டு, குயிலி மூலம் தகர்த்தார்...
வேறு வழியில்லாமல், வெள்ளைக்கார கவர்னர் பாஞ்சோர், 'நீங்கள் ஆட்சி செய்யும் காலம் வரை இந்த மண்ணில் கால் வைக்க மாட்டோம்' என்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு விடை பெற்றான்.

velunaachiyaar.jpg
velunaachiyaar2.jpg
 

 

 

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாண்டோ சின்னப்பா தேவர்

 

1946 -கோவை ராமநாதபுரம்....
தேகப்பயிற்சி சாலையில் வியர்வையில் மின்னும் கருந்தேக்கு உடம்பில், ஒரு இளைஞர் உடற்பயிற்சி செய்கிறார்.
சென்ட்ரல் ஸ்டுடியோவில் மாதச் சம்பளத்தில் நடித்து வந்த ஒரு நடிகர் அதை வேடிக்கை பார்க்கிறார்.
இருவரும் நண்பராகிவிடுகிறார்கள்.
படத்தில் தன்னோடு சண்டைக் காட்சியில் நடிக்க, கருந்தேக்கு உடம்புக்காரருக்கு இவர் சிபாரிசு...
செய்கிறார். ஒரு நாள் நடிகர் குடியிருந்த வாடகை வீட்டு வழியே, கருந்தேக்கு வர- 'எங்கப்பா காலையில போன ஒன் சிநேகிதனை இன்னும் காணோம். மத்தியான சமையலுக்கு, அவன் சம்பளம்
வந்தாத்தான் மார்க்கட்டுக்குப் போய் அரிசி பருப்பு வாங்கியாரணும்' - என்றார் நடிகரின் தாயார்.
'இதோ வந்திட்டேம்மா'- என்று சொல்லி விட்டு, பக்கத்து தெருவில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்குள் போய் - 'பேச்சீம்மா, ஒரு கிளாஸ் தாளிச்ச மோர் கொண்டா'- என்றார்.
மோர் வருவதற்குள் -மலபார் ரிசர்வ் போலீஸ் போடுகிற மாதிரியான அரை டிராயர் பாக்கட்டில்-அந்த வீட்டு மூட்டையிலிருந்து எடுத்து ஒரு பக்கம் ஒரு லிட்டர் அரிசி, மறுபக்கம் பருப்பு நிரப்பிக்கொண்டு, தாளித்த மோரில், தாக சாந்தி செய்துவிட்டு, நடிகரின் தாயாரிடம் அதைச் சேர்த்தார்.
அம்மா சமையலுக்கு என்ன செய்திருப்பார்களோ என்று தவித்தவாறு வீடு வந்த நடிகருக்கு 'கம கம' என்று சமையல் வாசனை ! 'எப்படிம்மா சமையல்? ' - என்று நடிகர் கேட்க , 'உன் பயில்வான் சிநேகிதன் வாங்கியாந்தான்' - என்றார் அம்மா.
அவில் கொடுத்த குசேலனை
குபேரனாக்கினார் கிருஷ்ண பரமாத்மா !
அரிசி கொடுத்த நண்பனை
கோடீஸ்வரனாக்கினார் நடிகர் !!
கருந்தேக்கு உடம்புக்காரர்
அண்ணன் சாண்டோ சின்னப்பா தேவர்.
அன்னையார் சத்யபாமா. நடிகர் - யார் என்று சொல்லவேண்டியதில்லை- நாடாண்ட முதல் நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
படம் : ஜூபிடரின்-'ராஜகுமாரி.'

mgr_sinaappa_thevar.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.