Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசு கனடா - நடாத்திய 2ம் ஆண்டு மனித உரிமைக் கருத்தரங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசு கனடா - நடாத்திய 2ம் ஆண்டு மனித உரிமைக் கருத்தரங்கு. photo.png

[sunday 2015-04-26 21:00]

TGTE-canada-250415-seithy-400.jpg

இன்று ஏப்ரல் 25, 2015 சனிக்கிழமை நாடுகடந்த தமிழீழ அரசு கனடா, Consortium of Tamil Associations, மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் இணைந்து ஒழுங்கமைத்து நாடத்திய '2ம் ஆண்டு மனித உரிமைக் கருத்தரங்கு' நிகழ்வு ஸ்கார்புரோவில் 940 Progress வீதியில் அமைந்துள்ள Centennial College Residence & Conference Centre இல் நடைபெற்றது. "Assimilation or Annihilation" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழீழ மக்களின் எதிர்காலமும் தமிழீழ மக்களுக்கான நீதியை பெறுவது பற்றியும் ஆராயப்பட்டது.

இந்த கருத்தரங்கு நிகழ்வு தமிழ் மக்கள் அனைவரும் பயன் பெறும் பொருட்டு இலவச நிகழ்வாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பல முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புரைகள் ஆற்றப்பட்ட இந்த நிகழ்வில் கனடிய தமிழ் வானொலி ஊடகவியலாளராக நானும் பங்கேற்று இருந்தேன்.

 

(2009 க்கு பின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வலியை விட பெரும் வலியாக எம் இனத்திற்காக உழைக்கும் பல செயற்பாட்டாளரும் பிரிந்து செயல்ப்பட்டு வந்தமை வேதனையை தந்திருந்தாலும் 5 ஆண்டுகளின் பின்பு கனடிய மண்ணில் கனடிய தமிழ் மக்களின் தேசியக் கட்டமைப்பாக இயங்கி வரும் கனடிய தமிழர் தேசிய அவையும் நாடுகடந்து வாழும் தமிழ் மக்களின் குரலாக ஒலித்து வரும் நாடுகடந்த தமிழீழ அரசும் ஒருங்கிணைந்து மே மாதம் நடக்க இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் நிகழ்வு ரீதியாக ஒன்றிணைந்து நினைவு கூற பேச்சு வார்த்தைகள் நிகழ்ந்து கொண்டு இருக்கும் இக்காலகட்டத்தில் கனடிய மண்ணில் இருந்து மக்கள் குரலாக தமிழ் தேசிய ஊடகமாக இயங்கி வரும் கனடியத் தமிழ் வானொலி தமிழ் தேசிய பணிகளை முன்னெடுக்கும் அனைவரின் குரலாகவும் பொதுமையாக ஒலித்து வரும் பணியை ஆற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.)

 

கருத்தரங்கு பி.ப. 2 மணிக்கு சரியாக ஆரம்பமானது. நிகழ்வை பேராசிரியர் சந்திரகாந்தன் அமைதி வணக்கம் செலுத்தி ஆரம்பித்து வைத்தார்.

கருத்தரங்கின் முதலாம் அமர்வில் பேராசிரியர் தியோடோர் எஸ்.ஒர்ளின் (Professor Theodore(Ted) S. Orlin. J.D. உரையாற்றினார். இவர் மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் நியூ யோர்க் நகரை மையமாக கொண்டு இயங்கும் Human Rights Advocacy Program (HRAP) அமைப்பின் ஸ்தாபகர் மற்றும் நிறைவேற்று இயக்குனராக உள்ளவர் எனபது குறிப்படத்தக்கது. இவர் இந்நிகழ்வுக்காக நியூயோர்க்கில் இருந்து தனது மனைவி ஹெலனுடன் ரொறொன்ரோ வருகை தந்திருகின்றார்.

 

இவர் இலங்கைக்குள் நடக்கும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க மனித உரிமை அமைப்புகளை இலங்கை அரசு நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு அவரது சிறிலங்கா பயணத்தில் தனக்கு நடந்த கொடூரமான மனித உரிமை மீறல் அனுபவங்களை பகிர்ந்ததொடு தன்னை போன்ற பிற நாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கே இத்துணை துன்பங்களை அடக்குமுறைகள் என்றால் அங்கு வாழும் அப்பாவி தமிழ் மக்களின் அவலங்கள் எத்துணை கொடுமையானவை என ஊகிக்க முடியும் என விளக்கினார்.

 

அவர் யாழ்பாணம் திருகோணமலை சென்று தமிழ் மக்களை நேரில் சந்தித்து விசாரணை செய்து உண்மைகளை கண்டறிய விரும்பிய தனது முயற்சிகளை முடக்கி அவமானப்படுத்தி துன்பம் தந்து திருப்பி அனுப்பிய இலங்கை அரசின் அராஜகப் போக்கு தமிழ் மக்களுக்கு ஒரு போதும் நீதியை பெற்றும் தரும் முயற்சிக்கு சரிவராது என குறிப்பிட்டார்.

 

உள்ளக விசாரணை அர்த்தமற்றது என்றும் அனைத்துலக விசாரணைக்கு இலங்கை அரசு உள்ளாகாமல் இலங்கை அரசின் எதேச்சை போக்கில் அதை அனுமதிக்க அனைத்துலகம் அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழர்கள் சிக்கலை தீர்த்து வைக்கும் பணியில் அனைத்துலகுக்கு பாரிய கடமை உள்ளது எனவும் கூறினார்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கான நீதியை அனைத்துலக விசாரை மூலம் விசாரித்து தீர்வு காண முயலாமல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமைதியாக வாழ முடியும் என இலங்கை அரசு கனவு காண்பது என்றுமே சரிவராது. அதுவே அநீதியின் இன்னொரு வடிவம் என்றார். தமிழ் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும். அதே போல் அனைத்துலகத்தாலும் தமிழ் மக்களின் குரல் உன்னிப்பாக கேட்கப் பட வேண்டும் என்றார்.

 

இவ்வேளையில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் அவர்கள் Skype ஊடாக இணைந்து பேராசிரியர் உரைக்கு தன் விளக்கத்தை கொடுத்ததோடு தனது கருத்தையும் முன்வைத்திருந்தார்.

 

அவர் தன் உரையில் நேற்றைய நாள் உலகெங்கும் முதலாம் நூற்றாண்டு நினைவுகளை நினைவு கூர்ந்த ஆர்மினிய படுகொலையை தமிழினப் படுகொலையோடு ஒப்பிட்டு பேசியதோடு நீதிக்கான பயணத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சர்வதேச நீதி மன்றம் நோக்கி யுத்த குற்றங்களை எடுத்துச் செல்லும் பொறிமுறைகள் பற்றி விளக்கினார்.

 

மக்கள் நேரம் கேள்வி பதில் நேரமாக அனுமதிக்கப்பட்டு சிறிய இடைவெளியை தொடர்ந்து இரண்டாம் கட்ட அமர்வு ஆரம்பமானது. இதில் University of Denver மற்றும் Sturm College of Law ஆகிய கல்விச்சாலைகளின் விரிவுரையாளர் Akerson சகிப்பே இனூடாக உரையாற்றினார்.

 

அவர் தனது சர்வதேச நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லும் வழக்குகள் பற்றிய விரிவுரையை விளக்கி கூறினார். தீர்ப்பாயங்களூடாக சர்வதேச நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்பட்ட வழக்குகள் எவ்வாறு முன்னகர்த்தப் படுகின்றன என்பது பற்றி விளக்கி கூறினார். அந்த வகையில் அவர் நேரடியாக பங்களித்து பணியாற்றிய யூகோஸ்லாவியா, மற்றும் ருவண்டா சட்ட நடைமுறை பற்றி விளக்கினார். சர்வதேச இனப்படுகொலை குற்றவவளிகளை எப்படி அனைத்துலக நீதி மன்றத்தில் நிறுத்தியுள்ளார்கள் என்ற முன்னனுபவ விளக்கங்களும் எடுத்துரைத்தார்.

தமிழ் மக்களிடம் உள்ள ஒரே ஒரு சிக்கல் தமிழர்கள் பல பிரிவுகளாக பிரிந்து உள்ளதால் இனப்படுகொலை, யுத்தக் குற்ற சாட்சிகள் அனைத்துலகுக்கு வெளிப்படையானவையாக இல்லை என்றும் வெவ்வேறு சாராரும் சாட்சியங்களை தம்மகப்படுத்தி இருப்பது தமக்கு பெரும் சவால் என்றும் குறிப்பிட்டார்.

 

ஈற்றில் உரையாற்றிய Professor. Dr. Brian Senewiratne உரை எல்லோருக்குள்ளும் ஒரு எழுச்சியையே ஊட்டியது எனலாம். இத்தனை நடந்த பின்னும் தமிழர்கள் போராடாமல் இருக்கலாமா? நடந்தது அப்பட்டமான இனப்படுகொலை என்பது அத்துப்படியான உண்மை என்பதை அடித்துச் சொல்லுங்கள் தமிழர்க்கு இருக்கும் ஒற்றை தீர்வு தமிழீழமே என்பதில் உறுதியாக இருங்கள் என்று முழங்கினார்.அவருடைய உரையில் தமிழர்க்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதற்கான பல்வேறு கூறுகள் ஆராயப்பட்டன. அது மட்டுமன்றி அப்பட்டமான இனப்படுகொலையின் கூறுகள் எவை என்பதற்கான அத்தனை ஆதாரங்களும் உள்ளன. எனவே தமிழர்க்கு இந்த இனப்படுகொளையாளர்களிடம் இருந்து விடுதலை வேண்டும். என கூறினார்.

 

இந்நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து பேச்சாளர்களையும் கனடியத் தமிழ் வானொலியில் தமது கருத்துகளை மக்களிடம் நேரடியாக தெரிவிக்க வாய்ப்பளித்தது கனடியத் தமிழ் வானொலி.

 

இந்த நிகழ்வுக்கு சர்வதேச மன்னிப்பு சபை சார்பில் அனைவரும் அறிந்த மனித உரிமை குரலோனாக திகழும் John Argue அவர்களும் வந்திருந்தார்.

இந்த நிகழ்வில் அவர் உரை ஆற்றாவிட்டாலும் வருகை தந்து அக்கறையோடு குறிப்புகள் எடுத்துக் கொண்டு இருந்தார். அவர் கனடியத் தமிழ் வானொலியில் கருத்துப் பகிர்ந்த போது கூறியதாவது தமிழ் மக்கள் ஒற்றுமையாக தமக்கான நீதியை வென்றெடுக்க உறுதியாக போராட வேண்டும் என்பதாகும்.

 

அவரிடம் "சர்வதேச மன்னிப்பு சபை தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது என்றாலும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குரல் என ஒலிக்கின்றதே அன்றி மனிதப் படுகொலை என்பதை இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லையே? எம் மண்ணில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏன் இன்னமும் உங்கள் அமைப்பு சொல்கின்றதில்லை?இன்று Dr. Brian Senewiratne உரையில் துல்லியமாக விளக்கிய பின்னும் உங்கள் எண்ணம் மாற்றமடையவிலலியா?" எனக் கேட்டேன். அதற்கு அவர் தனக்குள்ளும் இன்று இந்த கேள்வி மிகவும் துருத்திக் கொண்டு இருக்கின்றது என்றும் இன்றே தமது சபைக்கு இது குறித்து எழுதி மாற்றி எழுதுங்கள் "படுகொலை" என குறிப்பிடுங்கள் என கேட்கவுள்ளேன் என்றார்.

 

முன்னோக்கிய நகர்வோடு குறித்தபடி 6 மணிக்கு நிகழ்வு நிறைவு எய்தியது. ஒன்று பட்ட இனத்தின் ஒற்றுமையால் எம் இனத்தின் விடுதலையை வென்றெடுக்க இன்னமும் கடுமையாக நாம் உழைக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்வில் இருந்து நாம் பெற்றுக் கொள்ளும் செய்தியாக உள்ளது.

செய்தி தொகுப்பு - செந்தமிழினி பிரபாகரன்

  • TGTE-canada-250415-seithy%20%281%29.jpg
  • TGTE-canada-250415-seithy%20%282%29.jpg
  • TGTE-canada-250415-seithy%20%283%29.jpg
  • TGTE-canada-250415-seithy%20%284%29.jpg
  • TGTE-canada-250415-seithy%20%285%29.jpg
  • TGTE-canada-250415-seithy%20%286%29.jpg
  • TGTE-canada-250415-seithy%20%287%29.jpg
  • TGTE-canada-250415-seithy%20%288%29.jpg
  • TGTE-canada-250415-seithy%20%289%29.jpg
  • TGTE-canada-250415-seithy%20%2810%29.jpg
  • TGTE-canada-250415-seithy%20%2811%29.jpg
  • TGTE-canada-250415-seithy%20%2812%29.jpg
  • TGTE-canada-250415-seithy%20%2813%29.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=130993&category=TopNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.