Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தர் ஏன் தமிழ்மக்களுக்கு சைக்கிள் வேண்டுமென்று கேட்டார்???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஏன் தமிழ்மக்களுக்கு சைக்கிள் வேண்டுமென்று கேட்டார்???

ஏன் எமக்கு, எம்மில் அக்கறை கொண்ட, அர்ப்பணிப்புள்ள, புவிசார் அரசியலை விளங்கிக்கொண்ட, பிறசக்திகளின் நலன்களுக்காக எமது மக்களை விலைபேசாத உறுதியான தலைமை தேவை என்பதை இப்பதிவு விளங்கப்படுத்துகிறது.

பதிவு 1) பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான த தே கு தலைமையின் சந்திப்பு 2013
பதிவு 2) ஐநா மனித உரிமைசெயலாளரின் வாய்மொழி மூல அறிகையை முன்னிட்டு கஜேந்திரகுமார் ஐ நாவில் ஆற்றிய உரை 2014

'இனி நீங்களே முடிவு செய்யுங்கள்'

பதிவு 1)
மூடிய அறைக்குள்ளே இருவர் மட்டும் கதைப்பது என்ன என்று எங்களுக்கு தெரிவதில்லை. வெளியில் வந்து அந்த இருவரும் சொல்வது தான் எமக்கு பத்திரிகைகள் வாயிலாக வரும்.
ஆனால், மூடிய அறைக்குள்ளே 2013ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிகளுடன் சம்பந்தரும் அவரது "தேசத்தை" சேர்ந்த அவரது சகாவும் எங்களைப் பற்றியும் அப்போது ஆட்சியில் இருந்த மகிந்த ராசா பற்றியும் என்ன சொல்லியிருக்கிரார்கள் என்பதை இங்கே பார்ப்போம்.
இவை பிரித்தானிய பாராளுமன்ற பதிவேடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை :-

//Ian Paisley (North Antrim) (DUP):- (British MP) , I took a day out and spent it with the leader of Tamil National Alliance, Mr Sampanthan. I spoke to him and his party colleagues at length, and I waited for him because I wanted to hear from him at first hand, without his being pushed or prodded into some of the difficult issues about the past. He did not raise with me the issue of the disappeared; he did not take time to raise with me the issue of war crimes; he did not take time to talk about routine torture, in his country, of his people. He had a politician with him from this nation and he did not want to talk about those things. In fact, he actively applauded the Government, whom he opposes. He applauded them on their investment in the country—in parts of the north—and he said that the most effective thing that many of his people required was practical help to get bicycles and other tools to help them to work and run their country. That was the message of the man who is leading the opposition//

http://www.publications.parliament.uk/…/hal…/130108h0001.htm
(UK parliament transcript -8 Jan 2013 : Column 15WH.)

நான் தமிழ்தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தருடனும் அவரது கட்சியைச்செர்ந்த அவரது சகா ஒருவருடனும் ஒரு நாள் செலவிட்டேன். நான் நீண்டநேரம் அவர்களுடன் செலவிட்டதற்கு காரணம், (பாதிக்கப்பட்டவர்களாகிய) அவர்களிடமிருந்து நேரடியாக, எதுவித அழுத்தங்களும் அற்றநிலையில் அவர்களது கருத்தை பெறுவதற்கே.

அவர் "தனது நாட்டில் "காணாமல்போனவர்கள், சித்திரவதைகள் யுத்தகுற்றங்கள் பற்றி எதுவித கருத்தையுமே எங்களுக்கு சொல்லவில்லை. அவருடன் இருந்த அவரது "தேசத்தை "சேர்ந்த அந்த அரசியல்வாதியும் இதைப்பற்றி கதைக்கவிரும்பவிலை.
மாறாக அவர்கள் தாங்கள் (வெளியில்) எதிர்க்கின்ற‌ அந்த அரசாங்கத்தை (மகிந்த ராசாவின் ஆட்சி காலம்) ஆர்வமுடன் பாராட்டினார்கள்.

தமது நாட்டிலும் குறிப்பய் வடக்கிலும் நிகழும் முதலீடுகளை பாராட்டினார்கள் . உண்மையில் தமது மக்களுக்கு நடைமுறையில் உண்மையில் தேவைப்படுவது அவர்களுக்கு சைக்கிள் வழங்குவது போன்ற யதார்த்தமான உதவிகளே. அது அவர்களது வாழ்க்கையை கொண்டு செல்ல உதவும்.
இது தான் அவரிடமிருந்து எனக்கு கிடைத்த செய்தி.//:-Ian Paisley (North Antrim) (DUP):- (British MP)

இனி நீங்கள் தீர்மானியுங்கள் !!!!!!

எனக்கு உண்மையில் இரண்டு சந்தேகங்கள்,
1. சம்பந்தர் தமிழ்மக்களுக்கு சைக்கிள் தேவை என்று சொன்னது தீர்க்கதரிசனத்தோடா?
2. சமப்ந்தரோடு இருந்த, போர்க்குற்றம் பறறி பேசவே விரும்பாத சம்பந்தரின் தேசத்தை சேர்ந்த அந்த சம்பந்தரின் சகா யார்???

பதிவு 2) ஐந மனித உரிமைசெயலாளரின் வாய்மொழி மூல அறிகையை முன்னிட்டு கஜேந்திரகுமார் ஐ நாவில் ஆற்றிய உரை,
மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் சிறிலங்கா தொடர்பான வாய்மொழிமூல அறிக்கையை எமது அமைப்பு வரவேற்கிறது. மனித உரிமை ஆணையகத்தின் 25/1 (A/HRC/25/1)தீர்மானம் சம்பந்தமான் விரிவான பொருட்கோடலைக் கொடுத்தமையையும் நாம் வரவேற்கிறோம். குறிப்பாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவானது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடியாக தகவல்களை பெறுவதற்கும் அதனை வலிமைப்படுத்துவதற்கும் முன்னுரிமை கொடுப்பதாகக்குறிப்பிட்ட ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறோம்.
இந்த விசாரணைக்க்கு நேரடிசாட்சியங்களை வழங்கக்கூடிய மிகப்பெரும்பான்மையானோர் சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்கள் என்பது மனித உரிமை ஆணையாளர் அறிந்ததே. தொடர்ந்தும் பாதிக்கப்படும் மக்கள் என்றவகையில் இந்த விசாரனைக்கு தமது சாட்சியங்களை பதிவுசெய்ய வேண்டுமென்பதில் தமிழர்கள் பெருதும் விருப்புக்கொண்டிருக்கிறார்கள். களத்தில் வாழுகின்ற பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை பதிவுசெய்யாதவிடத்து, அவ்விசாரணை முழுமையானதாகவோ தீர்க்கமானதாகவோ அமையாது.
ஆகவே, பாதிக்கப்பட்ட இந்த மக்கள் தமது சாட்சியங்களை நேரடியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணிக்குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு ஏதுவான பொறிமுறைகளை உறுப்புநாடுகள் முன்வைக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

போரின் போதும் அதன் பின்னரும் வடக்கைப்போலவே கிழக்கும் பாதிக்கப்பட்ட போதிலும் இங்கு, இலங்கையின் வடபகுதி பற்றியே முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுகிறது. உதாரணமாக 2009 முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூர குற்றங்களுக்கு சமனான குற்றங்கள் 2007 இல் கிழக்கின் வாகரையிலும் நிகழ்த்தப்பட்டது. அத்தோடு வடக்கின் வலிகாமத்தில் நடைபெறும் நில அபகரிப்பு போலவே கிழக்கின் சம்பூரில் நிகழும் நில அபகரிப்பும் மிகவும் அபாயகரமானதாகும். எனவே, கிழக்கு மாகாணம் பற்றியும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக விசாரணைக்குழு போதிய முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று நாம் வேண்டிக்கொள்கிறோம்.

தமிழர்கள், அவர்களது தமிழர்கள் என்கிற தேசிய அடையாளத்தினாலேயே தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்பதை, மனித உரிமைகள் ஆணியாளரின் வாய்மொழிமூல அறிக்கை குறிப்பிடத்தவறியமையை நாங்கள் கவலையுடன் கவனத்தில் கொள்கிறோம். குறிப்பாக, (அந்த அறிக்கையில்) மத சிறுபான்மையினர் இலக்கு
வைக்கப்படுவதை கிற்ஸ்தவர்களும் முஸ்லிம்களும் இலக்குவைக்கப்படுவதாக பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்ற அதேவேளை, தமிழர்கள் என குறிப்பிடுவதை தவிர்த்திருப்பது மிகவும் ஏமாற்றத்தை தருகிறது.

மனித உரிமைகள் ஆணையாளரது வாய்மொழு மூல அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதில் பெரும்பான்மையான சம்பவங்கள், தமிழர்களின் / இலங்கைத்தீவில் தமிழ்தேசத்தின் அடையாளத்தை அழித்து அவர்களை அடிமைப்படுத்தும் ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைப் பொறிமுறையின் ஒருபகுதியே ஆகும். தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நியாயமாகவும் வெளிப்படையாகவும் புரிந்துகொள்ளல் இங்கு மிகவும் அடிப்படையானது. அந்த அடிப்படையில் விசாரணைகளைக்கொண்டு செல்லுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவகத்தை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.

{https://www.facebook.com/friendsofgajen/photos/pb.1607426422808347.-2207520000.1437290876./1620140794870243/?type=3&theater}

-மருத்துவர் தி.பாலமுருகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.