Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைப்பொருள் சுமக்கும் சிறுவர்கள்: குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்

Featured Replies


புத்தகத்தை தோள்களில் சுமந்து பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயதில் வடக்கில் உள்ள பல சிறுவர்கள் போதைப் பொருள் சுமப்பதாக குறிப்பிடும்   குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் பார்த்தீபன் யுத்தத்தில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்கள் இராணுவத்திற்காய் போதைப் பொருளை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவதாக இக் கட்டுரையில் பதிவு செய்கின்றார். இந்த நடவடிக்கை இன்றைய ஈழத்தில் சிறுவர்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் இனஅழிப்பு நடவடிக்கை என்றும் விளக்குகிறது இக்கட்டுரை.


இன அழிப்பு என்பது 2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றதைப்போன்று கொத்துக்கொத்தாக கொல்லப்படுவது மாத்திரமல்ல. பெண்கள் வன்புணர்வாக்கி படுகொலை செய்யப்படுவதும், சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றழிப்பதும் காணாமல் போகச் செய்தல்களும் மாத்திரம் இன அழிப்பல்ல. இன அழிப்பை கத்தியின்றி, துப்பாக்கியின்றியும் முன்னெடுக்க முடியும். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்களை யுத்தத்தின் மூலம் இன அழிப்புச் செய்தார். அதன் பின்னர் தமிழ் இனத்தை அழிக்க பல்வேறு நுட்பமான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ஆட்சிமாறியபோதும் தமிழ் இனத்தை அழிக்கும் அந்தக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை. அது நுட்பமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையில் வடக்கு கிழக்குச் சிறுவர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.


ஒரு சமூகத்தை அழிவை நோக்கி தள்ளுவதும் அழிவின் பாதையை நோக்கிச் செல்வதற்கான சூழலை உருவாக்கிவிடுவதும் திட்டமிட்ட இன அழிப்பின்பாற்பட்டதேயாகும். நேரடியாகவும் மறைமுகமாகவும் மிகவும் நுட்பமாக இந்த சூழலை நோக்கி தமிழர் சமூகம் தள்ளப்படுகின்றது. நிகழ்காலத்தின் மனிதர்கள் அழிக்கப்படுவதுபோல எதிர்காலத்தின் மனிதர்களும் திட்டமிட்டு அழிக்கப்படுமொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. போருக்குப் பின்னர் வடக்கில் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதுபோலவே சிறுவர்கள் போதைக்கு அடிமையாக்கப்பட்டிருப்பதும் அதனால் வன்முறைகளில் ஈடுபடுகின்ற சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. புத்தகம் சுமக்க வேண்டிய ஏதுமறியாத சிறுவர்களின் கையில் வாழ்க்கையை எதிர்காலத்தை சமூகத்தை அழிக்கும் போதைப் பொருட்கள் புழங்கும் சூழல் உருவாக்கப்படுவது மிகவும் தந்திரமான திட்டமிட்ட நடவடிக்கையாகும்.


வடக்கு கிழக்கில் மாத்திரமே காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் காடுகள் மாத்திரமே பாதுகாக்கப்பட்டுள்ளன. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இராணுவத்திற்காகவும் சிங்களக் குடியேற்றத்திற்காகவும் காடும் அழிக்கப்பட்டன. புலிகள் காடுகளை பாதுகாத்தார்கள் என்பதை ஜனாதிபதி ஒப்புக்கொள்கிறார். உண்மையில் வடக்கு கிழக்கில் காடுகளுக்கு மாத்திரமல்ல மனிதர்களுக்கும் மனிதர்களின் வாழ்வுக்கும் பாதுகாப்பு இருந்தது என்பதை இதன் ஊடாய் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்கிறார். அன்றைக்கு வடக்கு கிழக்குச் சிறுவர்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்கவில்லை.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிறுவர்களை படைக்குச் சேர்க்கிறது என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசு உலகம் முழுவதிலும் பெரும் பிரசாரமாக முன்னெடுத்தது. தனது இனப்படுகொலையை, இன ஒடுக்குமுறையை அதற்கு எதிராக எழுந்த போராட்டத்தை ஒடுக்க என புலிகளை பயங்கரவாதிகள் எனச் சித்திரிக்க விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை வைத்திருப்பாக இலங்கை அரசு கூறியது. ஆனால் இன்றைக்கு வட கிழக்குச் சிறுவர்கள் திட்டமிட்ட ரீதியில் போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கப்பட்டு போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற வேளையில் ஈழச் சிறுவர்கள் குறித்தும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்களின் உரிமை குறித்தும் பேச எவருமில்லை.  


அண்மையில் கிளிநொச்சியில் ஒரு சிறுவனைச் சந்தித்தேன். அவனுக்கு வயது 15. அவன் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளான். அவனுக்கு போதைப் பொருட்கள் எங்கிருந்தோ கிடைக்கின்றன. ஆனால் எதற்காக அவன் போதைப் பொருட்களை நாடுகிறான் என்பதையே அறிய விரும்பினேன். அவனது தயார் யுத்தத்தில் இறந்துவிட்டார். தாயின் அரவணைப்பு இல்லாமல் போன பிறகு அவனது வாழ்க்கையே தடம் புரண்டு விட்டது. அவனது தயாரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் கண்டிப்பானவர். குறிப்பாக பிள்ளைகளின் படிப்பில் மிகவும் அக்கறை கொண்டவர். அவர் கொல்லப்பட்ட பிறகு கணவரும் அதிகமாக குடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் குடிக்கத் தொடங்கிய இந்தச் சிறுவன் இப்போது ஆபத்தான போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிட்டான். தன் பிள்ளை படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று கனவுகண்ட அந்தச் சிறுவனின் தாயின் கனவு சிதறுண்டுவிட்டது.


கிளிநொச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தற்காலிக வீடு ஒன்றைக் கடந்து செல்லும்போது சிறுவர்கள் கூடியிருந்து போதைப் பொருட்களை பாவித்துக் கொண்டிருப்பதை பார்க்க நேரிட்டது. அவர்களில் பலரும் யுத்தத்தில் தாய் தந்தையர்களை இழந்தவர்கள். பாடசாலையை விட்டு இடைவிலகியவர்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிட்டனர். பல சிறுவர்கள் பொக்கற்றுக்களில் கஞ்சாவடன் அலைகின்றனர். இதுபோல பல சிறுவர்களை நான் சந்தித்துவிட்டேன். அவர்கள் இன்று வாழ நேர்ந்துள்ள சமூகச் சூழலே இவ்வாறான நிலமைக்கு தள்ளியுள்ளது. பெற்றோர்களின்றி, தனிமையில், அவ நம்பிக்கைகளின் மத்தியில் எதிர்காலம் குறித்து எந்த திட்டமுமின்றி மன உளைச்சல்களை தீர்க்க போதைப் பொருட்களை நாடுகின்றனர்.


கிளிநொச்சியில் பாரதிபுரத்தில் அண்மையில் கஞ்சா போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சிறுவன் இராணுவ அதிகாரி ஒருவருக்காகவே தான் கஞ்சா கொண்டு சென்றதாக கூறினான். அந்த இராணுவ அதிகாரி முறிகண்டியில் உள்ள முகாம் ஒன்றில் இருப்பதாகவும் அவர் தனது நண்பர் என்றும் அந்தச் சிறுவன் குறிப்பிட்டான். அவருக்காக வாரம் தோறும் கஞ்சாவை எடுத்துச் செல்வதாகவும் அதற்காக அவர் தனக்கு இறைச்சி வழங்குவார் என்றும் அந்தக் கஞ்சாவை கிளிநொச்சி நகரத்தில் இருநூற்றைம்பது ரூபாவிற்குப் பெற்றதாகவும் அச் சிறுவன் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டிருந்தான். சுமார் 14 வயது மதிக்கத் தக்க அந்தச் சிறுவன் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.


வடக்கில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்கள் இராணுவத்திற்கான போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கல்வி, வருமானம் எதுவுமற்ற நிலையில் மிக இலகுவாக பணம் சம்பாதிக்கவும் தமக்குத் தேவையான போதைப் பொருளை நுகரவும் போதைப் பொருள் விநியோகத்தில் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு இராணுவத்தினர் முழுமையான பாதுகாப்பை ஆதரவை வழங்குகின்றனர். ஏனெனில் இராணுவத்திற்குத் தேவையான போதைப் பொருட்களை இந்த சிறுவர்களே பெற்றுக்கொடுக்கின்றனர். வீதிகளில் ரோந்து செல்லும் இராணுவம் சிறுவர்களிடமிருந்து போதைப் பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். வடக்கில் இராணுவத் தலைமையகங்களில் போதைப் பொருள் பாவிக்கும் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு சிறுவர்களே ஊடாகவே கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் விநியோகம் இடம்பெறுகின்றது.


கிளிநொச்சி நகரத்தை அண்டிய கிராமம் ஒன்றில் அண்மையில் நடந்த வாள்வெட்டில் ஈடுபட்டவர்களில் நான்குபேர் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள். சம்பவம் நடக்கும்போது அவர்கள் போதையில் இருந்துள்ளனர். சிறுவர்கள் வன்முறைகளில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் பலவும் போருக்குப் பின்னர் பதிவாகியுள்ளது. வடக்கிலிருந்து பல சிறுவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டமையால் அநுராதபுரம் சிறைக்குச் செல்கின்றனர். இவர்களில் பலர் போதைப் பொருள் பாவித்து மற்றும் மது அருந்திய நிலையிலேயே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் முன்னர் வடக்கில் பொலிஸ் உறுப்பினர் ஒருவரை கிளிநொச்சி சிறுவர் கத்தியால் குத்தியிருந்தார். தன் இனத்தை பழித்தமையால் கத்தியால் குத்தியதாக சிறுவன் கூறியனான்.


யுத்தம் செய்து ஒரு தேசத்தை ஆக்கிரமிக்கும் இராணுவம் தொடர்ந்தும் அங்கொரு யுத்த நடவடிக்கையை தொடரும். அந்த தேசத்தின் வாழ்வை வரலாற்றை அழிக்கும் ஒரு நடவடிக்கையை சத்தமின்றி மேற்கொள்ளும். இன்றைக்கு வடக்கின் சிறுவர்களை, யுத்தத்தில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களை போதைப் பொருள் விநியோகத்திலும் போதைப் பொருள் பாவனையிலும் ஈடுபடுத்தி அதன் ஊடாக அவர்களது எதிர்காலத்தை பழாக்கிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டிருப்பதும் இதன்பாற்பட்டதே.

 
இது தொடர்பில் தமிழ் சமூகமும் அரசில் தலைமையும் அரச அதிகாரிகளும் விழித்து செயற்படுவது அவசியமானது. போரால் தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளை, படிக்க வேண்டிய வயதில் பாடசாலைகளைவிட்டு இடைவிலகியவர்களை மீள கல்வியில் இணைப்பதும் இடைவிலகல் காரணங்களை கண்டறிய வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில்  கிராம மட்டத்தில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து தடம்மாறிய சிறுவர்களின் எதிர்காலத்தை வளம்படுத்த சமூக அக்கறை மிக்க செயற்பாடு இன்று தேவை.


இன அழிப்பு இராணுவம் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலத்தை ஆக்கிரமித்து விட்டு அங்கு காவல் செய்கிறது என விபரிப்பது ஒடுக்குமுறையாளர்களின் அரசியல் யுக்தி. அந்த இராணுவம் அந்த நிலத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் விதமாக அந்த மக்களை மேலும் ஒடுக்கி அழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஈழ நிலத்தின் சிறுவர்களை வளரும் தலைமுறையை நம்பிக்கையை முளையிலேயே அழிப்பதும் அழிவுக்குரிய அடிப்படைகளை ஏற்படுத்துவதும் இலங்கை இராணுவத்தின் இலங்கை அரசுக்கு நெடுங்காலத் திட்டமான தமிழ் சமூகத்தை சமூகத்தை அழிப்பதற்கான மிக எளிய வழிமுறையாக முன்னெடுக்கப்படுகிறது.


குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122496/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.