Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறங்கியாற்றை நீர்ப்பாசன குளங்களுடன் இணைப்போம் முள்ளியவளையில் பிரதமர் ரணில் உறுதி

Featured Replies

வன்னியில் நடைபெற்று முடிந்த யுத்தம் காரணமாக முற்றுமுழுதாக அழிவடைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது கட்சி அரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் பறங்கியாற்றினை வளப்படுத்தி அதனை நீர்ப்பாசனக்குளங்களுடன் இணைக்கவுள்ளதாக பிரதமரும் ஐ.தே.க.கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவிலுள்ள முள்ளியவளை விநாயகர் மைதானத்தில் நேற்று முற்பகல் 11 மணியளவில் மாபெரும் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு மக்கள் மத்தியில் வாக்குறுதியை வழங்கியுள்ளார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வன்னியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இங்குள்ள கிராமங்கள் முழுமையான அழிவினை சந்தித்துள்ளன.முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது கட்சி அரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் பறங்கியாற்றை வளப்படுத்தி அதனை நீர்ப்பாசனக் குளங்களுடன் இணைப்போம்.

ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சா லையை மீள இயங்க வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

கைத்தொழிற்சாலைகள் கைத்தொழிற் பேட்டைகள்,முதலீட்டு வலயங்கள், உல்லாச பயணத்துறையை வளப்படுத்தல். மக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தல் போன்ற பல சமூக நலத்திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளதாக வாக்குறுதிகளை வழங்கினார்.

இதேவேளை பிரதமரின் உரைக்கு முன்னர் உரை நிகழ்த்திய பல வேட்பாளர்கள் தேசிய தலைவர் பிரபாகரனின் போராட்டம் பற்றி எடுத்துரைத்த போது அங்கு குழுமி நின்ற மக்கள் வானைப் பிளக்கின்ற வகையில் கரகோ­ங்களை எழுப்பியதுடன் தமது கைகளை உயர்த்தி ஆர்ப்பரித்தனர்.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வர்த்தக வாணிபதுறை அமைச்சர் றிசாத் பதியூதீன் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

http://valampurii.lk/valampurii/content.php?id=6666&ctype=news

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.