Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணகி ஒரு போராளியே!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணகி ஒரு போராளியே!

- எழில்.இளங்கோவன்

தமிழக வரலாற்றில் கண்ணகிக்குச் சிலை எடுத்தவர்கள் இருவர். ஒருவர் இரண்டாயிரத்து இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சேர அரசன் சேரன் செங்குட்டுவன்; அடுத்தவர் ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கு முன்பு உலகத் தமிழ் மாநாட்டின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகிக்குச் சிலை வைத்த அறிஞர் அண்ணாதுரை. முந்தைய முடியாட்சி அரசரோ காலச்சூழலுக்குகேற்ப கண்ணகியின் கற்பைப் போற்றிச் சிலை வைத்தார். பிந்தைய குடியாட்சி முதல்வரோ கண்ணகியின் நெஞ்சுரத்தைப் போற்றிஇ நீதி தவறாத ஆட்சியை வேண்டி ஓர் எச்சரிக்கைச் சின்னமாகக் கண்ணகி சிலையை நிறுவினார்.

தமிழக முதல்வரான அண்ணாவை எவ்வாறு ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள்ளாகவே காலம் தன் வயப்படுத்தி அவர் உருவை மறைத்துவிட்டதோ அதே போன்று நெஞ்சுரத்தைப் போற்றி வைத்த கண்ணகி சிலையும் ஓராண்டு காலத்திலேயே மாற்றம் காண ஆரம்பித்துஇ சிலப்பதிகாரம் முழுவதுமே பரவலாகச் சொல்லும் பெண்ணின் அடையாளமான கற்பை வலியுறுத்தும் வாதத்திற்கு ஆதாரமான கற்புக்கரசி கண்ணகி என்ற வடிவம் நிலைபெற்று தமிழ்ப் பண்பாட்டின் சின்னமே கண்ணகி என்றானது. கண்ணகியின் குறியீடும் கற்பே என்று முடிவானது.

ஆணாதிக்கச் சமூகச் சூழலும்இ பெண்களின் விழிப்புணர்வு இன்மையும்இ ஒருங்கிணைப்பு இல்லாததும் கடந்த நாற்பதாண்டுகளில் அவ்வாதத்தை உடைக்க எவ்வித முயற்சியும் செய்ய இயலாததோர் சூழ்நிலையைத் தோற்றுவித்தது.

முந்தைய அதிமுக அரசின் ஆட்சிக் காலத்தில் கண்ணகி சிலை அகற்றப்பட்ட போதுதான் அது சார்ந்த ஒரு விழிப்புணர்வை தமிழகம் பெற்றது. குறிப்பாகத் தமிழகப் பெண்களும் பெற்றனர். பெண் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்ட சில பெண்ணிய வாதிகளும்இ பெண்கள் அமைப்பும் கண்ணகி சிலையை அகற்றியது சரியானதே; கற்பு எனும் பெயரால் பெண்களின் ஒடுக்குமுறை அகல இச்சிலை அகற்றல் ஒரு நல்வாய்ப்பே என்பதாக அறிவிப்புச் செய்தனர்.

ஆனால் தமிழக அரசியல் கட்சிகளும்இ தமிழ் அமைப்புகளும் கண்ணகி நிலை அகற்றலுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தன. அரசியல் கட்சிகளின் போராட்டத்திற்கு வெறும் அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என்று வைத்துக் கொண்டாலும் தமிழறிஞர்கள்இ தமிழ் அமைப்புகள் கண்ணகியைத் தனது மூதாதையர் என்கிற முறையிலும்இ தமிழ்ப் பண்பாட்டின் சின்னம் என்ற நிலையிலும்இ போராட்ட குணத்திற்கு முன்னோடி என்ற வடிவிலும் கண்டு சிலை அகற்றலுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினர்.

இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக கண்ணகி சிலையை அண்ணா நிறுவிய அதே இடத்தில் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்தோடு வைத்தார் கலைஞர். சிலைத் திறப்பின்போது செய்யப்பட்ட விளம்பரங்களிலும் தமிழ்ப் பண்பாட்டின் சின்னமான கண்ணகி சிலையின் திறப்பு விழா என்று தான் குறிப்பிடப்பட்டதே தவிர அண்ணாவின் நீதிநிறைந்த ஆட்சியின் தேவைக்கான குறியீட்டுச் சின்னம் என்பது மறைக்கப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது. எனவே கடந்த காலங்களில் நிலைபெற்ற தமிழ்ப்பண்பாட்டின் சின்னம்இ கற்பின் வடிவமான கண்ணகி தமிழ்ப் பெண்களின் பண்பாட்டுச் சின்னம் என்பதான கருத்தே வலுப்பெற்று நின்றது.

ஒரு பெண் ஆணுக்கு இணையாகஇ சமத்துவ சமூகப் பெண்ணாக வேண்டுமானால் அவளின் வாழ்வியல் சமூகக் கட்டுப்பாடுகள் எனும் விலங்குகள் நொறுக்கப்பட வேண்டும். கருத்து முதல்வாதச் சொல்லான கற்பும் அதில் ஒன்று. அப்படியானால் கண்ணகியின் அடையாளம் என்ன? தவறு செய்தவன் அரசனே என்றபோதும் கண்ணகி அஞ்சவில்லை; அமைதியாக இருக்கவில்லை- மன்னனிடம் வேண்டுகோள் மனுபோட்டு முறையிடவில்லை. மாறாக எதிர்த்துப் போராடத் துணிகிறாள்.

பாண்டியனை நேருக்கு நேர் சந்தித்து சரியான நீதி வழங்கத் தெரியாத நீ அறிவில் குறைந்தவன்; உன்னிடம் அறத்தின் கூறுஇ நல்ல திறம் இல்லை என்று விரல் நீட்டிக் கூறுகிறாள்.

நாட்டை ஆளும் மன்னனே என்றபோதும் தன் உரிமைப் போராட்டத்தில் அவனது முகத்தில் படும்படியாக தன் சிலம்பை வீசி எறிகிறாள் கண்ணகி. மன்னனை வீழ்த்தித் தன் போராட்டத்தில் வெற்றியும் காண்கிறாள்.

ஒரு பெண்ணுக்குத் தீங்கு நேரும் போது கோபம் வரவேண்டும்; துணிச்சல் வரவேண்டும்; போராட்ட குணத்தோடு போராட முன்வரவேண்டும். போராட்டம்தானே விடுதலைக்கான கருவி? இந்தப் போராட்ட குணமும்இ போராட்டமும் இங்கே கண்ணகிக்கான அடையாளங்களாகத் தெரியவில்லையா?

இங்கே இன்னொரு வாதமும் நுழைகிறது. கண்ணகி மக்களுக்காக அல்லது பெண்ணினத்திற்காகப் போராடவில்லை சுயநலத்தின் காரணமாகவே போராடினாள் என்கிற மிகப் பலவீனமான வாதம்தான் அது.

சிலப்பதிகாரக் காலம் வேறுஇ இன்றைய காலம் வேறு. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறை படிப்படியாக வளர்ந்து வந்ததாலும்இ அத்துடன் நிகழ்ந்த அறிவியல் வளர்ச்சியின் காரணமாகவும் பகுத்தறிவுஇ சுயமரியாதைஇ சமத்துவ சிந்தனைகளாலும் இன்று முழுமையான போராட்ட களம் அமைந்துள்ளது. இந்தக் களம் கண்ணகி வாழ்ந்த காலத்தில் அமையப்பெறவில்லை.

கண்ணகி தன்னுடைய சுயநலம் சார்ந்த உரிமைக்காகப் பாண்டியனிடம் போராடினாலும் கூட அந்தப் போராட்ட குணம் - பெண்களுக்கு உரிமையைப் பெறுவதற்கான அடையாளத்தைஇ வழியைக் காட்டுவதாக அமையவில்லையா? ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம்இ வலிமைஇ கோபம்இ ஆளுமை உண்டு என்பதை ஆண்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதானே தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்து.

இந்த முற்போக்கான சிந்தனையை ஒப்புக் கொள்ளும் போதுதான் கண்ணகியின் அடையாளம் கற்புக்கரசி என்பதல்ல. தன் உரிமைக்காகப் பெண்ணினம் தொடுத்த முதல் போராட்டத்தின் முதல் வித்து அல்லது முதல் போராளியே கண்ணகி என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

அக்காலசூழலுக்கேற்ப இளங்கோ அடிகளும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்-தனது சிலப்பதிகாரத்தில்.

www.keetru.com/penniyam/oct06

Edited by ilango3112

எனக்கு இதில உடன்பாடில்லை ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினைக்காக ஊரையே அழித்தவர் என்ன கடவுள் அவதாரம் எனக்கு புரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிபீடியாவில் இருந்து.

[தொகு] சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகனதும், அவனது மனைவியாகிய கண்ணகியினதும் கதையைக் கூறுவதே இக் காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்

கிபி 2ம் நூற்றாண்டளவில் தான், சிலப்பதிகரம் எழுதப்பட்டது. எழுதிய இளங்கோவடிகளின் சகோதார் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன், அதாவது கிமு 5ம் நூற்றாண்டளவில் சிலை எழுப்பியதாக இந்த லண்டனில் இருந்து வரலாறு எழுதுகின்றவர் சொல்கின்றார். அதாவது மூத்த பிள்ளைக்கும், இரண்டாவது பிள்ளைக்கும் உள்ள கால இடவெளி 700 ஆண்டுகள்.

இதை விட, இலங்கையின் கஜபாகு மன்னனும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகின்றது. அது எத்தனையாம் கஜபாகு என்று தான் தெரியவில்லை. இருந்தாலும், விஜயன் இலங்கைக்கு வந்து மகாவம்சக் கணிப்பின்படி பார்த்தால் கூட 2500 ஆண்டுகள் தான் வரும்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூச் சக்கரை என சிலர் நினைத்துக் கட்டுரை தீட்டுகின்றார்கள். இச் சமயத்தில் செத்துப் போன சமண சமயத்துக்கு உயிர் கொடுக்கவும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிழையான தரவுகள் அவற்றை வாழ வைக்காது.

விக்கிப்பீடியாவில் நாயன்மார்களின் காலம், வேதங்களின் காலம் போன்றவைகள் குறித்து தரப்பட்டுள்ள தரவுகளையும் ஏற்றுக்கொள்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னது பிழை என்றால் அதை நியாயப்படுத்துங்களேன். பிறகேன் சமபந்தமில்லாமல் கேள்வி கேட்டுக் கொண்டு.

விக்கிபீடியா பொய் என்றால், எந்த முக்கிமாக நைனமதம், மற்றும் புளோக்சில் இருந்து நீங்கள் கொண்டு வந்து இணைக்கும் கட்டுரைகள் உண்மைத்தன்மையானவையா என நம்புகின்றீர்களா?

மற்றவர்களோடு ஒப்பிடுகையில் நான் அப்படியே கட்டுரைகளை இணைப்பது குறைவு.

முடிந்தவரை அதைப் படித்து விளங்கி என்னுடைய சொற்களினூடாகத்தான் சொல்ல முயற்சிப்பேன்.

காரணங்களை ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள கூடியதாக படுகின்ற விடயங்களை மட்டுமே நான் இணைப்பதும் சொல்வதும் வழக்கம்.

மீண்டும் விடயத்திற்கு வருவோம்.

கண்ணகி பற்றிய கதை இளங்கோவடிகளக்கு முன்பே இருந்திருக்கக்கூடும். அதை பிற்காலத்தில் இளங்கோவடிகள் பாடியிருக்கக்கூடும்.

கம்பர் பாடுவதற்கு முன்பே ராமாயணக் கதை இருந்தது போல.

இக் கருத்து ஊகத்தின் அடிப்படையிலானதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

விளங்கவில்லையா? நான் கண்ணகியின் காலத்தைப் பற்றி ண்டும் சொல்லவில்லையே! கட்டுரையாளர் சேரன் செங்கோட்டுவன் சிலை அமைத்தது 2500களுக்கு முன்பு என்கின்றார். ஆனால் சேரன் செங்கோட்டுவனின் சகோதரர் இளங்கோ 700 ஆண்டுகளுக்குப் பின்னர் தான், சிலப்பதிகாரம் அமைக்கின்றார் என்றால், எவ்வளவு பெரிய முரண்பாடு.

சேரன் செங்குட்டுவன் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணகிக்கு சிலை அமைத்ததும், இளங்கோவடிகள் கிபி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததும் உண்மை என்று வைத்துக் கொண்டால்

அதற்கு நான் ஊகத்தின் அடிப்படையில் சொல்லக்கூடிய விளக்கம் இதுதான்

ஏற்கனவே இருந்த கண்ணகி கதையை இளங்கோவடிகள் சிலப்பதிகாரமாக எழுதியிருக்கிறார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதுவதற்கு முன்பே கண்ணகி கதை அனைவருக்கு தெரிந்த ஒன்றாக இருந்தது. அந்தக் கதையை இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் மூலம் மெருகூட்டினார்.

இந்த விளக்கம் மேலே சொன்ன இரண்டு விடயங்களும் உண்மை என்றால் மட்டும்தான் பொருந்தும்.

என்னை விட சிலப்பதிகாரத்தில் அதிக ஈடுபாடுள்ள இளங்கோ இதற்கு என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையாளர் 2250 என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறார். அந்தத் தகவல் தவறு. ஆனால் அவர் கூறிய விடயத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

சிலப்பதிகாரம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காவியம். இளங்கோவடிகளும் சேரன் செங்குட்டுவனும் அதே காலத்தில்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இலங்கையிலிருந்து கயபாகு வந்த செய்தி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மகாவம்சத்தில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் கயபாகு என்ற மன்னன் ஆட்சி செய்தாதாகவும் கூறப்பட்டுள்ளது. (பல கயபாகுக்கள் இருந்தது உண்மைதான் இங்கு 2 ஆம் நூற்றாண்டில் இருந்த கயபாகுதான் கணக்கில் எடுக்கப்படுகிறான்)

நண்பர்கள் நெடுக்காலபோவான் மற்றும் தூயவன் போன்றவர்களுக்கு ஒரு விடயத்தை தெளிவாக்க விரும்புகிறேன்.

சிலப்பதிகாரத்தை நான் உயர்த்திப் பிடிக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் சமணத்திற்கு புத்துயிர் ஊட்டுவதற்கு அல்ல. பெரிய புராணம் சைவத்தை வலியுறுத்துவதுபோல் சமணத்தை வலியுறுத்த எழுந்த காப்பியம் அல்ல சிலப்பதிகாரம். இளங்கோவடிகளின் நோக்கமும் அதுவல்ல.

தமிழில் அதிக இலக்கியங்களைப் படைத்தவர்கள் சமணர்களே. அவர்கள் சைவர்களைப்போல் மதக்கருத்துக்களை வலியுறுத்தவில்லை. ஏனெனில் சமணம் உண்மையில் மதமே அல்ல. பிற்காலத்தில் மதமாக வர்ணிக்கப் பட்டு விட்டது.

பேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், முத்தழிழ்க் காவலர் கி.ஆ.பெ .விசுவநாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் போன்ற பல தமிழறிஞர்களாலும் அரசியல் ஞானிகளாலும் உயர்த்திப் பிடிக்கப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரமே. அதற்கு முக்கிய காரணம் அரசியல்,கலை,நிலம், போன்ற பல தளங்களில் அது தமிழ்த்தேசியத்தை முகிழ்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சில விடயங்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இளங்கோவடிகள் காலத்தில் பல சமையங்கள் தமிழ் மண்ணில் இருந்துள்ளன. அதனால் தமிழர்கள் பிரிந்துவிடுவார்கள் என்று கருதி நாங்களே வியக்கும் அளவிற்கு சமையப் பொதுவுடமையை வலியுறுத்துகிறார். அது மட்டுமல்ல சேர, சோழ, பாண்டிய நாடு என்று பிரிந்திருந்த தமிழ் நிலத்தை ஒன்று படுத்தி நாம் தமிழர் இது தமிழ் மண் என்று முதன்முதலில் கூறியவரும் இளங்கோவடிகள்தான்.

சிலப்பதிகாரத்திற்கு முற்பட்ட இலக்கியங்கள் எல்லாம் மன்னர்களைப் பற்றித்தான் பேசின. முதன் முதலில் மக்களைப் பற்றிப் பேசிய காப்பியம் சிலப்பதிகாரம்தான். அதனால்தான் தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் இதனை குடி மக்கள் காப்பியம் என்றார்.

சிலப்பதிகாரத்திற்கு முற்பட்ட இலக்கியங்கள் எல்லாவற்றிலும் இயலும் இசையும்தான் இருந்தன. இயல் இசையோடு நாடகத்தையும் சேர்த்த முத்தமிழ்க் காப்பியம் முதல் முத்தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம்தான். சிலப்பதிகாராத்திலுள்ள அரங்கேற்று காதை என்ற ஒரு பகுதியே போதும் தமிழர்களின் கலையின் அழகை உலகிற்கு பறைசாற்ற.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்றையும் விட நாம் வியக்கும் ஒரு செய்தி.

ஆங்கில நாடகாசிரியர் சேக்ஸ்பியரின் காலம் இற்றைக்கு சுமார் 5 நூற்றாண்டுகளுக்கு முன்தான் ஆனால் அவரது காலத்திலகூட நாடக அரங்கங்களில் திரை என்ற தொழில் நுட்பம் வரவில்லை என்பதை அவரது நாடகங்களே வெளிக்காட்டுகின்றன.

ஆனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் ஒரு விதமான திரைகள் அல்ல மூன்று விதமான திரைகள் சொல்லப்பட்டுள்ளன. ஒரு முக எழினி (ஒரு பக்கத்திலிருந்து இடமிருந்து வலமாக வருவது) இரு முக எழினி (இரண்டு பக்கத்திலிருந்தும் வருவது) கரந்து வரல் எழினி (மேலிருந்து கிழாக வருவது) என மூன்று வகைத் திரைகள் சொல்லப்பட்டுள்ளன.

துயவன் நெடுக்காலபோவான் போன்றவர்கள் தங்களது சைவப் பற்றால் ஏற்பட்ட சமண வெறுப்பபை (இது பெரிய புராணம் பரப்பிய நோயே அன்றி வேறில்லை) அருந்தமிழ்ப் புலவர் இளங்கோவடிகள் மீது காட்டாதீர்கள். சகிக்கமாட்டாள் தமிழ்த்தாய்!!!!!

Edited by ilango3112

  • கருத்துக்கள உறவுகள்

சிலப்பதிகாரத்தை நான் உயர்த்திப் பிடிக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் சமணத்திற்கு புத்துயிர் ஊட்டுவதற்கு அல்ல. பெரிய புராணம் சைவத்தை வலியுறுத்துவதுபோல் சமணத்தை வலியுறுத்த எழுந்த காப்பியம் அல்ல சிலப்பதிகாரம். இளங்கோவடிகளின் நோக்கமும் அதுவல்ல.

தமிழில் அதிக இலக்கியங்களைப் படைத்தவர்கள் சமணர்களே. அவர்கள் சைவர்களைப்போல் மதக்கருத்துக்களை வலியுறுத்தவில்லை. ஏனெனில் சமணம் உண்மையில் மதமே அல்ல. பிற்காலத்தில் மதமாக வர்ணிக்கப் பட்டு விட்டது.

பேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், முத்தழிழ்க் காவலர் கி.ஆ.பெ .விசுவநாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் போன்ற பல தமிழறிஞர்களாலும் அரசியல் ஞானிகளாலும் உயர்த்திப் பிடிக்கப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரமே. அதற்கு முக்கிய காரணம் அரசியல்,கலை,நிலம், போன்ற பல தளங்களில் அது தமிழ்த்தேசியத்தை முகிழ்கிறது.

இளங்கோ நீர் ஏன் இப்படிச் சொல்கின்றீர் என்று புரியவில்லை. இங்கே இந்து மதத்தை அவமானப்படுத்த வேண்டும் என்றும், அழிக்க வேண்டும் என்றும் தான் அவப் பெயரை ஊக்குவிக்கும் வண்ணம் கட்டுரைகள் இணைக்கப்பட்டன என்பது வெளிப்படையாகத் தெரியும். அதை நீரும் கூடச் செய்துள்ளீர்.

ஆனால் இந்த விடயத்தில் தமிழ்தேசியத்தை ஈழுத்து, அதை அழிக்கவும் முயலவும் செய்தனர். ஆனால் இச் சந்த்ர்ப்பத்தில் சிலப்பதிகாரமோ, அல்லது மற்றயக் காப்பியங்களோ பற்றி குறைத்து மதிப்பீட்டை நான் வழங்கவில்லை.

இந்து மதத்தை ஒழுக்கமற்றது என்றார்கள். அப்படிப் பார்த்தால் கோவலனின் கதை கூட ஒழுக்கம் கெட்டது தான். சீவகசிந்தாமணி பல பெண்களோடு தொடர்பு கொண்டுள்ள ஒருவன் பற்றிய கதை. இப்படி நிறையத் தர்க்கம் புரியலாம். ஆனால் மற்றய மதங்களை அவமதித்து நாங்கள் உயர வேண்டும் என்று நான் நினைத்ததல்ல.

இந்துமதமும் இதுவரை காலமும், மற்றய மதங்களைத் தூசித்துக் கட்டுரை அமைத்திருப்பதைக் காட்ட முடியுமா? இப்போது ஜெயின் மதம் பற்றிய கட்டுரைகளைப் பார்த்தாலே தெரியும். இந்து மதத்திலுள்ளதை தாங்கள் தான் கொண்டிருந்தார்கள் என எழுதுகின்றனர். விரைவில் நேரம் கிடைத்தால் அதில் காணப்படும் பொய்களைப் பற்றிய எழுதத் தான் போகின்றேன்.

இந்து மதத்தை கேவலப்படுத்த நீங்களாக இணைத்த கட்டுரையால் தான் இந்த விவாதங்கள். அதை விட, மேலே கட்டுரையாளர் இந்துமதத்தைச் சாடுவதற்கே சிலப்பதிகாரத்தைப் பாவிக்கின்றார் என்பதும் தெளிவு.

தூயவன்! இந்து மதத்தில் உள்ள தேவாரங்களே மற்றைய மதங்களை தூசிக்கின்றது. நீங்கள் கட்டுரை பற்றி பேசுகிறீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மதம் தமிழர்களை அழிக்க முயன்ற மதம். தமிழின விரோதத்தை கக்கும் மதம். இந்துப் புராணங்களிலிலும் இதிகாசங்களிலும் அசுரர்கள் தஸ்யுக்கள் என்று அவமதிக்கப் பட்டுள்ள அனைவரும் தமிழர்களே.

எந்த இனமாவது தங்களை அழிக்க நினைத்த மதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்களா?

Edited by ilango3112

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.