Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுகிறார் மன்னார் ஆயர்

Featured Replies

மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுகிறார் மன்னார் ஆயர்

AUG 07, 2015 | 1:21by VANNIin செய்திகள்

Bishop-Rayappu-Josephபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை, மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். இந்த தகவலை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. விக்டர் சோசை அடிகளார் வெளியிட்டுள்ளார்.

வவுனியாவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில்  உரையாற்றிய அவர் ஆயரின் உடல் நிலை குறித்து தகவல் வெளியிடுகையில்,

மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த 3 மாதங்களாக  கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் உடல்நலம் பெறவும் அவர் முன்பு ஆற்றிய பணிகளை தொடர்வதற்கும், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், சிங்கப்பூரில் 6 வாரங்கள் சிகிச்சை அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் ஆயரை சிங்கப்பூர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதற்கான செலவாக கிட்டத்தட்ட ஒருகோடி ரூபா தேவைப்படுகிறது.

இதற்கான உதவியை புலம்பெயர் உறவுகளிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பதாகவும், இது தொடர்பான மேலதிக தகவல்களை மன்னார் ஆயர் இல்லத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/08/07/news/8510

 

இதற்கு யாழ் களம் ஏதும் நடவடிக்கை எடுப்பதாயின் உடன் தெரியப்படுத்தவும்

 

மன்னார் மறை­மா­வட்ட ஆயர் மேல­திக சிகிச்­சைக்­காக சிங்­கப்பூர் கொண்டு செல்­லப்­ப­ட­வுள்­ள­தாக குரு­மு­தல்வர் விக்டர் சோசை தெரிவித்தார்.mannar-bishop.jpg

வவு­னி­யாவில் நேற்று ரோயல் கார்­டனில் இடம்­பெற்ற மனித மாண்­பி­னைக்­காக்கும் அமைப்பின் 9ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­தும்­போதே மேற்­படி தெரிவித்­தி­ருந்தார். மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்­கையில்,

மன்னார் மறை மாவட்ட ஆயர் இரா­யப்பு யோசேப்பு ஆண்­டகை கடந்த 3 மாத­கா­ல­மாக கடும் நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ளார். எனவே அவர் உடல் நலம் நலம் பெறவும் அவர் முன்பு ஆற்­றிய பணி­களை தொடர்­வ­தற்கு நமது நாட்டில் சிகிச்­சைகள் பல­னின்றி உள்­ளதால் சிங்­கப்­பூரில் 6 வாரம் தங்­கி­யி­ருந்து மேல­திக சிகிச்­சை­யினை பெறும் நோக்கில் இன்னும் சில தினங்­களில் ஆயரை சிங்­கப்பூர் கொண்டு செல்ல ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

அதற்­கான செல­வாக கிட்­டத்­தட்ட ஒரு­கோடி ரூபா தேவை. இந்­நிதி உத­வி­யினை புலம்­பெயர் எமது உற­வுகள் மூல­மா­கவும் மற்றும் எமது மக்­க­ளா­கிய உங்­க­ளி­டமும் தாம் எதிர்­பார்ப்­ப­தா­கவும் இது தொடர்­பான மேல­திக தக­வல்­களை மன்னார் ஆயர் இல்லத்தில் பெற்றுக்கொள்ளுமாறும் குருமுதல்வர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

http://www.virakesari.lk/articles/2015/08/07/சிகிச்சைக்காக-சிங்கப்பூருக்கு-அழைத்து-செல்லப்படவுள்ள-மன்னார்-ஆயர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.