Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் நான்கில் வெளியான தகவல் என்பது கசிந்த ஆவணமோ அல்லது புனையப்பட்டதோ அல்ல..

Featured Replies

உள்ளக விசாரணை என்பதனை TNA ஏற்றுக் கொள்ளவில்லை:-

சனல்  நான்கில் வெளியான தகவல் என்பது கசிந்த ஆவணமோ அல்லது புனையப்பட்டதோ அல்ல..


ஐநா மனித உரிமை ஆணையத்தினால் வெளியிடப்பட உள்ளதாக சனல் 4 வெளியான தகவல் என்பது கசிந்த ஆவணமோ அல்லது புனையப்பட்டதோ அல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்து உள்ளார்.

யாழ்.நீர்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச விசாரணைக்கு எதிராக உள்ளக விசாரணை ஏது வந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை உள்ளக விசாரணைக்கு சர்வதேச அமைப்புக்கள் ஒத்துழைத்தாலும் ஐநா ஒத்துழைப்பு வழங்கினாலும் உள்ளக விசாரணை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை.

இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு எதிரான விசாரணையை மேற்கொள்ள ஐநா அமைப்பினால் இன்னுமொரு அமைப்பு உருவாக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டுமே தவிர இலங்கைக்குள் இலங்கை அரசாங்கத்தால் இது விசாரிக்கப்படுவது என்பது அர்த்தமற்றது தேவையற்றது நடைமுறைக்கு எந்த விதத்திலும் பயனற்றது.

ஐநா மனித உரிமை ஆணையத்தினால் வெளியிடப்பட உள்ளதாக சனல் 4 வெளியான தகவல் என்பது கசிந்த ஆவணமோ அல்லது புனையப்பட்டதோ அல்ல அது ஐநா சபையினால் வெளிக்கொண்டு வரப்பட்ட அறிக்கை.

உள்ளக விசாரணை எனும் விடயம் நடந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை பலமாக எதிர்க்கும் ஏனெனில் அது அர்த்தமற்றது தமிழ் மக்களுக்கு தேவையற்றது.

எனவே அதனை எதிர்க்க கூடிய வலுவுள்ள சரியானவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டி போடுகின்றவர்களை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும் 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122773/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

ஐ.நா. விசாரணை ஆவணம் திரிபுபடுத்தப்பட்டதல்ல! - கெலும் மைக்ரே விளக்கம் 

ஐ.நா. விசாரணை ஆவணம் திரிபுபடுத்தப்பட்டதல்ல! - கெலும் மைக்ரே விளக்கம்

சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான - கசியவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை என்ற செய்தி உண்மையானது என்று சுதந்திர ஊடகவியலாளர் கெலும் மைக்ரே தெரிவித்துள்ளார். அந்தச் செய்தி திரிபுபடுத்தப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கெலும் மைக்ரே மறுத்துள்ளார்.

'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தின் தயாரிப்பாளரான ஊடகவியலாளர் கெலும் மைக்ரே தனது டுவிட்டர் தளத்தில் இந்த விடயத்தைப் பதிவு செய்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சியில் கெலும் மைக்ரே தெரிவித்த - கசிய விடப்பட்ட ஆவணம் திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாடு எனவும், பின்னர் அந்தச் சம்பவம் தொடர்பில் சில பகுதிகளில் மட்டுமே உண்மை இருக்கின்றது எனவும் சுமந்திரன் கடந்த தேர்தல் பிரசார மேடைகளில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட தனது செய்தியில் எந்த வகையான திரிவுபடுத்தலும் இல்லை என்றும்,அந்தச் செய்தி நூறுவீதம் உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.

கசிய விடப்பட்ட ஆவணம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணை பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், அந்த விசாரணையைத் புறம்தள்ளுவதுதான் இங்கு பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, விசாரணையை மேற்கொள்ளும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம்தான் இந்த உள்ளக விசாரணையை வழிநடத்தும் எனத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஜெனிவாவைப் புறம் தள்ளிவிட்டு நியூயோர்க் மற்றும் கொழும்பு ஐ.நா. அலுவலகங்கள் செயற்படுகின்றனவா எனத் தான் கேள்வி எழுப்புவதாகவும் கெலும் மைக்ரே தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். -

http://www.malarum.com/article/tam/2015/08/08/11333/ஐ-நா-விசாரணை-ஆவணம்-திரிபுபடுத்தப்பட்டதல்ல-கெலும்-மைக்ரே-விளக்கம்.html#sthash.AGdmYUYX.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.